Monday, January 11, 2010

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு-பாமக கோரிக்கை

சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அதற்காக தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்டசபையில் பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி,

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கும் வகையில் இந்த அரசு செயல்பட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருப்பது போல தொகுப்பு முறையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

இஸ்லாமியர், அருந்ததியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது போல வன்னியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பல்வேறு ஜாதி சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குறிச்சன், குடும்பன் என்ற இனத்தவருக்கு பழங்குடி மக்களுக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.

மாநில சுயாட்சி பெறுவதற்கும் மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரங்களை பெறுவதற்கும் தமிழக அரசு என்ன முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ராமநாதபுரம் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றியது போல, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

ஆளுநர் உரையில் தமிழக வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ ஏதும் சொல்லப்படவில்லை என்றார் மணி.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: