Sunday, May 31, 2015

அன்புமணி இராமதாஸ் தலைமையில் போராட்டம்:  ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

 தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்புமணி இராமதாசு தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மகளிர் பங்கேற்றனர். பா.ம.க. தலைவர் கோ.க. மணி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 


 
   

Thursday, May 28, 2015

பாமக தனித்து போட்டி: அன்புமணி ராமதாஸ் பேச்சு

 


சென்னை மதுரவாயலில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,

ஆர்.கே.நகர் தொகுதியில் பாமக போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகம் முடிவு எடுக்கும். வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. மின் வெட்டுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் திமுக, அதிமுகதான் காரணம். பாமக ஆட்சிக்கு வந்தால் பல நலத்திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை முன்னேற்றுவோம் என்றார். 

Wednesday, May 27, 2015

காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆபத்து : அன்புமணி ராமதாஸ்

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை:  ’’தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆற்று நீரைத் திறந்து விடுவதில் தயக்கம் காட்டும் கர்நாடக அரசு, கழிவு நீரை திறந்து விடுவதில் மட்டும் தாராளம் காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் காவிரியில் 148.2 கோடி கழிவு நீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோரப்பகுதிகள் நச்சு பூமியாகி வருகின்றன.

கர்நாடக சட்டமேலவையில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கதாகி, கர்நாடகத் தலைநகர் பெங்களூர் மற்றும் அதையொட்டிய பகுதிளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார். காவிரியை வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டும் பயன்படுத்தி வந்த கர்நாடகம், இப்போது கழிவு நீரை வெளியேற்றுவதற்கான சாக்கடையாகவும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடகத்தின் இந்த சட்டவிரோத செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 5 கோடி பேருக்கு குடிநீர் ஆதாரமாகவும்  காவிரி திகழ்கிறது. இத்தகைய பெருமை கொண்ட காவிரியில் கழிவு நீரைக் கலப்பது மிகப்பெரிய பாவச் செயலாகும். ஃபுளோரைடு மிகையால் பாதிக்கப்பட்டுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 6755 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.1928 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள்,   5 பேரூராட்சிகள், 944 ஊரகக் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு குடிநீர் வழங்குவதற்கான ரூ.1295 கோடி வேலூர் விரிவான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு காவிரி ஆற்றிலிருந்து தான் தண்ணீர் எடுக்கப் படுகிறது. காவிரியில் வரும் தண்ணீர் தூய்மையாக இருந்தால் மட்டுமே இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நோக்கம் நிறைவேறும். நச்சுகள் நிறைந்த கழிவு நீர் கலந்த காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது. ஏற்கனவே ஃபுளோரைடு கலந்த நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நீரைத் தருவதாகக் கூறி, நச்சு கலந்த நீரை வழங்குவது துரோகமாகும்.

தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரில் கழிவு நீரைக் கலக்க கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. மாறாக, காவிரியில் தூய்மையான தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். இதைப் பொருட்படுத்தாமல் காவிரியில் கழிவு நீரை வெளியேற்றுவது பெரும் குற்றமாகும். ஆற்று நீர் தூய்மை, கழிவு நீர் வெளியேற்றம், மாசுக்கட்டுப்பாடு ஆகியவை தொடர்பான 13 மத்திய அரசு சட்டங்களின் படியும், பல்வேறு மாநில அரசு சட்டங்களின்படியும் இது குற்றமாகும்.

 இந்த சட்டங்களின்படி கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுப்பதுடன், கழிவு நீரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறவும் முடியும். ஆனால், கர்நாடகத்தின் இச்செயலை கண்டிக்கவோ, உச்சநீதிமன்றத்தை அணுகி கழிவு நீர் வெளியேற்றத்தை தடுக்கவோ எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடகத்துக்கு இருக்கும் நிலையில், அதை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு அமைதி காக்கிறது. ஆட்சிப் பொறுப்பிலுள்ள சிலரின் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனை காவு கொடுப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்ட மக்களின் நலன் கருதி காவிரியில் கழிவு நீரை திறக்கக்கூடாது என கர்நாடக அரசை  தமிழக அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கர்நாடக அரசுக்கு தண்டனை பெற்றுத் தருவதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

Tuesday, May 26, 2015

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு வீண் ஊகங்களுக்கு இடம் தர கூடாது: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா? என்ற வினா எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்று கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மக் குமாரும், அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தனர். அதனடிப்படையில் தான் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு   எடுக்கப்படவிருந்தது. இந்த பரிந்துரைகள் குறித்து தலைமை வழக்கறிஞரிடம் சில விளக்கங்களைக்  கேட்க வேண்டியிருந்ததாகவும், ஆனால், அரசு தலைமை வழக்கறிஞர் ஊரில் இல்லாததால் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா கூறியிருக்கிறார். இந்தக் காரணம் சரியானது அல்ல என்று கூறி நிராகரிக்க முடியாது. அதேநேரத்தில்  மேல்முறையீடு குறித்து முடிவெடுக்கப்படாததால் மக்களிடையே ஐயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

கர்நாடக அரசின் நிலை தொடர்பாக மக்களுக்கு ஐயம் ஏற்பட்டிருப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதையும், இவற்றைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்டவர்களுக்கு கடந்த 13 ஆம் தேதி நான் கடிதம் எழுதியிருந்தேன்.  இவ்வழக்கு விசாரணையில் முக்கியப் பங்காற்றியவரும் சிறப்பு அரசு வழக்கறிஞருமான ஆச்சார்யாவும், தலைமை வழக்கறிஞரும் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால் அது தவறான முன்னுதாரனம் ஆகிவிடும் என்று கர்நாடக அரசை எச்சரித்திருந்தனர். சட்ட வல்லுனர்களும் இதையே கூறியிருந்தனர்.

அதேநேரத்தில் கர்நாடக காங்கிரசில் உள்ள ஜெயலலிதா ஆதரவு தலைவர்கள் பலர் இவ்வழக்கில்  மேல்முறையீடு கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். இத்தகைய சூழலில் கடந்த 21 ஆம் தேதி நடைபெறவிருந்த கர்நாடக அமைச்சரவை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகும் போது  மேல்முறையீடு செய்வதிலிருந்து கர்நாடகம் பின்வாங்குகிறதோ? என்ற ஐயம் ஏற்படுவதில் தவறில்லை.

சொத்து வழக்கில் மேல்முறையீடு செய்ய ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நேரம் இருப்பதால், நன்றாக சிந்தித்து பொறுமையாக முடிவெடுக்கலாம் என கர்நாடக அரசு கருதியிருக்கலாம்; அவ்வாறு கருதினால் அது தவறும் இல்லை. ஆனால், மேல்முறையீடு செய்வதற்கான காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், மேல்முறையீடு செய்வது பற்றி எப்போது முடிவெடுக்கப்படும் என்பதை கர்நாடக அரசு உறுதியாக அறிவிக்காமல் இருப்பதும், முடிவெடுப்பதற்கான கூட்டங்களை அறிவித்துவிட்டு திடீரென அதை மாற்றுவதும் தான், இந்த விஷயத்தில் தேவையில்லாத யூகங்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தேவையில்லாத யூகங்கள் ஏற்படுவதற்கு இடம் தராமல், அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எப்போது நடக்கும்? என்பது குறித்த விவரங்களை கர்நாடக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மற்றொருபுறம், இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் கலைஞர் அறிவித்திருக்கிறார். இந்த வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கலைஞர் கூறிவந்த நிலையில்,  தி.மு.க.வும் மேல்முறையீட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 14 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். இத்தகைய சூழலில், மேல்முறையீடு செய்ய தி.மு.க. முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் மேல்முறையீட்டுக்கு அதிக கால அவகாசம் இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அநீதி அதிக நாட்களுக்கு ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் நீதியை உடனடியாக நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றக் கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாகவே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் வல்லமை பெற்ற மூத்த வழக்கறிஞரை நியமித்து இவ்வழக்கை நடத்த திமுக முன்வர வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.’’

பா.ம.க. செய்தித் தொடர்பாளர் நியமனம்

பா.ம.க. தலைமை நிலையச் செய்தித் தொடர்பாளராக வழக்கறிஞர் க.பாலு 26.05.2015 செவ்வாய்க்கிழமை முதல் நியமிக்கப்படுகிறார். அவரது செல்பேசி எண் 94440 88866. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நியமன அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு செலவில் தேர்தல் பிரச்சாரமா? முதல்வரிடம் இழப்பீடு பெற வேண்டும்: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: 
’’தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக  அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாளிதழ்களில் 4 பக்கங்கள் விளம்பரம் வெளியிடப் பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைகளே செய்யப்படவில்லை என்ற போதிலும் விளம்பரங்களை வெளியிடுவதை பா.ம.க. எதிர்க்கவில்லை. ஆனால், அரசு விளம்பரமே அ.தி.மு.க.வுக்கான தேர்தல் பிரச்சாரமாக மாற்றப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக அரசின் சாதனைகள் என்று கடந்த 3 ஆண்டுகளாக என்னென்ன பட்டியலிடப்பட்டனவோ, அவையே தான் இப்போதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. விளம்பரத்தின் மையக்கருத்தாக ‘‘செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி... என்றும் அம்மாவின் ஆட்சி’’ என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. உண்மையில் மே 15 ஆம் தேதியுடன்  4 ஆண்டுகள் முடிவடைந்து மே 16 ஆம் தேதி முதல் ஐந்தாம் ஆண்டு தொடங்கிவிட்டது. இதனால்,  அரசின் சாதனைகள் குறித்த விளம்பரம் கடந்த 16 ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், அப்போது விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் என்று குறிப்பிட வேண்டியிருந்திருக்கும் என்பதால், அரசு நிர்வாகத்தின் நாள்காட்டியையே 10 நாட்களுக்கு தள்ளிவைத்து தாம் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இன்று விளம்பரம் வெளிவர வைத்திருக்கிறார்.  எதுவாக இருந்தாலும் தாமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்; விளம்பரங்கள் கூட தாம் பதவியேற்ற பிறகுதான் வெளியிடப்பட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் தன்முனைப்பையே இது காட்டுகிறது.

தமிழக அரசின் சாதனை விளம்பரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் அப்பட்டமாக மீறப் பட்டிருக்கின்றன. அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் படங்கள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்ற அறிவுரையை பின்பற்றி விளம்பரத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற வில்லை என்றாலும், ஒட்டுமொத்த விளம்பரமுமே ஜெயலலிதாவின் புகழ்பாடும் வகையில் அமைந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக ‘‘என்றும் அம்மாவின் ஆட்சி’’ என்ற வாசகத்தின் மூலம் அரசு விளம்பரம் அதிமுகவின் பிரச்சார விளம்பரமாக மாற்றப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. இன்னும் ஓராண்டில் அதிமுக அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், எந்த அடிப்படையில் ‘‘என்றும் அம்மா ஆட்சி’’ என அரசு விளம்பரத்தில் குறிப்பிட முடியும் என தெரியவில்லை. இவ்வாறு கூறியதன் மூலம் அரசு விளம்பரத்தை அதிமுக விளம்பரமாகவும், தமிழக அரசை அதிமுகவின் துணை அமைப்பாகவும் மாற்ற ஜெயலலிதா முயற்சி செய்திருக்கிறார். இது மலிவான விளம்பர உத்தி என்பது மட்டுமின்றி, அரசியல் சட்டத்திற்கு எதிரான செயலும் ஆகும். 

அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,‘‘ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்த அரசு விளம்பரங்களில் ஆளுங்கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறும் போது, அத்திட்டத்தையே சம்பந்தப்பட்ட தலைவர் தான் உருவாக்கியது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது; இது தனிநபர் துதிபாடும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. எனவே தலைவர்கள் படம் இடம்பெறக் கூடாது’’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் நோக்கம் அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படம் இடம்பெறக்கூடாது என்பது மட்டுமல்ல... தனிநபர்களை துதிபாடும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் தான். ஆனால், இத்தீர்ப்புக்கு மாறாக விளம்பரத்தில் ஜெயலலிதா புகழ் பாடப்பட்டு இருப்பதுடன், என்றும் அவரது ஆட்சி தான் நீடிக்கும் என்றும் பிரச்சாரமும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விளம்பரத்திற்காக ஏறக்குறைய ரூ. 15 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டு இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தையும், அரசியல் சட்டத்தையும் மதிக்காமல் அரசு செலவில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டதை அனுமதிக்க முடியாது. இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட தொகையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் இந்த அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

Monday, May 25, 2015

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கமா? :ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

 ’’வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றிருப்பதை கண்டுபிடித்து நீக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலை தூய்மைப் படுத்துதல், அதன்மூலம் தேர்தலில் கள்ள ஓட்டை தடுத்தல் ஆகிய தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும். ஆனால், அதற்காக ஆணையம் கடைபிடிக்கும் அணுகுமுறை வாக்காளர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது.

வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகளை நீக்க வசதியாக வாக்காளர்கள்  வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயருடன், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் தமிழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் வீட்டு வாசலில் சென்னை மாநகராட்சித் தேர்தல் அதிகாரி பெயரில்  துண்டறிக்கைகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அவற்றில், ‘‘உங்களின் ஆதார் விவரங்களைச் சேகரிக்க அதிகாரிகள் வீட்டுக்கு வந்தபோது நீங்கள் இல்லை. எனவே, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடம் உடனடியாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அறிவிப்பை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட போது, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது  கட்டாயமல்ல என்றும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஆதார் எண்ணை இணைத்தால் போதுமானது என்றும் கூறியிருந்தது. ஆனால், இப்போது வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதுமட்டுமின்றி, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு ஆணையம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள தொலைபேசி குறுஞ்சேதியில், ‘‘ஆதார் எண்ணை நீங்கள் இணைத்துவிட்டதால் இனி வாக்களிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையை கொண்டுவரத் தேவையில்லை’’ என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால் ஆதார் எண் கட்டாயம் என்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் முயற்சி செய்வது அம்பலமாகிறது. வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும், உரிமையை நிலைநாட்டவும் நிபந்தனைகளை விதிக்க மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் முயல்வது கண்டனத்திற்குரியதாகும்.

ஆதார் எண் என்பது இந்தியாவில் வசிக்கும் வசிப்பாளர்களுக்கான அடையாள எண் ஆகும். ஆனால், வாக்குரிமை என்பது குடிமக்களுக்கு மட்டும் உள்ள ஒன்றாகும். எனவே, இரண்டையும் இணைத்து குழப்பத்தை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சி செய்யக்கூடாது. அரசின் நலத்திட்ட பயன்களை பெறுவதற்காக ஆதார் எண் கட்டாயம் என அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எந்த சேவை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு மாறாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை கண்டுபிடித்து சரி செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதை விடுத்து வாக்களிப்பதற்கு ஆதார் எண் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்த முயல்வதை ஏற்கமுடியாது. எனவே, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் ஆதார் எண் இணைப்பு கட்டாயமல்ல; விருப்பம் சார்ந்தது என்று அறிவிக்க வேண்டும்.’’

Saturday, May 23, 2015

ஜெயலலிதா தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

 

தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகத் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவதற்கு பதிலாக தனக்கு சேவை செய்வது தான் தமிழ்நாட்டின் கடமை என்ற மனப்போக்கில் ஜெயலலிதா செயல்படுவது கண்டனத்துக்குரியது. விதிகளையும், மரபுகளையும், மக்களையும் மதிக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதா சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவின் வசதி கருதி பல குழப்பங்களும், அவமதிப்புகளும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. விதிகளையும், மரபுகளையும் கேலிக்கூத்தாக்கும் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

புதிய அமைச்சரவை பதவியேற்கும்போது முதலில் முதலமைச்சரும், அதன்பின் மரபுசீர் வரிசைப்படி அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொள்வது தான் வழக்கம். ஆனால், நேற்றைய பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் பதவியேற்ற பிறகு, மீதமுள்ள 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 14 அமைச்சர்கள் வீதம் மொத்தமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது பள்ளிக் குழந்தைகள் மொத்தமாக நின்று வாய்ப்பாடு ஒப்பிப்பதைப் போன்று இருந்தது. அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழியை படிப்பதும், ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும். இதற்கென தனி மரபு தமிழகத்தில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு 10 நிமிடங்களில் அமைச்சர்களின் பதவியேற்பை நிறைவு செய்திருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரும் என்ன உறுதிமொழி ஏற்றார்கள்? என்பது கூட மற்றவர்களுக்கு தெரியாத வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டிருக்கிறது. பதவியேற்பைக் கூட முறைப்படி செய்ய முடியாத அளவுக்கு என்ன அவசரம்? என்று தெரியவில்லை.

பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்றைய விழாவில் தேசிய கீதத்தின் முதல் இரு வரிகள் மட்டுமே இசைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அவசரத்திற்காக தேசியகீதத்தைக் கூட இரு வரிகளுடன் நிறுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இது சட்டப்படி சரியா... தவறா? என்பது ஒருபுறமிருக்க  ஜெயலலிதா ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பள்ளிக்கூடங்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இனி தேசிய கீதம் இரு வரிகளுடன் நிறுத்தப்பட்டால் அதை கண்டிக்கும் தார்மீக உரிமை  தமிழக அரசுக்கு நிச்சயமாக இல்லை. தேசிய கீதத்தை முழுமையாக இசைத்து, அனைத்து அமைச்சர்களும் தனித்தனியாக பதவியேற்றிருந்தால் விழா முடிய கூடுதலாக  30 நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்.

ஆனால், அந்த அளவுக்குக் கூட பொறுமைகாக்க முடியாத அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அவசர பணி என்ன இருந்தது? என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் பதவியேற்பு முடிவடைந்த பிறகு   தலைமைச்செயலகத்திற்கு கூட ஜெயலலிதா செல்லவில்லை. ‘‘ மக்களுக்காக உழைப்பதே எனது லட்சியம். ஒருநாளைக்கு மொத்தமுள்ள 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காகவே உழைக்கிறேன்’’ என்று  ஜெயலலிதா கூறிக்கொள்வார். ஆனால், பதவியேற்பு விழாவில் கூட         அரை மணி நேரம் கூடுதலாக அமர்ந்திருக்க முடியாமல் அவசரம் அவசரமாக  வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்ததை பார்க்கும்போது தான் தெரிகிறது அவர்  மக்களுக்காக எப்படி உழைக்கிறார் என்பது?

புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இன்று தலைமைச் செயலகம் செல்லும் அவர் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். கடந்த 7 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் அதிகமான புதிய பேரூந்துகள், மெட்ரோ ரயில் திட்டம், சென்னை மாநகராட்சிக் கூடுதல் கட்டிடம் ஆகியவற்றின் தொடக்க விழாக்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. காரணமே இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைக் கூட்டமும்  விரைவில் தொடங்கவிருக்கிறது. இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. மக்களுக்காக, மக்களின் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எப்போதோ திறப்பு விழாவிற்கு  தயாராகி விட்டாலும், ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக அவை முடக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது இப்போது அம்பலமாகி விட்டது. மக்களுக்கு ஜெயலலிதா தரும் மரியாதை இவ்வளவு தான்.
தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகத் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவதற்கு பதிலாக தனக்கு சேவை செய்வது தான் தமிழ்நாட்டின் கடமை என்ற மனப்போக்கில் ஜெயலலிதா செயல்படுவது கண்டனத்துக்குரியது. விதிகளையும், மரபுகளையும், மக்களையும் மதிக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதா சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் விரைவில் தமிழ்நாட்டு மக்களால் தண்டிக்கப்படுவார். இன்னும் ஓராண்டுக்குள் இது நடப்பது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 

Thursday, May 14, 2015

குமாரசாமி தன்னிச்சையாக திருத்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’வருவாய்க்கு மீறிய வகையில் ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கிலிருந்து  ஜெயலலிதாவையும், அவரது கூட்டாளிகளையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏராளமான சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. நீதித்துறை வரலாற்றில்  இதுவரை இல்லாத வகையில் ஏராளமான கணிதப் பிழைகளும், குறைகளும் தீர்ப்பில் நிறைந்துள்ளன.

இதனால் ஜெயலலிதாவை விடுதலை செய்து அளிக்கப்பட்டத் தீர்ப்பு நாடு முழுவதும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதையடுத்து இந்தத் தீர்ப்பில் சில திருத்தங்களைச் செய்ய நீதிபதி குமாரசாமி முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக அவர் தமது நீதிமன்ற அறையில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிமன்றத் தீர்ப்புகளில் எவ்வாறு திருத்தம் செய்வது? என்பது குறித்து வழிகாட்டுவது குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகள் தான்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 362 ஆவது பிரிவின்படி, ஒரு நீதிபதி ஒரு வழக்கை முடித்து வைத்து தீர்ப்பிலோ அல்லது இறுதி ஆணையிலோ கையெழுத்திட்டு விட்டால், அதன்பின் அவரால் அதிலுள்ள எழுத்துப் பிழை அல்லது கணக்குப் பிழையை சரி செய்வதை தவிர்த்து வேறு எந்த திருத்தமும் செய்ய முடியாது ( 362. Court not to alter judgement. Save as otherwise provided by this Code or by any other law for the time being in force, no Court, when it has signed its judgment or final order disposing of a case, shall alter or review the same except to correct a clerical or arithmetical error).

அதன்படி, ஜெயலலிதாவை விடுதலை செய்து வழங்கப்பட்டத் தீர்ப்பில், அவர் தரப்பு 10 கடன்கள் மூலம் ஈட்டிய வருவாயின் கூட்டுத் தொகை ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருப்பதை ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 என்று மட்டுமே திருத்தம் செய்ய முடியும். மாறாக இதுவரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத கற்பனையான வருமானத்தை இந்த  வழக்கில் சேர்க்க எந்த நீதிபதிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை. எனவே, கணிதப் பிழைகளை சரி செய்வதைத் தவிர வேறு எந்தவிதமான திருத்தத்தையும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி செய்ய முடியாது; அவ்வாறு செய்ய அவரை அனுமதிக்கவும் கூடாது.

எனவே, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் ஏற்கனவே அளிக்கப்பட்டத் தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி அவர்கள் எந்தத் திருத்தத்தை செய்வதாக இருந்தாலும் அதை இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா தரப்பினர், கர்நாடக அரசு, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்பிரமணியன்சாமி ஆகியோரின் வாதங்களையும் கேட்ட பிறகே செய்ய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை விசாரணைக்காக கர்நாடக உயர்நீதிமன்றம் பட்டியலிட வேண்டும். இந்த கோரிக்கை குறித்து கர்நாடக அரசும், தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகனும் தங்களின் வழக்கறிஞர்கள் மூலம்  நீதிபதி குமாரசாமியிடம் உடனடியாக முறையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

மீண்டும் நிலம் எடுத்தல் அவசர சட்டம்: ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதா? ராமதாஸ் கண்டனம்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் திணறிவரும் மத்திய அரசு, இதற்கான அவசர சட்டத்தை 3&ஆவது முறையாக பிறப்பிக்க முடிவு செய்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வீரேந்தர் சிங் தெரிவித்திருக்கிறார். உழவர்களின் நலனுக்கு எதிரான மத்திய அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை & நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில்’ சில குறைகள் உள்ள போதிலும், அவற்றில் உழவர்களுக்கு சாதகமாக பல்வேறு பிரிவுகள் இடம் பெற்றிருந்ததால் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தச் சட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தங்களைச் செய்து கடந்த திசம்பர் மாதத் தொடக்கத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். மற்ற கட்சிகளும், மக்களும் அவசரச் சட்டத்திற்கு எதிராக பொங்கி எழுந்தபோதிலும் அதை அரசு பொருட்படுத்தவில்லை.
ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் அவசரச் சட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியாததால் கடந்த ஏப்ரல் மாதத்  தொடக்கத்தில் 2&ஆவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியிலும் இதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளுக்கு பணிந்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்காக இச்சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் என்னென்ன திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைக்கிறதோ, அவற்றை செய்து மசோதாவை நிறைவேற்றுவது தான் சரியானதாக இருக்கும். 

ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய அரசு, இம்மாத இறுதிக்குள் இரண்டாவது அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன் மூன்றாவது அவசரச் சட்டத்தை பிறப்பிக்கத் துடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அவசரச் சட்டம் என்பது நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட முடியாத காலத்தில், தவிர்க்க முடியாத சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தற்காலிக ஏற்பாடு ஆகும். முதல்முறையாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன்பாகவே, அதற்கு மாற்றான சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதற்குத் தேவையான ஆதரவு இல்லாததால்  நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, இரண்டாவது  முறையாகவும் நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற முடியாத அரசு 3&ஆவது முறையாக அவசரச்சட்டம் எனும் கொல்லைப்புற வழியை தேர்ந்தெடுத்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கக் கூடிய, நாடாளுமன்ற நடைமுறையை சிறுமைப்படுத்தக் கூடிய  செயலாகும். இதை குடியரசுத் தலைவர் அனுமதிக்கக்கூடாது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால்  அது உழவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும். இந்தியாவில் அரசுக்கு சொந்தமாகவும், பயன்படுத்தப்படாத தரிசு நிலங்களாகவும் சுமார் 5 கோடி ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில், புதிதாக நிலங்களைக் கையகப்படுத்த எந்த தேவையும் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு வீண் பிடிவாதம் காட்டாமல், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள மசோதா இயற்கையாக அதன் முடிவை அடைய அனுமதிக்க வேண்டும். மாறாக மீண்டும் ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிப்பதற்குத் துடிக்கக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

தமிழகத்தில் பா.ம.க.வை தவிர எந்த கட்சியாலும் மதுவை ஒழிக்க முடியாது: அன்புமணி

 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 301 டாஸ்மாக் கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியபோது,  ’’தமிழகத்தில் முதல் முறையாக மதுஒழிப்பு போராட்டத்துக்கு அதிக அளவில் பெண்கள் கூடியுள்ளனர்.  அனைத்து குடும்பத்திலும் மதுவால் பிரச்சினைகள் உள்ளது. இது தமிழகத்தின் பிரச்சினை. 1971ல் தமிழகத்தில் மதுக்கடைகளை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. 100 கடைகளாக இருந்ததை 6,500 கடைகளாக மாற்றியுள்ளார் ஜெயலலிதா.

அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. டாஸ்மாக் வருமானம் மூலம் விலையில்லா பொருட்களை தருகிறார்கள். 2016ல் பா.ம.க. ஆட்சிக்கு வரும்.  அப்போது பூரண மதுவிலக்குக்கு முதல் கையெழுத்து போடப்படும்.   பா.ம.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அந்த உறுதிமொழியை கொடுக்க முடியாது. தமிழகத்தில் பா.ம.க.வை தவிர எந்த கட்சியாலும் மதுவை ஒழிக்க முடியாது. கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், மின்சாரம், விவசாய உற்பத்தி ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படாமல் டாஸ்மாக்குக்கு அதிக இலக்கு நிர்ணயிக்கிறார்கள். எனவே எங்களுக்கு ஆதரவு தாருங்கள். பூரண மதுவிலக்கை அறிமுகப்படுத்துவோம்’’என்று தெரிவித்தார்.

மீண்டும் நிலம் எடுத்தல் அவசர சட்டம்: ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதா? ராமதாஸ் கண்டனம்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் திணறிவரும் மத்திய அரசு, இதற்கான அவசர சட்டத்தை 3&ஆவது முறையாக பிறப்பிக்க முடிவு செய்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வீரேந்தர் சிங் தெரிவித்திருக்கிறார். உழவர்களின் நலனுக்கு எதிரான மத்திய அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை & நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில்’ சில குறைகள் உள்ள போதிலும், அவற்றில் உழவர்களுக்கு சாதகமாக பல்வேறு பிரிவுகள் இடம் பெற்றிருந்ததால் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தச் சட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தங்களைச் செய்து கடந்த திசம்பர் மாதத் தொடக்கத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். மற்ற கட்சிகளும், மக்களும் அவசரச் சட்டத்திற்கு எதிராக பொங்கி எழுந்தபோதிலும் அதை அரசு பொருட்படுத்தவில்லை.
ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் அவசரச் சட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியாததால் கடந்த ஏப்ரல் மாதத்  தொடக்கத்தில் 2&ஆவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியிலும் இதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளுக்கு பணிந்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்காக இச்சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் என்னென்ன திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைக்கிறதோ, அவற்றை செய்து மசோதாவை நிறைவேற்றுவது தான் சரியானதாக இருக்கும். 

ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய அரசு, இம்மாத இறுதிக்குள் இரண்டாவது அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன் மூன்றாவது அவசரச் சட்டத்தை பிறப்பிக்கத் துடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அவசரச் சட்டம் என்பது நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட முடியாத காலத்தில், தவிர்க்க முடியாத சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தற்காலிக ஏற்பாடு ஆகும். முதல்முறையாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன்பாகவே, அதற்கு மாற்றான சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதற்குத் தேவையான ஆதரவு இல்லாததால்  நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, இரண்டாவது  முறையாகவும் நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற முடியாத அரசு 3&ஆவது முறையாக அவசரச்சட்டம் எனும் கொல்லைப்புற வழியை தேர்ந்தெடுத்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கக் கூடிய, நாடாளுமன்ற நடைமுறையை சிறுமைப்படுத்தக் கூடிய  செயலாகும். இதை குடியரசுத் தலைவர் அனுமதிக்கக்கூடாது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால்  அது உழவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும். இந்தியாவில் அரசுக்கு சொந்தமாகவும், பயன்படுத்தப்படாத தரிசு நிலங்களாகவும் சுமார் 5 கோடி ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில், புதிதாக நிலங்களைக் கையகப்படுத்த எந்த தேவையும் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு வீண் பிடிவாதம் காட்டாமல், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள மசோதா இயற்கையாக அதன் முடிவை அடைய அனுமதிக்க வேண்டும். மாறாக மீண்டும் ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிப்பதற்குத் துடிக்கக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

குழந்தை தொழிலாளர் முறையை சட்டபூர்வமாக்க அரசு முயல்வதா? பா.ம.க. கண்டனம்

 

குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதமும், தண்டனையும் அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் குலத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்ற வகையில் செய்யப்படவிருக்கும் திருத்தம் மிகவும்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மாறாக ஊக்குவிக்கும் தன்மை கொண்டவையாகும். ஆபத்தான இம்முடிவை அரசு கைவிட வேண்டும்.

1986ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின்படி 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை எந்த தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது; 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை  ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அபராதமும், 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இச்சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தத்தின்படி 14 வயது வரையுள்ள குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்த முடியும்; அதுமட்டுமின்றி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்யவும் முடியும். குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்சத் தண்டனை 3 மாதத்திலிருந்து 6 மாதமாகவும், அதிகபட்சத் தண்டனை  ஓராண்டிலிருந்து இரு ஆண்டுகளாகவும் அதிகரிக்கும் வகையில் இச்சட்டம் திருத்தப்படவிருக்கிறது. அதேபோல் அபராதத் தொகையும் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை அதிகரிக்க வகை செய்யப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதமும், தண்டனையும் அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் குலத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்ற வகையில் செய்யப்படவிருக்கும் திருத்தம் மிகவும்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பள்ளி நேரத்திற்குப் பிறகோ, விடுமுறை நாட்களிலோ மட்டும்  தான் குழந்தைகளை அவர்கள் பெற்றோர்கள் செய்யும் தொழிலில் ஈடுபடுத்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது என்ற போதிலும் இது குழந்தைகளின் படிப்பை கடுமையாக பாதிக்கும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய பிறகு வீட்டுப்பாடம் செய்யவும், ஓய்வு எடுக்கவும் வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் அவர்களை பெற்றோர்களின் தொழில்களில் ஈடுபடுத்த அனுமதித்தால், அது அவர்களின் வீட்டுப்பாடம், விளையாட்டு மற்றும் ஓய்வை பாதிக்கும்.

இன்றைய காலத்தில் பள்ளிகளில் விளையாட்டு என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. எனவே பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் ஓய்வு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் விளையாடுவது தவிர்க்க முடியாதது ஆகும். அவ்வாறு இருக்கும்போது பள்ளியில் இருந்து திரும்பிய பின்னர் விளையாடி, கடுமையாக வேலை செய்துவிட்டு, அதன்பின் வீட்டுப்பாடங்களை செய்யும் போது இயல்பாகவே படிப்பு மீது குழந்தைகளுக்கு கோபமும், வெறுப்பும் ஏற்படும். இதனால் குழந்தைகள் ஒருகட்டத்தில் படிப்பை நிறுத்திவிட்டு பணி செய்யத் தொடங்கி விடுவார்கள். அறிவார்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  மத்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்கு  இச்சட்டத்திருத்தம் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.
குழந்தைகளை பெற்றோரின் தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு  சட்டப்படியாக அனுமதி அளிக்கும் பட்சத்தில் அது குழந்தைத் தொழிலாளர் முறையை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். குலக்கல்வி முறை இந்தியாவில் மீண்டும் தலைதூக்குவதற்கே இது வழி வகுக்கும். இலவசக் கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு கடந்த 5 ஆண்டுகளாக குழந்தை தொழிலாளர் முறை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில்  மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டத்திருத்தம் கல்வி உரிமை சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து விடும்.
எனவே, குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்களில்  குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் வகையிலான பிரிவுகளை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Sunday, May 3, 2015

12 வயது சிறுவன் கூட மது அருந்துகிறான்... அன்புணி வேதனை

காஞ்சிபுரம்: மதுவையும், ஊழலையும் ஒழிப்பதே பாமகவின் லட்சியம் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரம் வணிகர் வீதியில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கனோர் பங்கேற்றனர்.போராட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியாதாவது
 
அதிக மது விற்பனை... இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் மது விற்பனையாகிறது. அதிக தற்கொலைகள், அதிக சாலைவிபத்துக்கள், அதிக பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் இளம் விதவைகள் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் மது தான்
மதுவுக்கு அடிமையாகும் குழந்தைகள்... முன்பெல்லாம் 30 வயதில் தான் மது அருந்தத் தொடங்குவார்கள். இப்போது 12 வயது குழந்தைகள் கூட மது அருந்துகின்றன. இதைப் பற்றியெல்லாம் தமிழக ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை. அவர்களின் கவலை எல்லாம் பணம் தான்
மதுவிலக்கு... 2016 ஆம் ஆண்டில் பா.ம.க.ஆட்சிக்கு வந்தவுடன் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் மது விலக்கை ஏற்படுத்த நம்மால் தான் முடியும். நம்மால் மட்டும் தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும். மதுவின் தீமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கதறுகிறார்கள். பெண்களின் தலையெழுத்தை மாற்ற நம்மால் தான்
 

முதலில் கருணாநிதியிடம் ஸ்டாலின் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும்"

காஞ்சிபுரம்: தமிழகத்தில் மது விலக்கை முதன் முதலில் தளர்த்தியவர் திமுக தலைவர் கருணாநிதிதான். எனவே முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி கேட்பதற்கு முன்பு இதுதொடர்பான கேள்வியை தனது தந்தையிடம்தான் மு.க.ஸ்டாலின் கேட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு திறந்த மடல் என்ற பெயரில் ஸ்டாலின் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மது அருந்துவதில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முதன்மை மாநிலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் உருவாகி இருக்கிறது. இதுதான் உங்களுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் பெருமை தேடித் தருகிறதா?உங்கள் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் இதுவே உங்களின் ஒரே சாதனை என்று விளம்பரம் கொடுக்கப் போகிறீர்களா? மதுவை மட்டுமே நம்பியுள்ள ஒரே மாநிலமாக தமிழகத்தை ஆக்குவதுதான் எங்கள் ஒற்றை குறிக்கோள் என்று இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றதா? என்று கேட்டிருந்தார்.இதுகுறித்து, மதுக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் வந்திருந்த டாக்டர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இந்த கேள்வியை ஸ்டாலின், அவரின் தந்தையிடம் தான் முதலில் கேட்க வேண்டும். 1971ல் அவரின் தந்தை தான் பூரண மதுவிலக்கை தளர்த்தினார். தமிழகத்தில் மதுவுக்கு பாதை அமைத்துக் கொடுத்தது அப்போதைய முதல்வர் கருணாநிதி தான் என்பது ஸ்டாலிக்கு தெரியாதா? என்று அதிரடியாக கேட்டார்.
 

Saturday, May 2, 2015

தமிழக அரசின் ஊழல்கள் குறித்து சுப்ரீம்கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை – ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: தமிழக அரசின் அனைத்துத்துறை ஊழல்கள் குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் ரோசய்யா ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்த அவரது அறிக்கை:தமிழக அரசின் ஊழல்கள் தொடர்பாக நாளொரு புகாரும் பொழுதொரு குற்றச்சாற்றும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தரமற்ற நுண்ணூட்டச் சத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்கும்படி வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிரட்டியதாக வேளாண்துறை இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேர்மையான வேளாண் அதிகாரி:மதுரை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனராக பணியாற்றியவர் ஜெயசிங் ஞானதுரை. அப்பழுக்கற்ற நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்.உயர்நீதிமன்றம் வரை..அதன்காரணமாகவே கிரானைட் ஊழல் தொடர்பான விசாரணைக்குழுவில் இவரை சேர்க்க வேண்டுமென்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்றார்.செல்போனில் பேச்சு:வேளாண்துறை இணை இயக்குனர் பணியிலிருந்து நேற்று முந்தைய நாள் ஓய்வுபெற்ற இவர் வழியனுப்பு விழாவில் பேசும்போது, வேளாண்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கடந்த 26.01.2015 அன்று இரவு என்னை செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.அதிக விலைக்கு கட்டாயம்:விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நுண்ணூட்டச் சத்துக்கள் தமிழக அரசின் வேளாண் துறையில் கிலோ ரூபாய் 60 என்ற விலையில் கிடைக்கிறது. ஆனால் இதே நுண்ணூட்டச்சத்து உரத்தை தனியாரிடமிருந்து கிலோ ரூபாய் 120 என்ற விலையில் வாங்கும்படி அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார்.பணியிட மாறுதல் ஆணைஅதற்கான உத்தரவில் நான் கையெழுத்திடவில்லை என்றால் எனது பணியிட மாற்ற ஆணையில் கையெழுத்திடப்போவதாக மிரட்டினார். என்னை சென்னைக்கு இடமாற்றம் செய்வதற்கான ஆணையையும் அவர் படித்துக் காட்டினார்.அமைச்சரின் உதவியாளர்அதன்பின் பிப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சரின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் பேச விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் நான் பேச மறுத்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.ரூ175 கோடி இழப்பு:தமிழக அரசின் வேளாண்துறைக்கு விதைகள் நுண்ணூட்டச் சத்துக்கள் உரங்கள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதில் ஆண்டுக்கு ரூபாய் 175 கோடி இழப்பு ஏற்படுவதாக கடந்த 27.03.2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாற்றியிருந்தேன். எனது குற்றச்சாற்றை நிரூபிக்கும் வகையில் ஜெயசிங் பேச்சு அமைந்திருக்கிறது.தலைவிரித்தாடும் ஊழல்வேளாண்துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. விதை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைத் தயாரிப்பதற்கான வசதிகள் தமிழக அரசின் வேளாண்துறையில் உள்ளது.செயற்கையான தட்டுப்பாடு:ஆனால் அவற்றில் உற்பத்தியை குறைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்குவதை வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கமாகக் கொண்டிருந்தார்.விதைகள் கொள்முதல்விதைகளை கொள்முதல் செய்வதில் மட்டும் ஆண்டுக்கு ரூபாய் 110 கோடி அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது. ஜனவரி 26-ந் தேதி குடியரசு நாளாகும். அன்று அமைச்சர்களுக்கு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் இருக்கும்.தொலைபேசி மூலம் ஊழல்:ஆனால் அவற்றை விடுத்து இரவு நேரத்தில் அதிகாரிக்கு தொலைபேசியில் பேசி ஊழல் செய்யும்படி ஓர் அமைச்சர் மிரட்டுகிறார் என்றால் அவருக்கு இதுதான் முழுநேரப் பணியாக இருந்திருக்க வேண்டும்.முத்துகுமாரசாமி தற்கொலைஅக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மிரட்டலால் தான் நெல்லையைச் சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். ஜெயசிங் ஞானதுரை நேர்மையானவர் மட்டுமின்றி துணிச்சலானவராகவும் இருந்ததால் தான் அமைச்சரின் மிரட்டலை அம்பலப்படுத்தியிருக்கிறார்.உத்தமமானவர்கள் அல்லஇல்லாவிட்டால் முத்துக்குமாரசாமிக்கு ஏற்பட்ட கதி தான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும். அமைச்சராக இருந்து இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும் தான் இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபட்டார். மற்ற அமைச்சர்கள் எல்லாம் உத்தமமானவர்கள் என்று கருதிவிடக் கூடாது. அனைத்துத் துறைகளிலும் இதே நிலை தான். பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மிரட்டலால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை தயாரித்தால் அது சிந்துபாத் கதை போல நீண்டு கொண்டே போகும்.கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற நாடுதமிழ்நாடு என்றால் கலைகளுக்கும் கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற மாநிலம் என்ற பெருமை உலகம் முழுவதும் பரவியிருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாடு என்றால் ஊழல் மலிந்த மாநிலம் என்ற அவப்பெயர் தான் நிலவுகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் தமிழக அரசின் மீதான ஊழல் பட்டியலை கடந்த 17.02.2015 அன்று தமிழக ஆளுனரிடம் பா.ம.க. அளித்தது.தமிழக அரசின் ஊழல்கள்அதில் குறிப்பிடப்பட்டிருந்தவற்றைத் தவிர சில புதிய ஊழல்கள் இப்போது அம்பலமாகியிருப்பதால் தமிழக அரசின் அனைத்துத்துறை ஊழல்கள் குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த மேதகு தமிழக ஆளுனர் ரோசய்யா ஆணையிட வேண்டும்இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மதுவையும், ஊழலையும் ஒழிப்பதே பா.ம.காவின் லட்சியம் : அன்புமணி இராமதாசு பேச்சு

 


தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரம் வ்ணிகர் வீதியில் இன்று மாலை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கனோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பா.ம.க. தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாசு பங்கேற்று பேசியாதாவது

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது மது தான். இந்தியாவின் மதுவால் ஆண்டு தோறும் 18 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மதுவால் இறக்கின்றனர். புற்றுநோயால் இறப்பவர்களைவிட மதுவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் மது விற்பனையாகிறது. அதிக தற்கொலைகள், அதிக சாலைவிபத்துக்கள், அதிக பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் இளம் விதவைகள் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் மது தான். முன்பெல்லாம் 30 வயதில் தான் மது அருந்தத் தொடங்குவார்கள். இப்போது 12 வயது குழந்தைகள் கூட மது அருந்துகின்றன. இதைப் பற்றியெல்லாம்  தமிழக ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை. அவர்களின் கவலை எல்லாம் பணம் தான்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு மதுவைக் கொடுக்கிறார்கள் என்று கூட கூறமுடியாது. மதுவை திணிக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். தமிழகத்தில் கல்வி, விவசாயம் என மக்கள் நலனுக்கான துறைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக மதுவுக்கு மட்டும் தான் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி, 35 ஆயிரம் கோடி என இலக்கு வைத்து மது விற்பனை செய்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மது தனியாரிடம் இருந்தது; கல்வி அரசிடம் இருந்தது. ஆனால், இப்போது மதுவை அரசு விற்கிறது. கல்வியை தனியார்கள் கடைசரக்கு போல விற்கிறார்கள்.  உலகில் எங்கும் இந்த அவலம் கிடையாது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த அவலம் காணப்படுகிறது.

1971 ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் மதுவிலக்கு நீக்கப்பட்டு சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. இப்போது தெருவெல்லாம் மது ஆறாக ஓடுகிறது. பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்கள் கூட குடித்து விட்டு தான் செல்வதாக செய்திகள் கூறுகின்றன. 2016 ஆம் ஆண்டில் பா.ம.க.ஆட்சிக்கு வந்தவுடன் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் மது விலக்கை ஏற்படுத்த நம்மால் தான் முடியும். நம்மால் மட்டும் தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும்.  மதுவின் தீமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கதறுகிறார்கள். பெண்களின் தலையெழுத்தை மாற்ற நம்மால் தான் முடியும். தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி; மதுவிலக்கு வருவதும் உறுதி.

மதுவுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. மதுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூடியது. அடுத்தகட்டமாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். இந்தியாவில் தனி நபர் மது நுகர்வு அதிகமுள்ள மாநிலம் கேரளம் தான். ஆனால், அங்குள்ள மக்களின் நலன் கருதி அனைத்து பார்களையும் கேரள அரசு மூடியிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. கேரளத்தின் இந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.அதேபோல் தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் உண்டா?

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. நல்ல அரசுக்கு இலக்கணம் என்னவென்றால் கல்வி, சுகாதாரம், சிறுதொழில் உள்ளிட்ட துறைகளில் மாநிலத்தை முன்னேற்றுவது தான். இந்த அரசுக்கு இதில் அக்கறை இல்லை. ஊழலையும், மதுவையும் ஒழிப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியம் ஆகும். அடுத்த ஆண்டு தேர்தலில் பா.ம.க. ஆட்சிக்கு வந்து இதை சாதிக்கும். இந்த இலக்குகளை எட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறைக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று அவர் பேசினார். 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: