Saturday, May 2, 2009

மக்கள் தொலைக் காட்சியில் மருத்துவர் ராமதாசு- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:

மக்கள் தொலைக் காட்சியில் மருத்துவர் ராமதாசு- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:


இன்று (03-மே-09) இரவு, இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு, மருத்துவர் ராமதாசின் - "உங்கள் கேள்விக்கு பதில் என்ன?" கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு: உலக தமிழர்கள் , அரசியல், கலை, பண்பாடு மற்றும், உலக தமிழர்களின் பிரச்சனைகளை பற்றிய கேள்விகளை நேரடியாக மருத்துவர் ராமதாசிடம் கேளுங்கள்.


உலக தமிழர்களே , மக்கள் தொலைக் காட்சியில் இந்த நேரடி நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள்

ஈழம்: ப.சிதம்பரம் தான் முதல் குற்றவாளி - ராமதாஸ்

தஞ்சை: இலங்கையில் தமிழர்கள் பலியாக முதல் காரணமாக இருப்பது சிதம்பரம் தான். அவர் தான் முதல் குற்றவாளி என என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தஞ்சை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து திருவையாறில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,


இலங்கையில் தமிழர்கள் சாக காரணமாக இருந்தது உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான். அவர் தான் முழு முதல் குற்றவாளி. விடுதலைப்புலிகளுக்கு அழிவே கிடையாது. அவர்களை அழிக்கவும் முடியாது. அவர்கள் புற்றீசல் போல தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார்கள்.


இலங்கைக்கு இந்திய படைகளை எப்படி அனுப்ப முடியும் என்று குலாம்நபி ஆசாத் கேள்வி கேட்கிறார். இலங்கையில் தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பது தேசவிரோத செயல் என காங்கிரஸ்காரர்கள் கூறகின்றனர்.
தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சி என்று கூறிய கருணாநிதி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார். தனி ஈழம் அமைவது அவசியமா? இல்லையா? இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.


ஆனால், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டு பொங்கி எழுந்த ஜெயலலிதா தனி தமிழீழம் அமைவது தான் ஒரே வழி என்று கூறியுள்ளார். இன்னும் ஒரு படி மேலேச்சென்று அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று புதிய மத்திய அரசு அமையும் போது இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பி தனி ஈழம் பெற்று தருவேன் என்று கூறியுள்ளார் என்றார் ராமதாஸ்.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Thursday, April 30, 2009

இல‌ங்கை‌‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக தொட‌ர்‌ந்து போராடுவோ‌ம் : பழ.நெடுமாற‌ன்


த‌மி‌ழ் ம‌‌ண்‌ணி‌ல் இரு‌க்கு‌ம் வரை இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் யாரு‌ம் அக‌திக‌ள் அ‌ல்ல எ‌ன்று கூ‌றிய இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன், அவ‌ர்களு‌க்காக நா‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌டுவோ‌ம் எ‌ன்றா‌ர்.


இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட வ‌லியுறு‌த்‌தி ம‌க்க‌ள் உ‌ரிமை கூ‌ட்டமை‌ப்பு சா‌ர்‌பி‌ல் த‌மி‌ழ்நாடுவா‌ழ் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் ஒரு நா‌ள் அடையாள உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.
இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன், த‌மி‌ழ் ஆ‌‌ர்வல‌ர்க‌ள் ‌தியாகு, புகழே‌ந்‌தி, ‌த‌ங்கராஜா, ‌தி‌ரு‌ச்‌சி வேலு‌ச்சா‌மி, ‌விடுதலை ராஜே‌ந்‌திர‌ன், வை‌த்‌திய‌லி‌ங்க‌ம், ‌க‌விஞ‌ர் தாமரை உ‌ள்பட ஏராளமானோ‌ர் கல‌ந்து கொ‌ண்டு உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்தை ஆத‌ரி‌த்து பே‌சின‌ர்.


இ‌ப்போரா‌‌ட்டத்‌தி‌ன் முடி‌வி‌ல் த‌மி‌ழ்நாடுவா‌ழ் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் சா‌ர்‌பி‌ல் இல‌‌‌ங்கை‌யி‌ல் ‌நிர‌‌ந்‌தர போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம், பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்ட ம‌க்களு‌க்கு தேவையான உத‌விகளை வழ‌ங்க ச‌ர்வதேச அமை‌ப்புகளை இல‌ங்கை அரசு அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம், பே‌ச்சுவா‌ர்‌த்தை மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் அவரவ‌ர் இட‌‌ங்க‌ளி‌ல் ‌மீ‌ண்டு‌ம் குடியேற ஆவண செ‌ய்ய வே‌ண்டு‌ம் என வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌க்க‌ப்ப‌ட்டது.


உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை மு‌டி‌த்து வை‌த்து பழ.நெடுமாற‌ன் பேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள த‌மிழ‌ர்களை இல‌‌ங்கை அரசு முறையாக பராம‌ரி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லையெ‌னி‌ல் அ‌வ‌ர்களை ஐ.நா. சபை‌யிட‌ம் ஒ‌ப்பட‌ை‌த்து ‌விட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் த‌மிழ‌ர்க‌ள் எ‌ன்ற ஒரே கார‌ண‌த்‌தி‌ற்காக அ‌‌வ‌ர்களை இல‌ங்கை அரசு புற‌க்க‌ணி‌க்‌கிறது.
த‌மி‌ழ் ம‌‌ண்‌ணி‌ல் இரு‌க்கு‌ம் வரை இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் யாரு‌ம் அக‌திக‌ள் அ‌ல்ல. அவ‌ர்க‌‌ள் எ‌ங்க‌ள் சகோதர, சகோத‌‌ரிக‌ள். இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக நா‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌டுவோ‌ம் எ‌ன்றா‌ர் பழ.நெடுமா‌ற‌ன்.
‌பி‌ன்ன‌ர் பழ‌ச்சாறு கொடு‌த்து உ‌‌ண்ணா‌விரத‌த்தை பழ.நெடுமாற‌ன் முடி‌த்து ‌வை‌த்தா‌ர். இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌யிர‌த்‌த‌ி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்

நன்றி:http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0904/30/1090430099_1.htm

பஸ் கட்டண குறைப்பு தேர்தல் மோசடி-ராமதாஸ்

சென்னை: தமிழக அரசு திடீரென டவுன் பஸ் கட்டணத்தை சத்தமின்றி குறைத்துள்ளது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதே சட்டத்தையும், தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறி திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. அவை நடைமுறையில் இருக்கும்போது அரசின் நடவடிக்கைகள் பற்றியோ, திட்டங்கள், உதவிகளை குறித்தோ நாளேடுகளில் விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால் திமுக அரசு அதை அப்பட்டமாக மீறி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று சொல்லிக்கொண்டே மிதவை பேருந்து, சொகுசு பேருந்து, சிறப்புப் பேருந்து, இடையில் நிற்காத பேருந்து என்ற எல்லாம் பல்வேறு பெயர்களில் பேருந்துகளை இயக்கி சாதாரணக் கட்டணத்தை விட மூன்று, நான்கு மடங்கு கட்டணத்தை வசூலித்தனர்.

இன்று திடீரென அனைத்து வகை பேருந்துகளுக்கும் ஒரே வகையான கட்டணம் என்ற கட்டணக் குறைப்பை சத்தமின்றி செயல்படுத்தி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுகின்ற இன்னொரு ஒரு கபட நாடகமாகும். தேர்தலுக்காக கட்டணத்தைக் குறைத்து, தேர்தல் முடிந்ததும் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள்.

திமுக அரசின் இந்த மோசடி வேலையில் மக்கள் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிந்ததும் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற திடீர் நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியை தடுத்து நிறுத்த உதவாது.

இப்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றின்பின் ஒன்றாக காலில் போட்டு மிதிப்பதை கண்டிக்கவோ, தண்டிக்கவோ, முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
இதர மாநிலங்களில் 'உம்' என்றால் குற்றம் என்று நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்ற தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அப்பட்டமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசை கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இந்த மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறி கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதிமுகவும் புகார்..

இந் நிலையில் இன்று தென் சென்னை தொகுதி வேட்பாளர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பான விளக்கக் கூட்டம் நடந்தது.
மத்திய தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த இக் கூட்டத்தில் பஸ் கட்டணம் திடீரென குறைக்கப்பட்டது குறித்து புகார் அளித்தது.
சொகுசு பஸ்களில் ரூ. 10 என்று இருந்த கட்டணம் ரூ.4.50ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற பஸ்களில் ரூ.3 ஆக இருந்த கட்டணம் ரூ.2ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மனு தந்தது.
இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளி்த்துள்ளனர்.

கலெக்டரை மாற்ற கோரி பாமக உண்ணாவிரதம்:

இந் நிலையில் வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பொய் வழக்கு போடும் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோரை நீக்க வேண்டும் என்று கோரி பாமகவினர் முன்னாள் ரயில்வே இணையமைச்சரும் அரக்கோணம் பாமக வேட்பாளருமான வேலு தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 13ம் தேதி நடக்கிறது. அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த வாசு நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேலூர் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் அதிமுக வேட்பாளர் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்து இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்னதாக பாமகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

-நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

போரை நிறுத்த முடியாது: இலங்கை

விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்து, அதன் தலைவர் பிரபாகரனைப் பிடிக்கும் வரை போரை நிறுத்த முடியாது என இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.


பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கௌச்னரும், இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலர் டேவிட் மிலிபாண்டும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்சவை நேரில் சந்தித்து இலங்கை அரசு உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.


முப்பது வருடங்களுக்குப் பின் காலம் நெருங்கிவந்துள்ளதால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் ஆகியோர் பிடிபடும்வரை போரை அரசு நிறுத்தாது என கோத்தபய ராஜபட்ச அவர்களிடம் தெரிவித்தார். போர் நிறுத்தம் அறிவித்தால் அதன்மூலம் விடுதலைப்புலிகள்தான் பலனடைவார்கள் என்றார் அவர்.
பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயப் பகுதிக்குச் செல்ல ஐநா உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கையையும் கோத்தபய நிராகரித்தார்.


புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். சில ஊடகங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன என்ற அவர், அரசை நம்புவதா அல்லது பயங்கரவாத அமைப்பை நம்புவதா என்பதை இங்கிலாந்து அரசு முடிவுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

நன்றி:தினமணி

Wednesday, April 29, 2009

என் கேள்விக்கு என்ன பதில்?

இலங்கைத் தமிழர் பிரச்னையில் 4 வாக்குறுதிகளை வெளியிட முதல்வர் கருணாநிதியும், மத்திய அரசும் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.


நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:


"இலங்கைப் பிரச்னை தொடர்பாக முதல்வர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதமும், பின்னர் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என இவர்கள் கூறிக்கொண்டதும், ஏற்கெனவே திட்டமிட்டு தமிழக மக்களை ஏமாற்றியிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.


இந்த நாடகத்தில் ப. சிதம்பரத்துக்கும் முக்கியப் பங்கு உள்ளது.
இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்த மாட்டோம் என்றும், அது உள்நாட்டு விவகாரம் என்றும் மத்திய அமைச்சர் கபில் சிபல் கடந்த சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால், போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இங்கு சிதம்பரம் கூறுகிறார். இவையெல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.
இந்தியா நினைத்திருந்தால், 3 மாதங்களுக்கு முன்பே போரை நிறுத்தி, 5 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.


தேர்தலில் தமிழக வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற அச்சத்தில் போர்நிறுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால், போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அதிபர் அறிவித்திருக்கிறார். இதற்கு கருணாநிதியும், சிதம்பரமும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?


ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று தன்மானத்துடன் வாழ வேண்டும் என்று கருணாநிதியும், காங்கிரஸýம் விரும்பினால் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.


1. தனி ஈழம் அமைவதுதான் ஈழத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு.
2. தனி ஈழம் அமைய எல்லா வகையிலும் உதவுவோம்.
3. தனிஈழ போராட்டம்- ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம்.
4. ஈழத் தமிழர் போராட்டத்தில் இதுவரை 3 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, இதைப் போர்குற்றமாகக் கருதி இலங்கை அதிபர் ராஜபட்ச, ராணுவத் தளபதி பொன்சேகா, பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்ற 4 அறிவிப்புகளையும் வாக்குறுதிகளாக அளிக்க கருணாநிதியும், சிதம்பரமும், மத்திய அரசும் தயாரா என்றார் ராமதாஸ்.

நன்றி :தினமணி நாளிதழ்

Tuesday, April 28, 2009

மக்கள் தொலைக்காட்சி

தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம்களை வெளிபடுத்தும் அடையாளம் தான் - மக்கள் தொலைகாட்சி

தமிழர்களின் கலை, இலக்கியவற்றை வெளிபடுத்தும் அடையாளம் தான் - மக்கள் தொலைகாட்சி

தமிழர்களின் வாழ்வை, உண்மை நிலையை வெளிபடுத்தும் அடையாளம் தான் - மக்கள் தொலைகாட்சி

கற்பனையும், சினிமாவும், ஆபாசங்களும் நிறைந்த, வீணர்களின் அரட்டையில், ஒருதலைப் பட்சமாக செய்திகளை பரௌப்பும், ஒருவழி காட்சி தொடர்பு தொலைக் காட்சிகளின் மத்தியில், இவைகள் எல்லாம் அல்லாது முழுக்க முழுக்க தமிழர்களுக்காக, தமிழ் இனத்தின் உணர்வை, செயல்பாடுகளை வெளிபடுத்த, பொது மக்களின் எண்ணங்களே, செயல்களே -வெளிபடுத்தும் ஒரு தொலைக் காட்சி.

தமிழர்களின் கிராமங்களை, கிராமாத்து மக்களை, எல்லாதரப்பு மக்களின் எண்ணங்களை, தமிழ் மக்களின் மனங்களை வெளிபடுத்தும் அடையாளம் தான் - மக்கள் தொலைக்காட்சி

உழவர்களின் உண்மை நிலையும், வயல்வெளிகளிலும் இதுவரை எந்த ஒரு தொலைக் காட்சிகளும் ஊடுருவாத, போகாத இடத்திற்க்கும் போகும் ஊடகம் - மக்கள் தொலைக் காட்சி.

உலக ஊடகங்களில், தனக்கென்ற தனி கொள்களையும், மக்களோடு மக்களாக 'பொது' மக்களே பெரும்பாலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெருவதும், எல்லா பாமர மக்களும் தொலைக் காட்சிகளில் வர முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டிய ஊடகம்.

ஒட்டு மொத்த உலக தமிழர்களின் ஊடக அடையாளம், தமிழ் மக்களின் இல்லத் திரை - மக்கள் தொலைக் காட்சி.

thanks to: http://makkal.tv/

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: