தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’நத்தம் காலனியில் ஆயுதம் வைத்திருந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதில் ஒரு சில அரசியல் கட்சிகளும் சம்மந்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு எந்தளவுக்கு உதவியது என்பது குறித்தும், மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு குறித்தும் திமுக தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே கருத்தை தான் நாங்களும் கூறுகிறோம்.
மின்வெட்டால் 3 ஆண்டு அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சியாக உள்ளது. சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. 6500 கொலைகள், 65 ஆயிரம் கொள்ளைகள் நடந்துள்ளது.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள், தற்கொலைகள் தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது. 2வது அதிக கற்பழிப்பு தமிழகத்தில் தான் நடக்கிறது. அனைத்து பிரச்னைக்கும் காரணம் மது’’என்று கூறினார்.
No comments:
Post a Comment