Saturday, May 5, 2012
துப்பாக்கியில் தம்மடிக்கும் விஜய் மீது நடவடிக்கை - பசுமைத் தாயகம் வலியுறுத்தல்!
சென்னை: மத்திய அரசின் சட்ட விதிகளை மீறி துப்பாக்கி திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பசுமைத்தாயகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
`துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.
எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.
Tuesday, May 1, 2012
சித்திரை முழு நிலவு நாளில் விடியலை நோக்கி.. மாமல்லபுரம் வாருங்கள்: ராமதாஸ்
சென்னை: சித்திரை முழு நிலவு நாளான மே 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னிய இளைஞர் விழாவில் கலந்து கொள்ளுமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நாள் என்றால் அது சித்திரை முழு நிலவு நாள்தான். வன்னியர் சங்கத்தின் சார்பில் வருகிற 5ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெறவுள்ளது.
வெற்றியைப் பெறவும், ஆட்சியை கைப்பற்றவும் தேவையான அனைத்து தகுதிகளும் நம்மிடம் இருந்த போதிலும் அவற்றை இணைத்து ஒருமுகப்படுத்துவதற்கான ஒற்றுமை என்ற பிணைப்பு இல்லாததால்தான் நாம் இன்னும் ஆளப்படுபவர்களாகவே இருக்கிறோம். இனியாவது ஓரணியில் கைகோர்த்து ஆட்சி என்ற இலக்கை எட்டிபிடிக்க வேண்டும்.
ஏற்றிவிடும் ஏணியாகவும் பின்னர் எட்டி உதைக்கப்படும் ஏணியாகவும் இருந்து ஏமாந்து வரும் நாம் இனியாவது ஓரணியில் கைகோர்த்து ஆட்சி என்ற இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி, புதிய அரசியல், புதிய நம்பிக்கையுடன் நடைபோடுவதற்கான பாதையை வகுப்பதற்காகவே மே 5ம் தேதி சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரத்தில் நாம் கூடுகிறோம்.
25 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் இந்த பெருவிழாவில் ஒவ்வொரு பாட்டாளி குடும்பத்தில் இருந்தும் ஓர் இளைஞன் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். இது கூடிக் கலையும் விழா அல்ல. வறுமை, அறியாமை, அதிகாரமின்மை, உள்ளிட்ட இருளில் சிக்கித் தவிக்கும் நமது சமுதாயத்தை சித்திரை முழு நிலவு நாளில் விடியலை நோக்கி அழைத்து செல்வதற்கான வியூகங்களை வகுக்கும் திருவிழா.
சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக நமக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் வீரநடை போடுவதற்கு இந்த விழா சிறந்த வாய்ப்பாகும்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழும் பாட்டாளி பெருமக்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். ஓட்டு போடுகிற, கொடி பிடிக்கிற, கோஷம் போடுகிற, இலவசங்களுக்கு கையேந்துகின்ற சாதியாக மாற்றியது மட்டுமின்றி, திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வன்னியர்களை வாழ வைப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவும் அதற்கான சூளுரையை ஏற்கவும் கூடுவோம் மாமல்லபுரத்தில் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
Sunday, April 29, 2012
தமிழ்ஈழம் கோரி திமுக எம்.பிக்களுடன் உண்ணாவிரதம் இருக்கட்டுமே கருணாநிதி... ராமதாஸ்
சென்னை: எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் தமிழ் ஈழம் குறித்துப் பேசுவார் திமுக தலைவர் கருணாநிதி. அவருக்குத் தைரியம் இருந்தால் திமுகவிடம் தற்போது உள்ள 18 எம்.பிக்களுடன் டெல்லி போய் உண்ணாவிரதம் இருக்கட்டுமே பார்ப்போம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அன்புமணி விவகாரம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில்தான். 2-வது ஆண்டு உரிமம் புதுப்பிக்கப்படாததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் அமைத்த அட் ஹாக் கமிட்டி அதாவது ஒரு கண்காணிப்புக் குழுவில் 30 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் இருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அந்தக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகுதான் அமைச்சராக இருந்த அன்புமணி கையெழுத்திட்டார். இதில் எந்தவித முறைகேடும் இல்லை. அரசியலில் வளர்ந்து வரும் அன்புமணியின் அரசியல் செல்வாக்கைத் தடுக்கும் வகையிலேயே இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பவர் பற்றி எங்களுக்குத் தெரியும் நேரம் வரும் போது நிச்சயம் வெளியிடுவோம். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.
இடைத்தேர்தல்
இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் தற்போதும் சரி இனிவரும் காலங்களிலும் சரி போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். அந்த தொகுதியில் யார் வென்றிருக்கிறார்களோ அந்தக் கட்சியே அங்கு வேட்பாளரை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். நேரம், பணம் விரயத்தை தவிர்க்கலாம் என்பதற்காக இதைக் கூறி வருகிறேன்
ஈழம்
தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என எப்போதும் சொல்லி வருகிறோம். கருணாநிதி எப்போதுமே எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் தமிழீழம் பற்றி பேசுவார். அவரிடம் இப்போது 18 எம்.பிக்கள் இருக்கின்றனர். தைரியம் இருந்தால் அவர் டெல்லியில் தமிழீழம் கோரி உண்ணாவிரதம் இருக்கட்டும் என்றார் அவர்.
அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில் 2 வது ஆண்டு அதை புதுப்பிக்காததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அதை தொடர்ந்து 30 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழு அனுமதி வழங்க முடிவு செய்தது. அதில் இடம் பெற்றிருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அன்புமணி கையெழுத்திட்டு இருக்கிறார்.
இதில் அன்புமணி எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக சந்தித்து அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம். வளர்ந்து வரும் அவரது அரசியல் செல்வாக்கை தடுப்பதற்காக வேண்டுமென்றே இந்த வழக்கை ஜோடித்து உள்ளனர். இதற்கு பின்னணி யார்? என்பது தெரியும். அதைப்பற்றி நேரம் வரும்போது வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்
எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்: டாக்டர் ராமதாஸ்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
பெட்ரோலுக்கு விலையை மீண்டும் உயர்த்தப்போவதாக கூறுகிறார்கள். வரியை குறைத்தாலே விலையை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடப்போவது இல்லை. இதுமட்டுமல்ல, எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்றார்.
Sunday, April 22, 2012
மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ்
மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்கம், இளம்பெண்கள் சங்கம், தமிழக மாணவர்கள் சங்கம், வன்னிய இளைஞர் படை என 4 அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் 22.04.2012 அன்று மாலை விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சங்க சமூதாய கூடத்தில் நடை பெற்றது.
கூட்டத்தில் மாநில பா.ம.க. இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியு மான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:
இந்த நிகழ்ச்சி வித்தியாச மான நிகழ்ச்சியாகும். நீங்கள் பதவியேற்கும் விழா நிகழ்ச்சி யாகும். உங்களுக்கு டாக்டர் ராமதாஸ் பதவி கொடுத்துள்ளார். இன்று உங்கள் ஊரில் பதவி ஏற்கும் நீங்கள் நாளை உள்ளாட்சி பிரதிநிதி களாகவோ, எம்.எல்.ஏ., எம்.பி.க்களாகவோ, ஏன் மந்திரி களாககூட வர வாய்ப்பு உள்ளது.
டாக்டர் ராமதாஸ் இனி வரும் காலத்தில் திராவிட கட்சிகளுடனோ, தேசிய கட்சிகளுடனோ கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார். பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்.
1920 ம் ஆண்டில் இருந்து இன்று வரை 27 முதல் அமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். அதில் ஒருவர் கூட வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் இல்லை. மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள் ளார்கள். திராவிட கட்சிகளின் சாதனை சாராயம், சினிமா, இலவசம்தான்.
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதற்குதான். கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்கள்தான் முதல் அமைச்சர்களாக உள்ளனர். கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இது கிடையாது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தமிழீழத் தனிநாடு குறித்து பொதுவாக்கெடுப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்
மயிலாடுதுறை: இலங்கையில் தனித் தமிழீழ நாடு உருவாக்குவது தொடர்பாக ஈழத் தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி கூறிய கருத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய மற்றும் அந்நாட்டு அமைச்சர் சம்பிக்க ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கும் கருணாநிதி சளைக்காமல் பதிலடி கொடுத்திருந்தார்.
தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------