மின்வெட்டை கண்டித்து பாமக சார்பில் அரிக்கேன் விளக்கு ஏந்தும் போராட்டம் மற்றும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதியில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர், ‘’ தமிழகம் மின்வெட்டு காரணமாக இருண்டு கிடக்கின்றது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிலைமையை உடனே சரிசெய்துவிடுவோம் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் மின்வெட்டை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் மின் வெட்டு காரணமாக சுமார் 7 கோடி பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் விவசாயம், மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலையும் நிலையில் அதிமுகவின் ஆட்சி உள்ளது. இதை மக்களிடம் இருந்து மறைக்கவே சசிகலா குடும்பத் தாரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஐந்தாண்டு திட்டங்கள் எத்தனை கொண்டு வந்தாலும் மின்வெட்டை சரிசெய்ய முடியாது. அதிமுக ஆட்சியில் நீடிக்கும் வரை இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகம் இருண்டுதான் கிடக்கும்’’ என்று பேசினார்.
Tuesday, February 21, 2012
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

No comments:
Post a Comment