Saturday, February 4, 2012

தைலாபுரத்தில் அவசர ஆலோசனை :

ஒரு நாளிதழ் மீது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க.மணி தலைமையில் சாதி மோதலை தூண்டும் விதமாக செய்தி வெளியிட்டுள்ளார்கள் . அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு தந்தனர்.




அதனையொட்டி இன்று தைலாபுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அவசர கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் மாநில, மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.









அதில் பேசிய வன்னியர் சங்க தலைவர் செ.குரு. எம்.எல்.ஏ, வன்னியர்கள் மீது தினமலர் அவதூறாக எழுதியுள்ளது.

இதை படித்துவிட்டு நமது இயக்கத்தை சார்ந்தவர்கள் யாரும் எனக்கு போன் செய்யவில்லை. அதற்கு பதிலாக வன்னிய மக்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து பேசினர். என்ன செய்யலாம் என கேட்டனர்.



மாவட்டந்தோறும் வன்னியர்கள் சார்பில் அந்த நாளிதழ் மீது வழக்கு போடுங்கள் என கூறினேன். அதன் அடிப்படையில் வழக்குள் தந்து வருகின்றனர்.

அதிக பட்சமாக திருவண்ணாமலையில் 30 வழக்கு இன்று வரை தந்துள்ளனர். எல்லா மாவட்டங்களிலும் வழக்கு தாக்கலாகி வருகிறது என பேசியுள்ளார்.




அந்த நாளிதழை கண்டித்து வரும் 10 ந்தேதி ஒவ்வொரு தாலுக்கா அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.




வரும் 18ந்தேதி, வன்னியர் வரலாறு என்ற குறுந்தகடு 3 பாகங்களை வெளியிடுவது எனவும் கூறப்பட்டுள்ளது.




மே 5ந்தேதி சித்திரை பெருவிழா மாமல்லபுரத்தில் நடக்கும் அதில் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.




நாளிதழ் மீது கடும் கோபத்தில் பாமக தலைமை உள்ளது என்பது குறிப்பிடதக்கது

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: