Friday, November 30, 2012

பொங்கலூர் மணிகண்டன் - ராமதாஸ் சந்திப்பு

தருமபுரி கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தருமபுரியில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இன்று(30.11.2012) மாலை 3.30 மணியளவில் கொங்கு வேளாள கவுண்டர்களுக்காக அமைப்பு வைத்து நடத்தும் பொங்கலூர் மணிகண்டன் கலவரம் நடந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்றுவிட்டு வரும்வழியில் பொங்கலூர் மணிகண்டன், அதியமான் பேலஸ்சில் தங்கியிருந்த மருத்துவர் ராமதாஸ்சை சந்தித்து பேசியுள்ளார்.

இரண்டு தரப்பும் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பதை இதுவரை வெளியிடவில்லை.

பெங்கலூர் மணிகண்டன், மாற்று சாதியினர் கொங்கு கவுண்டர் இன பெண்களை திருமணம் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். அதோட தலித் அல்லாதோர் அமைப்பை தொடங்கியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் வன்னியர் இன பெண்களை மாற்று சாதியினர் திருமணம் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். இருவரும் சந்திப்பு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி திருமாவளவனுடன் கூட்டணி கிடையாது;

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நத்தம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும் அதைவிடுத்து அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறை தூண்டும் வசனம் கட்சி கொள்கையா? இங்க பாருங்க எப்படி எல்லாம் வசனம் எழுதப்பட்டுள்ளது பாருங்கள் இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது, ஒழுக்கமான தலித் தலைவர் உருவானல் கூட்டணி வைப்போம் என்றார் ராமதாஸ்.

சிங்கபூர், அமெரிக்க மிசிசிப்பி, சீனா, ஜப்பான், பிரேசில் போன்ற வெளிநாட்டில் உள்ளது போல் பெற்றோரரின் சம்மதத்துடன் பெண்ணுக்கு18, ஆணுக்கு21 வயதிலும் திருமணமும், பெற்றோர் சம்மதமின்றி பெண்ணுக்கு 21, ஆணுக்கு 23 வயதிலும் திருமணம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும். இதை விடுத்து 18, 20 வரை பெண் குழந்தைகளை வளர்த்து இவர்களின் காம பசிக்கு கொடுக்க முடியுமா? என்றார் ராமதாஸ்.

கலவர சம்பவத்திற்கு நாகராஜனின் மரணம் மட்டுமே காரணமில்லை. அதற்கு முன் பெண்களை குறிவைத்து நடந்த ஈவ்டீசிங் கேலி கிண்டல்களும் காரணம். தமிழகத்தில் ஈவ்டீசிங் நடப்பதை தடுக்க காவல்துறையில் தலித் அல்லாத தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பஸ்நிலையங்கள் முன்பு ஈவ் டீசிங்கை தடுக்க போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலகம் நிறைந்த பகுதிகளுக்கு பெண்கள் சிறப்பு பஸ் இயக்க வேண்டும்.
வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் எந்த சாதிக்கும் எதிரான இயக்கம் இல்லை. தலித்களுக்கு எதிராக நான் பேசியது இல்லை. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, சி.பி.ஐ.யோ விசாரணை நடத்து ஆட்சேபணை இல்லை. ஆனால் உண்மை காரணம் வெளி கொண்டுவர வேண்டும். கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது. அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது என்றார் அழுத்தமாக

Tuesday, November 27, 2012

சம்பா பயிர்கள் கருகும் நிலைக்கு தமிழக அரசின் மெத்தனம் தான் காரணம்: ராமதாஸ்

சென்னை: காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரை காப்பாற்ற கர்நாடக அணைகளிலிருந்து போதிய அளவு தண்ணீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிடும் என்று தமிழக விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றமோ இந்த வழக்கில் உறுதியான தீர்ப்பை அளிப்பதற்கு பதில் இரு மாநில முதல்வர்களும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற பிற்போக்கான ஆலோசனையை அளித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாகும்.
வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கிய பின்னர் இந்த விசயத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல்விட்டதன் விளைவுதான் காவிரி பாசன மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கர்நாடக அணைகளைப் பொறுத்தவரை நடப்பாண்டில் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் இருந்து வந்திருக்கிறது.
காவிரி பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியிருந்த அக்டோபர் 15ம் தேதி வாக்கில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் மொத்தமாக 105 டி.எம்.சி தண்ணீர் இருந்தது. தற்போது கர்நாடகத்தில் இரண்டாம் பருவ சாகுபடி முடிவுக்கு வரவிருக்கும் இன்றைய நிலையில்கூட கிருஷ்ண ராஜ சாகரில் 23.6 டி.எம்.சி, ஹாரங்கியில் 30.47 டி.எம்.சி, ஹேமாவதியில் 13.7 டி.எம்.சி, கபினியில் 8.15 டி.எம்.சி என மொத்தம் 76 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. கர்நாடகத்திற்கு இனி தண்ணீர் தேவைப்படாது என்ற நிலையில் கோடை சாகுபடிக்காக இந்த தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.
எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் பாதியையாவது தமிழகத்திற்கு திறந்துவிடும்படி ஆணையிட வேண்டும். அதற்கு கர்நாடக அரசு மறுத்தால் அரசியல் சட்டத்தின் 365வது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அணைகளை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் எடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

39 தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள்

 
மிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி வருகிற டிசம்பர் 17-ந்தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக பாமக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பொதுக்குழு விளக்க கூட்டம் நெல்லையில் இன்று நடந்தது.
நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’வருவாய்க்காக அரசு மதுபானக் கடைகளை நடத்துகிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் குடியால் அதிக உயிழப்புகள் ஏற்படுகிறது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. எனவே, வருகிற டிசம்பர் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாள் (டிசம்பர் 17) தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்’’என்றார்.
அவர் மேலும், ‘’தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டால் ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சியில் தடை ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய மின் திட்டங்களை காலதாமதப்படுத்தாமல் தொடங்க வேண்டும். பழைய மின் நிலையங்கள் பழுது ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணைகளில் நீர் இருப்பு குறைந்து ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை போக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் இருந்து நாடார் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் பாடத்தை இதுவரை நீக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த பிரச்சினையில் முதலில் குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது பா.ம.க தான். தமிழகத்தில் தற்போது சாதி, சமய மோதல்கள் தலை தூக்கியுள்ளன. அதை சரி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்தவுடன் அனைத்து பகுதிகளிலும் பா.ம.க.வுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 39 தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
சமுதாய அமைப்புகள் உரிய நேரத்தில் ஆதரவு கொடுத்தால் அதை ஏற்று அவர்களுடன் பா.ம.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது’’என்றார்

Monday, November 26, 2012

''நான் காதலுக்கு எதிரி அல்ல''.. என்கிறார் ராமதாஸ்

அரக்கோணம்: நான் காதலுக்கு எதிரி அல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ்,

தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கழக கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. பாமக தற்போது புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கை என புதிய முறையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் 18 மணி வரை மின்வெட்டு இருந்து வருவது பரிதாபத்திற்குரியது. நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று உறுதி அளிக்கிறேன். 25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழக உபயோகத்திற்கு போக பக்கத்து மாநிலங்களுக்கு விற்கும் அளவிற்கு மாற்றி காட்டுவோம்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று ரூ. 200 கோடிக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையானது. இந்த தீபாவளிக்கு ரூ. 270 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதுதான் தமிழகத்தின் சாதனையாக உள்ளது.

நாங்கள் இனி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். வானமும், பூமியும் இருக்கும் வரை கடலில் தண்ணீர் இருக்கும் வரை திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக இந்த கூட்டத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

நாங்கள் தேர்தல் காலத்தில் யாருக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தனியாக நின்று தேர்தலை சந்திப்போம். இதே போல் உறுதிமொழியை வேறு எந்த கட்சியாவது மக்களுக்கு கொடுக்க முடியுமா? என சவால் விடுகிறேன்.

நாங்கள் எந்த ஜாதிகளுக்கோ, சமுதாயத்திற்கோ எதிரிகள் கிடையாது. நான் இது வரை 14 மாநாடுகளை நடத்தி உள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சேர்த்துதான் நான் போராடி வருகிறேன். இது வரையிலும் 100 போராட்டங்கள் நடத்தி உள்ளேன். தமிழகத்தில் உள்ள 7 கோடியே 24 லட்சம் பேருக்கு சேர்த்துதான் இந்த போராட்டத்தை நடத்தி உள்ளேன்.

இந்த கூட்டத்திற்கு வந்துள்ள தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களது மகன் மற்றும் மகள்கள் கல்வி கற்கும் போது காதல் வேண்டாம். இவையெல்லாம் 21 வயதுக்கு மேல் வைத்து கொள்ளட்டும். நான் காதலுக்கு எதிரி அல்ல. பள்ளி செல்லும் பருவத்தில் பாடத்தை நன்றாக படித்து பெண்கள் முன்னேறி சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்து கண்காணிப்புடன் உங்கள் மகள்களின் எதிர்காலத்தை உருவாக்குங்கள் என்றார்,

Wednesday, November 21, 2012

இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது; அதை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்: ராமதாஸ்

சேலம்: திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சூரியன் மேற்கே உதித்தாலும் திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ''புதிய பாதை, புதிய நம்பிக்கை, புதிய அரசியல்'' விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
இங்கு கூடியிருக்கும் கூட்டம் மிக பிரமாண்டமாக உள்ளது. இந்தக் கூட்டத்தை பார்த்தால் நாளை வருகிற தேர்தலில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம். வருகிற எல்லா தேர்தலிலும் வன்னியர்கள் ஆட்சியை பிடிக்க தயார் ஆகிவிட்டார்கள்.
ஊழலில் கொள்ளை அடித்து மாறி மாறி ஆட்சியை பிடித்தார்கள். ஊழலில் கொள்ளை அடித்த பணத்தை கொண்டு ஓட்டை விலை பேசுவார்கள். எச்சரிக்கையாக இருக்கவும். இவற்றை தடுக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திரண்டு ஊரின் முக்கிய இடங்களில் உங்கள் போட்டோவுடன் டிஜிட்டல் போர்டு வைக்கவும்.

அதை ''தேர்தல் சட்டப்படியும், அரசியல் சட்டப்படியும் ஓட்டை விலைக்கு வாங்க கூடாது'' என்ற வாசகத்துடன் வைக்கவும். 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் பாமகவில் சேர்ந்து வருகிறார்கள்.
திமுகவின் சின்னம் உதயசூரியன். இந்த சூரியன் மேற்கே உதித்தாலும் திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். திமுகவை அழிக்கவே அவதாரம் எடுத்துள்ளோம்.

அதிமுக, திமுக கதை எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது எங்கு பார்த்தாலும் வன்னியர் அலைகள், வன்னியர் மந்திரம் முழங்கி கொண்டு உள்ளது. வீரம், விவேகம் மிக்க இளைஞர்கள் கட்சியில் உள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து வருடத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தினால் விவசாயம் செழிக்கும் என்று கூறி அதற்காக முதன் முதலாக திட்டம் தயார் செய்து கொடுத்தோம்.

ஆனால் நிறைவேற்றவில்லை. ஏனென்றால் சேலம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் விவசாயிகள் வாழ்ந்து விடுவார்கள் என்பதால். 2016-ல் பாமக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் புதிய வேலை வாய்ப்பில் வன்னியர் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வன்னியர் ஆள வேண்டும் என்ற மந்திரம் ஒவ்வொரு நாளும் உச்சரிக்க வேண்டும் என்றார்.

Thursday, November 15, 2012

கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: ராமதாஸ்





கல்வியியல் படிப்புகளுக்கு நுநுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புது தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் இராஜு தலைமையில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 60ஆவது கூட்டத்தில் கல்வியியல் பட்டயம் (D.T.Ed.), பட்டம் (B.Ed) மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு(M.Ed) நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்வதென முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதற்கான நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாக தெரிகிறது. நுழைவுத்தேர்வு நடத்துவதன் மூலம் தரமான மாணவர்களை கல்வியியல் படிப்புகளில் சேர்க்க முடியும் என்றும், அவ்வாறு சேர்த்தால் மட்டுமே தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியும் என்றும் மத்திய அரசின் தரப்பில் கூறப்படுகிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான அடித்தளம் பள்ளிக் கல்வியிலிருந்து அமைக்கப்படவேண்டும். பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் தரமானதாகவும், சமச்சீரானதாகவும் மாற்றினால் தான் சிறந்த பட்டதாரிகள் உருவாவார்கள். அவர்களைத் தான் தரமான ஆசிரியர்களாக உருவாக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசோ, மாநில அரசோ மேற்கொள்ளவில்லை. அடிபடை வசதிகளே இல்லாமல் ஐந்து வகுப்புகளுக்கு ஓராசிரியர் மட்டுமே உள்ள அரசு பள்ளிகளில் தான் ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும்; குளிர்சாதன வசதியுடன் கூடிய, சர்வதேச தரம் கொண்ட, வகுப்புக்கு ஓராசிரியர் உள்ள பள்ளிகளில் பணக்கார மாணவர்கள் படிப்பார்கள் என்ற நிலைதான் இன்று தமிழகத்தில் நிலவுகிறது.


இந்த அவலநிலையை மாற்ற நடவடிக்கை எடுக்காமல், கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலமாக மட்டுமே தரமான ஆசிரியர்களை உருவாக்கிவிட முடியாது. கல்வியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்து செய்முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தால், கல்வியியலை மனப்பாடம் சார்ந்த படிப்பு என்ற நிலையிலிருந்து பயிற்சி சார்ந்ததாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியும். தரமான ஆசிரியர்களை உருவாக்க 10 சீர்திருத்தங்களை செய்ய வேண்டியிருக்கும் போது, அவை அனைத்தையும் தொடக்கத்தில் இருந்து செய்யாமல், பத்தாவது சீர்தித்தத்தை மட்டும் செய்துவிட்டால் தரமான ஆசிரியர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய அரசு கருதினால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கொள்கை வகுப்பாளர்கள் அறியாமையில் திளைக்கிறார்கள் என்று தான் பொருளாகும்.

அனைத்து மட்டங்களிலும் தரமான, சமச்சீர் கல்வியை வழங்காமல் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்தினால், கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக

பாதிக்க படுவார்கள். அவர்களின் ஆசிரியர் பணி கனவு கருகிவிடும். மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கூடாது என்பதற்காக தமிழக அரசு முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். எனவே, கல்வியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Monday, November 5, 2012

நான் தயார்: அவர்கள் தயாரா?

சென்னையில் 05.11.2012 செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு வந்தால், மூன்று மாதத்தில் மின்வெட்டே இல்லாமல் செய்துவிடுவோம் என்று உறுதி அளித்தார் ஜெயல-தா. ஆனால் இதுவரை மின்உற்பத்திக்கான செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. எண்ணூர் அனல் மின் நிலையம், தஞ்சாவூர் குத்தாலம் எரிவாயு நிலையம் போன்றவைகளை மூடியதும். நிர்வாகம் செய-ன்மையுமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம். இருக்கின்ற மின் நிலையங்களை சரியாக பராமரித்தாலே போதும். சுப்ரீம் கோர்ட்டில் மின்சாரம் கேட்டு வழக்கு தொடுத்திருப்பது தேவையற்றது.
மூன்று மாதத்தில் சொன்னபடி மின்உற்பத்திக்கு தேவையான நடவடிக்கையை எடுக்கப்பட்டுவிட்டது என்று அதிமுக அரசு சொல்கிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ்,
அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நான் நிரூபிக்க தயார். அவர்கள் தயாரா? என்றார்.
மேலும் பேசிய ராமதாஸ், ஆசிரியர் தகுதி தேர்வில் குறைவான தேர்ச்சிக்கு காரணம், தரம் இல்லாத கல்வியே. அதை சரியான முறையில் ஒழுங்குப்படுத்த வேண்டும். இலங்கை விவகாரத்தில் பசுமை தாயகம் பொறுப்பாளர்கள் அருள், ஜி.கே.மணி ஆகியோர் ஐ.நா. மன்ற உறுப்பினர்களிடம் தங்கள் கோரிக்கைகளையும், வாதங்களையும் எடுத்து வைத்துள்ளனர். ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பாக்கிறோம். இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. குட்கா, பான்பராக் போன்ற போதைப்பொருட்களை 14 மாநிலங்களில் தடை செய்துள்ளனர்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: