Friday, March 6, 2015

ஜெயலலிதாவுக்காக யாகம் நடத்தும் முதல்வர், அமைச்சர்கள்; மக்கள் மீது அக்கறையில்லை; அன்புமணி கண்டனம்

 

வேலூர் மாவட்டத்தில் பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டார்.

கூட்டத்துக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அதிமுக அல்லாத மற்ற கட்சிகளை பாமக தலைமையில் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளோம். அந்த தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம், சேவை உரிமை சட்டத்தை கொண்டு வருவோம், உயர்தரமான கட்டணமில்லா கல்விதிட்டத்தை கொண்டு வருவோம், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகளை கொண்டு வருவோம், குறிப்பாக வேளான்துறைக்கு தனிநிதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்போம், ஆட்சி அமைத்த ஆறு மாதங்களுக்குள் வேலூர் மாவட்டத்தை இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத குடும்பங்களின் குடும்ப அட்டையை தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

நிலம் கையப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று பாரத பிரதமர் அறிவித்துள்ளார். அந்த திருத்தத்தில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், 70 சதவித விவசாயிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும், சமுக ஆய்வு மற்றும் சுற்றுசூழல் ஆய்வு நடத்தி மக்கள் பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். 

தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க விளைநிலங்களை கையப்படுத்த கூடாது. வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே 1800 ஏக்கர் விளை நிலங்களை தொழிற்சாலைகளை அமைக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்று சூழல் பாதிக்காத வகையிலும் தொழிலாளர் நலனை பாதுகாக்கும் வகையிலும், தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் மின்சார துறையில் திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைதான் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார உற்பத்திக்காக தற்போது உள்ள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மத்திய மாநில அரசுக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறுந்துறையில் கோகோ கோல கம்பனி அமைக்கப்படுவதை பாமக எதிர்க்கும். பாலாறு தென்பென்னை இணைப்பு திட்டத்தை செயல்படுத்தப்படவேண்டும்.

தமிழகத்தில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா விடுதலைக்காக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாகங்கள் நடத்தி வருகிறார்கள். மக்கள் மீது அக்கறையில்லை. இதுபோன்ற அரசியல் கலாசாரம் மாறவேண்டும்.

தமிழகத்தில் 18 துறைகளில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக மின்சார துறை, மணல்கொள்ளை, தாதுமணல், கிரானைட், பால் இவற்றில் அதிக அளவு ஊழல் நடந்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாகுறையை போக்க கடந்த 2009 ஆண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்பட்டுள்ள ஒக்கனேகல் கூட்டுகுடிநீர் திட்டத்தை உடனடியாக முடித்து குடிநீர் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: