Sunday, March 15, 2009

மனசாட்சியும் மண்ணாங்கட்டியும்

கோபம் எல்லாம் உண்மை தெரிந்தும், அதர்மங்கள் நடக்கிறது என்று தெரிந்தும் அதற்க்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனமாக இருக்கும் மனிதர்கள் மீது தான்...... இதுவெல்லாம் துரோகம் இல்லையா? விடுதலை புலிகள் மீது மட்டும் தாக்குதல் நடத்தாமல் தமிழ் மக்கள் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்று குவிப்பதை இந்தியா மட்டும் அல்லாமல் ஐ. நா-வும் , மற்ற நாடுகளும் தடுக்காமல் வெறும் அறிக்கை மட்டுமே விட்டு கொண்டு இருப்பது அவர்கலளின் கையாலாகத தன்மையும், உணர்வின்மையுமே காட்டுகிறது. இந்திய தொலைக்காட்சிகளுக்கும், உலக தொலைக்காட்சிகளுக்கும், மற்ற ஊடகங்களுக்கும், இலங்கையில் நடக்கும் கொடுமை பற்றி தெரியவில்லை கண்டு கொள்ள வில்லை. அவர்களுக்கு எங்காவது ஒரு கொலை, எங்காவது ஒரு அரசியில்வாதியின் பேச்சு , இல்லை எதாவது ஒரு நடிகன் நடிகையின் பற்றிய செய்திகளே முதன்மை பெறுகின்றன இது இந்த காலத்தில் நிகலும் கொடுமைகள் அதையும் வாய் பொளந்து விரும்பி பார்க்கும் பொதுமக்களும் காரணம்... வல்லரசுகள் என்று பீற்றிக் கொள்ளும் நாடுகளும் பொத்திக் கொண்டு இருக்கிறது. இந்திய அரசாங்கமும் வெறும் வார்த்தை ஜாலங்களே விட்டு கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு செத்து மடியும் தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கபட்ட தமிழர்களுக்கு மருந்து பொருள்களையும் , மற்ற உதவிகளையும் செய்கிறது....இது குழந்தையும் கிள்ளி, தொட்டிலும் ஆட்டும் கதை..... தமிழக அரசும், தமிழக காங்கரசும் ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைபட்ட விதமாக நடந்து கொள்கிறார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டால் உலகம் தெரியாது என்பது போல..இவர்களின் பேச்சும், நடவடிக்கைகளும் யாருக்கும் புரியாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறார்களோ....என்றே தோன்றுகிறது, இல்லை தெரிந்தும் இவர்களிடம் பணமும் அதிகாரமும் இருப்பதால் இப்போதைக்கு மற்றவர்களால் ஒன்றும் செயமுடியாது என்றே நினைக்கிறார்கள்...காலம் தான் இவர்களுக்கு பதில்...சொல்லும். ஆனாலும் தேர்தல் வருவதற்கு முன்னரே மற்றக் கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சினைகளை கையில் எடுத்து இருக்கிறது. அவர்களால் வெறும் கூச்சல்களும் போரட்டங்களும் மட்டுமே நடத்த முடிகிறது.. பிடிக்காதவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வது கொடுமையிலும் கொடுமை. இலங்கை அரசுக்கு உதவி செய்யும் இந்திய அரசுக்கு பொறுபானவர்களை எந்த சட்டத்தில் கைது செய்வது.... இவர்களுக்கு மொத்ததில் மனச்சாட்சியும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: