Tuesday, June 22, 2010

பாமக-விடுதலை சிறுத்தை இணைந்து பாடுபடும்: ராமதாஸ்

வேலூர்: ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பாமகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து பாடுபடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வேலூரை அருகே பொய்கையில் திருமண மண்டப திறப்பு விழாவில் அவர் பேசுகையில்,

வட ஆற்காடு மாவட்டத்தில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் ஒடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு அடிமைகளாக உள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாடுபடுவதுதான் நோக்கம்.

வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலை கழிவுகளால் மண் கெட்டுவிட்டது. இந்தியாவில் கருப்பு மாவட்டம் என்ற அவப்பெயரை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதை சரி செய்ய எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.

ஒடுக்கப்பட்ட சமுதாயங்களாக உள்ள தலித் மக்களையும் வன்னிய மக்களையும் இந்த அளவுக்கு ஒடுக்கி வைத்தது யார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனது தம்பி திருமாவளவனின் சகோதரர்களும் இங்கு வந்திருக்கின்றனர். உழைக்கும் கரங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக நானும், திருமாவளவனும் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் உழைத்தால்தான் மற்ற சமுதாய மக்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் ஒடுக்கப்பட்ட இந்த இரு சமுதாய மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

ஆதிக்க சக்திகள் தொடர்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமா? நம்மை இழிவுப்படுத்துவதை தொடர்ந்து தாங்க வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பாமகவும்- விடுதலை சிறுத்தையும் இணைந்து பாடுபடும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: