டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன், மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை கூடுதலாக 2 மணி நேரம் திறந்துவைக்கும்படி தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நலனுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும், மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்காது. ஆனால் தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் தங்களின் இலவசத் திட்டங்களுக்கு நிதி திரட்டித்தரும் கற்பகத்தரு'வாக மதுக்கடைகளை கருதுகின்றன. எனவே இலவச திட்டங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மதுவிற்பனையையும் அதிகரிக்கின்றன. இதனால் 2003 ம் ஆண்டில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியாக இருந்த மது விற்பனை வருமானம், தற்போது சுமார் ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
2003 ம் ஆண்டில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய அப்போதைய அரசு, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணி நேரத்திற்கு மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதை எதிர்த்தும், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்கள், எடுத்த முயற்சிகள் ஆகியவற்றின் பயனாக முந்தைய ஆட்சியில் மதுக்கடைகளின் விற்பனை நேரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது.
ஆனால், தற்போதைய அ.தி.மு.க. அரசு, மதுக்கடைகளை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்து வைக்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பொறுப்புள்ள அரசுக்கு அழகல்ல. மதுக்கடைகளை மூடி, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது மக்களை அவமதிக்கும் செயலாகும். மதுக்கடைகளின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பதை ஆட்சியாளர்கள் சாதனையாக கருதக்கூடாது.
தெருவுக்குத் தெரு, மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால், இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது தமிழ்நாட்டில் குடும்ப வாழ்க்கை, சட்டம் ஒழுங்கு, கலாச்சாரம் ஆகியவை சீரழிவதற்கு வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கும் முடிவை கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்து, முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
இல்லாவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
Wednesday, February 29, 2012
டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பு: சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும்: ராமதாஸ்
Monday, February 27, 2012
தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது ஏன்? : ராமதாஸ்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியபோது,
’’2016-ல் பா.ம.க. ஆட்சி அமைய புதிய செயல் திட்டமான மாற்றுக் கட்சியில் இருக்கும் வன்னியர்களை பா.ம.க-வில் சேர்க்க வேண்டும். தி.மு.க,அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு அடுத்து பலம் கொண்ட கட்சியாக பா.ம.க. உள்ளது.
1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் 2 கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்டது. ஒன்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, மற்றொன்று வன்னியர் நாட்டை ஆள வேண்டும். இதில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’தி.மு.க,அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்து கொள்கையை விட்டு விட்டோம். பா.ம.க-வை ஒழிப்பதில் தி.மு.க, அ.தி.மு.க-விற்கும் கூட்டணி.
இதனை கடந்த எம்.பி. தேர்தல்,சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டோம். எனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுவது என்று முடிவடுத்தோம்’’ என்றார்.

Friday, February 24, 2012
கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, வைகோ தமிழர்கள் அல்ல: அன்புமணி
சிதம்பரம்: திராவிட கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது. தமிழன் யார் என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர்தான் என்றார் பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி.
பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்று சொல்ல முடியாது. நீங்கள் அவசியம் அரசியலுக்கு வந்தாக வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள்தான். உலக நாடுகளில் புரட்சிகள் நடைபெற்று வருவதற்கு இளைஞர்கள்தான் காரணம். அதேபோன்ற புரட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும்.
சினிமா ஒரு பொழுதுபோக்கு. அதை பார்த்து விட்டு அப்போதே மறந்துவிட வேண்டும். ஆனால் நமது மக்கள் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இனி தமிழ்நாட்டை படித்தவர்கள்தான் ஆள வேண்டும்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அமைதிப் புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் அந்த புரட்சியை ஏற்படுத்தினர். அதிமுகவுக்கு அவர்கள் ஒட்டுப் போடவில்லை. திமுகவுக்கு எதிராக ஓட்டு போட்டார்கள் என்பதுதான் உண்மை.
பாமக ஒரு வித்தியாசமான கட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்த தவறை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம். பாமக தலைமையில் தனி அணி அமைப்போம்.
கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு யாரும் ஆள முடியவில்லை. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு யாரும் ஆளவில்லை.
திராவிட கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது. திராவிடர்கள் தான். தமிழன் யார் என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர்தான் என்றார் அன்புமணி.
புதுவை நான் பிறந்த பூமி:
முன்னதாக பாமக இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. அதில் பேசிய அன்புமணி, புதுவை நான் பிறந்த பூமி. இங்குள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் எனக்கு உள்ளது. புதுவையில் இனிவரும் காலங்களில் வித்தியாசமான அரசியல் நடத்த உள்ளோம். தமிழகத்தில் புதிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். திராவிட கட்சிகளுக்கு எதிரான செயல் திட்டம் அது.
45 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்களை குடிகாரர்களாக்கி விட்டார்கள். புதுவையிலும் பாமக புதிய பாதையில் செல்லப் போகிறது. இங்கு ஒரு மாற்றத்தை உருவாக்க உள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஊர் ஊராக சென்று விதையை விதைத்தார். உழைத்தது நாம். ஆனால் அறுவடை செய்தது என்.ஆர். காங்கிரஸ். இனிவரும் காலங்களில் நாம் அறுவடை செய்யவேண்டும்.
நமது கொள்கை வேறு எந்த கட்சியிலும் கிடையாது. வருங்காலத்தில் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி. கூட்டணி இல்லாமல் எப்படி ஜெயிக்க முடியும் என்று சிலர் நினைக்கலாம். நமது கொள்கை சரியாக இருந்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.
புதுவை இளைஞர்கள் குடியால் சீரழிகிறார்கள். புதுவையில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கினை அமல்படுத்துவோம். புதுவையில் மதுவால் பாதிக்கப்படாத குடும்பமே கிடையாது. இங்கு நாம் 20 தொகுதிகளில் கவனம் செலுத்தினால் போதும். ஆட்சியை பிடித்து விடலாம்.
தமிழகத்தில் காங்கிரஸ் 45 ஆண்டு காலமாக ஆட்சிக்கு வராதது ஏன் என்றால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவர்கள் மேல் சவாரி செய்ததுதான். அவர்கள் மேல் அவர்களே நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால்தான் கூட்டணி வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார் அன்புமணி.

இலவசமாக தண்ணீர் கூட தராத மத்திய, மாநில அரசுகள் தேவையா?: ராமதாஸ்
சென்னை: குடி மக்களின் அடிபடை தேவையான தண்ணீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் அரசியல் சட்டப்படியான கடமை ஆகும். இதைக்கூட அரசுகளால் செய்ய முடியாது என்றால், அந்த அரசுகள் இருப்பதில் அர்த்தமே இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நீர்வள அமைச்சகத்தால் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிடபட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கை உழவர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏழை மக்களை சுரண்டி, பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்கும் கொள்கைகளை கடைபிடித்து வரும் மத்திய அரசு, இப்படி ஒரு கொள்கையை வெளியிட்டதன் மூலம் உழவர்களின் நலனில் தனக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதை நிரூபித்திக்கிறது.
விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிணர்யிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் வினியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில் தெரிவிக்கபட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
குடி மக்களின் அடிபடை தேவையான தண்ணீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் அரசியல் சட்டப்படியான கடமை ஆகும். இதைக்கூட அரசுகளால் செய்ய முடியாது என்றால், அந்த அரசுகள் இருப்பதில் அர்த்தமே இல்லை.
அதுமட்டுமின்றி, தண்ணீர் வினியோகத்தை தனியாரிடம் வழங்கினால் இந்தியாவின் ஒட்டுமொத்த நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு உழவர்களை சுரண்டும் ஆபத்து ஏற்படும். மத்திய அரசு, விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பது கொடுமையிலும் கொடுமையாகும். ஏற்கெனவே உரக் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்ததால், உரம் வாங்க முடியாமல் உழவர்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.
மாநில மின் வாரியங்கள் மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கபடுவதால் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் செலவிடபடுவதாகவும், இதை தவிர்க்க இலவச மின்சாரத்தையும், மானிய விலை மின்சாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வறுமையிலும், கடனிலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் நடவடிக்கையாகும் இது.
நீர்வளம், விவசாயம் போன்ற துறைகள் பொதுப் பட்டியலில் இருக்கும் நிலையில், உழவர்களுக்கு இலவசமாக மின்சாரமோ அல்லது தண்ணீரோ வழங்கக்கூடாது என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒட்டுமொத்தத்தில் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் வகையில் அமைந்துள்ள தேசிய வரைவு தண்ணீர் கொள்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
தேசிய வரைவு தண்ணீர் கொள்கையை ஜனவரி 31ம் தேதி இணையத்தளத்தில் வெளியிட்ட மத்திய அரசு, அடுத்த 29 நாட்களில் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறியிருப்பது சரியல்ல.
இந்தியாவில் உள்ள உழவர்கள் அனைவரும் இணையத்தளம் பார்க்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. எனவே, வரைவு தண்ணீர் கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதுடன், நாடு முழுவதும் உழவர்களிடையே கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Tuesday, February 21, 2012
மின்வெட்டை சரிசெய்யாமல் மக்களை திசைதிருப்புகின்றனர்: ராமதாஸ்
மின்வெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் இன்று (20.02.2012) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வெட்டைக் கண்டித்து திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசுகையில்,
மின்வெட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மின்வெட்டு நேரம் 8 மணி நேரம், 10 மணி நேரம் என அதிகரித்துள்ளது. மின்வெட்டை சரிசெய்யாமல் தம்முடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர். எங்களிடம் மின்வெட்டை சரிசெய்ய பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. ஆனால் நாம் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை எனக் குறிப்பிட்டார்.

ருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்!
திருச்சி சங்கம் ஹோட்டலில் புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற புத்தகத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், இதற்கு முன்பு இந்த புத்தகத்தை கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் வெளியிட்டுள்ளேன்.
சென்னை நிருபர்கள் மிகவும் மோசம். சின்ன சின்ன பசங்க நிருபர் என்று வந்துவிடுகிறார்கள். தினந்தோறும் செய்தித்தாள்களை படிக்காமல் கேள்வி கேட்கிறார்கள். அரசியலைப் பற்றி முழுமையாக தெரியாமல், நிருபராக இருக்கிறார்கள்.
ஆனால் திருச்சியில் அப்படி இல்லை. ரொம்ப சீனியர்ஸ் இருக்கிறீர்கள். முழு அரசியல் தெரிந்தவர்களாக இருக்கிறீர்கள். முழு பத்திரிகையாளர்களாகவே கேள்வி கேட்கிறீர்கள் என்றார்.
பின்னர் அனைவரும் முதல் பக்கத்தை திருப்புங்கள் என்றார். அதில் இரண்டு பகுதிகளாக இந்தப் புக்கத்தை பிரித்திருக்கிறோம். முதல் பகுதியில் முன்னுரையில் இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகங்கள், தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு நேர்ந்த கேடுகள், தமிழகத்தை தலைகுனிய வைத்த திராவிட கட்சிகளின் ஊழல்கள் ஆகியவற்றை புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கிறோம்.
இரண்டாவது பாகத்தில் பாமகவின் கொள்ளை, இனி அரசியலில் புதிய நம்பிக்கை, புதிய அரசியல் செயல்திட்டம் என்று 16 பாகங்களாக பிரித்து தனித்தனியாக கொடுத்திருக்கிறேன். இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்றார்.
பின்னர் புத்தகத்தின் கடைசிப் பக்கம் திருப்புங்கள் என்ற ராமதாஸ், இந்த புத்தகத்தை பத்திரிக்கையாளர்களுக்காகவே கொடுக்கிறோம். நீங்கள் சார்ந்த பத்திரிக்கை நிறுவனங்களும், ஊடக நிறுவனங்களும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு அரசியலைப் பற்றிய ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதனை இந்த புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் கருத்து கேட்பு படிவம் என்ற பகுதி இருக்கிறது. உங்களின் கருத்துக்களை அதில் முழுமையாக எழுதி அனுப்பவும். தொலைபேசியிலோ அல்லது நேரிடையாகவோ என்னிடம் சொல்லலாம். ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார்.

தமிழகம் இருண்டதை மறைக்க
மின்வெட்டை கண்டித்து பாமக சார்பில் அரிக்கேன் விளக்கு ஏந்தும் போராட்டம் மற்றும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதியில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர், ‘’ தமிழகம் மின்வெட்டு காரணமாக இருண்டு கிடக்கின்றது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிலைமையை உடனே சரிசெய்துவிடுவோம் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் மின்வெட்டை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் மின் வெட்டு காரணமாக சுமார் 7 கோடி பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் விவசாயம், மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலையும் நிலையில் அதிமுகவின் ஆட்சி உள்ளது. இதை மக்களிடம் இருந்து மறைக்கவே சசிகலா குடும்பத் தாரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஐந்தாண்டு திட்டங்கள் எத்தனை கொண்டு வந்தாலும் மின்வெட்டை சரிசெய்ய முடியாது. அதிமுக ஆட்சியில் நீடிக்கும் வரை இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகம் இருண்டுதான் கிடக்கும்’’ என்று பேசினார்.

Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited: