Tuesday, June 8, 2010

திமுக கூட்டணி: பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் மீண்டும் ஆலோசனை

சென்னை: திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தனது கட்சியின் நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறி்த்து கடந்த ஒரு வாரத்தில் 2 முறை நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிவிட்டார் ராமதாஸ்.

நிர்வாகிகள் ஆலோசனை நடத்திவிட்டு திமுக தலைமையை சந்தித்துவிட்டு வருவது, மீண்டும் கூட்டம் நடத்தி ஆலோசித்துவிட்டு திமுக தலைமையை சந்தித்துவிட்டு வருவது என்று போய்க் கொண்டு்ள்ளது பாமகவின் பயணம்.

இந் நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய பாமக குழு நிருபர்களிடம் பேசுகையில், முதல்வரிடம் சில தகவல்களை பேசியிருக்கிறோம். அவர் கூறியதை டாக்டர் ராமதாசிடம் சொல்வோம். இறுதி முடிவை அவர் அறிவிப்பார் என்றார்.

இதையடுத்து நிருபர்களை சந்தித்து முதல்வர் கருணாநிதி, கூட்டணி குறித்த இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று உங்களிடத்திலே அவர்கள் (பாமக குழு) சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். எங்கள் கட்சியிலும் அதைப் போல கழக முன்னணியினரோடு விவாதித்து எடுக்கின்ற இறுதி முடிவினை நான் வெளியிடுவேன் என்பதை அவர்களிடத்திலே சொல்லியிருக்கிறேன் என்றார்.

இந் நிலையில் கூட்டணி விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் பாமக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் ராமதாஸ் கூட்டினார்.

சென்னை ஸ்டார் சிட்டி ஹோட்டலில் நடந்த இக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு, மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி வருகிற 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி 21ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து 10ம் ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் டாக்டர் ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: