உளுந்தூர்பேட்டை: நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை
பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்பு வரை
நான் ஜாதி வெறியன் தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் நடந்த பாமக பிரமுகர் இல்லத் திருமண
விழாவில் பேசிய அவர்,
நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து,
வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்பு வரை நான் ஜாதி வெறியன்
தான். என் மக்கள் முன்னேற வேண்டும், படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும். 3
வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான்.
மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னியர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும்
பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள்.
நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள்.
நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று
கேட்கிறார்கள். நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை
பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும் போது யாரையாவது துணைக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு
மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள்.
இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நமக்கு நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன்
மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.
ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக
இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள்
கொடி பறக்க வேண்டும்.
2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11
சட்டமன்ற தொகுதிகளிலும் அப்படியே வெற்றி பெறுவோம். எல்லோரும் விழிப்பாக இருங்கள்
சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள் என்றார்.
Thursday, December 6, 2012
என் மக்கள் முன்னேற வேண்டும், படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும்.
காவிரி: இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும்-ராமதாஸ்:
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக,
சம்பா பயிர்களை காப்பதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச
நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க கர்நாடக அரசு மறுத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை
எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய போவதாகவும் கர்நாடகம் கூறியிருக்கிறது.
தேசிய ஒமைப்பாட்டுக்கு எதிரான கர்நாடகத்தின் இத்தகைய செயல்கள் கடுமையாக
கண்டிக்கத்தக்கவை.
தமிழகத்தில் சம்பா பயிர்களைப் காக்க 60 டிஎம்.சி தண்ணீர் தேவைப்படும் நிலையில்,
அதில் இருப்பதில் ஒரு பங்கை மட்டும் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது யானைப்
பசிக்கு சோளப்பொரியாக அமைந்திக்கிறது. அதுமட்டுமின்றி, இனி திறந்துவிடப்பட வேண்டிய
தண்ணீரின் அளவை காவிரி கண்காணிப்புக் குழுவின் மூலம் தான் தீர்மாணிக்க வேண்டும்
என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதும்
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
டிசம்பர் மாதத்திற்கு சுமார் 5 டி.எம். ஜனவரி மாதத்திற்கு சுமார் 1.25 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கண்காணிப்புக் குழு ஆணையிட முடியும். ஏற்கனவே உள்ள நிலுவை தண்ணீரை திறந்துவிடும்படி ஆணையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என கண்காணிப்புக் குழு ஏற்கனவே கூறியிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்திற்கு சிறிதளவு மட்டும் தண்ணீரை கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்ற கர்நாடகத்தின் திட்டத்திற்கு உச்சநீ திமன்றம் தெரிந்தோ, தெரியாமலோ துணை போயிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவ்வளவு குறைகள் இருக்கும் போதிலும், இதைக்கூட நிறைவேற்ற முடியாது என கர்நாடகம் கூறியிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் விடப்பட்ட சவால் ஆகும்.
பிரதமர், காவிரி கண்காணிப்புக் குழு, உச்ச நீதிமன்றம் என எந்த ஒரு அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பையும் கர்நாடக அரசு மதிக்காததையும், அதை மத்திய அரசு கண்டிக்காததையும் பார்க்கும் போது, இந்தியாவின் ஆளுகைக்குள் கர்நாடகம் இருக்கிறதா அல்லது கர்நாடகத்தின் ஆளுகைக்குள் இந்தியா இக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. இந்தபோக்கு தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால், இந்திய அரசியல் சட்ட பிரிவு 356 அல்லது 365 ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி கர்நாடகம் மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப் படுவதை உறுதி செய்யவேண்டும்; இதன்மூலம் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Wednesday, December 5, 2012
தர்மபுரி கலவரத்திற்கு பாமக, வன்னியர் சங்கம் காரணம் அல்ல: ஜி.கே. மணி
ஈரோடு: தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு பாமகவும், வன்னியர் சங்கமும் காரணம்
அல்ல. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள 142 பேரில் பலர் திமுக,
தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பாமக தலைவர் ஜி.கே மணி
தெரிவித்துள்ளார்.
பாமக ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வரை சந்தித்து பேசியும் தண்ணீர் தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு பாமகவும், வன்னியர் சங்கமும் காரணம் அல்ல. அந்த கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று சிலர் குற்றம் கூறி வருகிறார்கள். அது தவறான கருத்து.
அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள 142 பேரில் பலர் திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதில் 14 கல்லூரி மாணவர்களும் அடக்கம்.
காதல் திருமணங்களுக்கு பாமக எதிரான கட்சி அல்ல. ஆனால் காதல் என்ற பெயரில் பெண்களை கடத்தி பணம் பறிப்பது, அப்பாவி பெண்களை ஏமாற்றுவதைத் தான் கண்டிக்கிறோம்.
எங்கள் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் திருமாவளவன், வீரமணி போன்றவர்களை எங்களுக்கு எதிராக சிலர் பேச விட்டு பாமகவை அசிங்கப்படுத்தப் பார்க்கிறார்கள். அதனால் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது என்றார்.

Sunday, December 2, 2012
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத்தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்:7தீர்மானங்கள்
தலித் பகுதிகளின் வழியாகச் செல்லும் தலித் அல்லாத பெண்கள், மாணவிகள் சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களை அப்பகுதி இளைஞர்கள் அறுவறுக்கத்தக்க வகையில் ஈவ்-டீசிங் செய்வதால் பலரும் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலை உள்ளது; அவர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்பன உள்ளிட்ட பாமக நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்த தீர்மான விவரம்:
தீர்மானம் 1: எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்
அனைத்து சமுதாய மக்களும் சம உரிமையுடனும், சம மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், கருத்தும் ஆகும். சாதியின் பெயராலோ அல்லது மதத்தின் பெயராலோ பாகுபாடு காட்டப்படுவதை எவரும் விரும்பவில்லை. குறிப்பாக காலங்காலமாக ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேனறவேண்டும் என்பதுதான் அனைத்து சமுதாயத்தினரின் விருப்பமாகும். இந்தத் துறைகளில் அவர்கள் முன்னேனறி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல், தமிழகத்தின் எந்தப்பகுதிகளிலும் தீண்டாமை என்பது எந்த வடிவத்திலும் நிலவக்கூடாது; மனதளவில் கூட தீண்டாமையை எவரும் கடைபிடிக்கக்கூடாது என்பது தான் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களின் நிலைப்பாடு ஆகும். தீண்டாமை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காக அனைத்து சமுதாயத்தினரும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்றாக உள்ளது.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டிய தலித் சமுதாயத்தினரில் சிலர், தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி பொய்ப் புகார்களை அளிப்பது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
பொதுவாகவே, தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கவும், பொய்ப் புகார்களை அளிக்கவும், காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யவும் தான் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தலித்துகளில் சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் .1989ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை, இச்சட்டப் பிரிவுகளின் படி தொடரப்பட்ட வழக்குகளில் 2.2 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
இதிலிருந்தே இந்தச் சட்டப்படி தொடரப்பட்ட வழக்குகளில் 97.8 விழுக்காடு வழக்குகள் பொய் வழக்குகள் என்பது தெளிவாகிறது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்த தில்லி அமர்வு நீதிமன்றம்,‘‘ எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதோ, அந்த நோக்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது.
தங்களுக்கு பிடிக்காதவர்களுடனான சிறு சிறு பிரச்னைகளை தீர்த்து பழி வாங்குவதற்காக இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தான் பல்வேறு சமுதாயங்களிடையே மோதலை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது. சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அதன்படி கைது செய்யப்படுபவர் ஜாமினில் வெளிவரமுடியாத நிலை உள்ளது; இதை மாற்றி ஜாமினில் வெளிவரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவேண்டும்.எனவே, இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில்,கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்கள் அனைத்தையும் இக்குழுவின் பார்வைக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பிறகே அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் அளிக்கப்படும் புகார்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில், அவை பொய்ப் புகார்கள் எனக் கருதப்பட்டு, அவற்றை அளித்தவர்கள் மீது நேரடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பிரிவுகளை சேர்க்கும் வகையில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2: வன் கொடுமை சட்டத்தில் திருத்தம் கோரி போராட்டம்
தமிழ்நாட்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதில் காட்டும் அதே அக்கறையை, அதற்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் காட்ட வேண்டும். அப்போது தான் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப் படுவதையும், இச்சட்டப் பிரிவுகளால் அப்பாவிகள் பழிவாங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய முடியும். எனவே,எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், அதில் தேவையான திருத்தங்களைச் செய்ய வலியுறுத்தி அனைத்து சமுதாயங்களின் சார்பில் வரும் 2013ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3: காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தமிழக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கின்றனர். நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், அதை காலில் போட்டு மிதித்துவிட்டு, சாதி உணர்வுடன் தங்களது சாதிக்காரர்கள் பக்கமே நிற்கின்றனர். இதனால், பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் மீதே பொய் வழக்குகள் போடப்படுவதும், பழி வாங்கலுக்கு உள்ளாக்கப்படுவதும் நடைபெறுகிறது. சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு சில காவல்துறை அதிகாரிகளின் இந்தப் போக்கே காரணமாக உள்ளது.
இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக, நேர்மையுடனும், ஒரு தரப்பு நிலை எடுக்காமலும் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: 21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் அவசியம்
நாகரீக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு திருமணங்களுக்கோ தடை போடுவது சரியானதாக இருக்காது. இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை.
ஆனால், காதல் திருமணங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் நாடகத் திருமணங்களால் சமுதாயத்தில் பல்வேறு சீரழிவுகள் ஏற்படுகின்றன. எனவே,இத்தகைய நாடகத் திருமணங்களைத் தான் அனைத்து சமுதாயங்களும் எதிர்க்கின்றன.
இந்தத் திருமணங்கள் உண்மையான அன்பையும் நேசத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்காமல் , உடல்கவர்ச்சி, நாடகம் நடத்தி திருமணம் செய்த பின்னர் பெண் வீட்டாரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கம் ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. இரு மனம் இணைவது தான் திருமணம் என்ற இலக்கணத்திற்கு பொருந்தாத வகையில் நடைபெறும் இந்த நாடகத் திருமணங்கள் ஓரிரு மாதங்களினேலயே தோல்வியில் முடிகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.

உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் நாடகத் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம் பெண்களும், அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
காதல் நாடகத் திருமணங்களால் சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன் தோல்வியடைந்த திருமணங்களும், பெற்றோரின் தற்கொலைகளும் தான். சமூக மோதலுக்கும், நல்லிணக்கம் கெடுவதற்கும் இவைதான் அடிப்படையாக அமைகின்றன. தோல்வியடைந்த காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே தலித் அல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் ; அவர்களை ஏமாற்றி மணந்து கொண்டவர்கள் அனைவரும் தலித்துகள் என்பதிலிருந்தே ,இத்தகைய திருமணங்கள் எப்படி திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதையும், இத்தகைய திருமணங்களை செய்யும்படி தலித் இளைஞர்களை அந்த சமுதாய தலைவர்கள் எப்படியெல்லாம் தூண்டுகிறார்கள் என்பதையும் உணர முடியும்.

காதல் நாடகத் திருமணங்கள் என்ற வலையில் வீழ்த்தப்படும் பெண்கள் அனைவருமே பதின் வயது பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் தங்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க முடியாது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குடும்பம் நடத்துவதற்குரிய தகுதியை அவர்கள் பெற்றிருப்பதில்லை என்பதால் இவை குழந்தை திருமணங்களாகவே அமைகின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். இந்த வயதுக்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அதற்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்று சட்டத்திருத்தம்கொண்டுவரப்பட வேண்டும். சீனா, சிங்கப்பூர், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்திலும் குறிப்பிட்ட வயதுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்ள பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே போன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவந்து காதல் நாடக திருமணங்களைத் தடுக்கவேண்டும் என்று அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இஸ்லாமிய, கிறித்தவ மத கோட்பாடுகளுக்குட்பட்டு நடைபெறும் திருமணங்களை இத்தீர்மானம் கட்டுப்படுத்தாது என்றும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 5 : மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு தேவை
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தலித்துகள் வாழும் பகுதிகள் வழியாக மாணவிகனேளா, பெண்கனேளா சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் மானவிகளை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அருவறுக்கத்தக்க வகையில் ஈவ் டீசிங் செய்வதால் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதைத்தடுக்க காவல்துறையில் ஈவ் டீசிங் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி , அப்பிரிவைச் சேர்ந்த காவலர்களை மாணவியரும், பெண்களும் செல்லும் பாதைகளிலும், னேபரூந்து நிறுத்தங்கள் , பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களிலும் சாதாரண உடையில் நிறுத்தி கண்காணிக்க வேண்டும்.

மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சென்னையில் இருப்பதைப் போல மாணவிகளும், பிற பெண்களும் பயணம் செய்வதற்கு வசதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் உள்ள பகுதிகளுக்கு ‘மகளிர் மட்டும்’ என்ற சிறப்பு னேபரூந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரøச அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 : 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதி மாற்றம்
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தனித் தொகுதிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய அரசை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 : காதல் நாடகத் திருமணங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி விசாரணை
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணங்களால் ஆயிரக்கணக்கான இளம்பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஓர் விசாரணைக் குழுவை அமைத்து, விசாரித்து, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
டிசம்பர் 17ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்
திண்டிவனத்தில் பாமக சார்பில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
மக்களுக்காக பாடுபடும் கட்சி பா.ம.க.தான். தமிழகத்தை ஆள்வதற்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறோம்.
தி.மு.க., அ.தி.மு.க. அரசு சரியான மின்திட்டங்களை செயல்படுத்தவில்லை. இதனால்தான் தற்போதைய மின்வெட்டு அவலத்தை தமிழகம் சந்திக்க நேரிட்டுள்ளது.
வருகிற தேர்தலில் எல்லா சாதிய இயக்கங்களும் மற்ற அமைப்புகளும் சேர்ந்து நாங்கள் அமைக்கும் கூட்டணியை அனைவரும் பாராட்டுகின்றனர். நாங்கள் தனியாக நிற்கிறோம். எந்த கட்சிக்கு இந்த தைரியம் வரும்? டாக்டர் ராமதாஸ் தேர்தல் வந்தால் மாறிவிடுவார் என கூறுகிறார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க.வை அகற்றி விட்டு பா.ம.க. புதிய அவதாரம் எடுத்துள்ளது. இது தான் நல்ல தருணம் என மாற்றத்தை கொண்டு வரும்படி காலதேவன் சொல்கிறான்.
ஜாதிய இயக்கங்களோடு தான் கூட்டணி அமைத்து தன்னிச்சையாக நிற்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. தனித்து நிற்க தயாரா? நாங்கள் இதுவரை தமிழகத்தை ஆளவில்லை. 2 கட்சிகளும் ஆண்ட கட்சிகள் தானே. தனியாக நிற்க தைரியம் உள்ளதா?
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இலவசங்கள், சினிமா, மதுவை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவை மூன்றையும் அழிப்போம். அதில் சினிமாவை நல்ல சினிமாவை வரவேற்போம். ஆனால் சினிமா மோகத்தை அழிப்போம்.
கேரளா, கர்நாடகம், தமிழகம் மூன்றும் சேர்ந்தது தான் திராவிடம் என்கிறார்கள். இந்த திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள், காவிரியில் இருந்து தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் திருவனந்தபுரத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே?
பா.ம.க.வில் இருப்பவர்கள், எல்லா தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நல்லதுக்கு பாடுபட வேண்டும். பா.ம.க.வில் தலைமை பண்புகள், ஆளுமை பண்புகளை வளர்க்கும் விதத்தில் பயிற்சி கொடுத்து வருகிறோம். இந்தியாவில் எங்கும் கொடுக்காத பயிற்சி பா.ம.க.வில் கொடுக்கப்பட்டு வருகிறது.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்கு தான். டிசம்பர் 17ந் தேதி முக்கியமான நாள். டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம். அதில் பா.ம.க.வினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். நானும் 2 திண்டுக்கல் பூட்டு வாங்கி வைத்துள்ளேன். போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்றார் ராமதாஸ்.
Friday, November 30, 2012
பொங்கலூர் மணிகண்டன் - ராமதாஸ் சந்திப்பு
தருமபுரி கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தருமபுரியில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
இன்று(30.11.2012) மாலை 3.30 மணியளவில் கொங்கு வேளாள கவுண்டர்களுக்காக அமைப்பு வைத்து நடத்தும் பொங்கலூர் மணிகண்டன் கலவரம் நடந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்றுவிட்டு வரும்வழியில் பொங்கலூர் மணிகண்டன், அதியமான் பேலஸ்சில் தங்கியிருந்த மருத்துவர் ராமதாஸ்சை சந்தித்து பேசியுள்ளார்.
இரண்டு தரப்பும் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பதை இதுவரை வெளியிடவில்லை.
பெங்கலூர் மணிகண்டன், மாற்று சாதியினர் கொங்கு கவுண்டர் இன பெண்களை திருமணம் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். அதோட தலித் அல்லாதோர் அமைப்பை தொடங்கியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் வன்னியர் இன பெண்களை மாற்று சாதியினர் திருமணம் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். இருவரும் சந்திப்பு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி திருமாவளவனுடன் கூட்டணி கிடையாது;
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நத்தம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும் அதைவிடுத்து அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறை தூண்டும் வசனம் கட்சி கொள்கையா? இங்க பாருங்க எப்படி எல்லாம் வசனம் எழுதப்பட்டுள்ளது பாருங்கள் இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது, ஒழுக்கமான தலித் தலைவர் உருவானல் கூட்டணி வைப்போம் என்றார் ராமதாஸ்.
சிங்கபூர், அமெரிக்க மிசிசிப்பி, சீனா, ஜப்பான், பிரேசில் போன்ற வெளிநாட்டில் உள்ளது போல் பெற்றோரரின் சம்மதத்துடன் பெண்ணுக்கு18, ஆணுக்கு21 வயதிலும் திருமணமும், பெற்றோர் சம்மதமின்றி பெண்ணுக்கு 21, ஆணுக்கு 23 வயதிலும் திருமணம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும். இதை விடுத்து 18, 20 வரை பெண் குழந்தைகளை வளர்த்து இவர்களின் காம பசிக்கு கொடுக்க முடியுமா? என்றார் ராமதாஸ்.
கலவர சம்பவத்திற்கு நாகராஜனின் மரணம் மட்டுமே காரணமில்லை. அதற்கு முன் பெண்களை குறிவைத்து நடந்த ஈவ்டீசிங் கேலி கிண்டல்களும் காரணம். தமிழகத்தில் ஈவ்டீசிங் நடப்பதை தடுக்க காவல்துறையில் தலித் அல்லாத தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பஸ்நிலையங்கள் முன்பு ஈவ் டீசிங்கை தடுக்க போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலகம் நிறைந்த பகுதிகளுக்கு பெண்கள் சிறப்பு பஸ் இயக்க வேண்டும்.
வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் எந்த சாதிக்கும் எதிரான இயக்கம் இல்லை. தலித்களுக்கு எதிராக நான் பேசியது இல்லை. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, சி.பி.ஐ.யோ விசாரணை நடத்து ஆட்சேபணை இல்லை. ஆனால் உண்மை காரணம் வெளி கொண்டுவர வேண்டும். கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது. அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது என்றார் அழுத்தமாக
Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited: