நெய்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் இன்று மின்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் ஆண்ட கட்சியும், ஆளுகிற
கட்சியும்தான். காவிரி நீரைப் பெற்றுத்தருவதில் இரு கட்சிகளும் மெத்தனமாகவே
செயல்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் வழியை ஆய்வு செய்து அதற்கான
வேலைகளில் இறங்க வேண்டும்.
பாமக ஆட்சிக்கு வந்தால்
முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. மேலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு
எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பாமக. எனவே திமுக, அதிமுக போன்ற
திராவிடக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது இளைஞர்கள் பாமகவில் தங்களை
இணைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்து நடைபெறவுள்ள
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாமக இனி தனித்துப்
போட்டியிடும் என்றார்.
No comments:
Post a Comment