Saturday, April 18, 2009

கண்டனத்துக்குறியது

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதி நேற்றைய பேட்டியின் போது, ஒரு கேள்வி பதிலுக்கு மருத்துவர் ராமதாசை பற்றி பேசியிருந்தார். தன் (மருத்துவர் ராமதாசு-வின்) மகன் ஐந்து வருடங்கள் காங்கரசு ஆட்சியில் இருக்கும் போது, இலங்கை தமிழர்களை பற்றி எந்த கேள்வியும் கேக்க வில்லை என்றும், அதே சமயம் , அவர் தன் மகனை பதவியும் விலக சொல்ல வில்லை. அப்படி மருத்துவர் ராம்தாசு செய்ய சொல்லி இருந்தால் அவரை, நான்(கருணாநிதி)'யோக்கியர்' என்று நினைத்து இருப்பேன் என்று கூறி இருந்தார்.
இது ரொம்பவும் கண்டனத்துக்குறியதும், அவரின் இன்னமும் அரசியல் முதிர்ச்சி இன்மையும் காட்டுகிறது. சில உண்மைகளையும், சில நிகழ்வுகளையும் இங்கே நினைத்து பார்க்க வேண்டும்.
1. இவர் (கருணாநிதி) ஐந்து வருடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தார். ? இவர் மத்திய அரசியலில் மிக முக்கியமானவர்களில் ஒருவர். இவர் தன் உடல் நலத்தையும், குடும்ப நலத்தைப் பற்றியுமே நினைத்து கொண்டு இருந்தாரா?
2.கடந்த ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலமாக தான் இலங்கையில் போர் தீவிரமடைந்து வருகிறது. கருணாநிதி என்ன தூங்கி கொண்டு இருந்தார?
3.காங்கிரசு அரசில் இருந்து கருணாநிதியின் அமைச்சர்கள் ஏன் பதவி விலக வில்லை. அவர்களை பதவி விலக சொல்லியிருந்தால், கருணாநிதியை 'யோக்கியர்' என்று மக்களும், மற்ற கட்சிகளும் நினைத்து இருக்கும். அப்படி சைய வில்லை.
4. கருணாநிதி ஏன் மத்திய அரசில் இருந்து விலக வில்லை. மதிய அரசு தான் மவுனமாகவும், இலங்கை போரை நிறுத்த, அதர்க்கு சரியான முடிவுகள் எடுக்க வில்லை. கூடணி ஒரு சந்தர்ப்ப வாதம் என்றால், சந்தர்ப்பங்களையே கூட்டணியாக தொடர்ந்து கொண்டு இருப்பவர் கருணாநிதி இல்லையா? இது மட்டுமா, சன் டிவி குழுமத்தில் இருந்து பிரிவது போல் பிரிந்து, தன் குடும்ப லாபத்துக்கும் தன் கட்சிக்கமாக மூன்று தொலைக்காட்சிகளை அரம்பித்து, தயாநிதி மாறனை பதியில் இருந்து இருக்குவது போல் இறக்கி, கனிமொழியை அமைச்சராக்கி, தென் மாவட்ட்டஙலில் அழகிரியை தென்னக முதல்வரா பிரதிபளித்து இருக்கிறார் என்றால் அது மிகை யாகாது. தமிழ் நாட்டில் இனி வரும் காலங்களில் இவரோட குடும்பம் ராஜ பரம்பரை போன்று வாழ , இருக்க கருனாநிதி வழி வகை செய்து இருக்கிறார் என்றால் மறுக்க முடியமா.

5.பாட்டளி மக்கள் கட்சி மட்டும் தான் தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவதாக, ஊடகங்களும் , மற்ற கட்சிகளும் பேசுகிறார்கள். எந்த கட்சி மாறவில்லை. எந்த கட்சி மாறாமல் இதுவரை இருக்கிறது.? பாட்டளி மக்கள் கட்சி மட்டும் என்றால் இளக்காரமா?
6.தேர்தலில் எந்த கட்சி எந்த அணியில் வேண்டுமானாலும், சேரட்டும். தேர்தல் கூட்டணி வேறு. அதன் நோக்கம் வேறு. ஆனால், சமுதாய பிரச்சனைகளும், இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளும் இதுவரையிலும் தீர்க்க படவில்லை. அது அதிகார்த்தில் இருக்கும் கட்சியானாலும் சரி, அல்லது, அதிகாரத்தில் இல்லத கட்சியானலும் சரி.
7.மொத்ததில்,யாரை யாரு வேண்டுமனாலும் குறை / குற்றம் சொல்லலாம். ஆனால் வீண் பழியும் , செய்யாததை செய்ததாக தம்பட்டம் அடித்து கொள்வதும் தவிர்க்க படவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு செய்தி ஊடகமாக ஆகி விட்ட காலத்தில், யாரையும், யாரும் ஏமாத்த முடியாது. மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். பொருமிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களிடம், பணமும், அதிகாரமும் இல்லை. ஆனால் வோட்டு இருக்கிறது. வைப்பார்கள் வேட்டு!. தேர்தலுக்கு பின் தெரியும்.
ஆனால் பயம் என்னவோ பணமும், அதிகாரமும் நியாயமான தேர்தலை சீர்க் கொலைத்து விடுமோ என்ற பயம் எல்லோரிடமும் இருக்கிறது. மதிய அரசே சில முக்கியமான விசய்ஙகளில் மவுனமாக இருக்கும் போது, தேர்தல் ஆணையும் மட்டும் என்ன விதி விலக்கா?.
அவர் அவர்களின் மனசாட்சி மட்டுமே நீதி வழங்கும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: