பாமகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டன. தரமான அரிசியின் விலை, வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.50 என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு லிட்டர் நல்லெண்ணெயின் விலை ரூ.300 ஆக அதிகரித்திருக்கிறது. காய்கறிகளின் விலைகளோ ஏழைகளால் எட்டிப்பிடிக்கவே முடியாத உயரத்திற்கு சென்று விட்டன.
ஒரு கிலோ இஞ்சி ரூ.250, வெங்காயம் ரூ.130, பீன்ஸ் ரூ. 125 என உயர்ந்துள்ளன. தக்காளியும், பச்சை மிளகாயும் கூட கிலோ ரூ.60 என்ற அளவைத் தாண்டி விட்டன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு கிலோ இஞ்சி ரூ.250, வெங்காயம் ரூ.130, பீன்ஸ் ரூ. 125 என உயர்ந்துள்ளன. தக்காளியும், பச்சை மிளகாயும் கூட கிலோ ரூ.60 என்ற அளவைத் தாண்டி விட்டன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட உண்ண முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது.
யானைப்பசிக்கு சோளப் பொறியை போடுவதைப் போல தமிழகத்தில் ஏழரை கோடி மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெயரளவில் சில மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து மக்களை ஏமாற்ற முயல்வதையும், ஏழைகளின் நலனில் அக்கறையின்றி இருப்பதையும் பா.ம.க. கண்டிக்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment