Tuesday, May 8, 2012

தென்னாப்ரிக்க அமைச்சர் படையாச்சி மரணம்: டாக்டர் ராமதாஸ் இரங்கல்

சென்னை : தென்னாப்பிரிக்க நாட்டு அமைச்சரான ராதாகிருஷ்ண லட்சுமண ராய் படையாச்சியின் மரணத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்க கேபினட் அமைச்சரும், வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவருமான ராதாகிருஷ்ண லட்சுமண ராய் படையாச்சி எத்தியோப்பியா நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடுமையான உடல்நலக் குறைவால் கடந்த 5-ந் தேதி சனிக்கிழமை காலமானார் என்ற செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், வேதனையும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். தமிழ்நாட்டினை பூர்வீகமாக கொண்ட ராய்படையாச்சி, தென்ஆப்ரிக்காவின் முன்னேற்றத்திற்காகவும், அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனிலும் அக்கறை கொண்ட ராய்படையாச்சி, அவர்களின் முன்னேற்றம் குறித்து என்னிடம் அடிக்கடி விவாதிப்பார். அவரது மறைவு தென்ஆப்ரிக்காவுக்கும், உலக தமிழ் மக்களுக்கும், வன்னிய சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: