பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டை நான்காவது ஆண்டாக வறட்சி வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மழை பெய்ய வேண்டி தமிழகத்திலுள்ள பொதுப்பணித்துறையின் நீர்வளப்பிரிவு செயற்பொறியாளர்கள் அனைவரும் சிறப்பு பூசைகளை நடத்த வேண்டும் என்றும், அதுகுறித்த விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் அத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார்கள். அதேபோல், ஜெயலலிதாவின் விடுதலைக்காக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யாகம், பூஜை போன்றவற்றில் ஈடுபட்டதன் பாதிப்போ என்னவோ அதிகாரிகளும் அதே வழியில் செல்லத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும்.
பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, வறட்சிக்கு அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்பதற்கு தலைமைப் பொறியாளர் முயல வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment