Wednesday, November 27, 2013

வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க தயாரா?: ராமதாஸ்

சென்னை: சுயமரியாதைக்கு பேர்பெற்ற தமிழக மக்களை பணத்திற்காக வாக்களிக்கும் நிலைக்கு ஆளாக்கிய பெருமை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வையே சேரும். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் தரமாட்டோம் என்ற அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க தயாரா? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
"தேர்தல்கள் நடத்தப்படுவதன் நோக்கமே மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பது தான். ஆனால், தமிழ்நாட்டில் தேர்தல்களின் போது வாக்குகள் ‘வாங்க'ப்படும் விதத்தைப் பார்க்கும்போது வெகு விரைவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடுமோ? என்ற அச்சம் தான் எழுகிறது.
கொள்கைகளையும், வாக்குறுதிகளையும் கொடுத்து மக்களின் வாக்குகளை அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாங்குவது தான் காலம்காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக பணமும், பரிசுப் பொருட்களும் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தால் கூட அது எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் விதிவிலக்காகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பணத்தையும், பரிசு பொருட்களையும் கொடுத்து வாக்குகளை வாங்குவது தான் விதி என்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.
டெல்லியை சேர்ந்த ஊடக ஆய்வு மையம் (Centre for Media Studies - CMS) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வாக்குகளை வாங்குவதற்காக மக்களுக்கு பணம் தருவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
தமிழக வாக்காளர்களில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பணம் பெற்றுக் கொண்டு தான் வாக்களிக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
சுயமரியாதைக்கு பேர்பெற்ற தமிழக மக்களை பணத்திற்காக வாக்களிக்கும் நிலைக்கு ஆளாக்கிய பெருமை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வையே சேரும். தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தருவதற்காக கொண்டு செல்லபட்ட போது பிடிபட்ட தொகை மட்டும் ரூ.60.10 கோடி என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
இது அப்போது நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கைப்பற்றப்பட்ட மொத்த தொகையான ரூ.74.27 கோடியில் 80 சதவீதம் ஆகும். கைப்பற்றப்பட்ட பணமே இவ்வளவு என்றால், இதைவிட பத்து மடங்கிற்கும் அதிகமான தொகை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும்.
அதேபோல் இப்போது நடைபெறும் ஏற்காடு இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. ஏற்காடு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது முதல் இன்று வரை, ரூ.8.6 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
ஏற்காடு தொகுதியுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.16 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 630 தொகுதிகளை உள்ளடக்கிய 5 மாநிலங்களில் கைப்பற்றப்பட்ட தொகையில் பாதியளவுக்கு கணக்கில் காட்டப்படாத பணம் ஒரே ஒரு தொகுதியில் பிடிபட்டிருக்கிறது. இதிலிருந்தே ஏற்காடு இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்று போற்றப்படும் நிலையில் அதை ‘மணி சக்தி' மூலம் வாங்க முயல்வது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எத்தனையோ தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் தேர்தல் ஆணையம் பணபலத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்று வரை எவரும் தண்டிக்கப்படவில்லை. இந்த அளவுக்குத் தான் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளன.
தேர்தல்களில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. அதனால் தான் வாக்காளர்களுக்கு ஒரு போதும் பணம் வழங்க மாட்டோம் என்றும், வாக்குச்சாவடி செலவுகளுக்காக பணம் வழங்குவதில்லை என்று உறுதி ஏற்றிருக்கிறோம்.
தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், ஆண்ட கட்சியாகவும் இருக்கும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எங்களைப் பின்பற்றி இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட தர மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து, பின்பற்ற முன்வர வேண்டும். இல்லாவிட்டால் ஊழல் செய்து சேர்த்த பணம் மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்க அவர்கள் முயல்வதாகவும், தமிழகத்தில் நிலவுவது ஜனநாயகம் அல்ல.... பணநாயகம் தான் என்றும் மக்கள் கருத வேண்டியிருக்கும்.
தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களை எச்சரிப்பது, கண்டித்து விட்டு விடுவது, வழக்குப்பதிவு செய்துவிட்டு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது என்பன போன்ற பெயரளவிலான நடவடிக்கைகளை எடுப்பதுடன் நின்று விடக்கூடாது. ஓட்டுக்கு பணம் தருபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை தேர்தல் ஆணையம் பெற்றுத்தர வேண்டும். அப்போது தான் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்" இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Saturday, November 23, 2013

ஏன் மின்வெட்டு அதிகரித்திருக்கிறது : ராமதாஸ் விளக்கம்

 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  ’’தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மின்வெட்டு மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக உற்பத்தி முடங்கி விட்டதால்  தமிழகத்தின் பெரும் பகுதி  இருளில் மூழ்கியுள்ளது.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப் படுகிறது. எப்போது மின்சாரம் வரும், எப்போது மின்சாரம் போகும் என்பதே தெரியாததால் மக்கள் தங்களின் அன்றாட பணிகளைக் கூட திட்டமிட்டு முடிக்க இயலாத நிலை காணப்படுகிறது.
மோசமான மின்வெட்டால் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தான் செயல்படும். ஆனால் 12 மணி நேர பகல் வேளையில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தி அடியோடு முடங்கி விட்டது.

இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழந்து வாடுகின்றனர். இரவு நேரங்களிலும் மின்வெட்டு நீடிப்பதால் குழந்தைகள் உறங்க முடியாமல் தவிக்கின்றன; கொசுத்தொல்லை அதிகரித்து டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களும் வேகமாக பரவி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் மின்வெட்டால் முடங்கிக் கிடக்கிறது.
வழக்கமாக கோடைக் காலத்தில் தான் ஓரளவு மின்வெட்டு ஏற்படும். ஆனால், தற்போது மழைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 7 மின்னுற்பத்தி நிலையங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மின்னுற்பத்திப் பிரிவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிவிட்டதால் தான் மின்வெட்டு அதிகரித்திருக்கிறது.
சென்னையில் நேற்று நடந்த அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால், மின்வெட்டை கட்டுப்படுத்த முடியாததன் மூலம் தமிழகத்தை பின்னோக்கி அழைத்துச் செல் கிறார். எனவே, மின்வெட்டைப் போக்க உறுதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

Saturday, November 16, 2013

இன்றும் தமிழகத்தில் 8½ மணி நேர மின்வெட்டு உள்ளது: டாக்டர் ராமதாஸ் பேச்சு

காஞ்சீபுரம் மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த அருணாசலம்-பாலாமணி தம்பதியின் மகனும், செஞ்சி தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமாருக்கும், கடலூர் மாவட்டம் விழமங்கலத்தை சேர்ந்த வக்கீல் அரங்கநாதன்-மாவட்ட நீதிபதி ராஜலட்சுமி தம்பதியின் மகள் டாக்டர் கவிதாவுக்கும், சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி தம்பதியினர் தலைமை தாங்கி நடத்திவைத்தனர். திருமணத்தை நடத்தி வைத்து டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
நீதி தேடிச்செல்லும் ஒவ்வொரு குடிமகனின் கடைசி வாய்ப்பு நீதிமன்றம்தான். இன்னும் நாங்கள் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளோம். மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு விழாவினை தொடர்ந்து, 134 பா.ம.க.வினர் மீது குண்டர் தடுப்பு சட்டமும், தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. அதன்பிறகு நீதிமன்றம் சென்று, அதில் 133 பேர் தற்போது விடுதலையாகிவிட்டனர். சட்டத்தின்படி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து, சட்டத்தின் ஆட்சி நடக்க நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால், நீதித்துறை முற்றிலுமாக ஆட்சியாளர்களின் நேர்முக, மறைமுக, எந்த உத்தரவுக்கும் அடிபணியாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். நான் எல்லா நீதிபதிகளையும் குறிப்பிடவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க சமூக ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒரு அணியை அமைத்துள்ளோம். முதற்கட்டமாக 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அறிவிக்கப்படக் கூடிய ஒரு வேட்பாளர் (அன்புமணி ராமதாஸ்) இங்கு உள்ளார்.
கடந்த 2½ ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் 5100 கொலைகள், 52 ஆயிரம் கொள்ளைகள், 1550 பாலியல் கொடுமைகள் நடந்துள்ளது. இன்றும் தமிழகத்தில் 8½ மணி நேர மின்வெட்டு உள்ளது. இதனால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டு பலர் வேலை இழந்துள்ளனர். முதலாளிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் 26-ந்தேதி பேசும்போது, தமிழகத்தின் மின்தேவை 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்றும், டிசம்பர் மாதத்திற்குள் மின்மிகை மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் முன்னேறும் என்றும் கூறினார்.

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கவும், அதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து நான் சொல்லிவருகிறேன். எனவே, தமிழக போலீசார் நாட்டு மக்களுக்கு உற்ற நண்பராக இருந்து சட்ட ஒழுங்கை காப்பாற்றுங்கள். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

புகை, போதைப்பாக்கு பழக்கத்தை ஒழிக்க ராஜஸ்தான் வழியை தமிழ்நாட்டில் பின்பற்ற வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றவும், உடல்நலனைக் கெடுக்கும் தீய பழக்க வழக்கங்களில் இருந்து அவர்களை மீட்கவும் உன்னதமான திட்டம் ஒன்றை இராஜஸ்தான் மாநில அரசு அறிவித்திருக்கிறது.
போதைப்பாக்கு மற்றும் புகைப் பிடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது என்பது தான் அத்திட்டம் ஆகும். இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பணிகளில் சேருபவர்கள், தாங்கள் பணியில் இருக்கும் காலத்தில் போதைப் பாக்குகளை மெல்லுதல், புகைப்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அரசுக்கு உத்தரவாதக் கடிதம் எழுதித் தர வேண்டும். இந்த உத்தரவாதத்தை மீறும் அரசு ஊழியர்களுக்கு தொடக்கத்தில் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும்; தொடர்ந்து இதே தவறுகளை செய்பவர்கள் அரசு பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். தொடக்கத்தில் எவ்வளவு அபராதம் விதிப்பது? எத்தனை முறை தவறு செய்தால் பணி நீக்கம் செய்வது என்பது குறித்தெல்லாம் விரைவில் நடைபெறவிருக்கும் புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
அரசு பணிகளில் சேருபவர்கள் புகை மற்றும் போதைப்பாக்குப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே இது தான் முதல் முறையாகும். அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் புகைப்பிடிக்காமலும், போதைப் பாக்குகளை மெல்லாமலும் இருக்கிறார்களா? என்பதைக் கண்காணிப்பது மிகவும் கடினமானது ; புகைப் பழக்கத்திற்கும், போதைப் பாக்கு பழக்கத்திற்கும் ஆளாவர்கள் அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வசதிகள் அரசுத் தரப்பில் இருந்து ஏற்படுத்தி தரப்படவில்லை என்ற போதிலும் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ராஜஸ்தான் அரசின் இந்த புதிய முயற்சியை மனதார வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

அதேநேரத்தில் தமிழகத்தில் காணப்படும் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தார். 02.10.2008 அன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் முதல் நடைமுறைக்கு வந்த இந்தத் தடை உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள அரசு பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நடைமுறைப்படுத்த மறுக்கிறது. இதனால் பொது வெளிகளில் நடமாடும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றவர்கள் விடும்  புகையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல், தமிழக முதலமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாசு பலமுறை கடிதம் எழுதி, எனது தலைமையில் பல போராட்டங்கள் நடத்திய பிறகு தான், கடந்த மே மாதத்தில் குட்கா மற்றும் போதைப் பாக்குகளுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்கள் ஆகும் போதிலும் போதைப்பாக்குகளுக்கான தடை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் போதைப்பாக்குகள் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன.
புகைப்பிடிப்பதால் மட்டும் தமிழகத்தில் ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர். வாய் புற்றுநோயின் தலைநகராக சென்னை உருவெடுத்திருக்கிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு இந்தப் பொருட்களின் பயன்பாட்டை தாராளமாக அனுமதிப்பது  மிகவும் வேதனையளிக்கும் ஒன்றாகும். இனியாவது தமிழக அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பொது இடங்களில் புகைப்பிடிப்பதையும், போதைப்பாக்குகளின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பாக்கு பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்கும் நோக்குடன் ராஜஸ்தான் அறிவித்துள்ள திட்டத்தை இன்னும் கடுமையான ஒழுங்குமுறைகளுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

Friday, November 8, 2013

நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் செய்வதற்காக 120 ஆவது அரசியல் சட்டத் திருத்த முன் வரைவையும், நீதிபதிகள் நியமன ஆணைய சட்ட முன்வரைவையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட இந்த இரு சட்ட முன்வரைவுகளையும் அடுத்த மாதம் தொடங்கும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது மக்களவையில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் தற்போது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 5 பேரைக் கொண்ட குழு தேர்வு செய்து வருகிறது. இந்த முறையில் சில குறைபாடுகள் உள்ளன என்பதும், நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதும் உண்மை தான். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றம் நோயை அழிப்பதற்குப் பதிலாக நோயாளியையே அழித்துவிடும் தன்மை கொண்டதாகும்.

இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களாக கருதப்படுபவை நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவை ஆகும். இந்த மூன்றும் ஒன்றின் அதிகாரத்தில் மற்றொன்று குறுக்கிடாமல், அதேநேரத்தில்  ஒன்றையொன்று ஒழுங்குபடுத்தும் வகையில் செயல்பட்டால் தான் ஜனநாயகம் தழைத்தோங்கும். ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின்படி அமைக்கப்படும் 6 பேர் கொண்ட நீதிபதிகள் நியமன ஆணையத்தில் நீதித்துறைக்கு இணையாக நிர்வாகத்துறைக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருப்பதால், நீதிபதிகள் தேர்வில் நிர்வாகத்துறையின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும்.  இதனால் அத்துறையினருக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய நெருக்கடி நீதிபதிகளுக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.  இது நீதித்துறை  சுதந்திரத்தை பறிப்பதுடன், ஜனநாயக அமைப்பையும் சீர்குலைத்துவிடும்.
120 ஆவது திருத்தத்தின் வழியாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 124(ஏ) என்ற பிரிவு புதிதாக சேர்க்கப்படுவதன் மூலம்  நீதிபதிகள் நியமன ஆணையம் அரசியல் சட்ட பாதுகாப்பை அனுபவிக்க முடியாது என்பதுடன், சாதாரண சட்டத்திருத்தத்தின் மூலம் அதன் தன்மையை மாற்றிவிட முடியும். இதனால், இனிவரும் காலங்களில் நீதிபதிகள் நியமன ஆணையத்தை தங்களது விருப்பம்போல ஆட்சியாளர்கள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இது நீதிபதிகள் நியமன நடைமுறையை கேலிக்கூத்தாக்கி விடும்.

நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதன் நோக்கம், நீதித்துறையை சீரமைக்க வேண்டும் என்பதல்ல; மாறாக துடிப்பான தீர்ப்புகளை கொடுத்து அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் நீதித்துறையின் சிறகுகளை வெட்ட வேண்டும் என்பது தான். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த சட்டமுன்வரைவுகள் மீது நடைபெற்ற விவாதத்தில் மத்திய அமைச்சர்கள் ஆற்றிய உரைகள் தான் இதற்கு உதாரணம் ஆகும்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை எதிரியாக மத்திய அரசு பார்க்கக்கூடாது; மாறாக தறிகெட்டு ஓடும் குதிரையை கட்டுப்படுத்துவதற்கான கடிவாளங்களாகத் தான் பார்க்க வேண்டும். எனவே, நீதிபதிகள் நியமன ஆணைய சட்ட முன்வரைவு, 120ஆவது அரசியல் சட்டத்திருத்த முன்வரைவு  ஆகியவற்றை  மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். அவற்றுக்கு மாற்றாக நீதிபதிகள் நியமன முறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Monday, November 4, 2013

காமன்வெல்த்: இலங்கையை நீக்குவதும், தண்டிப்பதுமே தமிழர்களின் இலக்கு: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காமன்வெல்த் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கும், அதில் இந்தியா பங்கேற்பதற்கும் எதிராகவே தமிழக மக்களின் உணர்வு இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், தமிழக மக்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்த தனது முடிவை மத்திய அரசு இன்று வரை அறிவிக்கவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கப்போவதாக செய்திகள் வெளியானபோது கூட, அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தான் மத்திய அரசு கூறியதே தவிர, மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், வி. நாராயணசாமி ஆகியோர் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்குப் பிறகும் காமன்வெல்த் மாநாடு தொடர்பான முடிவை இன்னும் அறிவிக்காமல் மத்திய அரசு கள்ள மவுனம் சாதித்து வருகிறது. அதுமட்டுமின்றி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டியது மிகவும் அவசியம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மற்றும் ஞானதேசிகன் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

இவற்றைப் பார்க்கும்போது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கலாமா? வேண்டாமா? என்ற விவாதத்தை உருவாக்கி, அதன் மூலம் ஈழத்தமிழர்கள் தொடர்பான இன்றைய பிரச்சினை இது மட்டும் தான் என்பது போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக தோன்றுகிறது. இது பிரச்சினையை திசைத் திருப்பும் நடவடிக்கை ஆகும். இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும் நடத்திய இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்கவேண்டும்; இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை இணைத்து தனித்தமிழீழம் அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழர்களின் கோரிக்கை ஆகும். இந்தக் கோரிக்கைகளை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்று தான் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக்கூடாது என்பதாகும்.

ஆனால், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று கூறி வரும் மத்திய அரசு, இன்னொரு புறம் இலங்கை அரசைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளராக இருக்கும் இந்திய அதிகாரியான கமலேஷ் ஷர்மா, அங்கு நடைபெற்ற பல்வெறு மனித உரிமை மீறல்கள் குறித்த காமன்வெல்த் அமைப்பின் விசாரணை அறிக்கைகளை வெளிவரவிடாமல் தடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவது சாத்தியமல்ல என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் இலங்கையைக் காப்பாற்றி வரும் மத்திய அரசு, விரைவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரை பங்கேற்காமல் இருக்கச் செய்வதன் மூலம் ஈழத் தமிழர் நலனுக்காக மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை நம்பி  தமிழர்கள் ஏமாந்துவிடக்கூடாது.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காமல் இருப்பது மட்டுமே போதுமானதல்ல. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்கக் கூடாது; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்; இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தி, அந்நாட்டை தண்டிக்க வேண்டும்; தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதுமுள்ள ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த  இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழர்களின் விருப்பமாகும். எனவே, இந்தக் கோரிக்கைகளை  மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்காக தமிழக கட்சிகள் அனைத்தும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, November 3, 2013

நெஞ்சத்தைப் பிளக்கிறது இசைப் பிரியா படுகொலைக் காட்சி - டாக்டர் ராமதாஸ்

சென்னை: விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது.அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன. சகதி நிறைந்த குளத்தில் கிடக்கும் இசைப்பிரியாவை சிங்களப் படையினர் அழைத்து வருகின்றனர். அவர் மீது ஒரு வீரர் வெள்ளைத் துணியை போர்த்துகிறார்.அப்போது, அவர் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் என்று சில வீரர்கள் கூற, அதை இசைப்பிரியா மறுக்கிறார். அடுத்த காட்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் பள்ளம் ஒன்றில் அவர் உயிரிழந்து கிடக்கிறார்.ஏற்கனவே இசைப்பிரியா போரின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்திருந்தது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள காணொலி காட்சிகளைப் பார்க்கும்போது இசைப் பிரியாவை சிங்களப் படையினர் உயிருடன் பிடித்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கிய பிறகு படுகொலை செய்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதற்கும், அங்கு போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நடத்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், இது மிகவும் கொடூரமானது. மனித உரிமையை மீறிய செயல். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பல நாடுகள் கண்டித்த பிறகும், அது தனது தவறுகளை திருத்திக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறது என்று கூறியுள்ளார்.இவ்வளவுக்குப் பிறகும் இலங்கை மீது நேரடியாகவோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மூலமாகவோ நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்குவது ஏன்?இனியும் தாமதிக்காமல் இலங்கையில் நடைபெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டை ரத்து செய்யவும், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தவும் முன்முயற்சி எடுக்க வேண்டும்.இதற் கானத் தீர்மானத்தை ஜெனிவாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணையத்தின் 25 -வது கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும்- ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை சேனல்–4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது.
அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன. சகதி நிறைந்த குளத்தில் கிடக்கும் இசைப்பிரியாவை சிங்களப் படையினர் அழைத்து வருகின்ற னர். அவர் மீது ஒரு வீரர் வெள்ளைத் துணியை போர்த்துகிறார்.
அப்போது, அவர் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் என்று சில வீரர்கள் கூற, அதை இசைப்பிரியா மறுக்கிறார். அடுத்த காட்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் பள்ளம் ஒன்றில் அவர் உயிரிழந்து கிடக்கிறார்.
ஏற்கனவே இசைப்பிரியா போரின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்திருந்தது.   ஆனால், இப்போது வெளியாகியுள்ள காணொலி காட்சிகளைப் பார்க்கும்போது இசைப் பிரியாவை சிங்களப் படையினர் பிடித்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கிய பிறகு படுகொலை செய்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.
இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதற்கும், அங்கு போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நடத்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம், ''இது மிகவும் கொடூரமானது. மனித உரிமையை மீறிய செயல்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பல நாடுகள் கண்டித்த பிறகும், அது தனது தவறுகளை திருத்திக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.
இவ்வளவுக்குப் பிற கும் இலங்கை மீது நேரடி யாகவோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மூலமாகவோ நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்குவது ஏன்?
இனியும் தாமதிக் காமல் இலங்கையில் நடைபெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டை ரத்து செய்யவும், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தவும் முன்முயற்சி எடுக்க வேண்டும். இதற் கானத் தீர்மானத்தை ஜெனிவாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணையத்தின் 25 –வது கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: