Thursday, May 24, 2012
தாலிக்கு தங்கம் இலவசமாம்-ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி
விழுப்புரம்: தாலிக்கு தங்கத்தை இலவசமாகக் கொடுத்து ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் திருமண விழா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்ற நிகழ்ச்சிகளில் பேசிய அவர்,
வரும் சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. தனித்துப் போட்டியிட்டு 2016ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும். அதற்கு லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்.
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கூடிய விரைவில் இல்லாமல் போய் விடும். தமிழ்நாட்டை வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தான் ஆள வேண்டும்.திராவிட கட்சிகள் 46 ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி வருகின்றன.
தமிழ்நாட்டில் 3 கலாச்சாரங்கள் உள்ளது. ஒன்று சாராயம். இரண்டு சினிமா, மூன்று இலவசம். இலவசத்தால் தமிழக மக்கள் பிச்சைக்காரர்களாக மாறினார்கள். மக்கள் ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டருக்கு கையேந்தி நிற்கிறார்கள். தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும்.
தாலிக்கு தங்கத்தை இலவசமாகக் கொடுத்து ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெயலலிதா. கரும்பு டன் ஒன்றுக்கு ஜெயலலிதா அரசு ரூ 2,500 வழங்குவதாக கூறினார். ஆனால் இதுவரை வழங்கவில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

No comments:
Post a Comment