சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம்.
சிதம்பரத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் செவ்வாக்கிழமை பங்கேற்ற கே.ஐ.மணிரத்தினம் பேசியதாவது:
நான் சிதம்பரம் நடராஜப்பெருமானை நம்புபவன். நான் எங்கோ கையை வைத்து, எங்கோ கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் நடராஜர். அரசியலில் ஈடுபாடு இல்லாத நேரங்களில் சாதி, மத வேறுபாடின்றி ஏழை, எளிய மக்களுக்கு சமூக சேவைகளை செய்து வந்துள்ளேன். நடராஜப்பெருமான் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக வர இருக்கின்ற மோடியின் தலைமையி்ன் கீழ் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பினை அளித்துள்ளார். அதற்காக நான் வணங்கும் நடராஜப்பெருமானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்திலேயே கட்சியில் சேர்ந்த 5 நிமிடங்களில் ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவன் என்றால், அது நானாகவே இருப்பேன். அதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜெ.குரு எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 2ம் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கவுள்ளேன். இந்தியாவில் மாற்றம் நிகழும் என்றால், அது என்னை பார்த்தே அந்த மாற்றம் நிகழப்போகின்றது. மாற்றம் வேண்டும் என்பது மணிரத்தினத்திற்கு நிச்சயமாக பொருந்தும், இந்தியாவிற்கும் பொருந்தும். எனவே மாற்றம் நிச்சயமாக நிகழவுள்ளது என கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment