பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக
மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன் வளங்களை கொள்ளையடிப்பதாக
ராஜபக்சே குற்றம்சாட்டியது கண்டிக்கத்தக்கது. சர்வதேச கடல் சட்டப்படி
தமிழக மீனவர்களை கைது செய்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கும் நோக்குடன்
இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார். இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்தியா
கண்டனம் தெரிவிப்பதுடன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment