Sunday, March 8, 2015

பாமக வேளாண்மை மாதிரி பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்!

பாமக வேளாண்மை மாதிரி பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்!

பா.ம.க. சார்பில் ஆண்டு தோறும் அரசு பட்ஜெட் வெளியாவதற்கு முன்பு வேளாண் துறைக்கு தனியாகவும், பொதுத்துறைக்கு தனியாகவும் மாதிரி பட்ஜெட் வெளியிடப்படுவது உண்டு.  இன்று வேளாண்மை மாதிரி பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். 

அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் :

* நிலங்கள் பாழ்படுவதை தடுக்கவும், விளைநிலங்களை பாதுகாக்கவும் நிலங்களை 4 பகுதிகளாக பிரித்து சிறு, குறு விவசாயிகளின் விளைநில மண் வளத்தை மீட்டெடுக்க அரசே இலவச உதவி செய்யும்.

* ஒரு கிராமத்தில் நிலம் எடுப்பதாக இருந்தால் கிராம சபையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கிராமசபையில் எதிர்ப்பு தெரிவித்தால் நிலம் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

* பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பால் உற்பத்தியை பெருக்கி மானிய விலையில் மக்களுக்கு பால் விநியோகம் செய்யப்படும்.

* ஊட்டச்சத்தான கீரையை பால் பாக்கெட் போல பைகளில் அடைத்து வீடுதோறும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

* மதிய உணவில் குழந்தைகளுக்கு வாழைப் பழம், நெல்லிக்காய் கொடுப்ப தோடு, கீரையையும், பழங்களையும் கட்டாயமாக உணவோடு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

* வேளாண் பயிர் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.

* பனை மரங்கள் வெட்ட தடை விதிக்கப்படும். கள் இறக்குவதை பா.ம.க. ஏற்கவில்லை. பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி அதை விற்பனை செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

* பனைபொருள் வினியோகத்தை பெருக்க சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

* தரமான மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் மூலிகை வாரியம் அமைக்கப்படும்.

* தோட்டப்பயிர், மலைப் பயிர்களை விற்பனை செய்வதற்கு இடத்துக்கு தகுந்தாற்போல் சந்தைகள் உருவாக்கப்படும்.

ஊட்டியில் தேயிலை, காய்கறி பயிர்கள், பொள்ளாச்சியில் தேங்காய், தர்மபுரியில் மாம்பழம், தேனியில் வாழை மற்றும் திராட்சை, கடலூரில் பலா மற்றும் முந்திரி, மதுரையில் மல்லிகை மற்றும் மலர் வகைகள், ஏற்காட்டில் காபி மற்றும் மிளகு, தஞ்சாவூரில் நெல் சந்தைகள் அமைக்கப்படும்.

* கரும்பு உற்பத்தியை மேம்படுத்த டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விற்பனை விலை நிர்ணயிக்கப்படும்.

* வேளாண் எந்திரங்கள் குறைந்த விலையில் விற்க வழிவகை செய்யப்படும்.

* விவசாய வேலைகள் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்படும்.

* மீனவர்களுக்கு மருத்துவ வசதி, மற்றும் 50 வயதுக்கு மேலானவர்களுக்கு பென்சன் வழங்கப்படும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: