Thursday, April 30, 2009

போரை நிறுத்த முடியாது: இலங்கை

விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்து, அதன் தலைவர் பிரபாகரனைப் பிடிக்கும் வரை போரை நிறுத்த முடியாது என இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.


பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கௌச்னரும், இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலர் டேவிட் மிலிபாண்டும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்சவை நேரில் சந்தித்து இலங்கை அரசு உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.


முப்பது வருடங்களுக்குப் பின் காலம் நெருங்கிவந்துள்ளதால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் ஆகியோர் பிடிபடும்வரை போரை அரசு நிறுத்தாது என கோத்தபய ராஜபட்ச அவர்களிடம் தெரிவித்தார். போர் நிறுத்தம் அறிவித்தால் அதன்மூலம் விடுதலைப்புலிகள்தான் பலனடைவார்கள் என்றார் அவர்.
பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயப் பகுதிக்குச் செல்ல ஐநா உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கையையும் கோத்தபய நிராகரித்தார்.


புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். சில ஊடகங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன என்ற அவர், அரசை நம்புவதா அல்லது பயங்கரவாத அமைப்பை நம்புவதா என்பதை இங்கிலாந்து அரசு முடிவுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

நன்றி:தினமணி

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: