சேலம் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக சென்ற ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘’தமிழகத்தில் பாமகவினர் மீது போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது.
இலங்கை ராணுவத்திடம் இருந்து தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே நிரந்தரத் தீர்வு கட்சத் தீவை மீட்பது மட்டுமே.
இலங்கைச் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளைக் கொடியுடன் இலங்கை அரசிடம் சரணடைய இருப்பதாக, காரைக்கால் முதல் ராமேசுவரம் வரையிலான மீனவர் சங்கங்கள் அறிவித்திருப்பது மத்திய அரசுக்கு ஒரு தேசிய அவமானம்.
எனவே, இனியாவது மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களைக் காக்க முன் வர வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment