Saturday, November 28, 2015

தொலைநோக்கு திட்டம் - 2023 என்ன ஆனது? வெள்ளை அறிக்கை வேண்டும் : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் (விஷன்) &2023 வெளியிடப்பட்டு 45 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், தொலை நோக்குத் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான முதல் அடியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்கவில்லை. வெற்று அறிவிப்புகளின் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

ஒளிமயமான தமிழகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கப் போவதாக கூறி தொலைநோக்குத் திட்டம்&2023 என்ற வளர்ச்சித் திட்ட அறிக்கையை 22.03.2012 அன்று வெளியிட்டார். இத்திட்டம் செயல்படுத் தப்பட்டால் 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வறுமையே இருக்காது; வளமையும், செழுமையும் பொங்கி வழியும் என்றெல்லாம் ஜெயலலிதா முழக்கமிட்டார். இந்த வெற்று அறிவிப்புகளை எல்லாம் தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ இவற்றையெல்லாம் ஜெயலலிதா மறந்து விட்டார். இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள பணிகள் குறித்த இரண்டாம் கட்ட அறிக்கையை 22.02.2014 அன்று வெளியிட்டதைத் தவிர இதுவரை வேறு எந்த நடவடிக்கையையும் ஜெயலலிதா மேற்கொள்ளவில்லை.
அதனால், தொலைநோக்குத் திட்டம் &2023 இலக்குகளை எட்டுவதில் சிறிய முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. உதாரணமாக...

*   தமிழ்நாடு அடுத்த 11 ஆண்டுகளுக்கு தலா 11% வளர்ச்சியை எட்டும். 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருவாய் ரூ.6.50 லட்சமாக இருக்கும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 5 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதேபோல், தனிநபர் வருமானம் நடப்பாண்டு இறுதிக்குள் ரூ.2.16 லட்சமாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியான ரூ. 1 லட்சத்தைக் கூட தாண்டவில்லை.

*    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வகையில் அனைவருக்கும் பயனுள்ள வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், 2012 ஆம் ஆண்டில் 73 லட்சமாக இருந்த வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை இப்போது 86 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

*   குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சுகாதாரக் குறியீடுகள் சிறப்பாக மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக தருமபுரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறந்த கொடுமை நடந்தது.

*    மின்சாரம், போக்குவரத்து, கல்வி, பாசனம், துறைமுகம், விமானநிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.6 ஆயிரம் கோடி கூட முதலீடு செய்யப்படவில்லை. இதனால் உட்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் இந்தியாவில் 17&ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

*   ஆரோக்கியமான முதலீட்டு சூழல் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக கூறப்பட்ட போதிலும் ஒரு தொழிற்சாலைக்கு கூட இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

*   கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழகம் அறிவுசார் மையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் ஏலத்தில் விடப்படும் அவலம் தான் ஏற்பட்டிருக்கிறது.

*   மனித வளத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. ஆனால், பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற அளவுக்குத் தான் மனித வளம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

*   பாரம்பரிய கட்டிடக் கலையும், சூழலியலும் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

*   இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாக்குறுதி எந்தளவுக்கு காப்பாற்றப் பட்டது என்பதற்கு கடலூர், சென்னை மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் சாட்சி.

*   அரசு நிர்வாக அமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மாறாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களை நியமித்து தகவல் ஆணையம் முடக்கப்பட்டிருக்கிறது. லோக் அயுக்தா, பொது சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை கொண்டு வர முடியாது என தமிழக அரசே திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

தொலைநோக்குத் திட்டம் &2023ல் 10 வகையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவற்றை 2023 ஆம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என்பது தான் தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இலக்குகளை எட்டுவதில் கண்ணுக்குத் தெரிந்த முன்னேற்றம் எட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இலக்குகளை எட்ட நடவடிக்கைகள் எடுக்காமல், தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்வதாகக் கூறி பொது மக்களை முட்டாள்களாக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நான்காண்டு ஆட்சி... நாலாபுற வளர்ச்சி என்று கூறும் தமிழக அரசு, தொலைநோக்குத் திட்டம் &2023 இலக்குகளை எட்டுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்பதை சவாலாகவே முன்வைக்கிறேன்.’’

Thursday, November 26, 2015

மது விலக்கு: நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதாவுக்கும் வருமா? ராமதாஸ்

 
மது விலக்கு, நிதிஷ்குமாரின் மக்கள் அக்கறை ஜெயலலிதாவுக்கும் வருமா? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிகார் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து  முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். பிகார் மாநில மக்கள் நலனில் அக்கறை கொண்டு இம்முடிவை எடுத்த அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், நேற்று நடைபெற்ற  மதுவிலக்கு நாள் கொண்டாட்டத்தின் போது மக்கள் மனம் குளிரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ‘‘பிகாரில் மதுவால் பெரும் சீரழிவு ஏற்படுகிறது; குடும்ப வன்முறை அதிகரித்து விட்டது; அடித்தட்டு மக்கள் தங்களின் வருவாயை குடிப்பதற்கே செலவிடுவதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குடும்ப அமைதி ஏற்படும். மதுவுக்காக செலவிடப்படும்  நிதியை சேமித்து குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்துக்கு செலவிட முடியும்’’ என்று நிதிஷ்குமார் கூறியிருக்கிறார். மக்கள் நலனில் அவர் கொண்டிருக்கும் அக்கறையை அவரது உரை காட்டுகிறது.

மதுவுக்கு எதிராக தமிழகத்தில் நடப்பது போன்ற வலிமையான போராட்டங்கள் பிகார் மாநிலத்தில் நடைபெறவில்லை. ஆனாலும், நிதிஷ்குமார் தாமாக முன்வந்து மதுவிலக்கு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றுகிறார். ஒரு முதல்வர் மக்களை எப்படி நேசிக்க வேண்டும், அவரது தொலைநோக்குப் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு நிதிஷ்குமார் வாழும் உதாரணமாக திகழ்கிறார். அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை சற்று கூர்ந்து கவனியுங்கள். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களால் 34 ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்ட போராட்டம் தமிழ்நாட்டில் இப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பிகாரில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அதைவிட ஆயிரம் மடங்கு நியாயங்கள் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு சாதகமாக உள்ளன.

4 வயது குழந்தை மது அருந்துவது, பெண்கள் மது அருந்திவிட்டு பொது இடங்களில் தகராறு செய்வது, முதல்முறையாக மது அருந்துபவர்களின் சராசரி வயது முப்பதிலிருந்து 13 ஆக குறைந்தது,  மதுவால் ஆண்டுக்கு 2 லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழப்பது, ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள் உருவாவது, பள்ளியில் பலகைகளை உடைத்து விற்று, அந்த காசில் மது அருந்தும் அவலநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டது, இதற்கெல்லாம் மேலாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள  திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்த 11 ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்தி மயங்கி விழுந்தது என மதுவால் ஏற்படும் சீரழிவுகள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் முழு மதுவிலக்கு கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையை 25% அதிகரிக்க வேண்டும், எந்த திருநாள் வந்தாலும் அந்த நாளில் சில நூறு கோடிகளுக்கு கூடுதலாக  மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கும் தமிழக அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்?

ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜூலை மாதத்தில் அளித்த வாக்குறுதியை நவம்பர் மாதத்தில் நிதிஷ்குமார் நிறைவேற்றிவிட்டார்.ஆனால், தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டு, அதன்பின் 4 முறை புதுப்பிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் மத்தியில் எழுந்த எழுச்சியைப் பார்த்து அந்த வாக்குறுதியை மீண்டும் தூசு தட்டி எடுத்து ஏமாற்றுவதற்கான நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பிகாரிலும், கேரளத்திலும் மக்கள் நலனில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருப்பதால் அவர்கள் மதுவை அழிக்கிறார்கள்.... ஆனால், ஆள்பவர்களும், ஆண்டவர்களும் மது ஆலைகளை நடத்தும் தமிழகத்தில் மக்கள் உழைத்து ஈட்டும் பணத்தின் மீது தான் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருப்பதால், மதுவைக் கொடுத்து மக்களை அழிக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஒருவேளை தமிழகத்தை ஆட்சி செய்யும் ஜெயலலிதா அவர்களுக்கு மக்கள் நலனில் சிறிதளவேனும் அக்கறை இருந்தால் தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றும் வகையில் உடனடியாக மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே நாங்கள் வாக்குறுதி அளித்தவாறு எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைந்தவுடன் முதல் நாள்... முதல் கையெழுத்து முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவில் இடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Wednesday, November 25, 2015

சபரிமலையில் தமிழக அரசு சார்பில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும்! : அன்புமணி



பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை
’’தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், சபரிமலை புனிதப் பயணத்தின் போது அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் கணக்கில் அடங்காதவை. 

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விரதமிருந்த பிறகு இவர்கள் கேரள மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி திரும்புவர். இந்த பக்தர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கடமை ஆகும்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசு செய்திருக்கும் போதிலும், கோடிக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் செல்வதால் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்காத நிலை ஏற்படுக்கிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையை மாற்றி சபரிமலை பயணம் சுகமான அனுபவமாக மாற்ற சில திட்டங்களைத் தயாரித்துள்ள கேரளம் அதற்கு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய அரசுகளின் ஒத்துழைப்பைக் கோரியிருக்கிறது. பக்தர்களுக்கு வசதிகளை செய்து தரும் கடமையையும்,  விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் கேரளம் முன்வைத்துள்ள கோரிக்கையாகும்.

தென் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் இளைப்பாற பொதுவான வசதிகளை செய்வதற்கு பதிலாக மாநில வாரியாக வசதிகளை செய்து கொடுத்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கலாம் என்பது தான் கேரளத்தின் திட்டமாகும். அதற்காக சபரிமலைக்கு செல்லும் வழியில்  நிலக்கல் என்ற இடத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் தலா 5 ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஒதுக்கியிருக்கிறது. 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அந்தந்த மாநில அரசுகள் சமுதாயக் கூடங்களை கட்டினால், அவற்றில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் எளிதாக தங்கி இளைப்பாறி செல்ல முடியும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோல், சென்னை, பம்பா ஆறு, சன்னிதானம்  உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவை என்றாலோ, சிக்கல் என்றாலோ உடனடி தகவல் பரிமாற்றம் செய்து, தேவையான உதவிகளை பெற முடியும் என்பது இதன் இன்னொரு நோக்கமாகும்.

கேரள அரசின் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள தெலுங்கானா அரசு, நிலக்கல் பகுதியில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொண்டது. அங்கு பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாயக் கூடங்களை அமைப்பது, கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை தெலுங்கானா அரசு மேற்கொள்ள உள்ளது.

 தமிழக அரசும் கேரள அரசால் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர்    நிலத்தை பெற்றுக் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களுக்காக சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட  வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, பக்தர்கள் தாங்கள் பயன்படுத்திய ஆடை உள்ளிட்ட உடமைகளை பம்பை ஆற்றில் விட்டு வர வேண்டும் என்பது தவறான நம்பிக்கை என்பதாலும், இது தண்டனைக்குரிய குற்றம் என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பதாலும் அது குறித்த விழிப்புணர்வையும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களிடம் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

Tuesday, November 24, 2015

மாணவ சமுதாயத்தைக் காப்பாற்ற மதுவிலக்கை நடைமுறைப்படுத்துக!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 11 ஆம் வகுப்பு மாணவிகள் 7 பேர் வகுப்பறையில் மது குடித்ததாக வெளியாகியுள்ள செய்தி  மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மாணவ சமுதாயத்தின் சீரழிவுக்கு வழிவகுத்த அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், பள்ளிக்கூடத்திற்கு காலை 8.00 மணிக்கே வந்த இந்த மாணவிகள் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து குடித்துள்ளனர். இவர்களில் 2 மாணவிகள் தான் மது வாங்கி வந்து மற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். மது குடித்த மாணவிகளில் சிலர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். 

இதை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியை 7 மாணவிகளையும் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளார். அவர்களில்  4 மாணவிகளின் பெற்றோரை அழைத்து மாற்றுச்சான்றிதழ்களையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இத்தகைய மது அருந்தும் நிகழ்வுகள் நடப்பது இது முதல் முறையல்ல. திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் அண்மையில் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். மாணவ சமுதாயத்தின் சீரழிவுக்கு இவை வெட்கப்பட வேண்டிய உதாரணங் களாகும்.

ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் அளவுக்கு துணிந்திருக்கின்றனர் என்றால் அதற்கான புறச்சூழல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று தான் பொருள். தமிழகத்தில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு மதுக்கடை திறக்கக்கூடாது என்று விதிகளில் கூறப்பட்டிருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டிய அரசே, அந்த விதியை மீறி பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகளை திறக்கிறது. கைக்கெட்டும் தொலைவில் மது தாராளமாக கிடைப்பது தான் மாணவ, மாணவியர் மதுப் பழக்கத்திற்கு ஆளாவதற்கு முதன்மைக் காரணமாகும்.

தமிழகத்தில் மதுக்கடைகள் காலை 10.00 மணிக்குத் தான் திறக்கப்பட வேண்டும். ஆனால், காலை 08.00 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு வரும் போதே மது பாட்டில்களை வாங்கி வந்துள்ளனர். அவர்கள் முதல் நாளே மதுவை வாங்கி வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் நிகழ்வன்று காலையில் தான் வாங்கியிருக்க வேண்டும். அப்படியானால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அரசு மதுக்கடைகளிலோ, வேறு இடங்களிலோ மது விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 21 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். 

இவ்விதி முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பா.ம.க. தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது,‘‘ மதுக்கடைகளில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்க மாட்டோம்; தேவைப்பட்டால் மது வாங்க வருபவர்களிடம் வயது சான்றை கோருவோம்’’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்து மூலம் உத்தரவாதம் அளித்தது. இத்தகைய சூழலில் 15 வயது மாணவிகளுக்கு மது விற்பனை செய்யப்பட்டது கடுமையான விதி மீறல் ஆகும்.

வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தியது பெரும் தவறு என்பதில் அய்யமில்லை. பள்ளியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும், இனியும் பள்ளியில் மது அருந்தும் துணிச்சல் வேறு யாருக்கும் வந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகளை பள்ளியிலிருந்து நீக்க தலைமை ஆசிரியர் முடிவு செய்ததையும் தவறாக பார்க்க முடியாது. ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் இரு வகையான மோசமான விளைவுகள் ஏற்படும். முதலாவதாக வகுப்பறையில் மது அருந்தியது மாணவிகளின் குற்றம் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், சட்டவிரோதமாக அவர்களுக்கு மது கிடைக்க காரணமாக இருந்த மதுக்கடை விற்பனையாளர் முதல் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் வரை அனைவரின் கடமை மீறலும் மூடி மறைக்கப்படுகிறது. இது ஆபத்தானதாகும்.

இரண்டாவதாக வகுப்பறையில் மது அருந்திய மாணவிகளை குற்றவாளிகளாக பார்க்கக்கூடாது; மாறாக மதுவால் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும். அவர்களை பள்ளியிலிருந்து நீக்கினால் அவர்கள் இதையே காரணமாக வைத்து இன்னும் அதிகமாக மதுவுக்கு அடிமையாகும் ஆபத்துள்ளது. பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு வேறு பணிகள் இருக்காது என்பதால் அவர்கள்  மது உள்ளிட்ட தவறான வழிகளில் செல்ல அதிக நேரம் கிடைக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ஒரு மாணவரை பள்ளியிலிருந்து நீக்குவது தண்டனை அல்ல... எதிர்காலத்தை சீரழிக்கும் செயல். மது அருந்துவதால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை விட கல்வி மறுக்கப்படுவதால் அதிக பாதிப்பு ஏற்படும்.


எனவே, வகுப்பறையில் மது அருந்தியதாக இப்போதும், இதற்கு முன்பும் பள்ளியிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியரை கண்டித்து அறிவுரைகளும், மனநல ஆலோசனைகளும் வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில் மாணவ, மாணவியருக்கு சட்ட விரோதமாக  மது கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? அதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கெல்லாம் மேலாக மாணவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சீரழித்து வரும் மதுவை ஒழிக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை இதை செய்ய அரசு மறுத்தால் பா.ம.க. ஆட்சியில் முதல் நடவடிக்கையாக மது விலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

கிரானைட் ஊழல்: சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் கொள்ளை குறித்து உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி  விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், அவரது விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில்  நேற்று தாக்கல் செய்திருக்கிறார். அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், 1991&ஆம் ஆண்டு முதல்  நீடிக்கும் கிரானைட் கொள்ளை குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளையை ஆதாரங்களுடன் அரசுக்கு தெரிவித்தவர் அம்மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் தான். இந்த உண்மையை கண்டறிந்ததற்காக தான் மதுரை   மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். சகாயம் கண்டறிந்த கிரானைட் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான்.  அதைத் தொடர்ந்து இந்த சிக்கல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி சட்ட ஆணையராக நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு திசம்பர்  மாதத்தில் விசாரணையைத் தொடங்கிய இ.ஆ.ப. அதிகாரி சகாயம்  ஓராண்டில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடைபெற்று இருப்பதாகவும், இந்த கொள்ளைக்கு அரசு உயரதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் உயரதிகாரிகள் பலரும் இந்த முறைகேட்டுக்கு துணையாக  இருந்திருப்பதால் இந்த ஊழல் குறித்து தமிழ்நாட்டை சாராத பல்துறை அதிகாரிகள் அடங்கிய மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் படையைக் கொண்டு விசாரிக்க வேண்டும். அதில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கும்படியும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விசாரணைக்கு உதவிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு  பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகளையும் சகாயம் குழு முன்வைத்துள்ளது.

ஆனால், விசாரணைக்கு உதவியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை புரிந்துகொள்ள  முடியும்.  இந்த வழக்கு அதன் இயல்பான முடிவை நோக்கி செல்வதையோ, இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதையோ தமிழகத்தின் இப்போதைய ஆட்சியாளர்களும் விரும்ப மாட்டார்கள்; முன்நாள் ஆட்சியாளர்களும் ரசிக்க மாட்டார்கள். கிரானைட் கொள்ளை பற்றி சகாயம் விசாரணை நடத்துவார் என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை வாங்க தமிழக அரசு துடித்தது, சகாயம் குழுவின் விசாரணைக்கு தேவையில்லாமல் முட்டுக்கட்டை போட்டது ஆகியவற்றில் இருந்தே இவ்விஷயத்தில் தமிழக அரசின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடியும். இந்த ஊழலுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்ற சகாயம் குழுவின் பரிந்துரை பாதி உண்மை மட்டுமே. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க.  ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளது என்பது தான் முழுமையான உண்மை.

இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல், கர்நாடகத்தில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை சிறை செல்வதற்கு காரணமாக இருந்த இரும்புத் தாது ஊழல் ஆகியவற்றை விட மிக மோசமான ஊழல் கிரானைட் ஊழல் என்பது விரைவில் நிரூபிக்கப்படும். தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த ஊழலில் தொடர்பிருக்கும் நிலையில் உள்ளூர் புலனாய்வுத் துறையோ, வழக்கமான நீதிமன்றங்களோ இவ்வழக்கை விசாரித்தால் முழுமையான நீதி கிடைக்காது. எனவே, சகாயம் குழுவின் பரிந்துரைப்படி இந்த வழக்கின் புலன் விசாரணையை பல்துறை அதிகாரிகள் அடங்கிய மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தமிழக அரசு தானாக முன்வந்து  ஒப்படைக்க வேண்டும். இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தையும் அமைக்க வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக கிரானைட் ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருப்பதாக சகாயம் குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறதோ, அவர்கள் அனைவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து  கைது செய்ய வேண்டும். கிரானைட் கொள்ளை மூலம் பல்வேறு தரப்பினரும் குவித்து வைத்துள்ள  சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தமிழ்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

Monday, November 23, 2015

மீண்டும் மிதக்கிறது கடலூர் மாவட்டம்: மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்

மீண்டும் மிதக்கிறது கடலூர் மாவட்டம், மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் எது நடக்கக்கூடாது என்று மக்கள் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அது நடந்து விட்டது. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் இந்த மழையால் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தீபஒளி திருநாளுக்கு முன்பாக பெய்த அடைமழையால் அம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த தீபஒளி சோக தீபஒளியாக மாறியது. கடலூர் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடலூரைத் தொடர்ந்து சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களும் மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த பாதிப்புகளில் இருந்து கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வருவதற்கு முன்பே அடுத்த மழை தொடங்கி விட்டதால் அம்மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கெடிலம்  ஆற்றிலும், பரவனாற்றிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் மழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த 5 அமைச்சர்களும் மீட்பு பணிகள் முடிவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டனர். நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பதிலாக தங்களுக்கும், தங்களின் ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகள் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் மக்கள் துயர வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கத்தில் கட்சிப் பதவி கிடைத்ததற்காக உற்சாக வெள்ளத்தில் திளைத்த தமிழ்நாட்டு அமைச்சர்களின் மக்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.

சென்னையில் மீண்டும் கொட்டத் தொடங்கியுள்ள மழையால் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. கடந்த வாரம் பெய்த மழையால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், இப்போது தான் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். அதற்குள் அடுத்த மழை தொடங்கியிருக்கிறது. இம்மழை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னை புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளக் காடாகிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆனால், தமிழக அரசோ, சென்னை மாநகராட்சியோ இந்த ஆபத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்கிறது. சென்னை வேளச்சேரியில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சென்ற 2 பெண் குழந்தைகளை அவர்கள் காப்பாற்றி விட்டாலும், பெற்றோரை இழந்த அக்குழந்தைகள் ஆதரவற்றவர்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால் அவற்றிலிருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியும் நிரம்பியதால் அதிலிருந்து நேற்றிரவு முதல் கூடுதல் நீர் வெளியேற்றப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. அம்மாவட்டத்தில் ஓடும் ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் அங்குள்ள மக்களின் நிலை என்னவாகும்? என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் ஆபத்து அதிகரித்திருக்கிறது.

எனவே, தமிழக அரசு விளம்பர அரசியல் செய்வதை விடுத்து, கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம். மழையால் எவருக்கும் பாதிப்புகள் இல்லை என்ற உன்னத நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இணையரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Saturday, November 21, 2015

தலித் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ் ( படங்கள் )

 

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார் .

நெய்வேலித் தொகுதி காடாம்புலியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ள தலித் மக்களை சந்தித்து, அவர்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கினார்.

வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 
வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருவதும், அந்த நோய்களுக்கு அப்பாவி மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதும் மிகுந்த கவலை அளிக்கிறது. ஆனால், பரவி வரும் நோய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் தமிழகத்தில் பரவுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 545 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு மறுக்கிறது.

டெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் திருச்சி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்நாளில் மட்டும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தீபா, கரூரைச் சேர்ந்த சந்திரா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜாஹீர் ஹுசைன்  ஆகிய 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். ஆனால், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பன்றிக் காய்ச்சலுக்கு 10 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதைப்பற்றிக் கவலைப்படாத தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள்,‘‘ பன்றிக் காய்ச்சலுக்கு இப்போது பலம் குறைந்து விட்டது. பன்றிக் காய்ச்சல் என்பது மழைக் காலத்தில் வரும் சாதாரணக் காய்ச்சல் தான் என உலக சுகாதார நிறுவனமே அறிவித்து விட்டது. இதனால் பன்றிக் காய்ச்சலை நினைத்து அச்சப்படத் தேவையில்லை’’ என்று கூறியுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது. பன்றிக் காய்ச்சலுக்கு தனி அறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் எந்த அரசு மருத்துவமனையிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இன்னும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சாப்பிடுவதற்கான டாமிஃபுளு மாத்திரைகள் கூட போதிய அளவில் இருப்பு வைக்கப்படவில்லை என்பது தான் உண்மை நிலையாகும்.

மற்றொரு பக்கம் மழை பாதிப்புகள் காரணமாக சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 1955 பேர் காய்ச்சலுக்காகவும், 113 பேர் வயிற்றுப் போக்குக்காகவும் சிகிச்சை பெற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி ஒப்புக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட சென்னையிலுள்ள தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோயின் பாதிப்பு மிகஅதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலும் மழை சார்ந்த நோய்கள் வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் மழை சார்ந்த தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது நல்ல அறிகுறி அல்ல. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் போதிலும், அவை போதுமானது அல்ல. குறிப்பாக பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மருத்துவம் அளிக்கும் வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதுடன், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, November 19, 2015

மழை நிவாரணம்; பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியம் கொடை: ராமதாஸ்


மழை நிவாரணம்; பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடையாக வழங்குவார்கள் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் யூகிக்க முடியாத அளவுக்கு கொடுமையானவை. இயற்கையின் இரக்கமின்மையும்,  அரசின் அலட்சியமும் தான் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்ற போதிலும் பாதிக்கப்பட்ட தமிழ் சொந்தங்களுக்கு உதவி செய்யும் கடமையிலிருந்து நம்மால் ஒருபோதும் ஒதுங்கியிருக்க முடியாது.

தமிழகத்தை சுனாமி தாக்கிய போதும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைத் தானே புயல் தாக்கிய போதும் மனிதநேயத்துக்கு உதாரணமாக செயல்பட்டு உதவிகளை வாரி வழங்கியது நாம் தான். அதேபோல், பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுக்க வேண்டியதும் நமது கடமை ஆகும். அக்கடமையை நிறைவேற்றும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்  அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள்.

அதேபோல், பாட்டாளி தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், மின் வாரியத் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்கத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவன பணியாளர்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இதற்கான ஒப்புதல் கடிதங்களை தொடர்புடைய அமைப்புகளின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 
கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 2015-16 ஆம் ஆண்டிற்கான அரவைப்பருவம் தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் கரும்புக்கான கொள்முதல் விலை இன்று வரை அறிவிக்கப்படவில்லை. தங்களின் கரும்புக்கு என்ன விலை கிடைக்கும் என்பது கூட தெரியாமல் சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலை தமிழக அரசு ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா விவசாயிகளின் வாழ்வுடன் விபரீத விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக அதை காலில் போட்டு மிதித்தார். 2011-12 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்குவதாக அறிவித்திருந்த ஜெயலலிதா ரூ.2000 கொள்முதல் விலை, ரூ.100 வாகன வாடகை என மொத்தம் ரூ.2100 மட்டுமே வழங்கினார். அதனால் மாற்றத்தை ஏற்படுத்திய விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.

2012-13 ஆம் ஆண்டிலும் ஜெயலலிதா அவரது வாக்குறுதியை காப்பாற்றவில்லை. மத்திய அரசு அறிவித்த விலையுடன் தமிழக அரசால் வழக்கமாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.650 சேர்த்து ரூ.2350 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கினார். 2013&14 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ஜெயலலிதா மிகப்பெரிய துரோகத்தை செய்தார். அந்த ஆண்டில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.2100 அறிவித்த நிலையில் தமிழக அரசு ரூ.650 ஊக்கத்தொகை சேர்த்து ரூ.2750 வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ரூ.2,650 மட்டுமே ஜெயலலிதா வழங்கினார். அதேபோல், 2013-14 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த ரூ.2,200 விலையுடன் ரூ.650 சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.2,850 வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வழக்கமாக வழங்கப்படும் ஊக்கத்தொகையில் ரூ.200 குறைத்து ரூ.2,650 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படும் என அறிவித்தது அதிமுக அரசு.

ஆனால், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை வழங்குவதற்குக் கூட எந்த சர்க்கரை ஆலையும் முன்வரவில்லை.  கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.1,050 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ள நிலையில், அதை பெற்றுத் தர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து செய்த துரோகங்களின் பயனாக உழவர்கள் கரும்பு விவசாயத்தை கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர். அதனால், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற போது  386 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி  37% குறைந்து 2014 ஆம் ஆண்டில் 245 லட்சம் டன்னாக சரிந்து விட்டது. விவசாயத்தில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாகக் கூறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால், விவசாயத்தில் கடைசி மாநிலமாக மாற்றியதும், வேளாண் வளர்ச்சியை & 12.1(மைனஸ் 12.1)% என்ற  அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றதும் தான் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு படைத்த சாதனையாகும்.

தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளில் பெரும்பாலானோர் கடன் வாங்கி விவசாயம் செய்பவர்கள் ஆவர். இத்தகைய சூழலில் விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி விட்டு எப்போது பணம் வரும்... எவ்வளவு பணம் வரும்? என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது பெரும் கொடுமையாகும். அந்தக் கொடுமையிலிருந்து தமிழக விவசாயிகளை மீட்க அரசு முன்வர வேண்டும். நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு 2300 ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. தில்லியில் நேற்று முன்நாள் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.45 ஊக்கத்தொகை வழங்கவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கரும்பு சாகுபடிக்கான செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகும். பா.ம.க. ஆட்சியில் இந்த விலை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். ஒருவேளை ஜெயலலிதா அரசால் அந்த விலை வழங்க முடியாவிட்டால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2345 விலையுடன் தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.650, வாகன வாடகை ரூ.100 சேர்த்து ரூ.3095 வழங்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆண்டுகளாக ஏமாற்றிய அ.தி.மு.க. அரசுக்கு  அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Wednesday, November 18, 2015

மழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி இராமதாசு


மழை சீரழிவுகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மழை என்பது அழகான வரம். ஆனால், சென்னை நகர மக்களைப் பொறுத்தவரை அதை சாபமாக மாற்றிய பெருமை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையுமே சேரும். 

ஒரு நாள் மழைக்கே சென்னை சாக்கடையாகி, வாழத் தகுதியற்ற மாநகரமாக மாறுவதற்கு இந்த ஆட்சிகள் ஏற்படுத்திய கட்டமைப்பு குறைபாடுகள் தான் காரணமாகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் இயல்பு வாழ்க்கை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். 

மீட்புப் பணிக்காக இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்தவர்களும் வரவழைக்கப்பட்டுள்ள போதிலும், வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை முழுமையாக மீட்க முடியவில்லை. சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தொடர்ந்து மிதந்து  கொண்டிருக்கின்றன. 

கோடிக்கணக்கில் செலவழித்து வீடு கட்டியவர்கள் வீட்டு மாடியில் நின்றவாறே ஒருவேளை உணவு கிடைக்காதா? என கையேந்தி நிற்கும் காட்சிகள் கண்ணீரை வரவழைப்பவை.

மாநகரமான சென்னை மா‘நரக’மாக மாறியதற்கு காரணம் யார்? 1971 ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24.69 லட்சம் ஆகும். சென்னையின் இப்போதைய மக்கள் தொகை 48.28 லட்சம் ஆகும். சென்னை பெருநகரப் பகுதிகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும். ஆனால், இடைப்பட்ட காலத்தில் சென்னையின் மக்கள் தொகை பெருகிய அளவுக்கு அடிப்படைக் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்பட்டனவா? என்றால் இல்லை என்பது தான் பதில். 

1970-ஆம் ஆண்டுகளில் சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள் என 3,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 40 ஏரிகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள நீர்நிலைகள் அனைத்தும் கான்க்ரீட் காடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. வள்ளுவர் கோட்டம் உட்பட சென்னையின் அடையாளங்களாக பார்க்கப்படும் பல கட்டிடங்கள் ஏரி மற்றும் நீர்நிலைகளை அழித்து கட்டப்பட்டவை.
சென்னையில் நீர் ஓடும் பாதைகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்டன. 

பொதுவாகவே, வெள்ள நீர் இயல்பாகவும், விரைவாகவும் வழிந்தோடும் நில அமைப்பு சென்னைக்கு உண்டு.  கூவம், அடையாறு ஆகிய இரு ஆறுகள், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட 16 கால்வாய்கள் இயற்கையாக அமைந்திருந்தன. இவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டிருந்தால் சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்து விடும். 

ஆனால், இப்போது 2 ஆறுகளும் சாக்கடைகளாக மாற்றப்பற்றதுடன், கால்வாய்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இந்த அனைத்து சீர்கேடுகளுக்கும்  மூல காரணம்  அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான். நீர்நிலைகள் அனைத்தையும் வளைத்து மனைகளாக்கி விற்பனை செய்த பாவம் இந்த இரு கட்சிகளையே சாரும். அவ்வகையில் சென்னை இன்று எதிர்கொள்ளும் சீரழிவுகளுக்கு இவை தான் பொறுப்பேற்க வேண்டும்.

யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே! என்பதைப் போல சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் காய்ச்சல், காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. இதைத் தடுக்க எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மழை நீர் வடிந்த இடங்களில் தொற்று நோய்த் தடுப்பு மருந்து தெளிப்பு,  வெள்ளம் பாதித்த மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குதல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். 

இவை தவிர அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், இவற்றில் இதுவரை எந்த பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதில் இருந்தே ஆட்சியாளர்களின் அலட்சியத்தை தெரிந்து கொள்ளலாம். இனியாவது உறக்கத்தைக் கலைந்து  சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது உட்பட அனைத்து வகையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒட்டுமொத்த மாநகரமும் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், மழை மூலம் கிடைத்த தண்ணீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் தரும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரிகள் நிரம்பி வீணாக கடலில் கலந்த தண்ணீரின் அளவு மட்டும் 25 டி.எம்.சி.க்கும் அதிகம் ஆகும். 

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக  மழை  பெய்யும் போதெல்லாம் கூடுதல் நீர் வீணாக கடலில் கலப்பது வாடிக்கையாகி விட்டது. இப்போது பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும், பூண்டி ஏரியில் இருந்து 2,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக்கப்பட்டிருக்கிறது.  

சென்னையின் குடிநீர் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கவும், பருவமழைகளின் போது வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கவும்  கூடுதலாக குறைந்தபட்சம் 10 புதிய ஏரிகளாவது அமைக்கப்பட வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் ஒரு ஏரியைக் கூட புதிதாக அமைக்கவில்லை. இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போவதாக கூறி இந்த கட்சிகளின் தொலைநோக்குப்பார்வை இவ்வளவு  தான்.

தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து சுரண்டுவது தான் இந்த இரு கட்சிகளின் நோக்கமாகும். தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் பாதித்தால் ஆட்சியாளர்களை அ.தி.மு.க. விமர்சிப்பதும், அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் வந்தால் ஆட்சியாளர்களை தி.மு.க. விமர்சிப்பதும் மட்டுமே நடக்கும். இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை. 

மழைக் காலங்களில் பொறுப்பற்ற அணுகுமுறையால் ஒரு கட்சி மக்களை பலி கொடுப்பதும், அதை வைத்து இன்னொரு கட்சி அரசியல் செய்வதும் வாடிக்கையாகி வருவதைப் பார்க்கும் போது ‘‘இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?’’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

மாறி மாறி ஆட்சி... மாற்றி மாற்றி ஏமாற்றம் என்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் நாடகம் இனியும் நீடிக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மக்களை மதிக்காத இரு கட்சிகளுக்கும் மறக்க முடியாத தண்டனையை அடுத்த ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் வழங்கப் போவது உறுதி! இவ்வாறு கூறியுள்ளார்.

மழை, வெள்ள நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 
மழை, வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மழை, வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கியுள்ள 500 கோடி ரூபாய் நிதி உதவி போதாது. கடலூர் மாட்டத்திற்கு மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி தேவைப்படும். ஆகையால் வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அது விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும். 

வெள்ள பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அரசு பணம் வழங்குவதற்கு முன்பாக தேர்தல் வந்துவிடும். அப்போது என்ன செய்வார்கள் என்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். அது தேர்தலுக்காக கொடுப்பதுபோல் இருக்கும். மேலும் ஆயிரம், இரண்டாயிரம் கொடுக்கிறோம். ஓட்டு போடுங்கள் என்பார்கள். அதற்குதான் பயன்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி கிடைக்காது. ஆகவே வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதோடு, அது விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சென்னை: தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்

சென்னை: தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்

இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய மழை சற்று ஓய்ந்திருக்கிறது. அதேநேரத்தில் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நேரத்தில் இத்தகைய பாதிப்புக்கு காரணம் என்ன? என்பதை ஆய்வு செய்வதும், இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சிந்தித்து திட்டம் வகுப்பதும்தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்

மழை நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி நிதி போதுமானது அல்ல. கடலூர் மாவட்டத்தில் மட்டுமே சேதத்தின் மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதால் மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கோர வேண்டும்.மத்திய அரசின் அதிகாரிகள் குழுவை வரவழைத்து மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பிட வேண்டும். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் அதன் சந்தை மதிப்புக்கு குறையாமல் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.தொடர் மழையால் கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஏற்பட்ட மிகக்கடுமையாக பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். முதலமைச்சர் தான் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அல்லது இந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் இதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். துணைத் தலைவரிடம் அனைத்து நிர்வாக அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.இந்த ஆணையத்திற்கு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மாவட்ட அளவில் இந்த ஆணையத்துக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். புயல், மழை உள்ளிட்ட இயற்கை சேதங்கள் ஏற்படும்போது மாநில அரசை எதிர்பாராமல் இந்த அமைப்பே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும். மழை, புயல் வருவதற்கு முன்பாகவே இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.இந்த பணிகளை மேற்கொள்வதற்காக வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றிலிருந்து தேவையான அதிகாரிகளை அழைத்துக்கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, 2011 ஆண்டின் கடைசி நாளில் தாக்கிய தானே புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து தமிழகத்தை ஆண்ட கட்சிகள் பாடம் கற்றிருக்க வேண்டும். எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. ஆனால், 2004ம் ஆண்டில் சுனாமி தாக்குதலில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் கவலையடைந்த மத்திய அரசு, 2005 ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.அதன்பின்னர், இந்தியாவின் பேரிடர் மேலாண்மையில் அந்த ஆணையம் மிகச்சிறப்பாக பங்காற்றி வருகிறது. தமிழகத்திலும், பேரிடர் மேலாண்மையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

Monday, November 16, 2015

பெட்ரோல், டீசல் விலைகளை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராமதாஸ் கண்டனம்

 
பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரித்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். விலைகளை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 36 பைசா உயர்ந்து ரூ.61.38 ஆகவும், டீசல் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.42.00 ஆகவும் மாறியுள்ளன. இவ்விலை உயர்வு சட்டவிரோதமானது; கண்டிக்கத்தக்கது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. இன்னும் கேட்டால் இம்மாதத் தொடக்கத்தில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 44.72 டாலராக இருந்தது. கடந்த 13 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 42.41 டாலராக குறைந்து விட்டது. அதன்படி பார்த்தால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்க முடியாததாகும்.

உண்மையில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 40 பைசா குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்திவிட்டன. அதன்பின் நவம்பர் 7 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.60 வீதமும், டீசல் மீதான கலால் வரியை 40 காசுகளும் உயர்த்துவதாக மத்தியஅரசு அறிவித்திருந்தது. அதேநேரத்தில் இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது; இந்த சுமையை நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தாராளம் காட்டின. ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக கலால் வரி உயர்வை ஈடு கட்டும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியிருக்கின்றன. மொத்தத்தில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து மக்களை ஏமாற்றியிருக்கின்றன.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், அதன் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு தருவதற்கு பதிலாக பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை ரூ.9.35 அளவுக்கும்,  டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ.6.90 அளவுக்கும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத, தாங்கிக்கொள்ள முடியாத சுமை ஆகும். பன்னாட்டு சந்தையில் இப்போதைய  நிலையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 42.41 டாலராக உள்ளது. இதற்குமுன் 2004-ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை இதே அளவில்(43.05 டாலர்) இருந்த போது  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.41.25 ஆகவும், டீசல் விலை ரூ.29.30 ஆகவும் இருந்தது. ஆனால்,  இப்போது சுமார் 20 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இது முழுக்க முழுக்க மக்கள் மீது சுமத்தப்பட்ட கூடுதல் சுமையாகும். இந்த சுமையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மீது கடந்த ஓராண்டில் விதிக்கப்பட்ட அனைத்து கூடுதல் வரிகளையும் நீக்கி விட்டு, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டு எரிபொருட்களுக்கு புதிதாக விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Sunday, November 15, 2015

மழை வெள்ளம் என்றால் சேதம் தவிர்க்க முடியாதது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது பொறுப்பற்ற தனம்

சென்னை: மழை வெள்ளம் என்றால் சேதம் தவிர்க்க முடியாதது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது பொறுப்பற்ற தனம். தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக ்கையையும், அதில் அவர் கூறியுள்ள காரணங்களையும் ராமதாஸ் சாடியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 ஆம் தேதி காலை முதல் 10 ஆம் தேதி காலை வரை நெய்வேலியில் 48 செ.மீ. பண்ருட்டியில் 35 செ.மீ. சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரத்தில் தலா 34 செ.மீட்டரும் மழை பெய்தது உண்மை தான். ஆனால், இம்மழையால் கடலூர் மாவட்டம் இழந்தது மிக அதிகம். 48 செ.மீ. மழைக்காக 40 அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதும், ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதும் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏற்பட்ட சேதங்கள் அனைத்துக்கும் தமிழக அரசின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும் ஊழல் தான் காரணமாகும். ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்கள் 3/12 ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்கள் கடலூர் மாவட்டத்தில் மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களில் 40 விழுக்காடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஓடி ஆறுகளில் கலக்க வகை செய்யப்பட்டிருந்தாலே பெருமளவு சேதங்களைத் தடுத்திருக்கலாம். ஆனால், அதிமுக அரசு அதை செய்யவில்லை. காரணம்... ஆக்கிரமித்தவர்களில் கணிசமானவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது தான். நிதி என்னவாயிற்று 4/12 நிதி என்னவாயிற்று அதுமட்டுமின்றி, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப் பட்ட நிதி முற்றிலும் பதுக்கப்பட்டு விட்டதோ என எண்ணும் அளவுக்கு எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த பணிகள் செய்யப்பட்டிருந்தால் கடலூர் மாவட்டத்தில் 48 செ.மீ. மழை பெய்தது என்பது சாதாரண செய்தியாக இருந்திருக்குமே தவிர, மிகப்பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்காது என்பது உண்மை. குறைந்தபட்சம் அதையாவது செய்திருக்கலாம் 5/12 குறைந்தபட்சம் அதையாவது செய்திருக்கலாம் இப்பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையில், கடலூர் மாவட்டம் அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தால் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம். ஆனால், இவற்றில் எதையுமே தமிழக அரசு செய்யவில்லை. ஒரு நாள் மழைக்கே மிதந்த சென்னை 6/12 ஒரு நாள் மழைக்கே மிதந்த சென்னை சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னை பெருநகர பகுதியின் 40% முறையான திட்டமிடல் இல்லாமல் உருவாக்கப்பட்டது தான் இதற்கு காரணம். குறிப்பாக வேளச்சேரி, முகப்பேர், அம்பத்தூர் ஆகிய பகுதிகள் நீர்நிலைகளை தூர்த்து உருவாக்கப்பட்டவை. இந்த நகரங்கள் உருவாக்கப்பட்ட பகுதிகளைத் தவிர நீர்நிலைகளின் மற்ற பகுதிகள் தூர்வாரப்பட்டு, அவற்றின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்த்திருக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யவில்லை. வடிகால் வசதி சரியில்லை 7/12 வடிகால் வசதி சரியில்லை சென்னையில் புதிதாக மழைநீர் வடிகால்களை உருவாக்க எல்லைக்கோட்டு வரைபடங்கள் (Contour Maps) தேவை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொலையுணர்வு மையம் இத்தகைய வரைபடங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்துக் கொடுத்தும், அதை முறையான வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நீர்நிலைகளை அழித்து விட்டனர் 8/12 நீர்நிலைகளை அழித்து விட்டனர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்த இரண்டாவது பெருந் திட்டத்தில் (Chennai Second Master Plan) நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக தயாரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் இப்போதைய அ.தி.மு.க. அரசோ, முந்தைய தி.மு.க அரசோ ஆர்வம் காட்டவில்லை. நீர்நிலைகள் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல ஆய்வுகளை நடத்தியுள்ள போதிலும், அத்திட்டங்கள் எதுவும் இன்னும் நடைமுறைப்படுத்தும் நிலைக்கு கூட வரவில்லை. மக்களபை் பற்றிக் கவலைப்படாத திமுக, அதிமுக 9/12 மக்களபை் பற்றிக் கவலைப்படாத திமுக, அதிமுக தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஜெ. பேச்சை ஏற்க முடியாது 10/12 ஜெ. பேச்சை ஏற்க முடியாது ஆனால், தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வை யிடுவதும், அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் கால் நனைப்பதும் தமது உடல் நலத்திற்கு கேடு என்று அஞ்சும் முதலமைச்சர் ஜெயலலிதா, மழை&வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கான மக்களை சிறுமைப்படுத்தும் வகையில், மழை பெய்தால் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என கூறியிருக்கிறார். ‘‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்'' என்று கூறி இலங்கைப் போரில் தமிழர்கள் படுகொலை செய்ததை நியாயப்படுத்திய ஜெயலலிதாவிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது. முடிவுரையைத் தீட்ட மக்கள் தயார் 11/12 முடிவுரையைத் தீட்ட மக்கள் தயார் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் 60&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும், ரூ.1000 கோடி இழப்பு ஏற்படவும் காரணமான ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள் என்பது மட்டும் உண்மை என்று அவர் கூறியுள்ளார். 

Saturday, November 14, 2015

மழை பெய்தால் சேதம் தவிர்க்க முடியாததா? பொறுப்பின்மையின் உதாரணம் ஜெயலலிதா! : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை
’’தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,‘‘அதிக அளவு மழை பொழியும் போது சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும்’’ என கூறியிருக்கிறார். மழை&வெள்ள பாதிப்புகளை தடுக்க சிறு துரும்பை கூட நகர்த்தாமல் தமிழகம் சந்தித்த எல்லா பாதிப்புகளுக்கும் இயற்கை மீது பழி போட்டு தப்பிக்க முயல்வது பொறுப்பற்றதனமாகும்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 ஆம் தேதி காலை முதல் 10 ஆம் தேதி காலை வரை நெய்வேலியில்  48 செ.மீ. பண்ருட்டியில் 35 செ.மீ. சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரத்தில் தலா 34 செ.மீட்டரும் மழை பெய்தது உண்மை தான். ஆனால், இம்மழையால் கடலூர் மாவட்டம் இழந்தது மிக அதிகம். 48 செ.மீ. மழைக்காக 40 அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதும், ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதும் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏற்பட்ட சேதங்கள் அனைத்துக்கும் தமிழக அரசின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும்  ஊழல் தான் காரணமாகும்.

கடலூர் மாவட்டத்தில் மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களில் 40 விழுக்காடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி  மழைநீர் ஓடி ஆறுகளில் கலக்க வகை செய்யப்பட்டிருந்தாலே பெருமளவு சேதங்களைத் தடுத்திருக்கலாம். ஆனால்,  அதிமுக அரசு அதை செய்யவில்லை. காரணம்... ஆக்கிரமித்தவர்களில் கணிசமானவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது தான். அதுமட்டுமின்றி, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப் பட்ட நிதி முற்றிலும் பதுக்கப்பட்டு விட்டதோ என எண்ணும் அளவுக்கு எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த பணிகள் செய்யப்பட்டிருந்தால் கடலூர் மாவட்டத்தில் 48 செ.மீ. மழை பெய்தது என்பது சாதாரண செய்தியாக இருந்திருக்குமே தவிர, மிகப்பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்காது என்பது உண்மை.

இப்பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையில், கடலூர் மாவட்டம் அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தால் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம். ஆனால், இவற்றில் எதையுமே தமிழக அரசு செய்யவில்லை.

சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னை பெருநகர பகுதியின் 40% முறையான திட்டமிடல் இல்லாமல் உருவாக்கப்பட்டது தான் இதற்கு காரணம். குறிப்பாக வேளச்சேரி, முகப்பேர், அம்பத்தூர் ஆகிய பகுதிகள் நீர்நிலைகளை தூர்த்து உருவாக்கப்பட்டவை.  இந்த நகரங்கள் உருவாக்கப்பட்ட பகுதிகளைத் தவிர நீர்நிலைகளின் மற்ற பகுதிகள் தூர்வாரப்பட்டு, அவற்றின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்த்திருக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யவில்லை.

சென்னையில் புதிதாக மழைநீர் வடிகால்களை உருவாக்க எல்லைக்கோட்டு வரைபடங்கள் (Contour Maps) தேவை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொலையுணர்வு மையம் இத்தகைய வரைபடங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்துக் கொடுத்தும், அதை முறையான வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகள்  பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்த இரண்டாவது பெருந் திட்டத்தில்(Chennai Second Master Plan) நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக தயாரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் இப்போதைய அ.தி.மு.க. அரசோ, முந்தைய தி.மு.க அரசோ ஆர்வம் காட்டவில்லை. நீர்நிலைகள் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல ஆய்வுகளை நடத்தியுள்ள போதிலும், அத்திட்டங்கள் எதுவும் இன்னும் நடைமுறைப்படுத்தும் நிலைக்கு கூட வரவில்லை என்று பெருநகர திட்டமிடல் வல்லுனர் கூறியதாக நேற்றைய தி ஹிந்து ஆங்கில நாளிதழில்  Rain spotlights the perils of poor planning என்ற தலைப்பில் வெளியான செய்திக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள்.  ஆனால், தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வை யிடுவதும், அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் கால் நனைப்பதும் தமது உடல் நலத்திற்கு கேடு என்று அஞ்சும் முதலமைச்சர் ஜெயலலிதா,  மழை&வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கான மக்களை சிறுமைப்படுத்தும் வகையில், மழை பெய்தால் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என கூறியிருக்கிறார். ‘‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’’ என்று கூறி இலங்கைப் போரில் தமிழர்கள் படுகொலை செய்ததை நியாயப்படுத்திய ஜெயலலிதாவிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது.

மழை& வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் 60&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும், ரூ.1000 கோடி இழப்பு ஏற்படவும் காரணமான ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.’’

Friday, November 13, 2015

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர்: ராமதாஸ் கண்டனம்

 

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை, வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர் என பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகரில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதுடன், அனைத்து வகை தொற்று நோயும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அண்மைக் காலங்களில் இல்லாத வகையில் நேற்றிரவு 2 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையில் 160 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதனால் சென்னை மாநகரில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளும் தண்ணீரில் மூழ்கி விட்டன. மேலும், சாலைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்வண்டிப் பாதைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் தொடர்வண்டிப் போக்குவரத்தும் பாதிக்கப்  பட்டிருக்கிறது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

சென்னை புறநகர் மற்றும் வட சென்னையில் 4 நாட்களாக நீடிக்கும் மழையால் அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வார்த்தைகளில் அடக்க முடியாது. வடசென்னைக்கு செல்லும் அனைத்து சாலை சுரங்கப் பாதைகளிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் வட சென்னை சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்டு தனித் தீவாக காட்சியளிக்கிறது. சென்னை அம்பத்தூர் பகுதியிலுள்ள பட்டரவாக்கம் ஏரி, தாங்கல் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளும், குளங்களும் உடைந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. கொளத்தூர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பது மட்டுமின்றி, கழிவு நீர் குழாய்கள் உடைந்து விட்டதால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான இராதாகிருஷ்ணன் நகரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அத்தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதாலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து விட்டதாலும் தொற்று நோய் பரவும் ஆபத்து உருவாகியுள்ளது. சென்னையின் வணிகத் தலமான தியாகராய நகரில் கூட மழைநீரை வடியச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. வேளச்சேரி, மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அங்குள்ள மக்கள் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர்.

மழை & வெள்ளத்தால் சென்னை மாநகர மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில், இதைப்பற்றி முதலமைச்சரோ, சென்னை மாநகர மேயரோ எந்த கவலையும் கொள்ளவில்லை. மீட்புப் பணிகளை முடுக்கி விட வேண்டிய மாநகர மேயர் இன்று மதியம் வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் முதலமைச்சரான ஜெயலலிதாவும் சென்னையில்  நிவாரணப் பணிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை.

சென்னையில் பெய்த 16  செ.மீ. மழை என்பது அதிகம் தான் என்றாலும் சமாளிக்க முடியாததல்ல. ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சென்னையின் அனைத்து பகுதிகளும் குளங்களாக மாறுவதற்கு  காரணம் மழை நீர் வெளியேறும் அனைத்து தடங்களும், நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏரி, குளங்களும்  தமிழகத்தை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தான். குறைந்தபட்சம் மழைக் காலத்திற்கு முன்பாக மழைநீர் வடிகால்களை தூர்வாரியிருந்தால் கூட நிலைமை மோசமாகாமல் தடுத்திருக்கலாம். ஆனால், ஊழல் செய்வதைத் தவிர வேறு எதற்கும் நேரமில்லாத  அதிமுக அரசும், மாநகராட்சியும் இவற்றை செய்யாததால் தான் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.

தேர்தலில் மக்கள் வெற்றியைத் தந்தது ஆட்சி அதிகாரத்தின் ஆடம்பரங்களை அனுபவிக்கவும், ஊழல் செய்யவும் தான் என்ற நினைப்பிலிருந்து விடுபட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தான் மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற யதார்த்தத்திற்குள் வர வேண்டும். சென்னை மாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Thursday, November 12, 2015

நிவாரண உதவி கேட்ட அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்துவதா? : ராமதாஸ் கண்டனம்


நிவாரண உதவி கேட்ட அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்துவதா என  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தமிழக அரசு, அப்பணிகளை செய்யாததால் எழுந்துள்ள எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு 5 நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் 500&க்கும் மேற்பட்ட  குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. அந்த பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  அங்கிருந்து அழைத்து வரப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட மக்களின் நிலை வன்னி கம்பி வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட தமிழர்களின் நிலையை விட மிக மோசமாக உள்ளது என்பது தான் உண்மை.

ஒரு நிவாரண முகாமில் 2000 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தால், அவர்களில் 500 பேருக்கான உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பால் கூட வழங்கப்படுவதில்லை என்பதால் பச்சிளம் குழந்தைகள் பசியில் துடிப்பது பரிதாபமாக உள்ளது. வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாததால் அங்குள்ள மக்களால் இயல்பாக வாழ முடியவில்லை.

மழையால் ஏற்பட்ட வெள்ளமே இன்னும் வடியாத நிலையில், வீராணம் ஏரியில் பெருகி வரும் நீரை மாவட்ட நிர்வாகம் அவசர அவசரமாக திறந்து விட்டிருக்கிறது. வீராணம் ஏரி நீரை முறைப்படுத்தி திறந்து விட்டிருந்தால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம். ஆனால், சற்றும் பொறுப்புணர்வு இல்லாமல் வீராணம் ஏரி நீர் திறந்து விடப்பட்டதால்  அதை சுற்றியுள்ள கிராமங்களில் நிலைமை  மோசமடைந்திருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான துணிசிராமேடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி சிதம்பரம்&காட்டுமன்னார்கோவில் சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போராட்டம் நடத்திய மக்களிடம் அதிகாரிகளை அனுப்பி பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, காவல்துறையினரை அனுப்பி தடியடி நடத்தியிருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி ஒருவரை காவல்துறை உயரதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி, மிதித்து கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்ந்த இடத்தை விட்டு அகதிகளைப் போல தங்கியிருப்பதும்,  எந்த நேரத்தில் பாம்புகளும், நச்சுப் பூச்சிகளும் கடிக்குமோ? என அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதும்,  தாங்களும் பசியில் வாடி, தங்களின் குழந்தைகளும் பசியில் துடிப்பதைக் கண்டு வேதனைப்படுவதும்  யாருக்கும் நேரக்கூடாத கொடுமைகள் ஆகும். இந்த துயரங்கள் எல்லாம் நாளுக்கு ஒரு மாளிகையில் வாழும் ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் உணவும், பாலும் கேட்டு போராட்டம் நடத்தியவர்களை கண்மூடித்தனமாக தாக்க வைத்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் உள்ள தங்களுக்கு எதிராக சிறு எதிர்ப்பு கூட எழக்கூடாது என்ற ஆணவத்தின் வெளிப்பாடு தான் இதுவாகும்.

ஆணவத்தின் உச்சி என்பது அழிவுக்கு இட்டு செல்லும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அதை உணர்ந்து ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களை தடி கொண்டு அடக்குவதற்கு பதிலாக அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Wednesday, November 11, 2015

வட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 

வட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அரசு எந்திரம் காட்டி வரும் அலட்சியத்தால் மக்கள் கடுமையாக கோபமடைந்துள்ளனர்.

வட கிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டது. புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று இரவு கடலூர்&புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் புயல் ஆபத்திலிருந்து தமிழகம் தப்பிவிட்ட போதிலும் சில நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கு குடியிருந்த மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலைகளில் பல அடி உயரத்திற்கு மழை நீர் ஓடியதாலும், மரங்கள் சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விபத்துக்களும் ஏற்பட்டன. தொடர்மழையால் தொடர்வண்டி சேவையும் பாதிக்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.

தொடர் மழையால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டவை கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தான். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மட்டும் நேற்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையிலான 9 மணி நேரங்களில் 450 மில்லிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் நிலக்கரி சுரங்கங்களில் வெள்ளம் புகுந்து பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள பெரியகாட்டுசாகை அருந்ததி நகரில் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பலரது உடல்கள் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுவதாலும், பலரை காணவில்லை என்பதாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர கடலூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகமெங்கும் இன்று காலை வரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

 தொடர்மழையால் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் இயல்பு வாழ்க்கையை வாழ முடியவில்லை. வழக்கமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய தீபஒளித் திருநாள் தொடர் மழையாலும் அதன் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசாலும் சோகமான தீபஒளியாக மாறிவிட்டது.

வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும்  சாலைகளை சீரமைக்க வேண்டும்& மழை வெள்ளப் பாதிப்புகளை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொடநாடுக்கு ஓய்வு எடுக்கச் சென்று விட்டதால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. அதனால் தான் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்திருக்கின்றன. மழை & வெள்ளை நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் எங்கும் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை. பல இடங்களில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பணிகளை மேற்கொள்வது போல படம் எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு சென்று விடுகின்றனர் என்பது தான் கள நிலைமை. இதேநிலை நீடித்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கே இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

எனவே, மழை&வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்பி நிவாரணப் பணிகளை விரைவு படுத்துவதுடன், முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அதேபோல் மழை வெள்ள பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி போதுமானதல்ல என்பதால் அவற்றை உயர்த்தித் தர வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த வளர்ச்சியில் கடைசி இடம்; இதுவே ஜெயலலிதா அரசின் சாதனை: ராமதாஸ்

 

‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ முதல் ‘ நான்காண்டு ஆட்சி... நாலாபுற வளர்ச்சி’’ என ஒவ்வொரு ஆண்டும் செய்யாத சாதனைகளுக்காக அ.தி.மு.க. அரசு விளம்பரம் செய்து வருகிறது. ஆனால், ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்... உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பதைப் போல அ.தி.மு.க. அரசின் செயல்களை ஆய்வு செய்தால் ஏமாற்றமும், விரக்தியும் மட்டுமே விஞ்சுகிறது.

2015 ஆம் ஆண்டில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்ற குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை State of States என்ற தலைப்பில் இந்தியா டுடே ஆங்கில இதழ் வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 10 துறை செயல்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள தர வரிசைப் பட்டியலில், மொத்தமுள்ள 21 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 20 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உத்தர்காண்ட் மாநிலத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் தமிழகத்தைக் காட்டிலும் சிறப்பாக  முன்னேற்றம் அடைந்துள்ளன. இப்பட்டியலில் குஜராத் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், நமது அண்டை மாநிலங்களான கேரளமும், கர்நாடகமும் முறையே 2, 3&ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு&காஷ்மீர் நான்காவது இடத்தைப் பிடித்திருகிறது. வளராத மாநிலங்கள் என்று கூறப்படும் பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களை விட வளர்ச்சியில் பின்தங்கியிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானமாகும்.

துறைவாரியான வளர்ச்சியில் பார்த்தால் விவசாயம், உள்ளடக்கிய மேம்பாடு ஆகியவற்றில் தமிழகம்  கடைசி (21 ஆவது) இடத்தைப் பிடித்திருக்கிறது. வேளாண்துறையில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அம்மாநிலத்தில் விவசாயிகளுக்கு மைனஸ் 10 (-10) விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாசன வசதி பெறும் நிலங்களின் பரப்பு 45% அதிகரித்திருக்கிறது. அதனால் அந்த மாநிலம் வேளாண்மையில் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், வட்டியில்லாக் கடன் வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு அதை செயலில் காட்டாமல், உழவர்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை என்று கூறி அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்யும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த புதிதாக பாசன வசதி ஏற்படுத்தித் தரப்பட்ட நிலங்களின் பரப்பளவை விட, வீட்டு மனைகளாக்கப்பட்டு விவசாயம் விரட்டியடிக்கப்பட்ட நிலங்களின் பரப்பளவு பல மடங்கு அதிகம் ஆகும். அதன்விளைவு... தமிழகத்திற்கு கடைசி இடம்.  உள்ளடக்கிய மேம்பாட்டில், புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு வீடு, குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப் பட்டிருப்பதுடன், வங்கி, அஞ்சலக வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாதது வெட்ககேடானது.

உட்கட்டமைப்பு வசதிகளில் 17 ஆவது இடத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவையான கல்வித் துறையில் தமிழகம் 13 ஆவது இடத்தில் தத்தளிக்கிறது. கல்வியைக் கடைசரக்காக்கி, அரசு பள்ளிகளை திட்டமிட்டு அழித்தது தான் இந்த அவல நிலைக்கு காரணமாகும். தூய்மையில் பத்தாவது இடம், முதலீடு மற்றும் நிர்வாகத்தில் 9 ஆவது இடம், சுற்றுச்சூழலில் எட்டாவது இடம், சுகாதாரத்தில் ஐந்தாவது இடம் என தமிழகத்தின் பின்னடைவு நீடித்துக் கொண்டே செல்கிறது.

2012 & 13 ஆம் ஆண்டில் 3.39% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்தது. அதே ஆண்டில் வேளாண்துறையில் மைனஸ் 12.1 (-12.1) விழுக்காடும், தொழில்துறையில் மைனஸ் 1.30(-1.30) விழுக்காடும் வளர்ச்சி பெற்று மிகப் பெரிய அவமானத்தை தமிழ்நாடு சந்தித்தது. மேலும் அரசின் நேரடிக் கடன் ரூ.2.11 லட்சம் கோடி, பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.2.01 லட்சம் கோடி என மொத்தம் ரூ.4.12 லட்சம் கோடி கடனை வாங்கிக் குவித்து தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ.57,142 கடன் சுமையை சுமத்தியது தான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை ஆகும்.

ஊடகங்களை மிரட்டியும், விளம்பரங்கள் தர மாட்டோம் என்று அச்சுறுத்தியும் அரசுக்கு எதிரான செய்திகள் வெளிவரவிடாமல் தடுப்பதிலும், மக்கள் வரிப்பணத்தில் பல நூறு கோடி ரூபாயை வாரி இறைத்து தமிழகம் செழிப்பதாக விளம்பரங்களை வெளியிட்டு ஏமாற்றுவதிலும் வேண்டுமானால் ஜெயலலிதா அரசு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளிலும், குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளிலும் தங்களின் வாழ்க்கைத் தரம் எப்படி சீரழிந்திருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை வலிமையான வாக்குகள் மூலம் பழி தீர்க்க காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது மக்களின் கோபத்தை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து சீரழித்த இரு கட்சிகளும் உணருவார்கள் என்பது உறுதி! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

வெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அன்புமணி

 


கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமபுரம் பகுதி வாழை விவசாயிகளுக்கு ஆறுதல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணிராமதாசு கூறினார். ஆலப்பாக்கம் அருகே உள்ள குள்ளஞ்சாவடி சாலையில் இருந்து வெள்ள சேதங்களை பார்வையிட்டார். 

Tuesday, November 10, 2015

வட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 

வட மாவட்டங்களில் மழை நிவாரணப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அரசு எந்திரம் காட்டி வரும் அலட்சியத்தால் மக்கள் கடுமையாக கோபமடைந்துள்ளனர்.

வட கிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டது. புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று இரவு கடலூர்&புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் புயல் ஆபத்திலிருந்து தமிழகம் தப்பிவிட்ட போதிலும் சில நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கு குடியிருந்த மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலைகளில் பல அடி உயரத்திற்கு மழை நீர் ஓடியதாலும், மரங்கள் சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விபத்துக்களும் ஏற்பட்டன. தொடர்மழையால் தொடர்வண்டி சேவையும் பாதிக்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.

தொடர் மழையால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டவை கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தான். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மட்டும் நேற்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையிலான 9 மணி நேரங்களில் 450 மில்லிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் நிலக்கரி சுரங்கங்களில் வெள்ளம் புகுந்து பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள பெரியகாட்டுசாகை அருந்ததி நகரில் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பலரது உடல்கள் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுவதாலும், பலரை காணவில்லை என்பதாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர கடலூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகமெங்கும் இன்று காலை வரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

 தொடர்மழையால் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் இயல்பு வாழ்க்கையை வாழ முடியவில்லை. வழக்கமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய தீபஒளித் திருநாள் தொடர் மழையாலும் அதன் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசாலும் சோகமான தீபஒளியாக மாறிவிட்டது.

வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும்  சாலைகளை சீரமைக்க வேண்டும்& மழை வெள்ளப் பாதிப்புகளை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொடநாடுக்கு ஓய்வு எடுக்கச் சென்று விட்டதால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. அதனால் தான் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்திருக்கின்றன. மழை & வெள்ளை நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் எங்கும் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை. பல இடங்களில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பணிகளை மேற்கொள்வது போல படம் எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு சென்று விடுகின்றனர் என்பது தான் கள நிலைமை. இதேநிலை நீடித்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கே இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

எனவே, மழை&வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்பி நிவாரணப் பணிகளை விரைவு படுத்துவதுடன், முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அதேபோல் மழை வெள்ள பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி போதுமானதல்ல என்பதால் அவற்றை உயர்த்தித் தர வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: