சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா முன்வைத்த 13-வது அரசியல்
சாசன திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக பாட்டாளி மக்கள்
கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல் அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு இப்போதிருக்கும் ஓரிரு உரிமைகளையும் பறிப்பதற்கான சதித் திட்டத்தை இலங்கை அரசு தீட்டியிருக்கிறது.
13-வது அரசியல் சட்டத்திருத்தத்தையே அடியோடு ரத்து செய்ய இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது. 13-வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது மட்டுமின்றி, இலங்கையிலுள்ள 9 மாநில எல்லைகளையும் மாற்றியமைத்து 5 மாநிலங்களாக குறைக்க ராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இலங்கை அரசின் இந்த சதி திட்டம் நிறைவேறிவிட்டால் ஈழத்தமிழர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள். இதற்கெல்லாம் மேலாக, இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படுவது இந்தியாவுக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம் ஆகும்.
எனவே, இலங்கையின் 13-வது அரசியல்சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, தமிழர்களுக்கு ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தைப் பறிக்கத் துடிக்கும் இலங்கை ஆட்சியாளர்கள், தமிழர்களுக்கு எந்தக்காலத்திலும் சம அதிகாரம் தர மாட்டார்கள் என்பதை உணர்ந்து, ஐ.நா. மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.