Tuesday, November 27, 2012

39 தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள்

 
மிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி வருகிற டிசம்பர் 17-ந்தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக பாமக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பொதுக்குழு விளக்க கூட்டம் நெல்லையில் இன்று நடந்தது.
நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’வருவாய்க்காக அரசு மதுபானக் கடைகளை நடத்துகிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் குடியால் அதிக உயிழப்புகள் ஏற்படுகிறது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. எனவே, வருகிற டிசம்பர் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாள் (டிசம்பர் 17) தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்’’என்றார்.
அவர் மேலும், ‘’தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டால் ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சியில் தடை ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய மின் திட்டங்களை காலதாமதப்படுத்தாமல் தொடங்க வேண்டும். பழைய மின் நிலையங்கள் பழுது ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணைகளில் நீர் இருப்பு குறைந்து ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை போக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் இருந்து நாடார் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் பாடத்தை இதுவரை நீக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த பிரச்சினையில் முதலில் குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது பா.ம.க தான். தமிழகத்தில் தற்போது சாதி, சமய மோதல்கள் தலை தூக்கியுள்ளன. அதை சரி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்தவுடன் அனைத்து பகுதிகளிலும் பா.ம.க.வுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 39 தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
சமுதாய அமைப்புகள் உரிய நேரத்தில் ஆதரவு கொடுத்தால் அதை ஏற்று அவர்களுடன் பா.ம.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது’’என்றார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: