Thursday, April 5, 2012

மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் மாவட்ட பாமக சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பா.ம.க இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.


அப்போது பேசிய அன்புமணி, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் மின்வெட்டு இருக்காது என தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு சரியாக 6 மாதம் ஆகும் என்றும், பின்னர் ஒரு ஆண்டு ஆகும் என்றும், தற்போது மின்வெட்டு பிரச்னை தீர இரண்டு ஆண்டுகள் தேவை என்றும் கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டு காலத்தில் வரி, பேருந்து கட்டணத்தை உயர்த்தி அரசின் வருமானத்தை அதிகரித்துள்ளார். இவ்வளவு உயர்த்தியும் மின்கட்டண உயர்வு தேவையா.

மேலும், ’2013ல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு கூட திட்டத்தை அறிவிக்கவில்லை. தமிழகத்துக்கு 4500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு மத்திய, மாநில ஆட்சிகள் தான் காரணம். தமிழக அரசு மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’ என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: