கிருஷ்ணகிரி: மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்ளை திசை திருப்பவே சூரிய சக்தி
மின்சாரம் தயாரிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் என்று பாமக நிறுவனர்
டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம்
பேசுகையில்,
மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்ப 3
ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய போவதாக ஒரு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மெகாவாட் வீதம் 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி
என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளிசக்தி மின்சாரம்
தயாரிக்க ரூ.33 ஆயிரம் கோடி தேவை. இந்த நிதிக்கு என்ன செய்வார்கள்?.
குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி கூட 3 ஆண்டில் 600 மெகாவாட் சூரிய ஒளி
மின்சக்தியைதான் உற்பத்தி செய்துள்ளார்.
மாயாவதி பார்முலாவை கடைப்பிடிப்போம்
நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதைச் சந்திப்பதற்கு பாமக தயாராக
உள்ளது. எங்கள் தலைமையில் தமிழகத்தில் ஏற்கனவே 3-வது அணி உள்ளது.
தேர்தலில் திராவிட மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்தே
போட்டியிடுவோம். உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி செய்ததை போல சமுதாயங்களுடன்
கூட்டணி வைத்து கொள்வோம்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் மாதம்
17-ந்தேதி பாமக சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது
என்றார் அவர்.
Monday, October 22, 2012
'3 வருடத்தில 3000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரமாம்.. மக்கள் காதில் பூ சுற்றும் ஜெ'- ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

No comments:
Post a Comment