Monday, April 4, 2016

முதலமைச்சர் வேட்பாளர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை: அன்புமணி





பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பாமக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து 10 நாட்களாகியும், இதுவரை அவர் எதுவும் பேசவில்லை. பேசாதது ஏன். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. 

என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பின்னர், மறுநாள் இரண்டு மணி நேரம் செய்தியாளர்களை சந்தித்தேன். ஒவ்வொரு மாவட்டமாக மக்களை சந்தித்தேன். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இவ்வாறு கூறினார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: