Monday, April 7, 2014

மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட திமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும்: அன்புமணி ராமதாஸ்

கிருஷ்ணகிரி: மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால்நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்படும் என தனது கிருஷ்ணகிரி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார் தர்மபுரி லோக்சபா தொகுதி பாமக வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்.கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து கிருஷ்ணகிரி மற்றும் பர்கூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அன்புமணி ராமதாஸ்.

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே திறந்த வேனில் நின்றபடி அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-குஜராத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நரேந்திரமோடி நல்லாட்சி கொண்டுள்ளார். இந்தியாவில் முதன்மை மாநிலமாக குஜராத் திகழ்கிறது. மோடி பிரதமரானால் நதிகளை இணைத்து விவசாயத்தை பெருக்குவார். இலங்கை தமிழர் வாழ்விற்கும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் நிச்சயம் முடிவு கட்டுவார்.47 ஆண்டுகாலமாக நம்மை ஆண்டு வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் கூட்டணியான நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த தேர்தல் தி.மு.க. வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இன்னும் சொல்லப் போனால் இந்த தேர்தலில் தி.மு.க. களத்திலே இல்லை.இந்த தேர்தல் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்குமான தேர்தல். நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல். இந்தியாவில் இன்று ஒரே பிரதமர் வேட்பாளர் மோடி மட்டுமே. காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளரே இல்லை. இந்தியாவில் வேறு எந்த கட்சியிலும் இல்லை. ஜெயலலிதாவுக்கு மட்டும் பிரதமர் ஆசை வந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ.23 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அவர் பிரதமரானால் இந்தியா முழுவதும் 2 லட்சம் கோடிக்கு மது விற்பனை நடைபெறும். எனவே தான் மோடி பிரதமராக வேண்டும் என்கிறோம்.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே கிடையாது. அந்த கட்சிக்கு எந்த தொகுதியிலும் டெபாசிட் கிடைக்காது. தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. எனவே தமிழகத்தில் நமது கூட்டணிக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி. இந்த கூட்டணி அமையக் கூடாது என அ.தி.மு.க. எவ்வளவோ திட்டம் போட்டது. தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க. வுக்கு பயம் வந்துவிட்டது.மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால் தி.மு.க. இந்த தேர்தலில் 3-வது இடத்துக்கு தள்ளப்படும். இந்த தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தாய்மார்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. இந்த தேர்தல் முடிந்தவுடன் 2 ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அப்போது நாம் போடும் முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கு கொள்கைதான்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.800 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ரூ,ஆயிரத்து 900 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தால் அந்த பணம் முழுவதும் உங்கள் கைகளில் இருந்திருக்கும்.தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 6 ஆயிரத்து 500 கொலைகள் நடந்துள்ளன. நாள் ஒன்றுக்கு 9 கொலைகள் நடைபெறுகிறது. இந்தியாவில் கற்பழிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி 9.4 சதவீதத்தில் இருந்து 4.2 சதவீதமாக குறைந்துள்ளது. விவசாய வளர்ச்சி மைனஸ் 2.2 சதவீதமாக உள்ளது. இங்கு அமைதி, வளம், வளர்ச்சி இல்லை.எனவே மக்கள் மாற்றத்தை நம்பி வாக்களிக்க தயாராகி விட்டனர். இப்போது தேர்தல் நடந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெறும்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: