Wednesday, December 28, 2011

இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்: ராமதாஸ்

சேலம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில், நிரந்த தீர்வு ஏற்பட, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இதை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த பணிக்கர் என்னும் கேரள அதிகாரியின் சதியால் இடுக்கி மாவட்டம் கேரளாவுடன் இணைக்கப்பட்டதாக கூறினார். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமெனில், இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்தும் மக்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருவதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

அதிமுக, திமுகவால் சீரழிந்துவிட்டோம்: நிர்வாகிகள் மத்தியில் ராமதாஸ் கண்ணீர்

சேலம்: திராவிடக் கட்சிகளால் நாம் சீரழிந்துவிட்டோம் என்று கூறி பாமக தலைவர் ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கண்ணீர் விட்டார்.

பாமகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,

அதிமுக, திமுகவுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து தான் சீரழிந்துவிட்டோம். இது தவிர போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் மாறி, மாறி ஓடி நீங்கள் தான் முதல்வர், நீங்கள் தான் முதல்வர் என்று அவர்களுக்கு காவடி எடுத்து தான் இந்த நிலையில் உள்ளோம். அதனால் இனிமேல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. 25, 25 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தது போக தற்போது இந்த அவல நிலையில் உள்ளோம்.

இனி வரும் காலத்தில் பாமகவின் தனித்தன்மையைக் காப்போம் என்று கூறி கண்ணீர்விட்டார்.

இதைப் பார்த்த நிர்வாகிகள் தலைவர் இவ்வளவு வேதனைப்படுகிறாரா என்று உருகிவிட்டனர்.

Saturday, December 24, 2011

தைலாபுரம் தோட்டத்தில் பெரியார் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

பெரியாரின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் அவரது உருவச் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராயவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாட்சி, துணைப் பொதுச்செயலாளர் சண்முகம், திருஞானம் மற்றும் பேராசிரியர் செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Friday, December 23, 2011

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பாராளுமன்றக் குழு அமைப்பு - ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தனி நாடாளுமன்ற குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எனினும் பிற பிறபடுத்தப்பட்டோரின் நலன்களை பாதுக்காக்க இது மட்டுமே போதுமானது அல்ல. பிற்படுத்தப்பட்டோரின் நலன்களை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமானால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசை கட்டுபடுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அரசியல் சட்ட அதிகாரம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கும் வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை இன்னும் 5 சதவீதம் கூட தாண்டவில்லை. உயர் பதவிகளில் இருக்கும் உயர் ஜாதியினர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து கொள்வது தான் இதற்கு காரணம்.

இந்த குறையை போக்கி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடஒதுக்கீ்ட்டில் தொகுப்பு ஒதுக்கீட்டு முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதனை உடனடியாக செயல்படுத்தவும், வன்னிய சமுதாய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் 2 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
[

Thursday, December 22, 2011

குப்பைகளை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் : அன்புமணி

சென்னை: குப்பை உருவாகாமல் தடுப்பதற்கும், குப்பை அளவை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக செய்யத் தவறினால், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை நகரின் குப்பைகளை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் நடத்துவோம் என்று அந்த அமைப்பின் தலைவரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பூஜ்யக் குப்பை' எனும் வழியை பின்பற்றி குப்பை உருவாகாமல் தடுப்பதற்கும், குப்பை அளவை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சென்னை மாநகரை தூய்மை மாநகராக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உடனடியாக இதை செய்யத் தவறினால், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை நகரின் குப்பைகளை ரிப்பன் மாளிகை முன்பு கொட்டும் போராட்டம் நடத்த நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை நகரில் குப்பை ஒரு பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. தினமும் சுமார் 4,500 டன் குப்பை மாநகர அளவில் உருவாகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக நபர் ஒருவருக்கு தலா 600 கிராம் வீதம் குப்பை தூக்கி எறியப்படுகிறது. புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு மாநகரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் சென்னை நகரில் தேங்கும் குப்பையின் அளவு இன்னும் அதிகமாகியுள்ளது. ஆங்காங்கே, குப்பை மலைப்போலத் தேங்கிக் கிடப்பதால் கொசு, ஈ, எலி போன்றவை அதிகமாகி விட்டன. இதனால் மக்கள் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களால் தாக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இந்த அவல நிலையை மாற்றிட போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகர குப்பை பெருங்குடியிலும், கொடுங்கையூரிலும் நாள்தோறும் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான குப்பையும் ஒன்றாகக் கலப்பதுதான் குப்பைச் சிக்கலுக்கு முதன்மையான காரணமாகும். எனவே, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரிப்பதை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரிக்கப்பட்ட மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பவும், மக்கும் குப்பையை மக்க வைக்கவும், மாநகராட்சியின் மண்டலம்- வட்ட அளவிலேயே முயற்சிக்க வேண்டும். பாலிதீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் சட்டத்தை சென்னை மாநகரில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனமே அதனால் உருவாகும் குப்பைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர் பொறுப்புணர்வுக் கொள்கை ஆகும்.

மத்திய அரசின் அரசாணையில் மிக முக்கியமாக, நகராட்சிகள், மாநகராட்சிகள் அளவில், உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை செயல்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது பசுமைத் தாயகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கை ஆகும் என்று கூறியுள்ளார் அன்புமணி.

Wednesday, December 21, 2011

தமிழர் உணர்வு புரியாமல் தாக்குதல் நடத்த உத்தரவிடும் ஏடிஜிபி ஜார்ஜ், ஐஜி ராஜேஷ் தாஸ்-ராமதாஸ் கண்டனம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உணர்வு புரியாமல் தாக்குதல் நடத்த உத்தரவிடும் ஏடிஜிபி ஜார்ஜ், ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நேற்று தேனி மாவட்டத்தில் லட்சக்கணக்கில் திரண்டு கேரள அரசுக்கு் எதிராக போராட முயன்ற பொதுமக்களையும், விவசாயிகளையும், பெண்களையும் போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி ஓட ஓட விரட்டியும் கலைத்துள்ள செயல் மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கம்பம் நகரிலிருந்து குமுளி நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். இதனால் சிதறி ஓடிய பொதுமக்கள் கூடலூரில் மறியல் போராட்டம் நடத்தியபோது அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் விரட்டி அடித்திருக்கின்றனர்.

காவல்துறையினரின் தாக்குதலில் பெண்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக இருக்கும் ஜார்ஜ் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே முயன்று வருகிறார். தென்மண்டல காவல்துறை தலைவராக இருக்கும் ராஜேஷ் தாசும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இந்த அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும்.

பொதுமக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Tuesday, December 20, 2011

ஜி.கே.மணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு பிரச்சனையை தொடர்ந்து கேரளாவில் தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழக வாகனங்கள் நொறுக்கப்படுவதை கண்டித்தும் பா.ம.க. சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி- திருச்சூர் ரோடு திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தங்கவேல் பாண்டியன், மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணப்பன், ராமு ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் பொள்ளாச்சி நகர பா.ம.க. செயலாளர் பாலாஜி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் முருகேசன், பசுமை தாயகம் வெங்கடேஷ், சக்கரவர்த்தி, மன்னூர் ராமர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Sunday, December 18, 2011

பாமக 20-ம் தேதி போராட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி பாமக சார்பில் டிசம்பர் 20-ம் தேதி பொள்ளாச்சியில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்

அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



’’கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மக்களின் போராட்டத்தை அமைதி வழியில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 வாரங்களில் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதும், போராட்டக்காரர்கள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் என்று கூறி மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.









கூடங்குளம் பகுதி மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்களின் போராட்டமும் வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. கூடங்குளம் அணுமின் நிலையத்தால், தங்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.



இதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட மத்திய அரசின் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் இதுவரை எந்தப் பயனும் ஏற்படவில்லை.



இக்குழுவினர் மாநில அரசு குழுவை 3 முறை சந்தித்துள்ள போதிலும், மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. மக்களை நேரடியாக சந்தித்து பேசவும் மத்தியக் குழு முன்வரவில்லை.



மக்களின் அச்சத்தைப் போக்க எதுவும் செய்யாமல் அணுமின் நிலையம் உடனடியாக தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது சரியல்ல. கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை, அணுமின் நிலைய பணிகளை தொடங்கக்கூடாது என்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமர் மதித்ததாக தெரியவில்லை.



பிரதமரின் பேச்சுக்கள் கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. ஜனநாயகத்தில் மக்களை மிரட்டி பணிய வைக்க மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு தவறிவிட்ட நிலையில், அடக்கு முறைகளின் மூலம் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்யக்கூடாது.



அது தமிழ்நாட்டிலும் நந்தி கிராமங்களையும், சிங்கூர்களையும் உருவாக்கி விடும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து கூடங்குளம் அணு மின்நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்.



அதே போல் வடதமிழகத்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையமும் 2020-ஆம் ஆண்டிற்குள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவற்றுக்கு மாற்றாக ஆபத்து இல்லாத மரபுசாரா மின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, December 14, 2011

அப்துல்கலாம் கூறியது நல்ல யோசனை : ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு, உறுமண்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும்.

1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு இந்த அணை தமிழகத்தில்தான் இருந்தது. ஆனால் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாநில எல்லைக்குழு உறுப்பினராக கேரளாவை சேர்ந்த டி.என். பணிக்கர் இருந்தார். அவருக்கு சொந்தமான சொத்துக்கள் இடுக்கி மாவட்டத்தில் இருந்தன.

அவை தமிழக பகுதிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதிகளை கேரள மாநிலத்துடன் இணைத்துவிட்டார். அப்போது தமிழர்கள் அதிகம் வாழும் இந்த 3 பகுதிகளையும் தமிழகத்துடன் இணைத்திருந்தால் முல்லை பெரியாறு அணை விவகாரம் ஏற்பட்டிருக்காது.







அந்த பகுதி மக்கள் தற்போது தமிழகத்துடன் இணைய வேண்டும் என போராடி வருகிறார்கள். முல்லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது.



இதில் பீர்மேடு, தேவி குளம், உறுமண் சோலை ஆகிய பகுதிகளை கேரளத்தில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும் கேரள மாநிலத்துக்கு பொருளாதார தடை ஏற்படும் வகையில் தமிழகத்தில் இருந்து கேளாவுக்கு செல்லும் 10 வழிகளையும் ஒரு வாரத்துக்கு அடைத்து வைத்து அத்தியாசிய பொருட்கள் அங்கு செல்வதை தடை செய்ய தீர்மானமும் நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் கேரள மக்கள் உண்மை நிலையை உணர்வார்கள். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு தடையாக இருக்கமாட்டார்கள்.

இந்த 3 பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பறிபோனதற்கு திராவிட கட்சிகள் செய்த துரோகம்தான் காரணம்.

உச்சநீதிமன்றம் 27-2-2006ல் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. அப்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்தும் இருந்தது.



அ.தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டிருந்தால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம். பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கும் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியின்போது கிடைத்த 3 வாய்ப்புகளை தவறவிட்டு விட்டனர். அப்போது கேரள அரசுடன் தேவையின்றி பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பிரச்சினையில் தமிழக அரசின் நிலை பலவீனமடைந்தது.

மீண்டும் ஒருமுறை அணையின் வலிமை தொடர்பாக தொழில்நுட்பங்கள் குறித்து எதுவும் தெரியாத உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்து தலைமையில் குழு அமைக்க ஒப்புக்கொண்டிருக்க கூடாது. ஏற்கனவே மத்திய அரசு அமைத்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் இந்த அணை வலிமையாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.



மீண்டும் குழு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டது. இல்லையெனில் உச்சநீதி மன்றம் மூலம் எப்போதோ இந்த பிரச்சனை தீர்க்கப் பட்டிருக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருந்த நிலையில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம்.

இந்த பிரச்சனையில் தேனி மாவட்டத்தில் தினந்தோறும் 50 ஆயிரம், 1லட்சம் என மக்கள் வீராவேசத்தோடு தன்னிச்சையாக போராடி வருவது ஒவ்வொரு தமிழனை யும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

எந்த அரசியல் கட்சிகள் அமைப்புகளின் தூண்டுதல் இல்லாமல் தமிழக மக்கள் தன்னிச்சையாக நடத்தும் இந்த போராட்டம் தமிழக வரலாற்றில் பதிவாகும்.



தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த பிரச்சனையில் உரிய தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.

போராடுகிற தமிழர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் முக்கிய ஆறுகளின் நீர்பிரச்சினையில் திராவிட கட்சிகள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது.



அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2500 தருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் தற்போது 1950 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. எனவே ஏற்கனவே கூறிய தொகையை வழங்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைத்து அணைகளிலும் ராணுவத் தினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது நல்ல யோசனைதான்.

கேளராவில் அனைத்து கட்சிகளும் இந்த பிரச்சனையில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. அங்கு அடிக்கடி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. அதே போல் தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

அப்போது தான் சட்டசபையில் இடம் பெறாத அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியும்

Saturday, December 10, 2011

வானம் உள்ளவரை... இந்த பூமி உள்ளவரை...: ராமதாஸ் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,


கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டன. திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். வானம் உள்ளவரை இந்த பூமி உள்ளவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.



பள்ளிக் கூட கட்டிடங்கள் ஒழுகிகொண்டிருக்கிறது. அரசு புதிது புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறது. டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை ஏற்கனவே அறிவித்தபடி விரைவில் நடதுவோம் என்றார்.

Friday, December 2, 2011

தமிழ் திரைத்துறையினருக்கு அன்புமணி வேண்டுகோள்

புகைபிடிக்கும் காட்சிகளில் மத்திய அரசின் விதிகளை கடைபிடியுங்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில்,

’’திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு நவம்பர் 14 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ள புதிய திரைப்படங்கள் மத்திய அரசின் உத்தரவினை பின்பற்றாத நிலையே இன்னமும் நீடிக்கிறது.

இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் திரைப்படத் துறையினர் சட்டத்தை மதித்து நடக்க முன்வர வேண்டும். தமிழக அரசும் இதனை கட்டாயப்படுத்த வேண்டும்.

சமீபத்தில் வெளிவந்துள்ள `மயக்கம் என்ன' எனும் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று ள்ளன.

மத்திய அரசின் புதிய உத்தரவு செயலுக்கு வந்த நாளுக்கு பின்னரே தணிக்கைத் துறை சான்று பெற்றிருந்தும் சட்டவிதிமுறைகள் இதில் பின்பற்றப்படவில்லை.


``திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கும் கதாநாயகர், படம் தொடங்கும் போது புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பேச வேண்டும், புகைபிடிக்கும் காட்சியின் போது கீழே எச்சரிக்கை வாசகத்தை ஓடவிட வேண்டும்' என்கிற அரசு உத்தரவு இந்த திரைப்படத்தில் இடம்பெறவில்லை.


இந்த முக்கியமான விதிகள் தமிழ்நாட்டின் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இன்னமும் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தமிழ் திரைப்படத் துறையினர் இனியும் தாமதிக்காமல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அணு உலைகள் பற்றிய வெள்ளை அறிக்கை தேவை – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

NewsletterIts Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்கல்பாக்கம்: கல்பாக்கம் அணு உலைகளால் காஞ்சிபுரம், சென்னை, மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த அணுமின்நிலையத்தினால் கல்பாக்கம் சுற்றுவட்டார மக்கள் பல்வேறு ஆபத்துக்களை அனுபவித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் பா.ம.க. சார்பில் அணு உலைகள் ஆபத்தானவை என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று கல்பாக்கம் பகுதி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:

கூடங்குளத்தில் அணுஉலையை மூட கோரி அங்குள்ள பெண்கள் 47-வது நாளாக போராடி வருகிறார்கள். இங்கும் இந்த கலந்தாய்வுக்கு ஆண்களுக்கு நிகராக சரிபாதி பெண்கள் வந்திருக்கிறீர்கள். கல்பாக்கம் அணு உலைகளை நாங்கள் எதிர்ப்பதுகூட கூடங்குளம் மக்களை பார்த்து நடத்தவில்லை. ஏற்கனவே இப்பகுதி பொதுமக்களுடன் 2 நாட்கள் கலந்தாய்வு நடத்தி உள்ளோம்.

அணு உலைகளால் ஆபத்து

அணு உலைகளால் காஞ்சிபுரம், சென்னை, மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. ஏற்கனவே அணுமின் நிலையம் உள்ள பகுதி மக்கள் பல்வேறு ஆபத்துக்களை அனுபவித்து வருகிறார்கள்.

அணு உலை வேண்டாம்

ஆபத்து இல்லாத அணு உலையே கிடையாது. இப்போது கல்பாக்கத்தில் அதிவேக அணு உலை அமைக்க போகிறார்களாம். அமெரிக்காவில் இந்த அதிவேக அணுஉலை தொழில்நுட்ப முயற்சி கைவிடப்பட்டு விட்டது. உலகம் முழுவதும் கைவிடப்பட்ட அதிவேக அணுஉலையை கல்பாக்கம் மக்களின் தலையில் கட்ட முயற்சிக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட போவது தமிழர்கள்தான்.

இந்தியாவில் அண்மையில் நடந்த மிகப்பெரிய எழுச்சி போராட்டம் கூடங்குளம் போராட்டம்தான். இதற்கு ஆதரவாக சென்னையில் நாங்களும் போராட்டம் நடத்தி உள்ளோம். அணு உலை வேண்டுமா? வேண்டாமா? என்றால் எங்கள் பதில் வேண்டாம் என்பதுதான்.

இங்குள்ள ஆபத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்குதான் இந்த கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. கல்பாக்கத்தில் புதிய அணு உலைகளை கட்டகூடாது. இதை வலியுறுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அணு உலையை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும்.

வெள்ளை அறிக்கை தேவை

கல்பாக்கத்தில் அணு உலைகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து நடுநிலையான மருத்துவர் குழு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும்,

அணுஉலை பற்றி வெளிப்படையான விவாதம் நடத்த அரசு முன் வரவேண்டும். அதிவேக அணுஉலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

Tuesday, November 15, 2011

கல்பாக்கம் அணுஉலையை மூடவேண்டும்: ராமதாஸ்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வரும் 2020ம் ஆண்டுக்குள் மூடவேண்டும் என பா.ம.க., தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரைவில் பா.ம.க., சார்பில் மருத்துவக்குழு ஒன்று செல்லவுள்ளதாகவும், அக்குழு அணுகதிர் வீச்சு காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப்போக்கும் வகையில், அணுஉலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனவும், உலகின் மிகப்பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கல்பாக்கம் அணுஉலையை வரும் 2020ம் ஆண்டுக்குள் மூட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Sunday, November 13, 2011

பிஞ்சிலேயே பழுத்தது, பயன்படாது என்று தூக்கிப்போட்டுட்டோம்: வேல்முருகன் பற்றி ராமதாஸ்

கடலூர்: கொசு கடித்ததால் தட்டினேன், அது விழுந்துவிட்டது. அது பிஞ்சிலேயே பழுத்தது, அதனால் எதற்கும் பயன்படாது என்று தான் தூக்கிப்போட்டுவிட்டோம் என்று பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் பற்றி அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

வேல்முருகனுக்கு அதிக ஆதரவு உள்ளதாகக் கூறப்படும் கடலூரில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,

பாமக பொதுக்குழு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் கூடியது. இனி வரும் காலத்தில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று அதில் முடிவு செய்யப்பட்டது. இது பொதுக்குழுவின் முடிவன்று, காலத்தின் கட்டளை.

கடந்த 45 ஆண்டுகளாக மாறி, மாறி ஆண்டு வரும் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சின்னாபின்னமாக்கிவிட்டன. அவர்களால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தை சீரமைக்கும் கொள்கையுடைய ஒரே கட்சி பாமக தான். இன்னும் நான்கரை ஆண்டுகள் நாம் மக்களை சந்தித்து அவர்களுக்கு அரசியலில் புதிய நம்பிக்கை ஏற்படுத்த பாடுபட வேண்டும். நம் பேச்சைக் கேட்டுவிட்டு அவர்கள் இதுவல்லவோ அரசியல் கொள்கை என்று கூற வேண்டும்.

இவர்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாக தனித்து நிற்காமல் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார்கள் என்று மக்கள் கேட்க வேண்டும். பத்திரிக்கைகளுக்கு பரபரப்பு செய்திகள் தேவையானது தான். ஆனால் அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன இப்படி நடந்துவிட்டது என்றார். அதற்கு நான் அது பிஞ்சிலேயே பழுத்தது, அதனால் எதற்கும் பயன்படாது என்று தான் தூக்கிப்போட்டுவிட்டோம். கொசு கடித்ததால் தட்டினேன், அது விழுந்துவிட்டது என்றேன்.

இது பற்றி வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்றார். இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றேன். இங்கும் அதையேத் தான் சொல்கிறேன். பாமக என்பது ஒரு பெரிய ஆலமரம். ஏராளமான சங்க மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் அதன் விழுதுகளாக உள்ளனர்.

இந்த வளர்ந்த ஆலமரத்திற்கு தற்போது இளைஞர்கள் புதிய வேர்களாகவும், விழுதுகளாகவும் வருகின்றனர். இதில் பறவைகள் வந்து தங்கலாம், பழுக்கும் பழத்தை உண்ணலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை என்றார்.

Wednesday, November 9, 2011

மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்: ஜெயலலிதா போக்கு மாறவேவில்லை- பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: 12,000 மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தன்மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் போக்கு மாறவேயில்லை என்பது தெரிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்களை திடீர் என்று பணி நீக்கம் செய்தது கண்டனத்திற்குரியது. கடந்த 2003ம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய 2 லட்சம் அரசு ஊழியர்களை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒரே இரவில் பணிநீக்கம் செய்தது. அதற்காக உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

தற்போது அவர் திடீர் என்று மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் போக்கு மாறவேயில்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு 12,000 மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Thursday, October 13, 2011

பாமக வித்தியாசமான கட்சி: ராமதாஸ் பேச்சு

சேத்தியாத்தோப்பில் நேற்று இரவு பாமக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர், ‘’பாமக ஒரு வித்தியாசமான கட்சி என்பதை மக்கள் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாமக உள்ளது.

அதனால் தான் படித்தவர்கள், பெண்கள், விவசாயிகள் ஆதரவு பெருகி வருகிறது. விவசாய வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி பாமக. தமிழ்நாட்டை பாதுகாக்க பாமகவால் மட்டுமே முடியும் என படித்தவர்கள் கூறுகிறார்கள்.

பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை திராவிட கட்சிகள் குழிதோண்டி புதைத்து விட்டன.

சாராயத்தை கொடுத்து மக்களை சீரழித்து விட்டார்கள். இப்போது ஓட்டுக்கும் சாராயம் கொடுக்கிறார்கள். 2016ல் பாமக ஆட்சி அமைக்கும். அப்போது சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். பாமக போராடும் கட்சி. உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும். அனைவரும் பாமகவை ஆதரிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

Friday, October 7, 2011

2016 ல் பா.ம.க. ஆட்சி

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,


உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும். இதனை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளோம். கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி ஆகியவற்றுக்கு உள்ளாட்சிக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். இதற்கு முடிவு எடுத்து செயல்படுத்துகிற அதிகாரத்தை உள்ளாட்சிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்.


மாநிலத்துக்கு சுயாட்சி கேட்கிற திராவிட கட்சிகள் உள்ளாட்சி அமைப்புக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வலியுறுத்தி பெற்று தர வேண்டும். மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு 10 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையின் ஐகோர்ட்டின் 8 வாரகால அவகாசம் முடியும் தறுவாயில் உள்ளது. 3 பேரும் புதிய மனுக்களை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளனர். தமிழக அமைச்சரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


நெல் கொள்முதல் விலையை அ.தி.மு.க. அரசு ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் கரும்பு டன்னுக்கு ரூ.2,500 அளிக்க வேண்டும்.


ராமேஸ்வரம் மீனவர்களை தொடர்ந்து தற்போது நாகை மீனவர்களும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இலங்கை அரசு கடுமையான விளைவுகள் சந்திக்க வேண்டி வரும் என்று இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக, நடுநிலையோடு நடத்த வேண்டும். தேர்தல் அமைதியாக நடைபெற தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். சாராயம் இல்லாமல் இருந்தால் தேர்தல் அமைதியாக நடைபெறும்.


சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து நின்று இருந்தால் 40 50 தொகுதிகளில் வெற்றி கிடைத்து இருக்கும். 11 சதவீத புதிய வாக்காளர்கள் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அ.தி.மு.க.வுக்கு ஓட்டு அளித்துள்ளனர்.


பா.ம.க. இனிமேல், திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் இணையாது. தனித்து போட்டியிடும். வருகிற 2016 ல் பா.ம.க. ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்போம்.


வேலூர் மாநகராட்சியில் 36 வார்டுகளில் பா.ம.க. போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பெருமளவில் வெற்றி பெறுவோம்.


இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Wednesday, September 7, 2011

திருச்சி இடைத் தேர்தலில் நாங்களும் போட்டியிட மாட்டோம், யாரையும் ஆதரிக்கவும் மாட்டோம்- ராமதாஸ்

டலூர்: திருச்சி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது. யாருக்கும் ஆதரவும் கொடுக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கடலூர் வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

திருச்சி மேற்கு சட்டசபை இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. அத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது. புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை பா.ம.க. ஆதரிக்கும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் இனி கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் வந்தால் பரிசீலிப்போம் என்றார் அவர்.

முன்னதாக திருமண நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், வன்னியர் சமுதாயம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

வன்னியர்கள் அதிகம் நிறைந்த பழைய தென்னார்க்காடு, வடஆர்க்காடு மாவட்டங்களில் 1952ல் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயக்கர் ஆகியோர் தலைமையில் தனித்துப் போட்டியிட்டு, 26 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் 7 எம்.பி. தொகுதிகளையும் பெற்றனர் வன்னியர் சமூகத்தினர்.

ஆனால் அதன் பிறகு 1989ல் பா.ம.க. தொடங்கப்பட்டு பல்வேறு கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து இன்று கிடைத்து இருக்கும் இடங்கள் 3 சட்டப் பேரவைத் தொகுதிகள்தான். இடையில் என்ன நிகழ்ந்தது? அந்த உணர்வு எங்கே போயிற்று?

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வன்னியர்களுக்கு ஆளும் உரிமை கிடைத்தும் ஆள விடவில்லை. வாழவும் விடவில்லை. சிலர் அமைச்சர் பதவிக்கும் சிலர் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஓடினர்.

நான் என்றும் கட்சித் தலைவர் உள்ளிட்ட எந்த பதவிக்கும் வரமாட்டேன். நான் என்றும் பா.ம.க.வின் நிறுவனர்தான். நாம் சென்ற பாதை தவறு என்று மாற்றிக் கொண்டோம். 1952ல் இருந்த நிலை இப்போது உள்ளது. இனி எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லை. தேவையும் இல்லை.

இனி வன்னியர்கள் வேறு அரசியல் கட்சிகளுக்குச் செல்லத் தேவையில்லை. அவர்களுக்கு எல்லா பதவிகளும் காத்திருக்கிறது. வன்னியர் கிராமங்களில் இனி பா.ம.க.வும் வன்னியர் சங்கமும்தான் இருக்க வேண்டும். வேறு கட்சிகளுக்கு அங்கு இடமில்லை. வேறு கட்சிக் கொடிகள் பறக்கத் தேவையில்லை. வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சிக் கொடியும் உங்களை உயர்த்தாது.

எந்த இளைஞரைக் கேட்டாலும், நான் பா.ம.க., நான் வன்னியர் சங்கம் என்று சொல்லும் நிலை வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

Friday, September 2, 2011

தூக்கு தண்டனையை ரத்து செய்ய மாநில அமைச்சரவைக்கு அதிகாரமுண்டு: ராமதாஸ்


சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மாநில அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என்றும், அது தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

``சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியை தமிழக சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது'' என்கிற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்தமைக்காக நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நேரத்தில், அரசியல் அமைப்பின் 161ம் பிரிவின் கீழ் மாநில அரசின் அமைச்சரவை மூலமாக கவர்னருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 3 பேரின் தூக்கு தண்டனையை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

3 பேரின் தூக்கு தண்டனையை குறைப்பது தொடர்பாக 29.8.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் அளிக்கப்பட்ட அறிக்கையில் - ``ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கருணை மனுவை மாநில கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991ம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கியுள்ளது.

5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் - மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்பு சட்டம் 72-ன் கீழ் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 161-ன்படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்பு சட்டத்தின் பிரிவு கூறு 257(1)-ன்படி கட்டளையிடுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த தெளிவுரை மாநில கவர்னரையோ, மாநில அரசையோ கட்டுப்படுத்த கூடியது அல்ல. நமது அரசமைப்பு சட்டத்தின்படி சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும், சில அதிகாரங்கள் மாநில அரசிடமும் தன்னாட்சி உரிமையுடன் அளிக்கப்பட்டுள்ளன. எந்த அரசியல் சாசனத்திலிருந்து மத்திய அரசு அதிகாரத்தைப் பெறுகிறதோ, அதே அரசியல் சாசனத்திலிருந்துதான் மாநில அரசும் அதிகாரத்தைப் பெறுகிறது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 72வது பிரிவின் கீழ் மத்திய அமைச்சரவையின் மூலமாக ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே அரசியல் சட்டத்தின் 161-ம் பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையின் மூலமாக மாநில கவர்னருக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரின் அதிகாரங்களும் சரிசமமானவை ஆகும். இதுகுறித்து ``கவர்னர் மற்றும் அவரது அமைச்சரவை ஜனாதிபதியை விட உயர்வானது அல்ல எனும் கருத்திலிருந்து அரசியல் அமைப்பின் 161-ம் பிரிவு விதிவிலக்கானதாகும்'' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது மன்னிக்கும் அதிகாரம் எந்த அளவுக்கு ஜனாதிபதிக்கு உள்ளதோ, அதே அளவுக்கு அதிகாரம் மாநில கவர்னருக்கும் உண்டு. தண்டனையை குறைப்பதிலும், மன்னிப்பதிலும் மாநில அரசும், மத்திய அரசும் சரிசமமானவைதான்.

மாநில அமைச்சரவை என்ன முடிவெடுக்கிறதோ அதனை கவர்னர் அப்படியே ஏற்கவேண்டும். அரசியல் சட்ட விதி 161ன் கீழ் கவர்னர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவை மறுக்கவும் முடியாது. மாநில கவர்னரின் மன்னிக்கும் அதிகாரத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது.

அரசியலமைப்பு சட்டம் 161ன் கீழான மாநில அரசின் இறையாண்மை அதிகாரம், கட்டுப்பாட்டிற்கோ, தடை செய்வதற்கோ உரியது அல்ல. இதனை வெறும் சுற்றறிக்கையால் மட்டுமல்ல - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களால்கூட தடுக்க முடியாது. `இந்த அதிகாரம் முழுமையானது, கட்டற்றது, விதிகளால் தடுக்க முடியாதது' என ஏற்கனவே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உண்மை இவ்வாறிருக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் 5.3.1991ல் அனுப்பிய தெளிவுரை அரசியலமைப்பு சட்டப்படி மதிப்புடையது அல்ல. செல்லுபடியாக கூடியதும் அல்ல. உள்துறை அமைச்சகத்தின் இந்த சுற்றறிக்கை ஒரு நீதிமன்ற வழக்கில் விளக்கமளிப்பதற்காக அனுப்பப்பட்டதாகும். அந்த வழக்கில்கூட இந்த விளக்கம் ஏற்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த 19.4.2000 அன்று தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின்படிதான் தமிழக கவர்னரால் மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதியின் இந்த வரலாற்று பிழையை இப்போதைய முதல்வரால் மாற்ற முடியும். எனவே, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை குறைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிற நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மூன்று பேரிடமும் மீண்டும் புதிய கருணை மனுவைப் பெற்று, மாநில அமைச்சரவைக்கு விதி 161ன் கீழ் உள்ள `இறையாண்மை அதிகாரத்தை' பயன்படுத்தி - அவர்களது தூக்கு தண்டனையை குறைக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

Monday, August 29, 2011

அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்

சென்னை: கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை மாற்றுவதற்கு முதலமைச்சர் என்ற முறையில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி தமது கடமையிலிருந்து விலகிக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா முயன்றிருக்கிறார். இது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்களும் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர்களை தமிழக முதல்வர் காப்பாற்றுவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் நம்பிக்கொண்டிருக்கிறது.

ஆனால், கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை மாற்றுவதற்கு முதல்வர் என்ற முறையில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி தமது கடமையிலிருந்து விலகிக் கொள்ள ஜெயலலிதா முயன்றிருக்கிறார். இது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.

3 பேரின் தூக்கு தண்டனை தொடர்பாக தமிழகச் சட்டப் பேரவையில் விளக்கமளித்த முதல்வர், 1991ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை காரணம் காட்டி, இம்மூவரையும் தம்மால் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியிருப்பது வெறும் கடிதம் மட்டுமே. அந்தக் கடிதத்தைவிட அதிகாரம் படைத்த அரசியல் சட்டத்தில், ""ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்தாலும், அவர் மீண்டும் ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதன்மீது மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று ஆளுநர் முடிவெடுக்கலாம்'' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரத்தை ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் வழங்கும் அரசியல் சட்டத்தின் 161ஆவது பிரிவு தீர்ந்து போகாத இறையாண்மை கொண்டது என்றும், ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததாலேயே, அவரின் கருணை மனுவை மீண்டும் ஆய்வு செய்யும் அதிகாரம் மாநில ஆளுநரிடமிருந்து பறிக்கப்படாது என அரசியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆந்திரத்தைச் சேர்ந்த பூமய்யா, கிருஷ்ட கவுடு ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 1976ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ""ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதாலேயே, சம்மந்தப்பட்டவரின் 2ஆவது கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ இல்லாமல் போகாது'' என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. இந்த கருத்தை அரசியல் சட்ட வல்லுநர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

எனவே இந்த மூவரின் சார்பிலும் ஆளுநரிடமும், முதல்வரிடமும் அளிக்கப்பட்டுள்ள கருணை மனுக்கள் மீது முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி சாதகமான முடிவை எடுக்க முடியும்.

கேரளத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சி.ஏ. பாலன் என்பவரின் கருணை மனுக்களை குடியரசு தலைவரும், ஆளுநரும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், 1957ஆம் ஆண்டில் கேரள சட்ட அமைச்சராக பொறுப்பேற்ற வி.ஆர். கிருஷ்ணய்யர், அப்போதிருந்த மத்திய அரசிடம் போராடி அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இதையெல்லாம் முன்னுதாரணமாகக் கொண்டு மூவரின் உயிரையும் காப்பாற்ற முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்படியான உரிமைகள் ஒருபுறம் இருக்க, இம்மூவரையும் காக்க அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள இயலும்.

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பெருமை தேடிக் கொண்ட முதல்வர் அவர்கள், இம்மூவரின் தூக்கு தண்டனையையும் இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

மூவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் அவர்கள் மனது வைத்தால், அதை சாதிக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Sunday, August 21, 2011

இனி தனித்து போட்டியிடுவோம் என்றால் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்: ராமதாஸ்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததும் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மணவாளநகரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி சட்டசபை தொகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்தவும், இளைஞர் படையை அமைக்கவும், தொகுதி வளர்ச்சிக்காகவும் ஆட்களை தேடினோம். அப்போது பாலா என்ற பாலயோகியின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை மாநில துணை பொதுச் செயலாளர் ஆக்கியுள்ளோம். அவருக்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் பாமக மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மக்களை வறுமையில் தள்ளி, இலவசங்களைக் கொடுத்து தமிழகத்தையே சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்ட ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்ணும் சபதம் எடுக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தமிழகத்தில் குறைந்தது 13 இடங்களையாவது கைபற்றும்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது. 1989-ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த புதிதில் தனித்து போட்டியிட்டு 17 லட்சம் வாக்குகள் பெற்றோம். மீண்டும் 1991-ம் ஆண்டு தனித்து நின்று 1 எம்.எல்.ஏ. வைப் பெற்றோம். 1996-வது ஆண்டிலும் தனித்தே நின்று 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். அதன் பிறகு தான் கூட்டணி வைத்தோம். தற்போது வெறும் 3 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர்.

பாமக தனித்து போட்டியிடும் என்றதுமே கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்றார்.

Sunday, August 14, 2011

ஒருமாதம் நான் சொல்வதை கேட்டால் போதும்: ராமதாஸ்

கும்பகோணம்:""ஒருமாதம் நான் சொல்வதை தமிழக அரசு கேட்டால் போதும்,'' என்று கும்பகோணத்தில் நடந்த தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.அவர் பேசியதாவது:தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகளும், திராவிட கட்சிகள் 44 ஆண்டுகளும் ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால், தமிழக மக்கள் எதிலும் முன்னேற்றம் அடையவில்லை.தமிழக மக்களுக்கு இலவசமாக பல்பொடி வழங்குவதில் துவங்கி, இன்று ஆட்டுகுட்டியில் வந்து நிற்கிறது.

இந்த இலவசங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.திராவிட கட்சிகளோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை. இனிமேல் தமிழகத்தில் பா.ம.க., தலைமையில் தான் கூட்டணி அமையும்.தமிழக மக்கள் நலனில் கடந்த அரசுகளுக்கு அக்கறை இல்லை. ஆனால் கல்வி, பொருளாதாரம், ஆகியவற்றில் நாம் வளர்ச்சி பெறவில்லை. ஒருமாதம் நான் சொல்வதை இந்த அரசு கேட்டால் போதும்; நான் கடந்த அரசிடமும் சொன்னேன், இப்போதும் செல்கிறேன்.சமமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம்.

தமிழகத்தில் உள்ள 49 கட்சிகளுக்கு இந்த கொள்கை இல்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்னையான காவிரி பிரச்னைக்கு காரணமாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும்தான்.காவிரி பிரச்னை தொடர்பாக இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஏன் முயற்சிகள் எடுக்கவில்லை.தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். திராவிட கட்சிகள் காலத்தில் தான் தமிழன் எலிகறி சாப்பிடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரிசியில் தான் அரசியல் நடத்துகின்றனர்.

தமிழக மக்களுக்கு தரமான கல்வி, விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை கொடுத்தால், அதன்மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள். இனி கடலில் நீர் உள்ள அளவும், வானத்தில் மேகம் உள்ள அளவும் பா.ம.க., யாரோடும் கூட்டு வைக்காது.வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிருபிப்போம். தமிழகத்தில் பா.ம.க.,வால் மட்டுமே கல்வி புரட்சி, தொழில்புரட்சி, விவசாய புரட்சி ஆகியவற்றை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Thursday, August 11, 2011

பா.ம.க., : அரசுப் பள்ளிகளில், 60 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும்

சென்னை: ""பக்கத்து மாநிலங்களில் மது விற்பனை நடந்து, தமிழகத்தில் மட்டும் மது விலக்கை அமல்படுத்தினால், கள்ளச்சாராயக் கடத்தலுக்கு வழிவகுக்கும்'' என்று, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.பட்ஜெட் மீது, சட்டசபையில் நடந்த விவாதம்:கலையரசன் - பா.ம.க., : அரசுப் பள்ளிகளில், 60 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். மதுவால் இளைய தலைமுறை ஒருபுறம் சீரழிவதோடு, ஏழைக் கூலி தொழிலாளர்களும், தங்களது கூலியை இதற்காகச் செலவிடுகின்றனர். கள்ள மது மற்றும் மது கடத்தல் சம்பவங்களும் நடக்கின்றன.அமைச்சர் விஸ்வநாதன் : முந்தைய ஆட்சியில் தான், ஆட்சியாளர்கள் உதவியுடன், மது கடத்தல் நடந்தது. தற்போது, கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க, கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பலர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.கலையரசன் : மதுவின் தீமை பற்றி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். பூரண மது விலக்கை அமல்படுத்த, வலியுறுத்தி வருகிறார்.அமைச்சர் விஸ்வநாதன் : மதுவின் தீமையை, இந்த அரசும் உணராமல் இல்லை. மது விலக்கு வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பக்கத்து மாநிலங்களில் மது விலக்கை அமல்படுத்தாமல்,

தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால், தமிழகம் ஒரு தீவு போல ஆகிவிடும். எனவே, அடுத்த மாநிலங்களில் அமல்படுத்தினால் தான், அது முழுமை பெறும். அல்லது கள்ளச் சாராயக் கடத்தலுக்கு வழிவகுக்கும்.கலையரசன் : உண்மையான நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம். ஆனால், முன்பு நிலத்தை விற்றவர்கள், தற்போது அந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், அதிக விலை கிடைக்கும் என்பதற்காக, புகார் கொடுப்பதும் நடக்கிறது. அரிசி கடத்தல் தொடர்கதை ஆகிவிட்டது.
அமைச்சர் செல்லூர் ராஜு: எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், இலவசமாக 20 கிலோ அரிசி இங்கு வழங்கப்படுகிறது. இந்த அரிசி, முந்தைய தி.மு.க., அரசு வழங்கியதை விட, தரமானதாக உள்ளது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் வாங்குகின்றனர்.ஆரம்பத்தில், கடத்தல் ஒரு சில இடங்களில் நடந்தது. ஆனால், தீவிர கண்காணிப்பு காரணமாகவும், பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்காமல், குண்டர் சட்டம் ÷பான்றவற்றில் கைது செய்யப்பட்டனர். யார் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களது சொத்துக்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கலையரசன் : கடந்த இரண்டு மாதங்களில், 1,519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,877 குவின்டால் கடத்தல் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 65 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் செல்லூர் ராஜு: எந்த அரசு, இவ்வளவு தூரம் சிறப்பாகச் செயல்பட முடியும். கடந்த ஆட்சியில், வேன், லாரி, கப்பல் என பல வழிகளில் அரிசி கடத்தினர். பெயருக்கு கைது நடவடிக்கைகள் இருந்தன. தற்போது, சரியான அதிகாரிகளைக் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏதாவது ஒரு பகுதியில், அரிசி கடத்தல் நடந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.கலையரசன் : பா.ம.க.,வினர் யாரும், அரிசி கடத்தலில் ஈடுபடவில்லை.அமைச்சர் செல்லூர் ராஜு: பா.ம.க., அரிசி கடத்தியதாகக் கூறவில்லை. கடந்த ஆட்சியில் நிர்வாகிகள் செய்தனர். ஆனால், அவர்களுக்கு அன்றும் துணை நின்றீர்கள். இன்னும் துணை நிற்கிறீர்கள்.கலையரசன் : வேலூரில், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில், 4 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி : யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.

"மக்களுக்காக அரசியல்':பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: ""திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். "திராவிடம்' என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், "மக்களுக்காக அரசியல்' என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Wednesday, August 10, 2011

திராவிட கட்சிகள் இந்தளவு பாழ்படுத்தி விட்டது.: ராமதாஸ்

வேலூர்: ""கடந்த, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.,பொதுக் குழு கூட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில்நடந்தது. பா.ம.க., மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டது. இப்போதாவது தனித்து போட்டி என்ற எடுத்துள்ள முடிவில் உறுதியாக இருப்பீர்களா என, என்னிடம் பலர் கேட்கின்றனர். காரிருள் உள்ள வரை, கடல் நீர் இருக்கும் வரை தனித்துப் போட்டி என்ற கொள்ளையில் இருப்போம். காங்கிரஸ் தமிழகத்தை சீரழித்து விட்டது. இதை மாற்ற வேண்டும் .காங்கிரஸை ஒழிப்பது தான் திராவிடக் கட்சிகளின் கொள்கை என, 1949ம் ஆண்டில் இருந்து கூறி வந்தவர்கள் கொள்கை அழிந்து விட்டது. எனவே, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை. திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்ற நம்மால் தான் முடியும். இலவசங்கள், சினிமா, மது கொடுத்து ஏமாற்றி விட்டனர். விவசாயம் அழிந்து விட்டது. திராவிட கட்சிகள் கட்டாய கல்வி, இலவச கல்வி, தரமான கல்வியை அளிக்கவில்லை. இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிடக் கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். இந்த கட்சி கொடிகளை பார்க்கும் போது இந்த எண்ணம் நமக்கு வர வேண்டும். இப்போது சமச் சீர் கல்வி திட்டம் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நிறைய மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், சி.பி.எஸ்.சி.,க்கு மாற்றுவதற்கு தயாராகி வருகின்றனர். இப்படி மாற்றினால் இந்த பள்ளிகள் முன் கடுமையான முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழி பாடமாக இருக்க வேண்டும். அனைத்து பாடங்களும் தமிழில் தான் இருக்க வேண்டும். இதை அமுல்படுத்தாத பள்ளிகள் அரசுடமையாக்கப்படும் என இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த தைரியம் அரசுக்கு உள்ளதா? சாயக் கழிவுகளால் நொய்யலாறு மாசுபட்டுள்ளதை தடுக்க, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால் பாலாற்றை தூய்மையாக்க இந்த அரசு என்ன செய்தது? தமிழகம் முழுவதும் காயம்பட்டு கிடக்கின்றது.
ரணம் அதிகம் உள்ளது. திராவிட கட்சிகள் இந்தளவு பாழ்படுத்தி விட்டது. ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, பா.ம.க.,வுக்கு வந்து விட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., வை மட்டும் தான் வெற்றி பெறணும். மற்ற கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., இளவழகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேலு, பொன்னுசாமி, சண்முகம், அணைக்கட்டு எம்.எல்.ஏ., கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, August 5, 2011

மக்களை நம்பி தான், கட்சியை தொடங்கினேன்: ராமதாஸ் பேச்சு

Print | E-mail
சனிக்கிழமை, 6, ஆகஸ்ட் 2011 (8:36 IST)

[X]
Click Here!



மக்களை நம்பி தான், கட்சியை தொடங்கினேன்: ராமதாஸ் பேச்சு



கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 05.08.2011 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். அப்போது பேசிய டாக்டர் ராமதாஸ்,


கடந்த மாதம் 27ந் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்றும், இனிமேல் தனித்துநின்று போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நமது கொள்கை விரும்பி, மக்களுக்காக போராடும் கட்சி மற்றும் சங்க அமைப்புகள் நமது கூட்டணிக்கு வந்தால் தேர்தலில் போட்டியிடுவோம். இங்கு பேசிய ஒருவர் பா.ம.க. தான் சிறந்த கட்சி என்று கூறினார். இதைத்தான் 3 ஆண்டுகளாக நான் சொல்லிவருகிறேன்.


மக்களை நம்பி தான், நான் 1989 ல் கட்சியை தொடங்கினேன். ஒரு கட்சி தொடங்குவது மற்றொரு கட்சியை ஆட்சியை அமர்த்துவதற்கு அல்ல. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நாம் ஆட்சியில் அமர்த்தி வந்தோம். இனி இதுபோன்று கூடாது. எனவேதான் தனித்துப்போட்டியிடுவது என்று முடிவு எடுத்தோம். இதை நல்லவர்கள், படித்தவர்கள், நடுநிலையார்கள், உயர்அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.


தனித்து போட்டி என்ற முடிவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் தற்போது நாம்தான் ஆட்சி நடத்துவோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11 சதவீதம் புதிய வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இவர்கள் அ.தி.மு.க.வை விரும்பி வாக்களிக்கவில்லை. தி.மு.க. வரக்கூடாது என்ற என்னத்தில், 3 வது அணி இல்லாத காரணத்தால் வாக்களித்தனர். அப்படி 3வது அணியாக நாம் இருந்திருந்தால் நமக்குத்தான் அந்த வாக்குகள் கிடைத்திருக்கும் என்றார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
Name * :
Email Id * :

Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :

இலவசங்களை மக்கள் கேட்டார்களா? ராமதாஸ்

ள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 05.08.2011 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ்,


மாணவர்களுக்கு தரமான கல்வி, மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை இலவசமாக வழங்க கொடுக்கவேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பெறும்.


இலவசங்களை மக்கள் கேட்டார்களா?. மதுபான கடைகளை மூடிவிட்டு விவசாயத்துக்கான வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாய உற்பத்தியை பெருக்க எதுவும் ஒதுக்கவில்லை.

ஏனென்றால் இவர்களுக்கு விவசாயம், வேளாண்மை பற்றி ஒன்றும் தெரியாது. நமக்கு இதுபற்றி தெரிந்ததால்தான் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயத்துக்காக தனி பட்ஜெட் போடுகிறோம். நாம் சொல்லும் பட்ஜெட்டை நிறைவேற்றினால் நாடு பெரும் வளர்ச்சி அடையும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்

விழுப்புரம்: திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்பதை, தீக்குளித்து நிரூபிக்கவும் தயார் என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். விழுப்புரத்தில்,

நேற்று மாலை நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: பொதுக்குழு கூட்டி, இனி திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணியில்லை என்ற, தீர்மானத்தை நிறைவேற்றினோம். நமது கொள்கையைப் பின்பற்றும் கட்சியோடு, அணிவகுப்போம். திராவிடன் என கூறுவதை விட, தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். திராவிடம் எனக் கூறி நம்மையும், மக்களையும் ஏமாற்றினர், ஏமாந்தோம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றனர். அந்தக் கொள்கையை, சுடுகாட்டுக்கு அனுப்பியது தான் மிச்சம்.
"மானாட மயிலாட' பார்க்க, கட்சிக்கு ஒரு "டிவி' துவக்கியுள்ளனர். திராவிட கட்சிகள் ஆட்சியில் சினிமா, அரசியல் காரணமாக சீரழிவுகள் தான் அதிகம். நீங்களும் திராவிட கட்சிகளிடம், கூட்டணி வைத்தீர்களே என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எதிர்க்கட்சியாகவே இருந்து, எதிர்த்து கேள்வி கேட்டோம். தி.மு.க.,வினர் கூட பயந்திருந்தனர். தி.மு.க., ஆட்சியில், நாம் கொடுத்த தொல்லையில், கருணாநிதி தலையில் அடித்துக்கொண்டு, தொலைந்து போ என்றதால் வெளியேறினோம்.
தனித்து நிற்க நல்ல முடிவெடுத்துள்ளீர்கள், உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கின்றனர். உறுதியாக இருப்போம் என்று நிரூபிக்க, தீக்குளிக்கனுமா.. எங்கிருந்தாவது குதிக்கனுமா, சொல்லுங்க தயார். இவர்களிடம், இனி எக்காலத்திலும் உறவும் இல்லை; ஒட்டும் இல்லை என்பது உறுதி. தனித்து நிற்கும் முடிவை வரவேற்று, தென்மாவட்டங்களில் இருந்தும், அதிகக் கடிதங்கள் வருகின்றன. மதுவைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள், ஓட்டு போய்விடும் எனலாம். போகட்டும் நமக்கு ஓட்டு வேண்டாம். இவ்வாறு, பா.ம.க., ராமதாஸ் பேசினார்.

Tuesday, August 2, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக போராட்டம்- ராமதாஸ் கைதாகி விடுதலை

திண்டிவனம்: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி பாமக சார்பில் இன்று தமிழகத்தின் வட பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் போராட்டம் நடத்தி கைதானார். பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு புத்தகம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி தமிழகத்தின் வட பகுதிகளிலும், மேற்குப் பகுதிகளில் சில ஊர்களிலும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆடு, மாடு வேண்டாம், கல்வி வேண்டும்-ராமதாஸ்:

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பது பாமகதான். சமச்சீர் கல்வி கொண்டுவர வேண்டும் என்று போராடியது பாமகதான். தமிழக அரசு இலவச மாடு, ஆடு, கிரைண்டர், மிக்சி தருவதாக கூறுகிறது. தமிழக மக்களுக்கு இலவச கல்வியை மட்டும் அரசு கொடுத்தால்போதும். வேறு எதுவும் இலவசமாக தமிழக அரசு கொடுக்க வேண்டாம்.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதுதொடர்பான தீர்ப்பு தாமதமாக வந்தாலும், நல்ல தீர்ப்பு வரும் என்று பாமக எதிர்பார்க்கிறது. கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை சரியாக திட்டமிட்டு செயல்படுத்தியிருந்தால், தற்போது இவ்வளவு பெரிய பிரச்சனையாக வந்திருக்காது என்றார்.

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

சென்னை: ""தமிழகத்தில், சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பா.ம.க., சார்பில் தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, கண்டன ஆர்ப்பட்டத்தை துவக்கி வைத்து பா.ம.க., தலைவர் மணி பேசும் போது, ""தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால், தவித்து வருகின்றனர். காலதாமதம் தொடர்ந்தால், பாடங்களை முழுவதுமாக நடத்துவது சிரமம் என ஆசிரியர்கள் கூறுகின்றனர். ""சமச்சீர் கல்வியை தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும் என மாணவர்களின் பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர். இவைகளை அரசு கண்டுகொõள்ளாமல் உள்ளது. கல்வித் துறை செயல் இழந்து விட்டது. எல்லாருக்கும் தரமான, சீரான கல்வி கிடைக்க, சமச்சீர் கல்வி அவசியம். சமச்சீர் கல்வியை உடனடியாக செயல்படுத்த வேண்டும்'' என்றார்

Sunday, July 31, 2011

மத்திய அரசு கொண்டுவர உள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு பா.ம.க. வரவேற்பு: ராமதாஸ்

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு பா.ம.க. வரவேற்பு தெரிவிப்பதாக, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.



இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கடந்த 5 ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வருகிறேன். அதிலும் குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் மறைமுகமான நில வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தும், இதற்காக ஏழை, எளிய உழவர்களின் வாழ்வாதாரமான நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.



அரசின் நிலம் எடுப்பு கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் சட்டம் திருத்தப்படும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.



அதற்கான வரைவு சட்டத்தையும் தயாரித்து அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எக்காரணத்தை முன்னிட்டும் பாசன வசதி பெறும் நிலங்களோ அல்லது பலவகையான பயிர்கள் விளையும் நிலங்களோ கையகப்படுத்தப்படாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.



தனியார் நிறுவனங்களுக்காக அரசே நிலத்தை கையகப்படுத்தி தராது என்றும், அரசின் திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், அதனால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களில் 80 சதவீதத்தினரின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும் வரைவு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இதை பா.ம.க. சார்பில் நான் வரவேற்கிறேன்.



தவிர்க்க முடியாத அவசர திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது, நகர்ப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 2 மடங்காகும், கிராமப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 6 மடங்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று வரைவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல.



கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட 10 மடங்கு கூடுதல் விலை தரவேண்டும். அதுமட்டுமின்றி, நிலம் தருவோரின் குடும்பங்களுக்கு அவர்களது நிலத்தில் தொடங்கப்படும் நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும். லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்தான் பாதிக்கப்படுகிறதே தவிர, எந்த வகையிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. இதை உணர்ந்து விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Thursday, July 7, 2011

வேளாண் துறைக்கு தனியாக, "பட்ஜெட்' தாக்கல்:ராமதாஸ்

வேளாண் துறைக்கு தனியாக, "பட்ஜெட்' தாக்கல் செய்ய வேண்டும் என்பதை, மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில், 4வது வேளாண் நிழல் பட்ஜெட் அறிக்கையை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு உள்ளதைப் போல, விவசாயிகளுக்கும் ஊதியக் குழு அமைத்து, அவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல், பள்ளிகளில் மதிய உணவுடன் வாழைப்பழம், நெல்லிக்காய் கொடுத்தல், பால்,"பூத்'களில் கீரை விற்பனை, நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக சிறப்பு ஐந்தாண்டு திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தில், விவசாய வேலைகளையும் சேர்த்தல், விவசாய கடன்களுக்காக 1,000 கோடி ரூபாய் சுழல்நிதி உள்ளிட்ட அம்சங்களுடன், 21 ஆயிரத்து 67 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், வேளாண் நிழல் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. "இதை, தமிழக அரசுக்கு விரைவில் அனுப்ப உள்ளோம்' என, ராமதாஸ் தெரிவித்தார்.

பின், ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிப்போருக்கும், அரசுப் பள்ளிகளில் பயில்வோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். சமச்சீர் கல்வியை மனிதாபிமான அடிப்படையில் பா.ம.க., ஆதரிக்கிறது. தேர்தலில் பணம் விளையாடுவது தற்போது அதிகரித்து வருகிறது. "பூத் ஏஜென்ட்'களுக்கு கட்சிகள் பணம் தருவது இதற்கு முக்கிய காரணம். இனிவரும் தேர்தல்களில், "பூத் ஏஜென்ட்'களுக்கு பா.ம.க., பணம் தராது. மற்ற கட்சிகளும் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Tuesday, June 28, 2011

5 சீட், 8 சீட்டுக்குப் பறப்பதை விட்டு விட்டு கான்ஷிராம் போல வளர வேண்டு-திருமா.வுக்கு ராமதாஸ் அறிவுரை

சென்னை: அம்பேத்கர் சொன்னதை நாம் மறந்து விட்டோம். 5 சீட், 8 சீட்டுக்காக நாம் ஏன் அலைய வேண்டும். உங்களோடு நானும் வருகிறேன். இனிமேல் சீட்டுக்காக அலைவதை விட்டொழிப்போம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

பெரியார் திடலில் நடந்த விழாவில் ராதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது, திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு பெரியார் ஒளி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீனுக்கு காயிதே மில்லத் பிறை விருது, எழுத்தாளர் சோலைக்கு காமராஜர் கதிர், மு.சுந்தரராஜனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, தணிகை செல்வனுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்பட்டது.

விழாவில் ராமதாஸ் பேசுகையில்,

இந்த ஆட்சியில், கிரைண்டர், மிக்சி முதல் ஆடு, மாடுகள் வரை எல்லாம் இலவசம் வழங்கப்படுகிறது. தலித் மக்கள் ஒன்றுபட்டால் கல்வி புரட்சி ஏற்படும். அம்பானி குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிற தரமான கல்வி தலித் இளைஞர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

எங்கே தமிழ் என்றால் எங்கேயும் தமிழ் இல்லை. இந்த நிலை மாற உங்களால் முடியும். விடுதலை சிறுத்தைகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களோடு ஒன்று சேர்ந்து போராடுவோம். நானும் உங்களோடு ஒருவனாக சேருகிறேன்.

உத்தரப் பிரதேசத்தில் கான்ஷிராம், மாயாவதி போல இங்கு திருமாவளவனால் செயல்பட முடியாதா?. 5 சீட்டுக்கும், 8 சீட்டுக்கும் ஏன் ஆலாய் பறக்க வேண்டும். சமூக மாற்றத்தை ஏன் நாம் கொண்டு வரமுடியாது? ஆகவே நாம் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்றார்.

திருமாவளவன் பேசுகையில்,

ஆடு, மாடுகள் வழங்கும் இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஆடு, மாடு மேய்க்க வைக்கிறார்கள். இலவச திட்டங்களுக்கு பதிலாக இலவச கல்வியை வழங்குங்கள் என்றும், சமச்சீர் கல்வி திட்டத்தை கொடுங்கள் என்றார்

Tuesday, June 21, 2011

சிங்கள தாக்குதலிலிருந்து தப்பிக்க மீனவர்களுக்கு துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்பு-ராமதாஸ்

சென்னை: தமிழக மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்குவதிலிருந்து தடுத்துக் காத்திடும் வகையில், தமிழக மீனவர்களுடன் ஆயுதம் ஏந்திய போலீஸ் குழுவையும் பாதுகாப்புக்கு உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

வங்கக் கடலில் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரை அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எத்தனையோ முறை போராட்டம் நடத்தியும், கோரிக்கைகள் வைத்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

2011ம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் மொத்தம் 6 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களை இலங்கை படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களை அவர்கள் விரட்டி அடித்திருக்கின்றனர். தமிழக மீனவர்களைத் தாக்குவது, சிறை பிடிப்பது என்பது போன்ற இலங்கைப் படையினரின் கொடுமைகள் முடிவின்றி தொடர்கின்றன.

கடந்த 4 மாதங்களில் 6 தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் படுகொலை செய்தபோதிலும் அதற்காக இலங்கை மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதிலும் விளக்கம் கேட்பதுடன் இந்திய அரசு அதன் கடமையை முடித்துக்கொள்வதால், தமிழக மீனவர்களை என்ன செய்தாலும் இந்தியா கேட்காது என்ற துணிச்சல் இலங்கைப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறாத வரை தமிழக மீனவர்களின் துயரமும் மாறாது.

எனவே இலங்கைப் படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரையும் மீட்க தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கினாலோ அல்லது கைது செய்தாலோ கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதை தடுப்பதற்காக அவர்களின் படகுகளில் துப்பாக்கி ஏந்திய தமிழக காவல்துறையினரை பாதுகாப்புக்கு அனுப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

Saturday, June 18, 2011

திருமதி ஓய்ஜிபி, டிஏவி ஜெயதேவ் கல்வியாளர்களா? - ராமதாஸ் கேள்வி

சென்னை: சென்னையிலேயே அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை நடத்தும் திருமதி ஒய்ஜிபி மற்றும் டிஏவி ஜெயதேவ் ஆகியோர் கல்வியாளர்களா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

சமச்சீர் கல்வி பற்றி முடிவெடுப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி.பார்த்திசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

உச்சநீதிமன்றம், 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இருவரும் இடம்பெறவேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான்.

ஆனால், குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் 2 பள்ளிகளின் முதலாளிகள். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் தரும் பணக்காரர்களுக்காக மட்டுமே பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும்பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.

சமச்சீர் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இருக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் ஒரு சார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலைப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தப்பட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.

Thursday, June 16, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி 20ம் தேதி பாமக முழக்கப் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி வருகிற 20ம் தேதி பாமக சார்பில் தமிழகம் தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும்போது, அதை மற்ற வகுப்புகளுக்கும் நீடிப்பதற்கு தடை எதுவும் இருக்க முடியாது.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்பில் சமச்சீர் கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போதைய கல்வியாண்டில் வேறு பாடத்திட்டத்தில் படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும்.

எனவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள் மூலமாக இக்கருத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை நினைவரங்கம் அருகே எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Wednesday, June 8, 2011

குடிக்க கூடாது என சொல்வது நான் மட்டும்தான்: ராமதாஸ்

திருக்கோவிலூர் : ""ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என மூன்று விதமான படிப்புகள் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.



விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது:நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும்.



ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான்.சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும். இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Tuesday, June 7, 2011

சமச்சீர்க் கல்வியை தமிழக அரசு கைவிடக் கூடாது-ராமதாஸ்

சென்னை: சமச்சீர்க் கல்விமுறை அனைத்து தரப்பினரிடமும் வரப்வேற்பை பெற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ஏழை பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்களும் அறிஞர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், சமச்சீர்க் கல்வி முறையை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த முன்வடிவை தமிழக அரசு சட்டப்பேரவையில் அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்காக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள முன்வடிவில், முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்படாதது உட்பட சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிக்கிறது.

இதன்மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர்க் கல்வி திட்டம் முதன் முறையாகக் கொண்டுவரப்பட்டது, பா.ம.க. சார்பில் பேசிய சட்டப்பரவைக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி சமச்சீர்க் கல்விக்கான சட்ட முன்வடிவில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், முத்துக்குமரன் குழு அறிக்கையில் என்ன பரிந்துரை சொன்னார்களோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியதை சுட்டிக்காட்டி, இது தொடர்பான பா.ம.க.வின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று வினா எழுப்பியிருக்கிறார்.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக பா.ம.க.வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகத்தான் உள்ளது. தமிழக அரசு சுட்டிக்காட்டியிருப்பதை போல, சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சில குறைகள் இருப்பதை பா.ம.க. எப்பாதும் மறுக்கவில்லை. ஆனால், அந்த குறைகளைக் காரணம் காட்டி சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நிறுத்திவிடக்கூடாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு.

சமச்சீர்க் கல்வித் திட்டம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் என்றுதான் நான் வலியுறுத்தினேன்.

சமச்சீர்க் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சமச்சீர்க் கல்வித் திட்டம் மீண்டும் எப்போது செயல்படுத்தபடும் என்று அவையில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துபார்க்கும்போது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட அரசு திட்டமிட்டிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

சமச்சீர்க் கல்விமுறை அனைத்து தரப்பினரிடமும் வரப்வேற்பை பெற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். செயல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Monday, May 30, 2011

புகையிலையை எதிர்த்து போராட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை, மே.30: புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


உலக புகையிலை எதிர்ப்பு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

2008-ம் ஆண்டு அன்புமணியின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோதிலும், காலப்போக்கில் கைவிடப்பட்டுவிட்டது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையார செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம். புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன் புகையிலை பொருட்களின் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்

Monday, May 23, 2011

சமச்சீர் கல்வி தொடர வேண்டும்: ராமதாஸ்

சென்னை:"சமச்சீர் கல்வி தொடர வேண்டும்' என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.



இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் சில குறைகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. அக்குறைகளை, படிப்படியாக சரிசெய்வது தான் முறை. சமச்சீர் கல்வி முறையையே நிறுத்தி வைப்பது, வளரும் கன்றை முளையிலேயே வெட்டுவதற்கு சமம்.சமச்சீர் கல்வி குறித்து பரிந்துரைக்க, புதிய வல்லுனர் குழு அமைக்கப்படும் என்பது காலம் தாழ்த்தும் செயல். இதன்மூலம், தனியார் பள்ளி முதலாளிகளின் நிர்பந்தத்திற்கு அரசு துணை போய்விடக் கூடாது.



அரசின் முடிவால், 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட 9 கோடி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பழைய பாடத் திட்டத்தின்படி, புத்தகங்கள் அச்சடிக்க கால தாமதமும், கூடுதல் செலவும் ஏற்படும். ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்துள்ள நிலையில், சமச்சீர் கல்வி முறையைக் கைவிடுவது, மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.மாணவர்களின் நலன் கருதி, பாகுபாடு இல்லாத கல்வியை அளிக்க சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வி ஆண்டு முதலே நடைமுறைபடுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Saturday, May 14, 2011

பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை, மே 14- பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இன்று மாலை, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.


அறிக்கையில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:


ஒரு ஆண்டுக்குள் பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலை உயர்வை விட மிகவும் அதிகமாகும்.


பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதை குறைக்காமல் சுமையை மக்கள் மீது சுமத்துவது சரியல்ல. எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.


பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை அரசு குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் இருந்தால் அதையும் கைவிட வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Tuesday, May 10, 2011

தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை:"தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுவது வழக்கம். இந்த முறையும் அதேபோன்று தான் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, ஒட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களில் சிலர், பாடவாரியாக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன்தான், தரவரிசைப் பட்டியலில் அவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இதே அளவுகோலை, பாடவாரியான தரவரிசைப் பட்டியல் தயாரிப்புக்கு தேர்வுத்துறை அதிகாரிகள் பின்பற்றாதது, தமிழக அரசின் கொள்கைக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது.

இத்தகைய போக்கு தொடர்ந்தால், தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இதனால், தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற பாரதியாரின் வார்த்தைகள் மெய்யாகி விடும் ஆபத்து உள்ளது.இப்படிப்பட்டதொரு நிலை ஏற்பட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே தரவரிசை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மாநில அரசின் பரிசுகளும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழை ஒரு பாடமாக படித்து, செம்மொழியாம் தமிழ் மொழி செழித்து வளர வழி பிறக்கும்.

இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் இருக்க ஒரே தீர்வு, தமிழை கட்டாயப்பாடமாக்குவது தான். தமிழ் மொழிப் பாடத்தை ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒவ்வொரு வகுப்புக்கு கட்டாயப் பாடமாக நீட்டித்து வருவதற்குப் பதில், அனைவரும் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Wednesday, May 4, 2011

பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறது. இதையொட்டி பல விருதுகளும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கிறது.

விருது பெறுபவர்கள் விவரம்,

அம்பேத்கர் சுடர் விருது - பாமக நிறுவனர் ராமதாஸ்

பெரியார் ஒளி விருது - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்

காமராசர் கதிர் விருது - மூத்த எழுத்தாளர் சோலை

அயோத்திதாசர் ஆதவன் விருது- பவுத்த பெரியார் சுந்தரராசன்(மறைவு)

காயிதே மில்லத் பிறை விருது - பேராசியிரியர் காதர் மைதீன்

செம்மொழி ஞாயிறு விருது - கவிஞர் தணிகைச் செல்வன்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படையின் அத்துமீறல்

அமெரிக்கப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவை சுட்டுக் கொன்றது அத்துமீறிய செயலாகும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது அமெரிககாவின் அரச பயங்கரவாதம். இன்னொரு நாட்டில் நுழைந்து அதன் இறையாண்மையில் தலையிடும் அமெரி்க்காவை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டோனிக்கு எதிராக பசுமைத் தாயகம் ஆர்ப்பாட்டம்: 100 பேர் கைது

சென்னை, மே 4- கிரிக்கெட் வீரர் டோனி மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.


இத்தகவல் பசுமைத் தாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் சேமியர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐசிடிஇ முடிவுக்கு ராமதாஸ் எதிர்ப்பு

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை உயர்த்தி ஏஐசிடிஇ பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஏஐசிடிஇ வகுத்துள்ள புதிய நெறிமுறைப்படி பொறியியல் கல்லூரிகளில் சேர, பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பட்டியலினம், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அவர்களை முன்னேற விடாமல் கீழே தள்ளும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.


அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரான இந்த ஆணை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.


தமிழக மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தொடரும் என்று அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றி.


மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

Tuesday, May 3, 2011

புதிய கல்வி கட்டணம்: மீறும் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும்-ராமதாஸ்

சென்னை: புதிய கல்வி கட்டணத்தை ஏற்காத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு, கல்விக்கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கும் வரை பள்ளிகளை திறக்கமாட்டோம் என்றும், சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால் அக்கல்வி முறையை நடப்பாண்டில் நடைமுறைபடுத்தமாட்டோம் என்றும் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. இது அரசுக்கு சவால் விடுக்கும் செயலாகும்.

அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் கட்டமாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியையும், மத்திய அரசு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளன. சமச்சீர் கல்வியில் சில குறைபாடுகள் இருக்கலாம். இது காலப்போக்கில் களையப்பட வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதற்கான முயற்சியில் அரசுக்கு துணை நிற்க வேண்டிய தனியார் பள்ளிகள், தங்களது விருப்பம் போல கட்டணக் கொள்ளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோருவதும், சமச்சீர் கல்வியை தங்களது விருப்பம் போலத் தான் செயல்படுத்துவோம் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது அனைவருக்கும் தரமானகல்வி வழங்கும் முயற்சி என்ற கற்பக மரக்கன்றை வளர்ப்பதற்காக தண்ணீர் ஊற்றுவதற்கு பதில், வெந்நீர் ஊற்றி அழிக்கும் செயல்.

தனியார் பள்ளிகளின் இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் மாநில அரசு செய்யவேண்டும். கட்டண உயர்வு கோரி மேல்முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு உடனடியாக வெளியிட வேண்டும். அக்கட்டணம் ஏழைகளாலும் செலுத்தப்பட வேண்டிய அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்ய சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு பிறகும் தனியார் பள்ளிகள் வழிக்கு வரவில்லையென்றால் அவற்றுக்கு அரசின் நிதி உதவியை வழங்கி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி தர வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை புதிய அரசு தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Monday, May 2, 2011

புதிய பள்ளிக் கட்டணத்தை உடனே வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை : "நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை உடனே வெளியிட்டு, அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக்கொள்ள சட்டப்படியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்யும் வரை, பள்ளிகளை திறக்க மாட்டோம். சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால், அக்கல்வி முறையை, நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளது, அரசுக்கு சவால் விடும் செயலாகும்.


அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்க வேண்டும் என்ற உன்னதநோக்கின், முதல் கட்டமாக தமிழக அரசு சமச்சீர் கல்வியையும், மத்திய அரசு, கல்வி தரும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளன. சமச்சீர் கல்வியில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதை காலப்போக்கில் களைய வேண்டும்.


ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டிய தனியார் பள்ளிகள், தங்கள் விருப்பம் போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும், சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தனியார் பள்ளிகளின் இம்முயற்சியை முறியடிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.


கட்டண உயர்வு கோரி மேல் முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளிடமும் விசாரணை முடிந்துவிட்ட நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை, நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, விரைவில் வெளியிட வேண்டும். அக்கட்டணம், ஏழை மக்களால் செலுத்தப்படும் வகையில் அமைய வேண்டும். இதை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்றுக்கொள்ளாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Friday, April 29, 2011

பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

சென்னை, ஏப்.29- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் விளைவிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயால் பொதுமக்களுக்கும் வேளாண் நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்த கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.


இந்நிலையில், ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளே போதுமானது என்று கூறி மரபணு கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசின் வல்லுநர் குழு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.


விளைச்சலை அதிகரிப்பதற்காக பொதுமக்களின் உடல்நலனுக்கு தீங்கு ஏற்பட அனுமதிக்க கூடாது.


வேளாண் விளைச்சலை அதிகரிக்க முயற்சி என்ற பெயரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவது என்பது, இந்திய விவசாயிகளின் நலனை புறக்கணித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசும் செயலாகவே இருக்கும்.


இந்தியாவில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, April 23, 2011

ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராவது உறுதி! - ராமதாஸ்

சென்னை: கணிப்புகளைப் புறம் தள்ளி திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது உறுதி. 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பார், என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.


சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆறாவது வது முறையாக தமிழக முதல்வ ர் பொறுப்பை கருணாநிதி ஏற்று, நல்லாட்சியைத் தொடர்வார். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானதுதான்", என்றார்.

Wednesday, April 13, 2011

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் ஓட்டு பதிவு

திண்டிவனம் : திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில், நேற்று காலை 10.10 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வந்தார். அவரது மனைவி சரஸ்வதி, மகன் அன்புமணி, மருமகள் சவுமியா, மகள் ஸ்ரீகாந்தி, மருமகன் பரசுராமன், மற்றொரு மகள் கவிதா ஆகியோரும் வந்தனர்.


இவர்கள் அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தனர். பின் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி. கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி. இதற்கு மக்களும் தயாராக உள்ளனர்' என்றார்.


முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கூறுகையில், "தி.மு.க.,வின் சாதனைகள் தொடர மக்கள் விரும்புகின்றனர். எங்கள் கூட்டணி வெற்றிப் பெறும். ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவார்' என்றார்.

Monday, April 11, 2011

சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை, ஏப். 11: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பணம் படைத்தவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஏழைகள் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், விரும்புகிறவர்களை ஆட்சியில் அமர்த்தவும் கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் தேர்தல். அந்த வாய்ப்பை தமிழக வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்தி, தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய உதவ வேண்டும்.

மக்களுக்கு நல்லாட்சியை, நிலையான ஆட்சியை வழங்கும் கட்சிகள் தி.மு.க. தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளன. இன்னொரு அணி நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒற்றுமை இல்லாத அணியாக உள்ளது. தேர்தல் காலத்தில்கூட ஒற்றுமையாக இல்லாதவர்கள், தேர்தலுக்குப் பின் எப்படி ஒற்றுமையுடன் இருப்பார்கள்? தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மாநில வளர்ச்சிக்கான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரம் படைத்த கூட்டணி. கருவில் இருக்கும் குழந்தைகள் நலன் முதல், முதியவர்கள் நலன் வரை சிந்தித்து, அதற்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை, சாதித்த சாதனைகளை எடுத்துக் கூறும் தி.மு.க. அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அ.தி.மு.க. அணியைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும். இல்லையெனில், தமிழகம் இருண்டு விடக் கூடிய நிலை உருவாகும்.

தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற, உழவர்கள், மீனவர்கள் நலன் காப்பாற்றப்பட, பெண்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர, கச்சத் தீவு மீட்கப்பட, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, பாதியில் நின்று போன சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற தி.மு.க. அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sunday, April 10, 2011

விஜயகாந்திற்கு "அ, ஆ' தெரியாது : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

திட்டக்குடி:""அரசியலில் விஜயகாந்திற்கு, "அ, ஆ' தெரியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

திட்டக்குடி தொகுதி வி.சி., வேட்பாளர் சிந்தனைச்செல்வனை ஆதரித்து, அவர் பேசியதாவது:திட்டக்குடி தொகுதியில் சிந்தனைச்செல்வன் போட்டியிடவில்லை. நான் நிற்கிறேன், தி.மு.க., தலைவர் கருணாநிதி நிற்கிறார் என நினைத்து நீங்கள் ஓட்டளிக்க வேண்டும். பா.ம.க., வும், வி.சி.,யும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.தமிழகத்தில், இரு மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பிரசாரத்திற்கு சென்று வந்துள்ளேன். தொகுதியில் யாரைக் கேட்டாலும் கருணாநிதிக்குத் தான் ஓட்டு என்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களுக்கு மூன்று வேளை சோறு போட்டவர் அவர் தான் என்கின்றனர்.

கருணாநிதி உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க, அறிவை வளர்க்க, "லேப்-டாப்' தருகிறேன் என்று சொன்னால், ஜெயலலிதா, "வீட்டிற்கு 4 ஆடு, ஒரு மாடு தருகிறேன்' என்கிறார்.நாங்கள் பூரண மது விலக்கு கொண்டுவர வேண்டுமென முதல்வரிடம் கேட்டதற்கு, அவர், "நானும் உங்கள் கொள்கை உடையவன் தான். படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன்' என்றார்.ஆனால், கொள்கையே இல்லாத நடிகர் கட்சித் தலைவர், மேடையில் பேசும்போது ஆடுகிறார், தள்ளாடுகிறார், தடுமாறுகிறார். தொண்டர்களை, "ஆப்' அடிக்கச் சொல்கிறார். கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவரும் நல்ல தம்பிகள் தான்.

அவர்களை திருத்தி தி.மு.க.,- பா.ம.க., - வி.சி., கட்சிகளுக்கு கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போவேன், கோட்டைக்கு போவேன் என அடம் பிடித்தவர், இன்று போயஸ் தோட்டத்திற்கு சென்று விட்டார். நடிகர் சொல்கிறார் நான் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றால், அண்ணனாக, அப்பாவாக நடிப்பேன் என்கிறார். நீ எதையாவது நடி, எங்காவது பம்பரம் விடு. உனக்கு அரசியலில் "அ, ஆ' தெரியாது.திட்டக்குடி சிந்தனைச்செல்வனை வெற்றி பெறச் செய்து பெரிய விழா கொண்டாடுங்கள் நான் வந்து பேசுகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

ஆட்சியில் பங்கு தேவையில்லை : பா.ம.க., ராமதாஸ் திட்டவட்டம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து மரக்காணம், முருக்கேரி, கந்தாடு ஆகிய பகுதிகளில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது ராமதாஸ் பேசியதாவது :தி.மு.க.,வில் மற்ற கட்சிகளுக்கு முன், முதலில் கூட்டணி வைத்தது பா.ம.க., தான். எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம், கடைசிவரை ஆதரவு தருகின்றோம் என, கூறினேன். தொகுதிகள் பிரித்த ஒரு மணி நேரத்தில் திண்டிவனம் தொகுதியை தி.மு.க., தலைமை பா.ம.க.,விற்கு ஒதுக்கியது. அடுத்த முறை இந்த தொகுதி தி.மு.க.,வைச் சேர்ந்த ரவிகுமாருக்கு ஒதுக்கலாம்.இந்த தொகுதி வெற்றி பெறும் ஓட்டுகள் மரக்காணம் நகரத்தில் தான் உள்ளன. நீங்கள் பத்தாயிரம் ஓட்டுகளை பெற்றுத் தர வேண்டும். உங்கள் பகுதியில் எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒரு போன் செய்துவிட்டு, தைலாபுரத்தில் வந்து என்னிடம் கூறுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Saturday, April 9, 2011

மக்களுக்காக துரும்பை கூட கிள்ளி போடாதவர் ஜெ.,: ராமதாஸ்

திண்டிவனம்: தனது ஆட்சியில் ஜெ., மக்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.



திண்டிவனம் நகரில் தீர்த்த குளம், முருங்கப்பாக்கம், ரோஷணை, கரிய கவுண்டர் வீதி, அவரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது : நான் திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் பள்ளி வர ரோடில் இறங்கி போராடியுள்ளேன். மத்திய அமைச்சராக அன்புமணி இருந்த போது, அரசு மருத்துவமனைக்கு செய்த நன்மைகள் ஏராளம். நிச்சயம் கருணாநிதி தான் முதல்வராக வருவார்.அவர் மூலம் திண்டிவனத்திற்கு நீங்கள் விரும்புகின்றவற்றை செய்து தருவேன். சங்கர் நல்ல வேட்பாளர். இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ஜெ., மாணவர்களை ஆடு, மாடு மேய்க்க போகுமாறு கூறுகிறார். கருணாநிதி மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுத்து, படிக்க கூறுகிறார். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெ., மக்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர். அப்படிபட்ட அ.தி.மு.க.,விற்கு எப்படி ஓட்டு போட முடியும்? கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை ஜெ., காப்பியடித்துள்ளார். கருணாநிதி மக்கள் உண்ண, உடுக்க, உறங்க வழி செய்துள்ளார். வேட்பாளர் சங்கர் கடுமையாக உழைப்பவர். நானே எம்.எல்.ஏ.,வாக இருந்து அவரை இயக்குவேன். தி.மு.க., தலைமையிலான கூட்டணி சமய, சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுகிறது. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்

Friday, April 8, 2011

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு: கருணாநிதி உறுதி

திண்டிவனம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வைத்த வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு குறித்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது : தி.மு.க.,விற்கு ஆட்சி பொறுப்பை அளிப்பதற்காக இந்த கூட்டம் நடப்பதாக ராமதாஸ் கூறினார். நலிந்த, அடித்தட்டு மக்களை வாழ வைக்கும் இயக்கம் எந்த இயக்கமோ, அந்த இயக்கத்திற்கும், அதனுடன் தொடர்புடைய இயக்கங்களுக்கும் என்றென்றும் கடமை பட்டுள்ளோம் என, தலைவர்கள் கூறினர். எல்லோரும் ஓர் குலம் என்பது போல், ஒரே குரலாக உள்ளவர்கள் தான் இங்கு அமர்ந்துள்ளோம். என் குலம் இழிவாக, கேவலமாக நடந்தப்பட்ட இனம். அதே போல் தான் ராமதாஸ் இனமும், திருமாவளவன் இனமும், காதர் மொய்தீன் இனமும் நடத்தப்பட்டன. இனம், இனத்தோடு சேரும் என்பது போல் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ராமதாஸ், திருமாவளவன் ஆகிய இருவரையும் இணைய வைத்து, கூட்டணி ஏற்படுத்தியதாக புகழாரம் சூட்டப்பட்டது. இதை நான் ஒப்புக் கொள்கிறேன், இந்த இரு சக்திகளும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை பொருந்தியவை. எனக்கு அம்பேத்கருடன் நேரடி தொடர்பில்லை. ஆனால், அம்பேத்கரின் கொள்கைகளை அரவணைத்துக் கொண்டவன் நான்.அம்பேத்கர் மீது எனக்கு காதல்.

மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கர் பல்கலை கழகம் துவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, பத்து ஆண்டுகள் ஆன பின்பும் ஏற்படுத்தவில்லை. அதை கண்டித்து தி.மு.க., கிளர்ச்சி நடத்தும் என, அறிக்கை விட்டேன். உடனே நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய மராட்டிய கவர்னர் அலெக்சாண்டர் எனக்கு கடிதம் எழுதினார். மும்பையில் அம்பேத்கர் பல்கலைக் கழகம் அமைய நானும் ஒரு காரணம். நான் முதல்வராக இருந்த போது, முதல்வருக்காக கிரீன்வேஸ் ரோடில் கட்டப்பட்ட பங்களாவை, நான் அம்பேத்கர் பல்கலை கழக அலுவலகமாக அறிவித்தேன்.

ராமதாஸ், திருமாவளவன் உறவு தொடர்ந்திருந்தால், தமிழகத்தில் எத்தனையோ சமத்துவம் மலர்ந்திருக்கும். இனியும் இவர்கள் இணைப்பு தொடர வேண்டும். இதே போல் முஸ்லிம் லீக்கும் தொடர வேண்டும். இவர்கள், எங்களை அறிந்தவர்கள். நாங்கள், அவர்களை அறிந்தவர்கள். இனி மேல் எங்களுக்குள் சிக்கல் வரக்கூடாது. இனியும் சிக்கல் வராமலிருக்க, பொதுமக்களும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றாக இருந்தீர்களே, உங்களுக்குள் என்ன கேடு வந்தது என நீங்கள் (பொதுமக்கள்) கேட்க வேண்டும். நாங்கள் ஓரணியில் இருந்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். ராமதாஸ் ஒரு கோரிக்கை வைத்தார். அதிர்ச்சியடையும் கோரிக்கையாக இருக்கும் என, பயந்தேன். அவர் இடஒதுக்கீடு கோரிக்கையை தான் கேட்டார். இது எங்களுக்குள் சகஜமானதாகும். அவர் கேட்டு நான் மறுத்ததில்லை. ஆட்சியை நடத்த போகிறவன் என்பதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன். இடஒதுக்கீடு கோரிக்கையை நாங்கள் கைவிட வில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீட்டை நிச்சயமாக நிறைவேற்றி தருவேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Wednesday, April 6, 2011

ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

சேலம்: ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.


சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்த தேர்தலில் திமுக அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 30 மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். மக்கள் மனதில் அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களின் மகத்தான ஆதரவு ஒரு புறம், கூட்டணி கட்சிகளின் பலம் மற்றொரு புறம் என இரண்டும் சேர்ந்து திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தரும்.

திமுக கூட்டணியில், பா.ம.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என வாக்கு வங்கி கொண்ட கட்சிகள் இணைந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் ஒரே சீரான வாக்கு வங்கி இல்லை. அந்த கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவம். அந்தக் கூட்டணியில் உள்ள விஜயகாந்த் கட்சி, ஆரம்பத்தில் 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்ற ரீதியில் தன்னை முன்னிலைப்படுத்தி 2 தேர்தலை சந்தித்தது. அதனால் அந்த கட்சிக்கு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

ஆனால் விஜயகாந்த் தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அவர் பத்தோடு பதினொன்றாகிவிட்டார். எனவே இந்தத் தேர்தலில் அவருடைய கட்சி வாக்கு வங்கி குறைந்து விடும். அவருடைய கட்சி தொண்டர்களே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மிகவும் பாரபட்சமாக உள்ளது. தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் 100 சதவீதம் ஒரு தலைப்பட்சமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை மாநில அரசின் நிர்வாகத்தையே தேர்தல் ஆணையம் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. இது ஜனநாயகத்துக்கே ஆபத்தாகும்.

மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், மத்திய மந்திரி மீது பொய் வழக்கு போடச் சொல்லி மிரட்டுகிறார் என்று தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி புகார் தெரிவித்து உள்ளார். தேர்தல் ஆணையத்துக்கும் புகாரை அனுப்பி உள்ளார். தேர்தல் ஆணையம் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக புகார் தெரிவித்த தேர்தல் அதிகாரி சுகுமாறன் மீது நடவடிக்கை எடுத்து உள்ளது. இப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலை பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகிறார்கள். 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் சந்தித்த கொடுமைகள் மாறாத வடுக்களாக வாக்காளர்கள் மனதில் பதிந்துள்ளன.

தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை கொடுக்க தயாராக இல்லை. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக சில ஊடகங்கள்தான் பொய்யை பரப்பி வருகின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு திமுக மீது எந்த வெறுப்பும் இல்லை.

தமிழ் பெண்களின் கற்பை பற்றி இழிவு படுத்தி கூறிய நடிகை குஷ்பு, திமுக-பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார் என்பது வேறு. அந்தப் பிரச்சனைபற்றி இப்போதும் வழக்கு நடந்து வருகிறது. மேலும் பிரச்சனை நடந்த நேரத்தில், தான் அவ்வாறு கூறவில்லை என்று குஷ்பு மறுத்தும் உள்ளார் என்றார்.

Tuesday, April 5, 2011

எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கும்தகுதியற்றவர் ஜெயலலிதா: ராமதாஸ்

சென்னை:சென்னை தீவுத்திடலில் நடந்த, ஐ.மு.கூட்டணி பிரசார கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி, முற்போக்கு கூட்டணி; எதிரணி கூட்டணி பிற்போக்கு கூட்டணியாக இருக்கிறது. கடந்த 2001-06 ல் ஜெ., முதல்வராக இருந்த போது, கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதாகவும், காஸ் சிலிண்டர் வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்; எதையும் செய்யவில்லை. 2006-11ல் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் சொன்னதைச் செய்தார்.
பொதுவாக மத்தியில் உள்ள அரசுக்கும், மாநில அரசுக்கும் நல்லிணக்கம் தேவை. நரசிம்மராவ் இந்திய பிரதமராக இருந்த போது, தலைமுறை இடைவெளி இருப்பதாக அந்த கூட்டணியில் இருந்து கொண்டே ஜெ., விமர்சித்தார்.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு செலக்ட்டிவ் அம்னீஷியா இருப்பதாகவும், வாஜ்பாய் செயலற்ற பிரதமர் என்றும் விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்த நிலையில், ஜெ., மன்னிப்பு கேட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கை பலகீனமான கால்களை பெற்ற பிரதமர் என்றும் பேசினார். தி.மு.க., ஆட்சி தொடர்ந்து நடந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும்; அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வீழ்ச்சி அடையும்.தேர்தல் கமிஷன் ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறது என்பதை நாங்கள் தெரிவித்து வருகிறோம். மதுரை கலெக்டர் சகாயத்தின் அத்துமீறல்கள் ஏராளம். டில்லி தேர்தல் கமிஷனுக்கும், இங்கிருக்கும் சிலருக்கும், "ஹாட் லைன் ' இணைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கும் தகுதியற்றவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக 18 பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்துள்ளனர். அதில், ஒரு பங்கைக் கூட அ.தி.மு.க., வினர் செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகம் இருண்டு விட்டதாக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. வாக்காளர்கள் புத்திசாலிகள்; ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்

தி.மு.க. அணிக்கு ஆதரவு அலை: ராமதாஸ்

சென்னை, ஏப். 5: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிக்கு ஆதரவு அலை வீசத் தொடங்கியுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை, பெரம்பூர் தொகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர். தனபாலனை ஆதரித்து மகாகவி பாரதி நகரில் செவ்வாய்க்கிழமை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் ராமதாஸ் பேசியதாவது: தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கும் நேரத்தில், இது ஒரு சமூக நீதி போராட்டத்துக்கான அணி என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார். அதை உண்மையாக்கும் விதத்தில், உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ஓர் அணியை அவர் உருவாக்கியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் மிகச் சாதாரண மக்களால்கூட பாராட்டப்படுகின்றன. ஆனால், 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலத்தில், மக்களுக்கு செய்த சாதனைகள் என குறிப்பிட்டு கூற எதுவுமே இல்லை. ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரூ.100 கோடி செலவில் நடந்த வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமக குள சாவுகள் ஆகியவை மட்டும் எப்போதும் மறக்க முடியாத வகையில், மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டன.

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் தி.மு.க. அணிக்கு ஆதரவாக அலை வீசத் தொடங்கியுள்ளது. மிகப் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றி பெற்று, ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி என்றார் ராமதாஸ்.

கூட்டத்தில் வேட்பாளர் என்.ஆர். தனபாலன், தொ.மு.ச. பேரவைத் தலைவர் செ. குப்புசாமி, பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, March 31, 2011

ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணியை வைகோ ஆதரிக்க வேண்டும்-ராமதாஸ்

வேதாரண்யம்: ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணிக்கு வைகோ
ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


வேதாரண்யம் ராஜாளி பூங்காவில் நடைபெற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
வேதாரண்யம் தொகுதியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது.

தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டால் நாங்கள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம். ஐந்து ஆண்டு காலம் எங்கள் ஆதரவு தொடரும்.

நமக்கு எதிராக செயல்படுவது அதிமுக கட்சி மட்டும் அல்ல, தேர்தல் கமிஷனும் தான். எனக்கு கிடைத்த தகவல்படி அதிமுக ஒரு தொகுதிக்கு ஐந்து கோடி செலவு செய்ய பணம் இறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் திமுக வெற்றி பெறும்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளதால் தமிழகத்தின் வடக்கு பகுதியில் நூற்று பத்து தொகுதியில் வெற்றி பெற்று விட்டது. இன்னும் ஆட்சி அமைக்க எட்டு இடங்கள்தான் தேவை, அவற்றையும் வெல்வோம் என்றார்.

பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட மதிமுகவையும், வைகோவையும் திமுக கூட்டணிக்கு
ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தோல்வி பயத்தால் ஜெயலலிதா தரம் தாழ்ந்து தனி நபர் விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலில் யாரும் ஈடுபடவில்லை. தன் கையில் அடிவாங்கியவர் மகாராஜா ஆவார் என்று விஜயகாந்த் கூறியிருப்பது உளறலின் உச்சக்கட்டம் என்றார்.

ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லாது:

பின்னர் திருக்கோவிலூரில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,

நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் ஒருவரும் கிடையாது. குறிப்பாக 41 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவால் ஒரு தொகுதியில் கூட பெற்றி பெறவே முடியாது.

திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கலைஞர் தலைமையில் நான், திருமாவளவன், தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். இனி விழுப்புரம், திண்டிவனத்தில் பேசவிருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த்
போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது.

கலைஞர் சொன்னதை எல்லாம் ஜெயலலிதா அப்படியே சொல்கிறார்.

நான் விஜயகாந்த் பற்றி பேசியது கிடையாது. அந்த கட்சிப் பெயர் கூட எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் அவர் தான் கும்மிடிப்பூண்டியில் பேசுகையில் என்னை போராட்ட மன்னன் என்று கூறியுள்ளார். அவர் சரியாகத் தான் என்னை போராட்ட மன்னன் என்று கூறியிருக்கிறார். நான் தமிழ் மக்களுக்காகவும், மொழிக்காகவும் ஏராளமான போராட்டங்கள் நடத்தியுள்ளேன்.

விருத்தாசலத்தை விட்டுவிட்டு ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு அத்தொகுதி மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இந்த தொகுதி மக்கள் ஏமாறுபவர்கள் அல்ல. அதேசமயம் அவர்களை ஏமாற்றுபவர்கள் தான் ஏமாந்து போவார்கள் என்றார்

Wednesday, March 30, 2011

ருணாநிதியை முதல்வராக்க பணியாற்றுங்கள்: ராமதாஸ்

மார்ச் 30: திமுக தலைவர் கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்குவதற்கு விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க.வினரும் இணைந்து கடுமையாகத் தேர்தல் பணியாற்ற வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

உளுந்தூர்பேட்டை வட்டம் மடப்பட்டு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது யூசுபை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் மேலும் பேசியது:

தலித் மக்களும், வன்னியர் மக்களும் மிகுதியாக உள்ள பகுதி இது. வேட்பாளர் முகமது யூசுப் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். இவரை வெற்றிப் பெற செய்யவேண்டும். இந்த மாவட்டத்தில் பாமக 3 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும் மற்றும் கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இவர்கள் வெற்றிப்பெற நானும், தம்பி திருமாவளவனும் நிற்பதாக நினைத்து இரு சமுதாய மக்களும் வாக்களிக்க வேண்டும். கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்குவதற்கு தேர்தலில் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றார் ராமதாஸ்.

இந்தக் பொதுக்கூட்டத்துக்கு உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். திருநாவலூர் ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ஆர்.வசந்தவேல் வரவேற்றார்.

பாமக எம்.எல்.ஏ. கலிவரதன், மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன், மாவட்டத் தலைவர் தமிழ்வாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வெற்றிச்செல்வன், துணைச் செயலாளர் சேந்தநாடு அறிவுக்கரசு, இளஞ்சிறுத்தைகள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் செ.க.சேரன், திமுக நகரச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேட்பாளர் முகமது யூசுபை அறிமுகப்படுத்தி மெழுகுவர்த்தி சின்னத்துக்கும் கூட்டணிக் கட்சிகள் சின்னத்துக்கும் வாக்களிக்க வேண்டும் என சிறுப்புரையில் பேசினார்.

கூட்டத்தில் திமுக மாவட்டப் பிரதிநிதி களத்தூர் ஜெகதீசன், மாவட்டக் கவுன்சிலர்கள் மேட்டத்தூர் பழனி, தங்க.விஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வேட்பாளர் முகமது யூசுப் ஏற்புரையாற்றினார். பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர் வ.ச.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

திருக்கோவிலூரில்: ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.

திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியது:

நானும் திருமாவளவனும் விழுப்புரம், மடப்பட்டில் நடந்த கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினோம். பின்னர் திருமாவளவன் தர்மபுரி மாவட்டத்துக்கு அவசரமாகச் சென்றுவிட்டதால் இக்கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. அதனால் உங்களோடு நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் எழுச்சியோடு இருக்கின்றீர்கள்.

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் யாருமே இல்லை. குறிப்பாக 41 இடங்களில் போட்டியிடும் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியாது.

திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கருணாநிதி தலைமையில் நானும் திருமாவளவன், தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். விழுப்புரம், திண்டிவனத்தில் பேசப் போகிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த்

போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது.

கருணாநிதி சொன்னதை அப்படியே ஜெயலலிதா சொல்கிறார். விஜயகாந்த் பற்றி நான் எதுவும் பேசியது கிடையாது. அந்தக் கட்சிப் பெயரும் எனக்குத் தெரியாது. ஆனால் கும்மிடிப்பூண்டியில் பேசிய விஜயகாந்த் என்னை போராட்ட மன்னன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சொன்னதைப்போல் நான் ஒரு போராட்ட மன்னன்தான். நான் செய்த போராட்டங்கள் ஏராளம். தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக போராட்டம் செய்தேன்.

இதையெல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் ஆகியோரது வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்.

விருத்தாசலத்தில் இருந்து ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள். காரணம் இத்தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆனால் ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்றார் ராமதாஸ்.

இக்கூட்டத்துக்கு பின் பகண்டை கூட்ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கு ஆதரவாக ராமதாஸ் பேசினார்.

கள்ளக்குறிச்சி: திமுக அரசு செய்த சாதனைகளால் ஏழை மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் உதயசூரியனை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சங்கராபுரம் பூட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.

தா.உதயசூரியனை ஆதரித்து ராமதாஸ் பேசியது: எந்த வேட்பாளருக்கும் இல்லாத சிறப்பு அம்சம் வேட்பாளர் உதயசூரியன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஆகும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிடுவோம். 5 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளைப் பார்க்கும்போது ஏழை மக்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது என்றார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ஆ.அங்கையற்கண்ணி, சங்கராபுரம் பேரூராட்சித் தலைவர் முனுசாமி, பாமக மாவட்டச் செயலாளர் கே.பி.பாண்டியன், சங்கராபுரம் பாமக நகரச் செயலாளர் பபுலு, ஒன்றியச் செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.

பின்னர் கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஏ.சி.பாவரசை ஆதரித்துப் பேசுவதற்காக வந்தார். நேரம் 10.20 மணி ஆகிவிட்டதால் தேர்தல் விதிமுறைப்படி பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் வேட்பாளரின் கரங்களை உயர்த்தியும் மெழுகுவர்த்தி எரிந்த நிலையில் உள்ள சின்னத்தை தூக்கியபடி மக்களிடம் காண்பித்து ஜாடையில்

மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: