Thursday, June 28, 2012
பாமக துணை தலைவராக கே.என். சேகர் நியமனம்
பா.ம.க. மாநில துணை தலைவராக அம்பத்தூர் கே.என். சேகரை அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
பாமகவில் கே.என்.சேகர் ஏற்கனவே ஒன்றிய செயலாளர். 10 ஆண்டுகள் திருவள்ளூர் மாவட்ட செயலாளர், அம்பத்தூர் நகரசபை தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த தேர்தலில் கும்மிடிப்பூண்டியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
Wednesday, June 27, 2012
ரணவக்கவும் ராஜபக்சேவும் மன்னிப்பு கேட்க வேண்டும் : ராமதாஸ்
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை மின்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இலங்கையில் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழீழத்துக்காக
இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுதான் ஏற்படும். தமிழீழம்
அமைக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கக் கூடாது. அவர்களின்
விருப்பங்கள் நிறைவேறாது எனக் கூறியுள்ளார்.
இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். இதை தமிழக தலைவர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்.
இந்தியா
கண்டனம் தெரிவிக்காததால்தான் தமிழக தலைவர்களை எப்படி வேண்டுமானாலும்
விமர்சிக்கலாம் என்ற துணிச்சல் சிங்களர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதை இனியும் அனுமதிக்கக்கூடாது. சம்பிக்க ரணவக்கவும் அவரது அரசியல் குருவான ராஜபட்சவும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதை இனியும் அனுமதிக்கக்கூடாது. சம்பிக்க ரணவக்கவும் அவரது அரசியல் குருவான ராஜபட்சவும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவு ஏற்படும் என்று கொழும்பு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மூலம் இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Tuesday, June 26, 2012
டாஸ்மாக் என்பதற்கு எண்ணற்ற அர்த்தங்கள்! ராமதாஸ் விளக்கம்!
பாமக மாநில செயற்குழு கூட்டம் கென்னை பெரம்பூர் வியாசர்பாடியில் உள்ள ஜானகி
மகால் அரங்கில் இன்று (26.06.2012) நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ்
முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் கோ.க.மணி தலைமை
ஏற்றார்.
டாஸ்மாக் - அகால மரணம்
டாஸ்மாக் - 60 வகை நோய்கள்
டாஸ்மாக் - மானம் இழப்பு
டாஸ்மாக் - ஏழ்மை
டாஸ்மாக் - கல்லாமை
டாஸ்மாக் - சாலை விபத்து
டாஸ்மாக் - ஆண்மை குறைதல்
டாஸ்மாக் - குற்றங்களுக்கு எல்லாம் தாய்
டாஸ்மாக் - இளம் கைம்பெண்களை உருவாக்கும் அரக்கன்
இவ்வாறாக மதுவின் தீமைகளையும், அதனால் ஏழைக்குடும்பங்களுக்கு ஏற்படும் வலிகளையும் பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். குடியும் போதையும் சாத்தானின் இரு ஆயுதங்கள் என்றார் மகாத்மா காந்தி. மதுவிலக்கு சட்டம் அவசியம் தேவை. குடிகாரர்கள் மலிந்த நமது நாட்டில் சட்டம், காவல்துறை ஆகியவற்றின் துணைக்கொண்டு கட்டாயப்படுத்தியாவது மக்களை மதுவின் பிடியில் இருந்து மீட்டாக வேண்டும் என்று அண்ணா கூறினார்.
உலகில் எந்த ஒரு அரசும் தன் சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்வதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் சாராயத்தை கொடுத்து கொலை செய்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மதுவிற்பனையை பெருக்குவதில் காட்டிய ஆர்வத்தை மின் திட்டங்களை செயல்படுத்துவதில் திராவிடக் கட்சிகள் காட்டியிருந்தால் தமிழகத்தில் இப்படியொரு மோசமான மின்வெட்டு ஏற்பட்டிருக்காது.
கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், டாஸ்மாக் என்பதற்கு தமிழக அரசின்
அகராதியில் மதுக்கடைகளை நடத்தும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் என்று
பொருள். ஆனால் நடைமுறையில் டாஸ்மாக் என்பதற்கு எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு:
அவற்றின் விவரம் வருமாறு:
டாஸ்மாக் - அகால மரணம்
டாஸ்மாக் - 60 வகை நோய்கள்
டாஸ்மாக் - மானம் இழப்பு
டாஸ்மாக் - ஏழ்மை
டாஸ்மாக் - கல்லாமை
டாஸ்மாக் - சாலை விபத்து
டாஸ்மாக் - ஆண்மை குறைதல்
டாஸ்மாக் - குற்றங்களுக்கு எல்லாம் தாய்
டாஸ்மாக் - இளம் கைம்பெண்களை உருவாக்கும் அரக்கன்
இவ்வாறாக மதுவின் தீமைகளையும், அதனால் ஏழைக்குடும்பங்களுக்கு ஏற்படும் வலிகளையும் பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். குடியும் போதையும் சாத்தானின் இரு ஆயுதங்கள் என்றார் மகாத்மா காந்தி. மதுவிலக்கு சட்டம் அவசியம் தேவை. குடிகாரர்கள் மலிந்த நமது நாட்டில் சட்டம், காவல்துறை ஆகியவற்றின் துணைக்கொண்டு கட்டாயப்படுத்தியாவது மக்களை மதுவின் பிடியில் இருந்து மீட்டாக வேண்டும் என்று அண்ணா கூறினார்.
உலகில் எந்த ஒரு அரசும் தன் சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்வதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் சாராயத்தை கொடுத்து கொலை செய்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மதுவிற்பனையை பெருக்குவதில் காட்டிய ஆர்வத்தை மின் திட்டங்களை செயல்படுத்துவதில் திராவிடக் கட்சிகள் காட்டியிருந்தால் தமிழகத்தில் இப்படியொரு மோசமான மின்வெட்டு ஏற்பட்டிருக்காது.
Sunday, June 24, 2012
தமிழகத்தில் 2016ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியில் அமரும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டையில் திருத்தணி தொகுதி பா.ம.க. இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இங்கு வன்னியர்கள் அதிக அளவில் வசித்தபோதும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சராக வந்தது இல்லை. 2016ல் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். அப்போது மதுவிலக்கு பைலில் முதல் கையெழுத்து போடப்படும்.
பா.ம.க.வினர் இனி கிராமங்கள் தோறும் சென்று அங்கு உள்ள மக்களிடம் கலந்து பேசி அவர்களை பா.ம.க.விற்கு வாக்களிக்கும் படி செய்ய வேண்டும். கிராமங்களில் இரவு தங்கி அந்த மக்களோடு உணவு அருந்தி அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
சென்னையில் ராமதாஸ் தலைமையில் நாளை பாமக மாநில செயற்குழு கூட்டம்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் நாளை(26ம் தேதி) சென்னை வியாசர்பாடியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் சென்னை பெரம்பூர் வியாசர்பாடி அம்பேத்கார் கலைக்கல்லூரி அருகில் உள்ள ஜானகி மஹால் அரங்கில் ஜூன் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார். பாமக தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகிக்கிறார். பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி குறித்தும், பிற முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் முருகானந்தம் கொலை வழக்கில் கடந்த சில நாட்களாக அதிவேகம் காட்டி வரும் சிபிஐ, பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜ் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை கைது செய்தது. இதனால் இந்த கூட்டத்தில் (திமுக பாணியில்- கனிமொழி கைது விவகாரம்) சிபிஐக்கு கண்டனம் தெரிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஜூன் 26ல் பாமக மாநில செயற்குழு கூட்டம்
|
|
பாமக மாநில தலைமை
செயற்குழு கூட்டம் சென்னை பெரம்புர் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி
அருகில் உள்ள ஜானகி மகால் அரங்கில் வரும் 26.06.2012 செவ்வாக்கிழமை காலை 10
மணிக்கு நடைபெறவுள்ளது.
இச்செயற்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகிக்கிறார். பாமக தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கிறார். பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் பாமக பாமக முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
பாமக வளர்சசி குறித்தும், பிற முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
பாமக ஜூலை 9-ல் போராட்டம் : ராமதாஸ் அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில்
அரக்கோணம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக வேளாண் நிலங்களை
கையகப்படுத்த தமிழக அரசு முடிவுசெய்திருப்பதைக் கண்டித்து பாமக சார்பில்
ஜூலை 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்
வெளியிட்ட அறிக்கையில், ஏழை விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அவர்களின்
வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரக்கோணம் பகுதியில் சிப்காட்
தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட
வேண்டும்.
இல்லாவிட்டால்
அரக்கோணத்தை அடுத்த சாலை என்ற இடத்தில் ஜூலை 9-ம் தேதி விவசாயி களை திரட்டி
தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்துக்கு நானே தலைமை
ஏற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited: