Thursday, March 20, 2014

காதலுக்கு பாமக எதிரானது இல்லை: டாக்டர் ராமதாஸ் பேச்சு


சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அகோரத்தை ஆதரித்

து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை செழியன் தலைமை தாங்கினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் ஆலயமணி மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பன், கல்யாணசுந்தரம், ஸ்டாலின், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாலர் பிரேம் சங்கர் வரவேற்று பேசினார். தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பா.ஜ.க. கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரும், மாநில துணை பொது செயலாளருமான க.அகோரத்தை அறிமுகம் செய்து வைத்து பேசியபோது,

’’தமிழகத்தை 47 ஆண்டுகாலம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சிசெய்து தமிழக மக்களை குடிகார மக்களாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கடந்த காலங்களில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக வளம் கொழிக்கும் பூமியாகவும் இருந்தது.
ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியால் முற்போகம் விளைந்த வயல்கள் காலப்போக்கில் இரண்டு போகமாகவும் தற்போது ஒரு போகமாகவும் மாறிவிட்டது. வருங்காலங்களில் எலிக்கறி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த கால தி.மு.க. ஆட்சிகாலத்தில் 6 மணிநேரம் மின்வெட்டு நிலவியது. தற்போது அதிமுக ஆட்சியில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் 18 மணிநேரம் மின்வெட்டு நிலவி வருகிறது. காலப்போக்கில் தமிழகம் இருண்ட பூமியாக மாறும் நிலை உள்ளது.
வாக்காளர்கள் ஓட்டுக்காக பணம் வாங்கக்கூடாது. அது உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிடும். தமிழகத் தில் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பா.ம.க.தான் பாடுபட்டு வருகிறது. இதை யாரும் மறுக்கமுடியாது.
தமிழகத்தில் காதலுக்கு பா.ம.க. எதிராக இல்லை. ஆனால் காதல் நாடகத்தை தான் எதிர்க்கின்றோம். ஒரு சில கட்சியினர் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் 134 பா.ம.க. வினரை குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் அகோரத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேணடும். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்’’ என்றூ பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: