Monday, April 7, 2014

அ.தி.மு.க. ஆட்சியில் மது விற்பனையை தவிர எந்த வளர்ச்சியும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை; அன்புமணி குற்றச்சாட்டு



ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசமூர்த்தி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் வேனில் நின்றபடி ஆதரவு கேட்டு வாக்குகள் சேகரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தற்போது நரேந்திர மோடிதான் பிரதமர் ஆக வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. காரணம் நரேந்திர மோடி கடந்த 15 ஆண்டுகாலமாக குஜராத் மாநிலத்தின் முதல்–மந்திரியாக இருந்து அந்த மாநிலத்தை முதன்மை மாநிலமாக ஆக்கி உள்ளார். எனவே அவர் நிச்சயமாக இந்தியாவின் பிரதமர் ஆகி நேர்மையான, நிலையான, திறமையான ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது. கடந்த 47 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை மாறி மாறி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் ஆண்டதுபோதும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்றபோது என் மீது சில கோழைகள் கல் வீசி தாக்கினார்கள். இந்த வன்முறை செயலுக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தான் காரணம்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்சார தட்டுப்பாடு நீங்கும் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகியும் மின்சார தட்டுப்பாடு நீங்கவில்லை. மாறாக மின்சாரமே இல்லை என்கிற அளவுக்கு தமிழ்நாட்டின் நிலை உள்ளது. ஆனால் தற்போது அமைதி, வளம், வளர்ச்சி என்று கூறி ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் வறட்சிதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி மின்சாரத்துக்கும் தடை ஏற்பட்டு உள்ளது.
வளர்ச்சி என்கிறார்கள். எந்தவித வளர்ச்சியும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. ஆனால் மது விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை நடந்து உள்ளது. இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டு மக்களை குடிகாரர்களாக ஆக்கி கொண்டிருக்கிறது இந்த ஆட்சி.
இந்த விற்பனையில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் உங்களுக்கு இலவச பொருட்கள் தருகிறார்கள். இந்த இலவசங்கள் நமக்கு தேவையா?. டி.வி வெடிக்கிறது. மிக்சி ஓடவில்லை. கிரைண்டரை தொட்டால் ‘ஷாக்‘ அடிக்கிறது. மின்விசிறி ஓடுகிறது. ஆனால் காற்றுத்தான் வரவில்லை. இந்த பக்கம் பெண்களுக்கு ½ பவுன் தாலியை கொடுத்து விட்டு. அந்தப்பக்கம் மதுவை கொடுத்து அவர்களுடைய தாலியை அறுக்கிறார்கள். எனவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் மதுக்கடைகளை கண்டிப்பாக மூட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அன்புமணி கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: