பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செஞ்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ம.க.வை சேர்ந்த 123 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத செயல் இது. சிறையில் உள்ள அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும். மரக்காணம் கலவரம் நீதி விசாரணை கோரினோம். இதுவரை இல்லை. இந்த பிரச்சினைக்கு தி.மு.க. இதுவரை கருத்தோ கண்டனமோ தெரிவிக்க வில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். வரும் 2016-ல் பா.மக. ஆட்சி அமையும், அதற்கேற்ப மக்கள் எங்கள் மீது நம்பிக்கை பெற பாடுபடுவோம். பாராளுமன்ற தேர்தலில் தனியாக எதிர்கொள்ள சபதம் ஏற்று பல்வேறு அமைப்புகள், இயக்கங்களுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.
No comments:
Post a Comment