சில நியாமான கேள்விகளையும், உணர்வுகளையும் இங்கே வெளிபடுத்தியே ஆகவேண்டும்.
1. எத்தனை தடவை மத்திய அரசு அவசர கூட்டதை கூட்டும். மக்களை ஏமாற்றுவற்கும், சிலரை திருப்தி படுத்டுவும் எதற்க்கு இந்த முயற்சி.
2.இந்திய அரசாங்கம் போரை நிறுத்த வேண்டாம். குறைந்தது இலங்கைக்கு அளித்து வரும் எல்லா உதவிகலையும் யேன் நிறுத்த கூடாது.?
3.தமிழ் இனம் இந்திய மக்களுக்கு சொந்தம் இல்லையா. சொந்தமோ பந்தமோ, அருகில் உள்ள ஒரு நாடு, தமிழ் மக்களை கொன்று கொவித்து வருகிறது. குறைந்தது மனிதாபமான அடிபடையில், மனித இனத்தின் அழிவுகளை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்தியாவின் பலம் இவ்வளவு தானா?
4.இதை பார்க்கும் போது, இந்திய அரசின், சிலரின் உதவியும், ஆதரவும் இல்லாமல் இலன்கையில், இப்படி தொடர்ந்து போரை நடத்தி கொண்டு இருக்க முடியாது, என்றே தோன்றுகிறது.
5.இந்திய அரசு, ஒரு உயிரை விடுதலை புலிகள் தான் கொன்றார்கள் என்று முடிவு தெரிந்ததற்க்காக, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரின் பழி வாங்குவது எவ்வித்ததில் நியாயம்.?
6. விடுதலை புலிகலை அழிப்பதின் பேரில், ஒரு நாட்டின் வாழும் குடிமக்களை கண்மூடித்தனமாக அழிப்பது எவ்விதத்தில் நியாயம்?
7.இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் - மதில் மேல் பூனையாக இருப்பதையே காட்டுகிறது. இது இவர்களின் இயலாமையா இல்லை பாசாங்கா?
8.சில நாட்களுக்கு முன்பு, தமிழ் நாட்டின் சில அரசியல் கட்சிகளும், சில இயக்கங்களும், பொது வேலை நிறுத்தம் என்று சொன்ன போது, இதே தமிழக அரசும், காவல் துறையும் , பொதுவேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் , இதை சில தொலைக் காட்சிகல் இரவு முழுவதும், ஒளிபரப்பிக் கொண்டு இருந்தன...அப்படி கர்சித்தவர்கள் இன்று எங்கே போனார்கள். இது நியாயமா? ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை என்பதையே காட்டுகிறதா?
9.இதில் வேடிக்கை என்ன வென்றால், ஒரு நாட்டின் ஒரு பகுதியில் ஒரு இனத்தை அழித்துக் கொண்டு இருக்கும் வேலையில், உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் , எந்த இயக்கதிற்க்கும், எந்த ஒரு தனி மனிதனுக்கும், அதிகாரமும் இல்லை, பலமும் இல்லை, அக்கரையும் இல்லை என்பதே காட்டுகிறது. இதுவெல்லாம் வரலாற்றில் மட்டும் பதிவாக அமையும். இது இன்றைய காலக்கட்டத்தில், உலக நாடுகள் பெரும் தவறுகளை தடுக்க தவறி விட்டன. இவைகள் எல்லாம் அறிந்த உலக மக்களின்,மனிதத்தின் மனசாட்சி மட்டுமே கருகிக் கொண்டு இருக்கின்றன.
10.இந்தியாவில், சில கட்சிகளும், சில தொலைக் காட்சிகளும், சில பத்திரிக்கைகளும், இந்த மனித அழிவை பற்றி ஒரு பொருட்டாகவே கருத வில்லை என்பதை பார்க்கும்போது ஈவு இரக்கம் இல்லாத ஜெம்மங்களாகவே தோன்றுகிறது.
11.உலக வரலாற்றில், இது மிகபெரிய அழிவு நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment