Monday, February 29, 2016

வணிக நோக்குடன் செயல்படுவது மத்திய அரசுக்கு அழகல்ல: ராமதாஸ் கண்டனம்



டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், வணிக நோக்குடன் செயல்படுவது மத்திய அரசுக்கு அழகல்ல என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உலக சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்களின் அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்படுவதாகவும், டீசல் விலை ரூ.1.51 உயர்த்தப்படுவதாகவும்  எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.56.08 ஆக குறைந்துள்ள நிலையில், டீசல் விலை ரூ.47.13 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலைக்குறைப்பு ஓரளவு நிம்மதி அளிக்கும் போதிலும், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் வெளிப்படை தன்மையற்ற முறையும், அவற்றின் மீதான வரிகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசு கடைபிடிக்கும் மனிதநேயமற்ற அணுகுமுறையும் இயற்கை அறத்திற்கு எதிரானவை ஆகும். பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் என அறிவித்தது. இதை மத்திய அரசே கடைபிடிக்கவில்லை என்பது தான் வருத்தமான விஷயம். கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா விலை சரியும் போது அதன் பயனை மக்கள் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், விலைக் குறைப்பு செய்யப்படுவதற்கு முன்பே கலால் வரியை உயர்த்தி, விலைக் குறைப்பை மத்திய அரசு தடுப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற, முழுக்க வணிக நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும்.

உலக சந்தையில் நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 32.53 டாலர் ஆகும். இது பிப்ரவரி 15 ஆம் தேதி விலையான 30.48 டாலரை விட 2.05 டாலர் அதிகமாகும். இந்த அடிப்படையில் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதாக இருந்தால், டீசல் விலையைப் போல பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டீசல் விலையை உயர்த்தி விட்டு, பெட்ரோல் விலையை குறைப்பதென்றால் அதற்கான காரணம் என்ன? ஒருவேளை பெட்ரோல் விலை ஏற்கனவே அதிகமாக உயர்த்தப்பட்டு இப்போது பெயரளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை எண்ணெய் நிறுவனங்கள் விளக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 33 ரூபாய், டீசல் 24 ரூபாய் என்ற விலைக்குத் தான் விற்கப்பட வேண்டும். ஆனால், அதைவிட அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு மத்திய அரசின் ஆசை தான் காரணமாகும்.

மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,46,838 கோடி ஆகும். இவ்வளவு வருமானத்தை கூடுதலாக  ஈட்டும் மத்திய அரசு இப்போது டீசல் விலையை உயர்த்தாமல் இருந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது.  லிட்டருக்கு ரூ.13.47 கூடுதல் வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அதில் பத்தில் ஒரு பங்கை குறைப்பதால் எதுவும் குறைந்து விடாது. ஆனால், அனைத்து செலவுகளுக்கும் பெட்ரோல், டீசல் மீதான வரியிலிருந்து  தான் வருவாய் திரட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆசை தான் இந்த நிலைக்கு காரணமாகும்.

 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு 19.73 ரூபாயை கலால் வரியாக வசூலிக்கிறது. இது தவிர சாலை பராமரிப்புக் கட்டணமாக 2 ரூபாயை மத்திய அரசு வசூலிக்கிறது. இவை தவிர தமிழக அரசின் சார்பில் மதிப்பு கூட்டு வரியாக 27%, அதாவது 12.69 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரியாக மட்டும் ரூ.34.42 வசூலிக்கப்படுகிறது.  டீசல் மீதும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்திச் செலவை விட அதிக தொகையை வரியாக வசூலிப்பது கந்து வட்டிக்கடை நடத்துவதை விட மிக  மிக மோசமான செயலாகும். இது போன்ற வணிக நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படக்கூடாது.

டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், அதற்கு இணையாக சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இது சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

Monday, February 22, 2016

சென்னை: மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாவும், வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, நேர்காணல், மாநாடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன.இந்நிலையில், பாமக சார்பில் இன்னும் சில தினங்களில் சென்னையை அடுத்த வண்டலூரில் மாநாடு நடைபெற உள்ளது.இது தொடர்பாக தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார்
வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன்.

ஆட்சி மாற்றம்... தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும்.
நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
Posted by: Jayachitra Published: Monday, February 22, 2016, 14:00 [IST] .vuukle-custom-rating { font-size: 14px; padding-top: 0px; padding-bottom: 9px; text-align: right; } .vuukle-custom-rating .star-rating{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;display:inline-block;font-size:0;height:20px;margin-bottom:-3px;margin-right:5px;overflow:hidden;position:relative;white-space:nowrap;width:100px;}.vuukle-custom-rating .star-rating input{-moz-appearance:none;display:inline-block;height:100%;margin:0;opacity:0;padding:0;position:relative;width:20%;z-index:2;}.vuukle-custom-rating .star-rating i{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;height:100%;left:0;opacity:0;position:absolute;top:0;width:20%;z-index:1;}.vuukle-custom-rating .star-rating input.rad:hover+i,.vuukle-custom-rating .star-rating input:checked+i{opacity:1;}.vuukle-custom-rating .star-rating i~i{width:40%;}.vuukle-custom-rating .star-rating i~i~i{width:60%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i{width:80%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i~i{width:100%;} உங்களது ரேட்டிங்: googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1413541577263-0'); }); சென்னை: மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாவும், வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, நேர்காணல், மாநாடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன.இந்நிலையில், பாமக சார்பில் இன்னும் சில தினங்களில் சென்னையை அடுத்த வண்டலூரில் மாநாடு நடைபெற உள்ளது.இது தொடர்பாக தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நெஞ்சம் இனிக்கிறது... 1/13 நெஞ்சம் இனிக்கிறது... வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன். ஆட்சி மாற்றம்... 2/13 ஆட்சி மாற்றம்... தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும். ஆட்சிகளுக்கு முடிவு கட்டி 3/13 ஆட்சிகளுக்கு முடிவு கட்டி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. மாற்றத்திற்கான விதை 4/13 மாற்றத்திற்கான விதை அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சேலத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இவை தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதையாக அமைந்தன.
தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு மாநாடும் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதில்லை; எந்த ஒரு மாநாட்டுக்கும் இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டதில்லை என்று வியக்கும் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ரவிராஜ், பொன். கங்காதரன், கே.என். சேகர், பாலயோகி மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வதை விட பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் இம்மாநாட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை தகர்த்து இம்மாநாட்டை நடத்தவிருக்கிறோம். இது வெற்றிக்கு முதல்படி.

Sunday, February 21, 2016

வண்டலூர் மாநில அரசியல் மாநாடு நமது வெற்றிக்கு முன்னோட்டமாக அமையட்டும்! ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மடல் 

‘’அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே...!
வண்டலூரில் இன்னும் 5 நாட்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அரசியல் மாநாட்டைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் இதே மாதத்தில் தொடங்கிய நமது வெற்றிப்பயணம் இலக்கை எட்டப் போவதை எண்ணி மனம் நிறைந்தாலும் இனி தான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற உணர்வுடன் தான் பா.ம.க. மாநில மாநாட்டுக்கான அழைப்பு மடலை உங்களுக்கு வரைகிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல... 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான் அவர்களின் எதிர்பார்ப்பு, ஆசை, விருப்பம் அனைத்தும். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி, மக்கள் நலன் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாற்று அணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி  சேலத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இவை தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதையாக அமைந்தன.

பா.ம.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போது வரையிலான ஓராண்டு காலத்தில் நமது முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்புகள், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்களைத் திரட்டி மது ஒழிப்பு போராட்டங்கள், எட்டு திசையிலும் நமது வெற்றிக்கு கொட்டு முரசு கொட்டும் வகையில் 8 மண்டல மாநாடுகள், சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டத்தை உருவாக்கும் வகையில் ‘‘ நாம் விரும்பும் சென்னை’’ கொள்கை ஆவணத்தை வெளியிட்டதுடன், அது குறித்து சென்னை பெருநகரம் முழுவதும்  பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது என நாம் கடந்து வந்த மைல்கற்கள் ஏராளம்.

 இப்போது நாம் நிற்கும் இடத்திலிருந்து ‘மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம்’ என்பது தொட்டுவிடும்  தூரம் தான். தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருப்பதன் முதற்கட்டமாகத் தான் தலைநகரின் நுழைவாயிலான வண்டலூரில் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் மாநில மாநாட்டை வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகலில் மிகச்சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.


தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு மாநாடும் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதில்லை; எந்த ஒரு மாநாட்டுக்கும் இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டதில்லை  என்று வியக்கும் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ரவிராஜ், பொன். கங்காதரன், கே.என். சேகர், பாலயோகி  மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வதை விட பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் இம்மாநாட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை தகர்த்து இம்மாநாட்டை நடத்தவிருக்கிறோம். இது வெற்றிக்கு முதல்படி.

இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து 20 ஆண்டுகளில் கல்வித் துறையிலும், சுகாதாரத் துறையிலும், வேளாண் துறையிலும் கட்டி எழுப்பப்பட்ட முன்னேற்றங்கள், அடுத்த 50 ஆண்டுகளில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. கல்வியும், சுகாதாரமும் தனியாரின் கைகளுக்கு போய்விட்டன. 

 ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் ஈட்டும் ஊதியத்தின் பெரும்பகுதியை கல்விக்காகவும், மருத்துவச் செலவுகளுக்காகவுமே செலவிட வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் விவசாயம் லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்த நிலை மாறி, விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்து தற்கொலைக்கு தூண்டும் கருவியாக மாறிவிட்டது. இவை தவிர சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் கண்டது சீரழிவைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பது தாம் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இதுவரை நடந்த 8 மண்டல மாநாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவற்றை விஞ்சும் வகையில் இந்த மாநில மாநாடு அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்... இதை நீங்கள் நிறைவேற்றுவீர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.நமது லட்சியப் பயணத்தின் முக்கிய மைல்கல்லான இம்மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கவிருப்பது பாட்டாளிகளின் வருகை தான். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இதைவிட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது தான். சென்னை மாநகரின் நுழைவாயிலில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த மாநாடு நடைபெறவிருப்பதால் போக்குவரத்துக்கும், பொதுமக் களுக்கும் எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வண்டலூரில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாட்டை மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’

தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில் கூட்டணி.... படுதீவிரமாக இருக்கும் ராமதாஸ்

சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில்தான் கூட்டணி என்பதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதாகவும் அதிமுகவுடன் கூட்டணி முயற்சிக்கு கட்சியில் சிலர் எடுத்த முயற்சிகளுக்கு அவர் எடுத்த எடுப்பிலேயே தடை போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.சட்டசபை தேர்தலில் பாமக தனித்தே போட்டி; தங்களது தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகள் இணையலாம் என ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது.இம்முறை சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவை தக்க வைக்க அக்கட்சி பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பாமகவைப் பொறுத்தவரையில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்; எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது

நோ கூட்டணி ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் தனித்து போட்டி என்பது விபரீதமாகத்தான் முடியும்; கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் என பாமக ஆதரவு அறிவுஜீவிகள் டாக்டர் ராமதாஸுக்கு ஆலோசனை கூறி இருந்தனராம். ஆனால் இதை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம்
அதிமுக வலை? இதேபோல் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் நிலையில் பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அதிமுக காய்களை நகர்த்தி வருகிறதாம். இதற்கு கட்சியிலும் சிலர் ஆதரவு தெரிவிக்க, ஆனால் 'கூட்டணி' குறித்து யார் பேசினாலும் அதை நிராகரித்து விடுகிறாராம் ராமதாஸ்
ராமதாஸைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்கு சதவீதத்தை பெற்றாக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளாராம். ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில் பாமக 5.23% வாக்குகளைதான் பெற்றது. இதனால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பறிகொடுத்தாக வேண்டிய நிலைக்கு பாமக தள்ளப்பட்டது. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 6% முதல் 8% வாக்குகளைப் பெற வேண்டும்; மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதில் பாமக முனைப்புடன் உள்ளது
Posted by: Mathi Published: Monday, February 22, 2016, 11:16 [IST] .vuukle-custom-rating { font-size: 14px; padding-top: 0px; padding-bottom: 9px; text-align: right; } .vuukle-custom-rating .star-rating{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;display:inline-block;font-size:0;height:20px;margin-bottom:-3px;margin-right:5px;overflow:hidden;position:relative;white-space:nowrap;width:100px;}.vuukle-custom-rating .star-rating input{-moz-appearance:none;display:inline-block;height:100%;margin:0;opacity:0;padding:0;position:relative;width:20%;z-index:2;}.vuukle-custom-rating .star-rating i{background:rgba(0,0,0,0) url("") repeat scroll 0 0/contain;height:100%;left:0;opacity:0;position:absolute;top:0;width:20%;z-index:1;}.vuukle-custom-rating .star-rating input.rad:hover+i,.vuukle-custom-rating .star-rating input:checked+i{opacity:1;}.vuukle-custom-rating .star-rating i~i{width:40%;}.vuukle-custom-rating .star-rating i~i~i{width:60%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i{width:80%;}.vuukle-custom-rating .star-rating i~i~i~i~i{width:100%;} உங்களது ரேட்டிங்: googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1413541577263-0'); }); சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி அல்லது பாமக தலைமையில்தான் கூட்டணி என்பதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதாகவும் அதிமுகவுடன் கூட்டணி முயற்சிக்கு கட்சியில் சிலர் எடுத்த முயற்சிகளுக்கு அவர் எடுத்த எடுப்பிலேயே தடை போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.சட்டசபை தேர்தலில் பாமக தனித்தே போட்டி; தங்களது தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகள் இணையலாம் என ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது.இம்முறை சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவை தக்க வைக்க அக்கட்சி பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பாமகவைப் பொறுத்தவரையில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்; எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது. நோ கூட்டணி 1/5 நோ கூட்டணி ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் தனித்து போட்டி என்பது விபரீதமாகத்தான் முடியும்; கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் என பாமக ஆதரவு அறிவுஜீவிகள் டாக்டர் ராமதாஸுக்கு ஆலோசனை கூறி இருந்தனராம். ஆனால் இதை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். அதிமுக வலை? 2/5 அதிமுக வலை? இதேபோல் திமுக- காங்கிரஸ்- தேமுதிக கூட்டணி அமையும் நிலையில் பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அதிமுக காய்களை நகர்த்தி வருகிறதாம். இதற்கு கட்சியிலும் சிலர் ஆதரவு தெரிவிக்க, ஆனால் 'கூட்டணி' குறித்து யார் பேசினாலும் அதை நிராகரித்து விடுகிறாராம் ராமதாஸ். அங்கீகார பிரச்சனை 3/5 அங்கீகார பிரச்சனை ராமதாஸைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்கு சதவீதத்தை பெற்றாக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளாராம். ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில் பாமக 5.23% வாக்குகளைதான் பெற்றது. இதனால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பறிகொடுத்தாக வேண்டிய நிலைக்கு பாமக தள்ளப்பட்டது. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 6% முதல் 8% வாக்குகளைப் பெற வேண்டும்; மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதில் பாமக முனைப்புடன் உள்ளது. பாஜக வரும்? 4/5 பாஜக வரும்? பாமக தலைமையிலான கூட்டணியில் இதுவரை பெரிய கட்சிகள் எதுவும் சேரவில்லை. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து பாமகவுக்கு தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகிறது. இதை ராமதாஸ் விரும்பவில்லை. அதே நேரத்தில் விஜய்காந்தோ அதிமுகவோ தங்களை கூட்டணியில் சேர்க்காவிட்டால், பாஜக கடைசியாக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு பாமக தலைமையிலான கூட்டணியில் இணையும் என்றே தெரிகிறது. அத்துடன் சில ஜாதிய கட்சிகளும் பாமக அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Wednesday, February 17, 2016

பாமகவின் நெத்தியடி அட்வைஸ்... வாக்கு சேகரிக்கப் போகும்போது டீ கேட்டு நச்சரிக்கக் கூடாது!

தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பாமக. அதில் கூறியிருப்பதாவது:-1. தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்க வேண்டும்.2. ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தலுக்குள் குறைந்தது 3 முறையாவது நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கூறி அவர்களை பா.ம.க.வின் நிரந்தர ஆதரவாளராக மாற்ற வேண்டும்.3. தமிழகத்தின் பெரும்பான்மை வாக்காளர்களான பெண்கள் அதிமுவுக்கும், திமுகவுகும் ஏன் வாக்களிக்கக் கூடாது? பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பதை விளக்கும் துண்டறிக்கையை ஒவ்வொரு பெண் வாக்காளரிடமும் கொண்டு சென்று சேர்க்க/விளக்க வேண்டும்.4. வறுமையை ஒழிக்க கல்வியும், ஆரோக்கியமும் முக்கியம். ஆனால், இவற்றை பெறுவதற்காக கடன் வாங்கி மக்கள் வறுமையில் தள்ளப்படும் நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கி யிருப்பதையும், பா.ம.க. ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மிச்சமாகும் என்பதையும் வாக்காளர்களிடம் விளக்கிப் புரிய வைக்கவேண்டும்.5. விவசாயிகளுக்கான அனைத்து இடுபொருட்கள், வேளாண் பயன்பாட்டுக்கான கருவிகள், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான செயல்திட்டம் பாட்டாளி மக்கள் கட்சியிடம் மட்டுமே உள்ளது என்பதை விளக்க வேண்டும்.6. பா.ம.க. முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் யார்? மத்திய அமைச்சராக இருந்த போது அவர் படைத்த சாதனைகள் என்ன? உலக அளவில் அவர் பெற்ற விருதுகள்/பாராட்டுக்கள் என்ன? தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் உருவாக்கியுள்ள செயல்திட்டம் என்ன? என்பதையெல்லாம் பொதுமக்களுக்கு விரிவாக விளக்க வேண்டும்.7. வாக்கு கேட்கச் செல்லும் போது தேநீர் வாங்கித் தரும்படி வேட்பாளரை கேட்கக்கூடாது. மாறாக வேட்பாளருக்கு தொண்டர்கள் தேநீர் வாங்கித் தர வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி வலிமையான கட்சி... அதன் தொண்டர்கள் எதையும் எதிர்பாராதவர்கள். எனவே, பிரச்சாரத்திற்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.8. வேட்பாளர் சொந்த வாகனம் வைத்திருந்தால் அதில் சென்று வாக்காளர்களை சந்திக்கலாம். வேட்பாளரிடம் வாகனம் இல்லை என்றால் வாகனம் வைத்திருக்கும் நிர்வாகிகள் வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக வாகனம் அளித்து உதவ வேண்டும்.9. அதிமுக, திமுக கட்சிகள் அளிக்கும் ரூ.1000, ரூ.500 பணத்திற்காக விலை மதிப்பற்ற ஜனநாயக உரிமையான வாக்குகளை விற்று ஏமாந்து விடக்கூடாது என வாக்காளர்களிடம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விலை மதிப்பற்ற வாக்குரிமையை விலை கொடுத்து வாங்கும் திமுக, அதிமுகவின் கலாச்சாரத்தை பிரச்சாரத்தின் மூலம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.10. பூத் செலவு என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட தேவையற்ற கலாச்சாரம் மற்றும் செலவு ஆகும். பூத் செலவு என்பது பா.ம.க.வின் அகராதியில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.11. பா.ம.க.வின் சுவர் விளம்பரங்கள் சுவற்றின் உரிமையாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றுத் தான் எழுதப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடந்த இடங்களில் சேரும் குப்பைகளை கட்சியினரே அப்புறப்படுத்த வேண்டும்.12. ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களுடன் தொகுதி நிலையிலான தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெளியிடப்பட வேண்டும்.13. ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளில் சாத்தியமானவற்றை தீர்ப்பதற்கான வாக்குறுதியை அளித்து, ஊர்த் தலைவர்களுடன் சமூக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.14. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் யாருக்கும் தொல்லை தராத வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். பிரச்சாரத்திற்காக செல்லும் போது ஏதேனும் இடத்தில் மற்ற கட்சியினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால் அவர்களின் பிரச்சாரம் முடிவடையும் வரை காத்திருத்து அதன் பின்னர் வாக்கு சேகரிப்பைத் தொடங்க வேண்டும். எதிர்க்கட்சியினரிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.15. தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் நாகரீகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், கடந்த கால சாதனைகள் ஆகியவற்றைக் கூறி மட்டுமே வாக்கு கேட்க வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான அரசியலை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின் பற்ற வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக் கொள்கிறது''இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-release-pmk-election-guidelines-247166.html

Saturday, February 13, 2016

அம்மா குடிநீர் திட்டம்- தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்காக அம்மா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படுவதற்கு துளி கூட வாய்ப்பு இல்லாத இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருப்பது சென்னை மாநகர மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

‘‘அம்மா குடிநீர் திட்டம் சென்னை மாநகரில் ஏழை மக்கள் அதிகமாக வாழும் 100 இடங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக அந்த பகுதிகளில் மணிக்கு 2,000 லிட்டர் நீரை எதிர்மறை சவ்வூடு பரவல் மூலம் சுத்திகரித்து  வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின்படி ஏழை மக்கள் குடிநீர் பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்’’ என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எதையும் அவர் அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க முடியாது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக அறிந்திருப்பது தான்.

இலவசக் குடிநீர் திட்டத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறாரே தவிர அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான செலவு குறித்த மதிப்பீடுகள் செய்யப்படவில்லை. இன்றே திட்டச்செலவு மதிப்பிடப்பட்டு, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படுவதாக வைத்துக் கொண்டாலும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தண்ணீரை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்கள் முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு  அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் விதிகளின்படி செய்யப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். இன்னும் 15 நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டால் அதன்பிறகு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது. இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும்.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு காரணம், இப்படி ஒரு வெற்று அறிவிப்பை வெளியிட்டு விட்டால் 2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்றி விடலாம் என்பது தான். அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதாக  அவர் அறிவித்திருப்பதே, தேர்தல் வாக்குறுதியிலிருந்து பிறழ்ந்து மக்களை ஏமாற்றும் செயல் தான்.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்   5 ஆம் பக்கத்தில்,‘‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்’’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாடு  முழுவதும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறை ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம். இந்த திட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைத் திருப்பதுடன்,  6 லட்சம் இளைஞர்களுக்கு வேலையும் கிடைத்திருக்கும்.

ஆனால், ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய ஜெயலலிதாவுக்கு, இலவசக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆட்சிக்கு வந்த பின்னர்  5 ஆண்டுகளாக ஊழல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு, ஆட்சியை விட்டு அகற்றப்படவிருக்கும் நேரத்தில் அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது போன்று அவர் நாடகமாடுகிறார். 

சிலரை சில நேரத்தில் ஏமாற்றலாம்... ஆனால், அனைவரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது. ஜெயலலிதாவின் இத்தகைய நாடகங்களைப் பார்த்து தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஜெயலலிதா அரசுக்கான மதிப்பெண் மைனசில் தான் இருக்கும் என்பதை விரைவில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என்ற தேர்வில் தமிழக மக்கள் நிரூபிக்கப் போவது உறுதி!’’

Wednesday, February 10, 2016

அதிகார அத்துமீறல், மிரட்டல்: ஜெ.வின் ஆணவத்தை சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி: ராமதாஸ்

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மருத்துவ முகாம் நடத்த தனியார் மருத்துவமனைகளை மிரட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுத் தரப்பில் நெருக்கடி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவுக்கு புகழ் சேர வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

விளம்பர வெளிச்சத்தின் ஒளியிலேயே அரசியல் நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது 68 ஆவது பிறந்த நாளை இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு ஆணையிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை நடத்துதல், 68 லட்சம் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஆளுங்கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். மருத்துவ முகாம்களை நடத்துவதற்காக அவர்கள்  தேர்ந்தெடுத்த முறையில் தான் அதிகார அத்துமீறல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாற்று எழுந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக குறைந்தது 2 முதல் 3 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையிட்டிருக்கிறார். மருத்துவ முகாம்களை நடத்த முன்வராத மருத்துவமனைகள்  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவதுடன், இதுவரை அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

‘‘பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மொத்தம் 16 நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் 30 முதல் 50 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மருத்துவ முகாம்களுக்காக அவற்றை நடத்தும் மருத்துவமனைகளே உள்ளூர் தொலைக்காட்சிகளில்  விளம்பரம் செய்ய வேண்டும். இதுதவிர ஆட்டோ மூலம் ஒலிப்பெருக்கியில் விளம்பரம் செய்தல், துண்டு அறிக்கைகளை வழங்குதல் ஆகியவையும் செய்யப்பட வேண்டும். மருத்துவ முகாம்கள் நடைபெறும் பகுதியில் 8ஙீ4 என்ற அளவில் 4 விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும். அதிமுக ஏற்பாட்டில் தான் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன என்ற தோற்றம் ஏற்படும் வகையில் அனைத்து மருத்துவ முகாம்களையும் அங்குள்ள அதிமுக நிர்வாகிகளை அழைத்து, அவர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தனியார் மருத்துவமனைகளின்  நிர்வாகிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.


மக்களின் நலனுக்காக மருத்துவ முகாம்களை நடத்துவது வரவேற்கத்தக்கது தான். ஜெயலலிதா பிறந்தநாளுக்காக 680 முகாம்கள் அல்ல... 68,000 மருத்துவ முகாம்களைக் கூட நடத்திக் கொள்ளலாம். அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக இதை செய்யும் ஆளுங்கட்சியினர், கடந்த 5 ஆண்டுகளாக ஊழல் செய்து சேர்த்து வைத்திருக்கும் பணத்திலிருந்து செய்தால், அது சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி, மக்கள் பணத்தை திட்டமிட்டு கொள்ளையடித்ததற்காக செய்யப்படும் பரிகாரமாகவும் இருந்திருக்கும். அதை விடுத்து  மருத்துவமனை நிர்வாகங்களை மிரட்டி, முதலமைச்சர் பிறந்த நாளுக்கு மருத்துவ முகாம்களை நடத்துவது தமது நலனுக்காகவும், புண்ணியத்திற்காகவும் அடுத்தவர் நலன்களை பலி கொடுப்பதற்கு ஒப்பானது ஆகும்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக தனியார் மருத்துவமனைகளை மிரட்டி முகாம்களை நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்த நாளுக்காக தமிழ்நாடு முழுவதும் 670 மருத்துவ முகாம்கள் இதே பாணியில் தான் நடத்தப்பட்டன. அப்போது ஜெயலலிதா எந்த பதவியிலும் இல்லை. ஊழல் செய்து சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டு, முதலமைச்சர்  பதவியிலிருந்து நீக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தார். ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பிறந்த நாளுக்காக அரசு எந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அவல வரலாறு கடந்த ஆண்டு எழுதப்பட்டது. கடந்த ஆண்டு ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்ட அனைத்து வகை அதிகார அத்துமீறலும் இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்காக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகை அத்துமீறல்களுக்கும் அடிப்படை காரணம் என்னவெனில், 5 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை மக்கள் நம்மிடம் கொடுத்துவிட்டார்கள்... இந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில் தொடங்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது வரை எதை செய்தாலும் யாரும் நம்மை கேட்க முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதில் எழுந்துள்ள ஆணவம் தான். அந்த ஆணவத்தை அடுத்த சில வாரங்களில் சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 


காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: