Tuesday, June 15, 2010

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

திருக்கோவிலூர்: பாமகவைப் போல வேறு எந்தக் கட்சி யிலாவது உயர்ந்த கொள்கை இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டு பாமகவையே கலைத்து விடவும் நான் தயார் என்றப அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

முகையூர் பாமக எம்.எல்.ஏ. கலிவரதன் மகள் திருமண விழாவில் ராமதாஸ் பேசுகையில்,

பெரியாரின் புரட்சியால் நீதிக்கட்சி உருவான காலத்தில் வகுப்புவாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. பின்பு, காமராஜரும், பெரியாரும் சேர்ந்து அடிதட்டில் வாழும் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர். பெரியாரின் இத்தகைய போராட்டத்தால் எல்லா சமுதாயத்தினருக்கும் இன்றைக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், இது போதாது.

இங்கு நடைபெற்ற கலப்புத் திருமணத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஜாதியை நாங்கள் மறந்துவிட்டோம், ஜாதி ஞாபகமே வரவில்லை என்ற நிலைமை வரும்பட்சத்தில், ஜாதியை முதலில் மறப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள்.

பாமக கொள்கை மாதிரி வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்தக் கொள்கைகள் இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் நான் முதலில் சேருவதுடன், பாமகவையே கலைத்து விடவும் தயாராக உள்ளேன்.

சமூக நீதிக்காகவும், சமூக-பொருளாதார மாற்றங்களுக்காகவும், அரசியல் , பண்பாடு ஆகியவற்றுக்காகவும் உரக்க குரலெழுப்புவதற்கு பாமகவைவிட சிறந்த கட்சி வேறு எதுவும் இல்லை என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: