Thursday, May 24, 2012

தாலிக்கு தங்கம் இலவசமாம்-ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி

விழுப்புரம்: தாலிக்கு தங்கத்தை இலவசமாகக் கொடுத்து ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் திருமண விழா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்ற நிகழ்ச்சிகளில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. தனித்துப் போட்டியிட்டு 2016ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும். அதற்கு லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கூடிய விரைவில் இல்லாமல் போய் விடும். தமிழ்நாட்டை வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தான் ஆள வேண்டும்.திராவிட கட்சிகள் 46 ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் 3 கலாச்சாரங்கள் உள்ளது. ஒன்று சாராயம். இரண்டு சினிமா, மூன்று இலவசம். இலவசத்தால் தமிழக மக்கள் பிச்சைக்காரர்களாக மாறினார்கள். மக்கள் ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டருக்கு கையேந்தி நிற்கிறார்கள். தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும். தாலிக்கு தங்கத்தை இலவசமாகக் கொடுத்து ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெயலலிதா. கரும்பு டன் ஒன்றுக்கு ஜெயலலிதா அரசு ரூ 2,500 வழங்குவதாக கூறினார். ஆனால் இதுவரை வழங்கவில்லை என்றார்.

Thursday, May 17, 2012

ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித் தர தமிழக தலைவர்கள் உறுதி ஏற்கணும்: ராமதாஸ்

சென்னை: தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தர தமிழக தலைவர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடலோரப் பகுதிகளில் மிகக் கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்ட இந்த நாள் (மே 18) உலக வரலாற்றில் துக்க நாள் ஆகும். இந்த நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம். அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொலைகாரன் ராஜபக்சே கொன்று குவித்து நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போதிலும் இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு இன்று வரை தண்டனை கிடைக்கவில்லை, இன்னுயிர் நீத்த தமிழர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தனித் தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்பாக 1999ம் ஆண்டில் கொசோவா நாட்டில் செய்யப்பட்டதை போன்று இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் உடனடியாக ஐ.நா.வின் நேரடி நிர்வாக வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சிங்களர்களும், சிங்களப்படைகளும் வெளியேற்றப்பட வேண்டும். தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி போராட தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலை நாளான இன்று உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., அரசின் ஓராண்டு ஆட்சியில் 500 கொலைகள்: 300க்கும் மேற்பட்ட கொள்ளைகள்: ராமதாஸ்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின் ஓராண்டு ஆட்சியில் 500 கொலைகள் நடந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட கொள்ளைகள் நடந்துள்ளன. மின் வெட்டு அதிகரித்துள்ளது. மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, 20 ஆயிரம் கோடி அளவிற்கு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்தார். புதுக்கோட்டை இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக., 75 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கிண்டலாக தெரிவித்தார்.

Wednesday, May 16, 2012

திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்ககோரி போராட்டம் நடத்துவோம் :ராமதாஸ்

திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்ககோரி போராட்டம் நடத்துவோம் :ராமதாஸ் வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’சமச்சீர் கல்வியால் எந்தவித பயனும் இல்லை. தமிழகத்தில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. பிரிகேஜி வகுப்பு கட்டணம் என்ஜினீயரிங் கல்லூரி கட்டணத்துக்கு இணையாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் பா.ம.க. போட்டியிடும் ஓட்டுக்கு ஒரு பைசா கூட கொடுக்கமாட்டோம். திராவிட இயக்கங்களுடன் கூட்டணி இல்லை. சாதிகட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். வருகிற 2016-ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்ககோரி 10 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவோம். வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்ககோரி வருகிற செப்டம்பர் மாதம் போராட்டம் நடைபெறும்’’ என்று கூறினார்.

Sunday, May 13, 2012

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்! டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் ஆணைப்படி தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பில் ஏராளமான குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்கும் மக்களின் சாதி பெயர்கள் சரியாக பதிவு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் போது சாதியின் பெயரை பதிவு செய்வதில் பல தவறுகள் நிகழ்கின்றன. ஒருவர் தனது சாதி பெயர் குடியானவர் என்று கூறினால் அதை அதிகாரிகள் அப்படியே பதிவு செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற உண்மையான விவரம் இந்த கணக்கெடுப்பின் மூலம் வெளிவராது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிருணயித்து அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கு பதிலாக, தமிழக அரசு தன்னிச்சையாக 69 சதவீதம் இட ஒதுக்கீடு தொடரும் என்று அறிவித்திருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயல் என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை எதிர்த்து எவரேனும் வழக்கு தொடர்ந்தால் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு பெறுவோரின் எண்ணிக்கையையும், இடஒதுக்கீட்டையும் நிருணயித்தீர்கள்? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அப்போது தமிழக அரசு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும். மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் சாதி கணக்கெடுப்பால் எந்த பயனும் ஏற்படாது என்ற நிலையில், 69 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து, அதை போக்குவதற்காக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதில் சாதிகளின் பெயர் சரியாக பதிவு செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசின் 'சாதிவாரி கணக்கெடுப்பு என்ற கண்துடைப்பு நாடகம்': ராமதாஸ்

சென்னை: 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தக் கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஆணைப்படி தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பில் ஏராளமான குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்கும் மக்களின் சாதி பெயர்கள் சரியாக பதிவு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் போது சாதியின் பெயரை பதிவு செய்வதில் பல தவறுகள் நிகழ்கின்றன. ஒருவர் தனது சாதி பெயர் குடியானவர் என்று கூறினால் அதை அதிகாரிகள் அப்படியே பதிவு செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற உண்மையான விவரம் இந்த கணக்கெடுப்பின் மூலம் வெளிவராது. கணக்கெடுப்பை மத்திய உள்துறை மூலமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, இப்போது கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது. இந்தக் கணக்கெடுப்பால் எந்தப் பயனும் இல்லை. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயித்து அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கு பதிலாக, தமிழக அரசு தன்னிச்சையாக 69 சதவீதம் இட ஒதுக்கீடு தொடரும் என்று அறிவித்திருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயல் என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை எதிர்த்து எவரேனும் வழக்கு தொடர்ந்தால் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு பெறுவோரின் எண்ணிக்கையையும், இடஒதுக்கீட்டையும் நிருணயித்தீர்கள்? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அப்போது தமிழக அரசு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு தமிழக அரசே கணக்கெடுப்பை நடத்தி ஜாதி பெயர்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். சமூக நீதியைக் காக்கும் இந்த முக்கிய கடமையை தமிழக அரசு உடனடியாகச் செய்து முடிக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

மக்கள் தொலைக்காட்சியின் விளையாடு வாகை சூடு!

கேம் ஷோக்கள் சீஸன் களைகட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த போட்டியில் மக்கள் தொலைக்காட்சியும் குதித்துவிட்டது. மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு பிற்பகல் 1 மணிக்கு ஒளி பரப்பாகும் புதிய நிகழ்ச்சி விளையாடு வாகை சூடு. மாநிலமே வெயிலிலும் வேர்வையிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியும் 1 நிமிட நேரத்துக்குள் முடிந்துவிடும். இந்த ஒரு நிமிடத்துக்குள் செய்து முடித்தால் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுவெளிகளில் வரும் பார்வையாளர்களே இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். வெற்றி பெறுவோருக்கு ஏகப்பட்ட பரிசுகளையும் தருகிறார்கள். சித்ரா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

Saturday, May 12, 2012

நான் மத்திய அமைச்சராக இருந்த போது..... :அன்புமணி ராமதாஸ் பேச்சு

தஞ்சை மாவட்ட பா.ம.க. மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலினின் இளைய சகோதரரும், ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலருமான பாலு என்கிற ம.க. பாலதண்டாயுதம்- உமாமகேஸ்வரி திருமண விழா விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இவ்விழாவில் அவர் பேசும்போது, ‘’இங்கு நடைபெறும் திருமணம் நமது வீட்டு திருமணம். பா.ம.க. மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் கட்சிக்காகவும், டாக்டர் ராமதாசுக்காகவும் 18 முறை சிறைசென்றவர். இங்கு நடைபெறுவது மாறுபட்ட சீர்திருத்த திருமணம் ஆகும். இதில் ஆசிர்வாதம் மட்டும் இருக்கும். இங்கு நடக்கும் திருமணத்தில் நானோ மற்ற கட்சி பிரமுகர்களோ தாலி எடுத்து கொடுக்க மாட்டோம். ஆனால் மணமக்களின் தாய்க்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி மணமக்களின் தாய்தான் தாலியை எடுத்து கொடுப்பதால் இது மாறுபட்ட சீர்திருத்த திருமணமாகும். பெண்கள் நாட்டின் கண்கள். பெண்கள் படித்தால் குடும்பமே படித்த மாதிரி. இத்திருமணம் எளிமையான திருமணம். மணமக்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். நான் மத்திய அமைச்சராக இருந்த போது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் கொண்டு வரப்பட்டது. அது உலக அளவில் பெரிய திட்டம் ஆகும். 108 ஆம்புலன்ஸ் திட்டம் அமெரிக்காவின் திட்டம் 911யை அடிப்படையாக கொண்டது. இந்தியாவில் 25 மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுகிறது. ஆம்புலன்சிலேயே பலருக்கு பிரசவம் ஆகிவிடு கிறது. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தோம். ரெயில்வே துறையில் அகலப்பாதை கொண்டு வந்ததும் பா.ம.க.தான். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இடு பொருட்கள் இலவசம். ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு டிராக்டர் இலவசம். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4ஆயிரம் கொடுக் கப்படும். மகாபலிபுரத்தில் வன்னியர் மாநாட்டில் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் செங்கல்பட்டிலிருந்து நடந்து வந்துள்ளனர். உணர்வின் அடிப்படையில் கலந்து கொண்டனர். வன்னியர் யாரும் உயர்பதவியில் இல்லை. வன்னியருக்கு 20சதவீதம் இட ஒதுக்கீடு செய்யவேண்டும். எல்லா சமுதாயத்துக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். வருகிற செப்டம்பர் 17-ந் தேதி போராட்டம் நடைபெற உள்ளது. அது பற்றி டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார். பசுமை தாயகம் சார்பில் பூம்புகாரில் மகளிர் மாநாடு நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். இதுவரை 25லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். ஆயிரம் ஏரி, குளங்களை தூர்வாரியுள்ளோம். 50தடுப் பணைகள் கட்டியுள்ளோம். ஒரு வருடத்துக்கு ஒரு மரமாவது நடவேண்டும்’’என்று கூறினார்.

அம்பேத்கர் கேலிச்சித்திரம்- மத்திய அமைச்சர் கபில்சிபல் பதவி விலக ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பாடத்திட்டத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கேலிச்சித்திரம் இடம்பெற்றதற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் பதவி விலக வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியை அம்பேத்கர் நத்தை வேகத்தில் செய்வதை போன்றும், அப்பணியை விரைவுபடுத்தும்படி அம்பேத்கரை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சாட்டையால் அடிப்பது போன்றும் அமைந்துள்ள கேலிச் சித்திரம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. அம்பேத்கரை அவமதிக்கும் பாடநூலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தியதை அடுத்து அந்த பாடநூல்கள் திரும்பப் பெறப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்திருக்கிறார். கபில்சிபல் பதவி ஏற்ற நாளிலிருந்தே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் அவமதிக்கும் வகையிலும் அவர்களின் நலனுக்கு எதிரான வகையிலும் செயல்பட்டு வருகிறார். இதன் உச்சக்கட்டமாகத்தான் அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இப்படி ஒரு செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான மத்திய அமைச்சர் கபில்சிபல் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த பாடநூலை தயாரித்தவர்கள் மீதும், வெளியிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, May 10, 2012

நியாயப்படியும், தர்மப்படியும் எங்களுக்குத்தான் சொந்தம் :ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’கடந்த 6 மாதங்களாக கடலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சமூக விரோத வன்முறை கும்பல் பா.ம.க.வினரை தாக்கி வருகின்றனர். இதுபற்றி பலமுறை போலீசாரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் அவர்களுடைய வீடுகள் மீது தொடர்ந்து தாக்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு இருந்தும் சமூக விரோத கும்பல்களை கட்டுப்படுத்த அவர்களால் ஏன் முடியவில்லை? இதில் என்ன தயக்கம்? இந்த பிரச்சினையில் பா.ம.க.வினரை சமாதானப்படுத்தி வருகிறேன். இனிமேலாவது சமூக விரோத கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் மேலும் தொடர்ந்து நடந்தால் அதன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைதி வழியில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். கடலூரில் உள்ள வன்னியர் சங்க அலுவலகம் சட்டப்படியும், நியாயப்படியும், தர்மப்படியும் எங்களுக்குத்தான் சொந்தம். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பா.ம.க. ஆதரவு உண்டு’’ என்று கூறினார்.

வெளிநடப்பு ஏன்? பாமக எம்எல்ஏ பதில்!

சட்டசபையில் இன்று (10/05/2012) கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார். இதற்கு சபாநாயகர் வேறொரு நாளில் இதுபற்றி பேச அனுமதி அளிப்பதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கலையரசு, கணேஷ் குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். சபையில் இருந்து வெளியேறிய பின்னர் கலையரசு நிருபர்களிடம் கூறும்போது, வேலூர் மாவட்டம் வேளாண்காடு கோவில் திருவிழாவில் டாஸ்மாக் கடை வைத்து மது விற்பனை செய்யப்படுகறது. இதுபற்றி பேச சபாநாயகர் அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

மண் மணம் கமழும் மக்கள் தொலைக்காட்சியின் பாரம்பரிய சமையல்!

தூதுவளை குழம்பு, மூலிகை பானம் என தமிழகத்தின் பாரம்பரிய சமையலை செய்து காட்டி மக்களை பழமைக்கு அழைத்துச் செல்கிறது மக்கள் தொலைக்காட்சி. இன்று பிட்சாவுக்கும், பர்கருக்கும், பதப்படுத்திய உணவுக்கும் தமிழன் பழகிவிட்டான். அதனால் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி வருகிறான். நோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. அதனால்தான் பண்டைய காலத்தில் உணவே மருந்து என்று கூறியுள்ளனர். இன்றைய சமையல் முறையில் அதிக எண்ணெய் ஊற்றி சத்தில்லாத உணவுகளே சமைக்கப்படுகின்றன. அவற்றை உண்பதன் மூலம் உடல்நலம்தான் கெடுகிறது. இதை கருத்தில் கொண்டே சராசரி சமையல் நிகழ்ச்சியை வழங்காமல் பாரம்பரியத்தை உணர்த்தும் சமையலை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது மக்கள் தொலைக்காட்சி. அழிந்து கொண்டு வரும் தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது இந்த பாரம்பரிய சமையல். உண்மையிலேயே ஒரு பெரிய வணக்கம் சொல்ல வைப்பதாக இந்த அருமையான நிகழ்ச்சி அமைந்துள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் தோறும் மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார். இதில் பண்டைய தமிழர்களின் சிறந்த உணவுவகைகளை சமைத்துக் காட்டுகிறார்கள் சித்தமருத்துவர்கள் கிருபாகரன் மற்றும் செந்தில் கருணாகரன். மேலும் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களின் மகத்துவத்தையும் விளக்கிக் கூறுகிறார்கள். சாப்பிட மறக்கறீங்களோ இல்லையோ, கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க மறக்காதீங்க...அவ்வளவு பயனுள்ள நிகழ்ச்சி இது.

Wednesday, May 9, 2012

ராமதாஸ் ஆதரவாளரை தாக்கிய வேலுமுருகன் ஆதரவாளர்கள்

ராமதாஸ் ஆதரவாளரை தாக்கிய வேலுமுருகன் ஆதரவாளர்கள் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகத்தின் மகன் ராமகிருஷ்ணனை, பாமகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்த வேல்முருகன் ஆதரவாளர்கள் தாக்கினார்கள். கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் பலத்த அடி பட்டதால் கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மருத்துவமனைக்கு சென்று பார்வையிடுகிறார்.

Tuesday, May 8, 2012

தென்னாப்ரிக்க அமைச்சர் படையாச்சி மரணம்: டாக்டர் ராமதாஸ் இரங்கல்

சென்னை : தென்னாப்பிரிக்க நாட்டு அமைச்சரான ராதாகிருஷ்ண லட்சுமண ராய் படையாச்சியின் மரணத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்க கேபினட் அமைச்சரும், வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவருமான ராதாகிருஷ்ண லட்சுமண ராய் படையாச்சி எத்தியோப்பியா நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடுமையான உடல்நலக் குறைவால் கடந்த 5-ந் தேதி சனிக்கிழமை காலமானார் என்ற செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், வேதனையும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். தமிழ்நாட்டினை பூர்வீகமாக கொண்ட ராய்படையாச்சி, தென்ஆப்ரிக்காவின் முன்னேற்றத்திற்காகவும், அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனிலும் அக்கறை கொண்ட ராய்படையாச்சி, அவர்களின் முன்னேற்றம் குறித்து என்னிடம் அடிக்கடி விவாதிப்பார். அவரது மறைவு தென்ஆப்ரிக்காவுக்கும், உலக தமிழ் மக்களுக்கும், வன்னிய சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Monday, May 7, 2012

பாமக எதிர்ப்பு எதிரொலி: விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்

சென்னை: பாமகவின் அமைப்பான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு காரணமாக துப்பாக்கி படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. துப்பாக்கி படத்தில் விஜய் ஸ்டைலாக புகைபிடிப்பது போல சென்னை நகர் எங்கும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. பசுமை தாயகம் அமைப்பு மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியது. நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்றும், அதையும் மீறி இவை ஒட்டப்பட்டு உள்ளது என்றும் அந்த அமைப்பு தன் கடிதத்தில் குற்றம்சாட்டியது. முகப்ரேரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகை பிடிக்கும் போஸ்டர்களை அகற்றும்படி புகார் அளித்தார். "புகை பிடிப்பதால் இளைஞர் சமுதாயத்தினர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரபல நடிகர்களின் புகைபிடிக்கும் போஸ்டர்கள் அவர்களை தவறாக வழி நடத்தும்", என்றும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார். ஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை நீக்கமாட்டேன் என இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்தார். ஆனால் இப்போது நீக்கிவிட சம்மதித்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், "விஜய் புகைபிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று புகை பிடிக்கும் சீன்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியை மட்டும் போட்டோ ஷூட்டில் எடுத்தோம். அதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த மாட்டோம்," என்றார்.

Sunday, May 6, 2012

PMK: The mango and its roots!

Thanks to NDTV: http://www.ndtv.com/article/south/pmk-the-mango-its-roots-206812?pfrom=home-simplysouth Mahabalipuram: The PMK, which has been in the political wilderness for a while, put up a show of strength at its Vanniyar Youth Festival in the tourist hotspot of Mahabalipuram in Tamil Nadu. The party of former Union Health Minister Dr Anbumani Ramadoss managed to rustle up a crowd of a few lakh Vanniyar youth as a sort of an answer to Vijayakanth's DMDK party that eroded its vote base in both the 2009 Lok Sabha Poll, where Mr Ramadoss' party drew a blank, and the 2011 Assembly elections where it managed to win just three out of the 30 seats it had wrested from the DMK-led alliance in the state. Although the PMK had, all along, insisted that it was not a party meant only for the Vanniyars - a powerful community of traders concentrated in the northern belt of the Tamil Nadu - recent electoral setbacks have forced it to go back to its traditional vote base. At the Mahabalipuram gathering, party founder Dr S Ramadoss played to the Vanniyar gallery by reviving old demands in a new meet! Reservation for the Vanniyar youth in education and employment, a series of protests between July and August, a fair caste-based census and its pet prohibition call were the resolutions passed. For more than a decade, the father-son doctor duo seemed to have had their finger on the pulse of winning alliances; moving from one coalition to another, earning the party the nickname of 'fence sitter'. But smarting from what the party called "shabby treatment" by the two Dravidian juggernauts, the PMK recently vowed to maintain a safe distance from both the AIADMK and the DMK. Does that ring a bell? That's just the sort of detached innings 'Captain' Vijayakanth set out to play when he launched the DMDK. But the actor-politician, who calls himself the 'Black MGR', realised his bread would be buttered by being in an alliance. Winning 29 seats in the assembly, many felt, was possible only because his party rode on the massive Jayalalithaa wave that swept Tamil Nadu last year. The feat catapulted the action hero as the Opposition Leader; a role that soon made him a "villain" in the eyes of the ruling party and landed the DMDK out of the AIADMK-led alliance! Back to the PMK. These are tough times for Ramdoss & Co. The top brass is now mired in a criminal case in Tamil Nadu. Mr Ramadoss too has been recently chargesheeted by the Central Bureau of Investigation (CBI) in an Indore Medical College scam. However, in the state, you just cannot write off any party. The PMK may not have won many seats but it does have its vote share among the Vanniyars; not to forget women voters who identify with its anti-alcohol crusade which could tilt the scales in any close contest. One reason why the party, whose election symbol is the mango, is moving back to its roots. On the sidelines, there are soft targets like actor Vijay, whose film posters showing him smoking are enough to stay in the news.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்கலைன்னா...சிறைகள் நிரம்பும்: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவில் அவர் பேசியதாவது: வன்னியர் பரம்பரை நாடாண்ட பரம்பரை. மீண்டும் நாம் நாட்டை ஆளவேண்டும். இலவசங்களை கொடுத்து நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். 45 ஆண்டுகளாக ஆட்சியை நடத்திய இவர்களுக்கு ஆள தகுதி இல்லை. இடஒதுக்கீடு போராட்டம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்து உள்ளது. அப்படியொரு போராட்டத்தை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தினால் தமிழகம் தாங்குமா? எங்கள் இளைஞர்கள் போராட தயாராக இருக்கிறார்கள். அவர்களை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது. தமிழக சிறைகளை நிரப்ப லட்சக்கணக்கான பாட்டாளி இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் சிறை செல்ல தயங்க மாட்டோம். நானும் ஒரு வருடம் சிறையில் இருக்க தயார். ஆகவே போராட்டம் அறிவிப்பதற்கு முன்னதாக வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அறிவியுங்கள். எந்த மாதிரியான போராட்டம்? எப்படி அந்த போராட்டத்தை நடத்துவோம் என்பதை விரைவில்அறிவிப்போம் என்றார் அவர். தீர்மானங்கள் முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: - தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் - மத்திய அரசில் வன்னியர்களுக்கு 2 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். - சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதில் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பை தற்போது நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. இது உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல. இதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது. - தமிழ்நாட்டில் 69 விழுக்காட்டை இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.7.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது. ஆகையால் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். - தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை படிப்படியாக குறைத்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட

தமிழகம் தாங்குமா? என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது : ராமதாஸ் எச்சரிக்கை

மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுப்பதற்காக வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், * தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல் முதலியார், முக்குலத்தோர், கொங்கு வேளாளர், நாடார், நாயுடு, யாதவர், செட்டியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. மத்திய அரசில் வன்னியர்களுக்கு 2 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். * மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதில் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பை தற்போது நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. இது உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல. இதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.7.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது. எனவே தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் சிற்றூர் நிர்வாக அதிகாரிகளை கொண்டு குறைந்த செலவில் மிக குறுகிய காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். * மது விற்பனையால் அரசின் வருமானம் அதிகரித் தாலும், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழிவதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை படிப்படியாக குறைத்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது’’ என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் ராமதாஸ், ’’வன்னியர் பரம்பரை நாடாண்ட பரம்பரை. மீண்டும் நாம் நாட்டை ஆளவேண்டும். இப்போது இலவசங்களை கொடுத்து நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். 45 ஆண்டுகளாக ஆட்சியை நடத்திய இவர்களுக்கு ஆள தகுதி இல்லை. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்து உள்ளது. அப்படியொரு போராட்டத்தை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தினால் தமிழகம் தாங்குமா? எங்கள் இளைஞர்கள் போராட தயாராக இருக்கிறார்கள். அவர்களை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது. தமிழக சிறைகளை நிரப்ப லட்சக்கணக்கான பாட்டாளி இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் சிறை செல்ல தயங்க மாட்டோம். நானும் ஒரு வருடம் சிறையில் இருக்க தயார். ஆகவே நாங்கள் போராட்டம் அறிவிப்பதற்கு முன்னதாக வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அறிவியுங்கள். அல்லது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எந்த மாதிரியான போராட்டம்? எப்படி அந்த போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவிப்போம்’’ என்று பேசினார்

Saturday, May 5, 2012

துப்பாக்கியில் தம்மடிக்கும் விஜய் மீது நடவடிக்கை - பசுமைத் தாயகம் வலியுறுத்தல்!

சென்னை: மத்திய அரசின் சட்ட விதிகளை மீறி துப்பாக்கி திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பசுமைத்தாயகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: 'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. `துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர். எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.

Tuesday, May 1, 2012

சித்திரை முழு நிலவு நாளில் விடியலை நோக்கி.. மாமல்லபுரம் வாருங்கள்: ராமதாஸ்

சென்னை: சித்திரை முழு நிலவு நாளான மே 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னிய இளைஞர் விழாவில் கலந்து கொள்ளுமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நாள் என்றால் அது சித்திரை முழு நிலவு நாள்தான். வன்னியர் சங்கத்தின் சார்பில் வருகிற 5ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெறவுள்ளது. வெற்றியைப் பெறவும், ஆட்சியை கைப்பற்றவும் தேவையான அனைத்து தகுதிகளும் நம்மிடம் இருந்த போதிலும் அவற்றை இணைத்து ஒருமுகப்படுத்துவதற்கான ஒற்றுமை என்ற பிணைப்பு இல்லாததால்தான் நாம் இன்னும் ஆளப்படுபவர்களாகவே இருக்கிறோம். இனியாவது ஓரணியில் கைகோர்த்து ஆட்சி என்ற இலக்கை எட்டிபிடிக்க வேண்டும். ஏற்றிவிடும் ஏணியாகவும் பின்னர் எட்டி உதைக்கப்படும் ஏணியாகவும் இருந்து ஏமாந்து வரும் நாம் இனியாவது ஓரணியில் கைகோர்த்து ஆட்சி என்ற இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி, புதிய அரசியல், புதிய நம்பிக்கையுடன் நடைபோடுவதற்கான பாதையை வகுப்பதற்காகவே மே 5ம் தேதி சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரத்தில் நாம் கூடுகிறோம். 25 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் இந்த பெருவிழாவில் ஒவ்வொரு பாட்டாளி குடும்பத்தில் இருந்தும் ஓர் இளைஞன் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். இது கூடிக் கலையும் விழா அல்ல. வறுமை, அறியாமை, அதிகாரமின்மை, உள்ளிட்ட இருளில் சிக்கித் தவிக்கும் நமது சமுதாயத்தை சித்திரை முழு நிலவு நாளில் விடியலை நோக்கி அழைத்து செல்வதற்கான வியூகங்களை வகுக்கும் திருவிழா. சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக நமக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் வீரநடை போடுவதற்கு இந்த விழா சிறந்த வாய்ப்பாகும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழும் பாட்டாளி பெருமக்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். ஓட்டு போடுகிற, கொடி பிடிக்கிற, கோஷம் போடுகிற, இலவசங்களுக்கு கையேந்துகின்ற சாதியாக மாற்றியது மட்டுமின்றி, திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வன்னியர்களை வாழ வைப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவும் அதற்கான சூளுரையை ஏற்கவும் கூடுவோம் மாமல்லபுரத்தில் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: