அதில், காவிரி நடுவர்
மன்ற இடைக்காலத் தீர்ப்பின் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர்
திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருவதால் காவிரி பாசன மாவட்டங்களின்
விவசாயிகள் அனுபவித்து வரும் எண்ணிலடங்காத பிரச்சனைகளை உங்களின்
கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கு
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற
முறையில் நீங்கள் பிறப்பித்த ஆணைக்கு பணிய மறுத்துவிட்ட கர்நாடக அரசு,
இந்தப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்கும் வரை,
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட திறந்து விடவில்லை. உச்ச
நீதிமன்றத்தின் அறிவுரைக்குப் பிறகுதான் காவிரி பாசன மாவட்டங்களின் சம்பா
பாசனத்திற்காக, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இரவு முதல், காவிரியில்
வினாடிக்கு 9000 கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டு
வருகிறது.
இந்த தண்ணீர் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு போதுமனதல்ல என்ற நிலையில், இந்த அளவுக்குக் கூட தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில், கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நீங்கள் இன்று தில்லியில் கூட்டியிருக்கிறீர்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள், தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பொய்யான தகவல்களை கொடுத்து உங்களை தவறாக வழிநடத்தக்கூடும். அவர்களின் இது போன்ற நியாயமற்ற கோரிக்கைகளுக்கு நீங்கள் உடன்படக்கூடாது. மாறாக காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நாளான அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகும், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தல் ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment