பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, பாமக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து 10 நாட்களாகியும், இதுவரை அவர் எதுவும் பேசவில்லை. பேசாதது ஏன். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பின்னர், மறுநாள் இரண்டு மணி நேரம் செய்தியாளர்களை சந்தித்தேன். ஒவ்வொரு மாவட்டமாக மக்களை சந்தித்தேன். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment