Friday, July 31, 2015

சொத்துக் குவிப்பு : ஜெ. விடுதலையை போற்றி அரசு செலவில் ஆவணப்படமா? ராமதாஸ் கண்டனம்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை போற்றும் வகையில் அரசு செலவில் ஆவணப்படம் எடுப்பதா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை போற்றும் வகையில் ‘தர்மம் வெல்லும்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு  அரசியல் பழிவாங்கலுக்காகத் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், அந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதன் மூலம் நீதி வெற்றி பெற்றிருக்கிறது என்றும் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில்  ஜெயலலிதா எப்படி விடுதலை செய்யப்பட்டார்? இவ்வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு எவ்வளவு தரமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ஜெயலலிதா சட்டவிரோதமாக வாங்கிய பரிசுப் பொருட்கள், சேர்க்காத சந்தாவுக்காக நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மூலம் கிடைத்த வருமானம் போன்றவற்றை வருவாயாக கணக்கிட்டும், ஜெயலலிதா செய்த செலவுகள் மற்றும் சொத்து மதிப்பைக் குறைவாக கணக்கிட்டும் தான் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவை மட்டுமின்றி, ஜெயலலிதாவின் வருவாயை ரூ.10.67 கோடி என்று கூட்டுவதற்கு பதிலாக ரூ.24.17 கோடி என்று கூட்டி, அதனடிப்படையில் அவரும், அவரது கூட்டாளிகளும் விடுவிக்கப்பட்டது  நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடக்காதது ஆகும். இந்த அளவுக்கு சட்டத்தை வளைத்தும் கூட  ஜெயலலிதா விடுதலை ஆவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. அதன்பின் 10% வரை கூடுதலாக சொத்து சேர்க்கலாம் என்று பொருந்தாத உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டியும், 20% வரை கூடுதலாக சொத்து சேர்க்கலாம் என்ற சம்பந்தமே இல்லாத ஆந்திர அரசின் சுற்றறிக்கையைக் காரணம் காட்டியும் தான் சொத்து வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதை சட்ட வல்லுனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தம்மைத் தாமே போற்றிக் கொள்ளும் வகையில், அரசு செலவில் ஆவணப்படத்தை ஜெயலலிதா தயாரித்து வெளியிட்டு மகிழ்வதை ஏற்க முடியாது; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு வகையில் பார்த்தால் இந்த ஆவணப்படம் தமிழக அரசுக்கு எதிரானது ஆகும். ஜெயலலிதா  மீது சொத்துக்குவிப்பு வழக்கைத் தொடர்ந்தது தமிழக அரசின் கையூட்டு ஒழிப்புத் துறை தான். ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்ததை விமர்சிப்பது அரசின் செயல்பாட்டை குறை கூறுவதாகும். ஜெயலலிதாவை போற்ற வேண்டும் என்பதற்காக அரசு செலவில் அரசை விமர்சிப்பது சரியானதல்ல.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது சரியா.... தவறா? என்ற வாதத்தை  ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் கூட, ஜெயலலிதாவைப் பற்றி இப்படி ஒரு ஆவணப்படம் அரசு செலவில் வெளியிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்டதும், அதிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அரசு நிர்வாகத்துடன் எவ்வகையிலும்   தொடர்பில்லாதவை. சொத்துக்குவிப்பு வழக்கு என்பது ஜெயலலிதா என்ற தனி மனிதர் மீது தொடரப் பட்டதாகும். அவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதும், பின்னர் அவ்வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதும் அவரது தனிப்பட்ட விஷயங்கள். தமிழ்நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும் போது அவற்றை விட்டு விட்டு, ஜெயலலிதாவின் புகழ் பாடும் ஆவணப்படத்தை வெளியிடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.

எனவே, தர்மம் வெல்லும் என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையரங்குகளில் திரையிடப் படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்திரைப்படத்தை தயாரிக்கவும், இதுவரை திரையிடவும் ஆன செலவுகளை ஜெயலலிதாவிடமிருந்து வசூலிக்க மாநில ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, July 30, 2015

மீண்டும் தாதுமணல் அள்ள அனுமதியா? அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் : ராமதாஸ்

 



மீண்டும் தாதுமணல் அள்ள அனுமதியா? அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த இரு உத்தரவுகள் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இதன்மூலம் 23 மாதங்களாக மூடப்பட்டிருந்த குவாரிகள் திறக்கப்பட்டு தாது மணல் அள்ளும் பணி மீண்டும் தொடங்கவிருக்கிறது.

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தான் உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் இந்த இரு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்றும், மற்ற நிறுவனங்களுக்கு  விதிக்கப்பட்ட தடை தொடரும்; மற்ற நிறுவனங்கள் குறித்து ககன்தீப்சிங் பேடி குழு தாக்கல் செய்த அறிக்கை செல்லும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்காக வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாகவும், இதுகுறித்து சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் ஆஷிஷ்குமார் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி 08.08.2013 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ள தடை விதித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அம்மாவட்டத்தில் உள்ள தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த அப்போதைய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்தும் ஆணை பிறப்பித்தார்.

அதன்படி ஆய்வு செய்த ககன்தீப்சிங் பேடி குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நெல்லை, கன்னியாக்குமரி, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வந்த 71 தனியார் குவாரிகளிலும் தாது மணல் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை இப்போது வரை நீடிக்கும் நிலையில் தான் வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு சொந்தமான குவாரிகளில் மட்டும் தாது மணல் வெட்டி எடுக்க தடை நீக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நிறுவனங்கள் தொடர்பாக ககன்தீப்சிங் பேடி குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் செல்லாது என்று கூறியுள்ள நீதிமன்றம், இந்நிறுவனங்கள் மீதான குற்றச்சாற்று குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே. சர்மா தலைமையில் புதிய குழுவை அமைத்துள்ளது. இதற்காக கூறப்பட்டுள்ள காரணம்  மிகவும் வலுவில்லாத ஒன்றாகும்.


தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ககன்தீப்சிங் பேடி 1997&98 ஆம் ஆண்டில், அதாவது 18 ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றினார். அப்போது, அவர் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் வைகுண்டராஜன் புகார் செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட பகையை மனதில் கொண்டு தங்களுக்கு எதிராக அவர் அறிக்கை அளித்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் நீதிமன்றத்தில் வாதிட்டன. அதை உயர்நீதிமன்ற நீதிபதி இராஜா ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். தாது மணல் கொள்ளைக்கு தடை விதிக்கப்பட்டது பொருளாதாரம் மட்டுமின்றி தேசப்பாதுகாப்புடனும் தொடர்புடைய விஷயமாகும்.மிகச் சாதாரணமான காரணத்தை காட்டி இத்தடையை அகற்ற தமிழக அரசு அனுமதித்திருக்கக் கூடாது. தாது மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள காரணங்களை முன்வைத்து வலுவாக வாதாடி வைகுண்டராஜனுக்கு சொந்தமாக வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்ய வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறியது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. பேடி குழு அதன் முதல் அறிக்கையை 17.09.13 அன்று தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் 2 ஆண்டுகள் ஆகியும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. பேடி குழு அதன் இரண்டாம் கட்ட விசாரணையை முடித்து 20 மாதங்களாகியும் அதன் அறிக்கையை அரசு பெற்றுக்கொள்ளவில்லை. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாகத் தான் தமிழக அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது என்ற ஐயம்  வலுவாக  நிலவி வருகிறது. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை முதலமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது அந்நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மிக எளிதாக நீக்கப்பட்டதற்கு காரணம் இப்பிரச்சினையில் தமிழக அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டது தான் என்று சந்தேகிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியக் கடற்பகுதியிலிருந்து கடந்த 2002 முதல் 2012 வரையிலான 10 ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்ட மோனசைட் என்ற தாதுவின் மதிப்பு மட்டும் ரூ.60 லட்சம் கோடி ஆகும். கொள்ளையடிக்கப்பட்ட மோனசைட்டின் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதில் தமிழக கடலோரப் பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட மோனசைட்டின் மதிப்பு மட்டும் ரூ.45 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. தமிழகத்தில் 90% தாது மணல் வணிகம் வி.வி. மினரல்ஸ் குழுமத்திடம் தான் உள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுனரிடம் பா.ம.க. மனு அளித்துள்ளது. தாது மணல் கொள்ளைக்கு எதிராக பா.ம.க எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்த நிலையில், வி.வி. மினரல்ஸ் குழுமம்  எந்த தவறும் செய்யாத அப்பாவி என்பது போன்ற தோற்றத்தை நீதிமன்றத்தின் மூலமாக ஏற்படுத்த தமிழக அரசே துணைபோயிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய ககன்தீப்சிங் பேடி அப்பழுக்கற்ற அதிகாரி; எந்த சர்ச்சைக்கும் இடம் தராதவர். சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டன. பழி வாங்கும் உணர்ச்சியுடன்  அவர் செயல்பட்டார் என்ற குற்றச்சாற்று இதுவரை எழுந்ததில்லை. இத்தகைய சூழலில் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி தாது மணல் கொள்ளையர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்க தமிழக அரசு அனுமதித்தது மோசமான முன்னுதாரணமாகி விடும். இதேபோன்ற பழிவாங்கல் குற்றச்சாற்றை சகாயம் மீதும் சுமத்தி கிரானைட் கொள்ளை விசாரணையையும் முடக்கிவிட முடியும்.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இடைப்பட்ட காலத்தில் தாதுமணல் கொள்ளைக்கான ஆதாரங்களை வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் ஆகிய நிறுவனங்கள் அழிக்காமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண வழக்குகளில் எல்லாம் உச்சநீதிமன்றத்தை அணுகும் தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவில்லை எனில் வி.வி. மினரல்ஸ் குழுமத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவே மக்கள் கருதுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Monday, July 27, 2015

ஆசிரியர் இடமாற்ற விதிகளில் மாற்றம்: ஊழல், முறைகேட்டுக்கு வழி வகுக்கும்: ராமதாஸ்


 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: 
’’தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து வரும் தமிழக அரசு, அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக ஆசிரியர்கள் இடமாற்ற விதிகள் மாற்றியமைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வு ஆண்டு தோறும் நடத்தப்படும். ஒரு பள்ளியில் ஓர் ஆண்டு பணியாற்றினால் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்று இடமாற்றம் பெற முடியும். ஆனால், நடப்பாண்டிற்கான இடம் மாறுதல் கலந்தாய்வில் இந்த விதி மாற்றப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்றியிருந்தால் மட்டும் தான் இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக்கல்வித்துறை செயலர் தெரிவித்திருக்கிறார். இது அனைத்து ஆசிரியர்களுக்கும், குறிப்பாக ஆசிரியைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மாநில அளவில் நியமிக்கப்படுகின்றனர். இதனால், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர் அவரது சொந்த மாவட்டத்தில் பணியிடம் காலியாக இல்லாவிட்டால்,  அண்டை மாவட்டத்திலோ அல்லது அதைத் தாண்டிய மாவட்டத்திலோ தான் பணியில் சேர முடியும்.  அவ்வாறு பணியில் சேர்ந்து, குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பவர்கள் ஓராண்டு பணி செய்த பிறகு , சொந்த மாவட்டத்திற்கு இட மாறுதல் பெறுவர். ஆனால், புதிய விதி காரணமாக அவர்கள் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரிடும். இது அவர்களை கடுமையாக பாதிக்கும்.

புதிய விதிமுறையால் ஆசிரியைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுவர். கணவன், மனைவி ஆகிய இருவரில் ஒருவர் ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் கணவன் பணியிருக்கும் இடத்திற்கு மனைவியோ, மனைவி பணிபுயும் இடத்திற்கு கணவனோ இடமாற்றம் கோரும் பட்சத்தில் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், கணவர் சொந்த தொழில் செய்பவராக இருக்கும் பட்சத்தில், இந்த விதியிலிருந்து ஆசிரியை விலக்கு பெற முடியாது. அவர் இப்போது பணியாற்றும் இடத்தில் தான் மூன்றாண்டுகளுக்கு பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். இது ஆசிரியைகளுக்கு  தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் இடம் மாறுதல் கலந்தாய்வில் இத்தகைய விதிமுறை மாற்றம் இப்போது முற்றிலும் தேவையற்றதாகும். ஒருபுறம் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் எந்த வரையறைக்கும் உட்படாமல் இடமாறுதல்கள் செய்யப்படுகின்றன. இதற்கு ஒரே தகுதி பணம் தான். இப்போதும் கலந்தாய்வு அடிப்படையிலான இடமாறுதலை கடினமாக்கினால், நிர்வாக முறையிலான இட மாறுதலுக்கு தேவை அதிகரிக்கும்; இதைப் பயன்படுத்தி ஊழல் செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த விதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, ஊழல் மற்றும் முறைகேட்டுக்கு வழி வகுக்கும் இந்த விதி மாற்றத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ஆட்சியாளர்கள், இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகளை வழங்க வேண்டும்; 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கை இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை. தகுதித் தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க.வும் கடந்த  3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் நிறைவேற்றாத தமிழக அரசு, மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, 1200&க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மூடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசின் இந்த போக்கு தமிழகத்தில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.

தமிழகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக 15 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) முன் வைத்திருக்கிறது. அந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்காக  வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சனிக்கிழமை சென்னையில் ஜாக்டோ அமைப்பினர் நடத்தும் தொடர் முழக்கப் போராட்டத்தை பா.ம.க. ஆதரிக்கும்; பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’

Wednesday, July 22, 2015

452 எலைட் மதுக்கடைகளை திறக்க அரசு திட்டம் செய்திருப்பதை பா.ம.க தடுத்து நிறுத்தும் என அக்கட்சியின் நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டு மக்கள் நலனில் தங்களுக்கு சற்றும் அக்கறை இல்லை என்பதையும், மக்கள் மாண்டாலும்  மது வருமானத்தை பெருக்குவது தான் தங்கள் கொள்கை என்பதையும் அ.தி.மு.க. அரசு  மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. தமிழகத்திலுள்ள 226 வட்டங்களிலும் தலா 2 கடைகள் வீதம் மொத்தம் 452 எலைட் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிர்வாக சீர்கேடுகளால் அரசின் நிதிநிலைமை மோசமடைந்து இருப்பதாகவும், இலவசத் திட்டங்களுக்கு நிதி இல்லை என்றும் தெரிகிறது. இதை சமாளிக்கவே எலைட் மதுக்கடைகள் திறக்கப்படவிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த சில வாரங்களில் எலைட் மதுக்கடைகளை   திறக்க வேண்டும் என ஆணையிடப்பட்டிருப்பதால் அதற்கான ஏற்பாடுகளில் டாஸ்மாக் நிறுவனத்தின் மாவட்ட அளவிலான அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

வட்டத் தலைநகரங்களில் எலைட் மதுக்கடைகளை திறக்கும் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றதுமே பணக்காரர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 200 எலைட் மதுக்கடைகளை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பா.ம.க.  உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு காரணமாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாலும் இந்த திட்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. பின்னர் 2013 ஆம் ஆண்டு  அக்டோபரில் ஓசையின்றி சென்னை உள்ளிட்ட 10 மாநராட்சிகளிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் எலைட் மதுக்கடைகளை அரசு திறந்தது. 200 கடைகளை திறக்க இலக்கு நிர்ணயித்திருந்த அரசு அவற்றில் பெரும்பாலானவற்றை திறந்து விட்டது. எனினும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் போதாது என்பதற்காக இப்போது மேலும் 226 எலைட் மதுக்கடைகளை திறக்க திட்டமிட்டிருக்கிறது.

மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசு, அதன் திட்டச்செலவுகளுக்கான முதன்மை ஆதாரமாக மது விற்பனையை நம்பியிருப்பது தலைகுனிய வேண்டிய விஷயமாகும். மது விற்பனை மூலம் வருமானம் கிடைப்பதாக அரசு நம்பிக்கொண்டிருந்தாலும், மதுவால் அரசுக்கு கிடைக்கும் வருவாய்  குறைகிறது என்பது தான் உண்மை. தெருவுக்குத்தெரு திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் தொழிலாளர்களும், இளைஞர்களும் மது அருந்தி மயங்கி விடுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி தடைபடும்போது மாநிலத்தின் வருவாய் பெருமளவில் குறையும். இதை உணராத அரசு மதுவைக் கொடுத்து மக்களை கெடுப்பதுடன், அதன் வருவாய் ஆதாரங்களையும் அழித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தை மதுவிலிருந்து மீட்டெடுக்கவே முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்திவரும் மது ஒழிப்பு போராட்டங்களின் பயனாக மதுவின் கொடுமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூடுதலாக 226 மதுக்கடைகளை திறக்க அதிமுக அரசு துடிக்கிறதென்றால் மக்களின்  உணர்வுகளை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இதுவரைக் குடிக்காதவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி அதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தான் அரசின் திட்டம். இது மிகவும் குரூரமானது; உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் எலைட் மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அதைவிடுத்து எலைட் மதுக்கடைகளை திறக்க  அரசு முயன்றாலோ,  சாதாரண மதுக்கடைகளை புதிதாக திறக்க முயன்றாலோ பா.ம.க.வைச் சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் திரண்டு அறவழியில் போராட்டம் நடத்தி மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை முறியடிப்பர் என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காந்தியடிகளை பார்த்ததில்லை;எங்களைப் பொறுத்தவரை மதுவை ஒழிக்க வந்த காந்தி ராமதாஸ்தான் : ஜி.கே.மணி


நாங்கள் காந்தியடிகளை பார்த்ததில்லை;எங்களைப் பொறுத்தவரை மதுவை ஒழிக்க வந்த காந்தி ராமதாஸ்தான் : ஜி.கே.மணி

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை:

’’தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியிருந்தார். கடந்த காலங்களில் மது விலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாததை சுட்டிக்காட்டிய பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் , திமுக வாக்குறுதியை மக்கள் நம்பமாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் முன்வைத்திருந்த குற்றச்சாற்றுகளுக்கு தி.மு.க.வால் பதில் கூற முடியவில்லை. ஆனால், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரான அண்ணன் துரைமுருகன் , ‘அய்யாவுக்கு கோபம் கொப்பளிப்பதேன்?’ என்று கேட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

 கோபம் அவருக்கு ஆகாது என்பதை மறந்து அறிக்கையின் பல இடங்களில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். மது விலக்கு குறித்த கலைஞரின் அறிவிப்பை பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால், அவர்களையெல்லாம் விட்டுவிட்டு ராமதாசுக்கு எதிராக அண்ணன் துரைமுருகன் சிலம்பம் ஆடுவதைப் பார்க்கும் போது மதுவிலக்கு பிரச்சினையில் பா.ம.க.வைக் கண்டு தி.மு.க. எந்த அளவுக்கு பயந்து போயிருக்கிறது என்பதை உணர முடிகிறது.  

“கருணாநிதி பாவ மன்னிப்பு கோருகிறார்”, “ராஜாஜியை  எள்ளி நகையாடினார்”, “ஏமாற்றுகிறவர்”.  “கலைஞருக்கு ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது”, “மதுவிலக்கைக் கொண்டு வர கலைஞர் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை”, “கலைஞரின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்”, “கலைஞரை,  மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்” இப்படிப்பட்ட அர்ச்சனைகளையெல்லாம் ராமதாஸ் அறிக்கையில் பயன்படுத்தியிருப்பதாக துரைமுருகன் கொதித்துள்ளார். உண்மையைத் தானே ராமதாஸ் கூறியிருக்கிறார். இதற்காக ஏன் துரைமுருகன் கோபமடைய வேண்டும்?

கலைஞருக்காக களமிறங்கி வாதாடும் துரைமுருகன் அவர்களிடம் நான் கேட்கவிரும்புவது ஒரே ஒரு கேள்வியைத் தான். மதுவிலக்கு தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. ஒருமுறையாவது  நிறைவேற்றியிருக்கிறதா? என்பது தான் அந்தக் கேள்வி. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பார்த்தால்...

1. 08.04.1996 அன்று சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு மிகத் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று கலைஞர் வாக்குறுதி அளித்தார். 
2. 22.12.2008 அன்று மருத்துவர் அய்யா தலைமையிலான குழு கலைஞர் அவர்களை கோட்டையில் சந்தித்து மதுவிலக்கு கோரியது. அதைக்கேட்ட கலைஞர் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் படும் என அறிவித்தார்.

3. 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

4. 29.07.2010 அன்று கேள்வி&பதில் வடிவில் வெளியிட்ட அறிக்கையில், ராமதாஸ் கோரிக்கையை ஏற்று மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கலைஞர் அறிவித்தார். 

5. 08.08.2010 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் என கலைஞர் அவர்கள் வாக்குறுதி அளித்தார். 

இவ்வாறு 5 முறை மதுவிலக்கு வாக்குறுதி அளித்த கலைஞர் அவற்றில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? என்பதை துரைமுருகன் அவர்கள் தான் கூற வேண்டும். இவ்வாறு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவரை ‘ஏமாற்றுகிறவர்’ என்று கூறாமல் எப்படி அழைப்பது? என்பதையும்  அவர் தான் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு 5 முறை ஏமாற்றியவர் ஆறாவது முறையாக இப்போது  வாக்குறுதி அளிக்கிறார். கலைஞரின் வார்த்தைகளை நம்பி ஏமாற இனியும் மக்கள் தயாராக இல்லை.

1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்த கலைஞர், அதன்பின் 1974 ஆம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை நடைமுறை செய்ததும், 2006 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபின் சில மதுக்கடைகளை மூடியதும் சாதனைகள் இல்லையா? என்றும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மதுவை வளர்த்ததை மறைத்துவிட்டு கலைஞர் மீது மட்டும் ராமதாஸ் பழிசுமத்துகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். 2008 ஆம் ஆண்டில் பா.ம.க. வேண்டுகோளை ஏற்று சில மதுக்கடைகளை மூடியதையும், விற்பனை நேரத்தை கலைஞர் குறைத்ததையும் ராமதாஸ் மறைத்தது இல்லை. பல நேரங்களில் அதை அவர் பாராட்டியுள்ளார். ஆனால், அந்நடவடிக்கைகள் போதுமானவையா? என்பது தான் வினா.

கடைசி நேரத்தில் துறை பறிக்கப்பட்டாலும் அண்ணன் துரைமுருகன் நீண்டகாலம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் என்பதால் அவருக்கு புரியும். ஓமந்தூரார் காலத்தில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு என்பது மதுவை அணை கட்டி தடுத்து வைத்ததைப் போன்றது. அதை 1971 ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்து மூலம் உடைத்து ஊர்முழுவதும் மதுவை பாயவிட்டு விட்டு  1974ஆம் ஆண்டில் மது அணையை தடுத்தார் என்பதும், 2006 ஆம் ஆண்டில் இன்னும் சில செங்கற்களை எடுத்து வைத்தார் என்பதும் எந்த அளவுக்கு பயன் தரும் துரைமுருகன் அவர்களே? மேலும் மதுவை பாயவிட்டதற்காக எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; ஜெயலலிதா ஆட்சியில் மதுவிலக்கு கோரி எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, சிறைசென்றிருக்கிறார். இதை புள்ளிவிவரப் புலி துரைமுருகன் மறந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

கடைசியாக ஒன்று! அண்ணன் துரைமுருகன் கேட்டதால் சொல்கிறேன். நாங்கள் அண்ணல் காந்தியடிகளை பார்த்ததில்லை. எங்களைப் பொறுத்தவரை மதுவை ஒழிக்க வந்த காந்தி ராமதாஸ் அவர்கள் தான். கலைஞர் ஆட்சியிலிருந்து மூடிய மதுக்கடைகளைவிட, ஆட்சியில் இல்லாமல்  அறப்போராட்டம் நடத்தியும், சட்டப்பேராட்டம் நடத்தியும் ராமதாஸ் மூடிய கடைகள் அதிகம். 

மதுவிலக்கு கொள்கையை பிடித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற நப்பாசை எங்களுக்கு இல்லை; ஒருவேளை தி.மு.க.வுக்கு இருக்கலாம். அதனால் தான் தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு வலையை விரித்திருக்கிறார்கள். கலைஞரைப் போல எங்கள் அய்யா தேர்தலுக்காக மதுவிலக்கு கோருபவர் அல்ல... தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே பலனை எதிர்பாராமல் வலியுறுத்தி வருபவர். 

இப்போதும் மதுவிலக்கை அய்யா வலியுறுத்துவது அரசியலுக்காக அல்ல, சமூக நலனுக்காகத் தான். அப்புறம்... மருத்துவர் அன்புமணி இராமதாசு முதலமைச்சராகி மதுவிலக்கு ஆணையில் முதல் கையெழுத்து போடுவார் என்பது கனவு அல்ல... காலத்தின் கட்டாயம். மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் இருக்கும் வரை அதை கலைஞர் அல்ல... வேறு எவராலும் தடுக்க முடியாது என்பது உறுதி.’’

மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாசு மடல்

 

தன் மனதில் எழுந்த 10 வினாக்களுக்கு பதில் அளிக்குமாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

அன்புள்ள தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்... நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்!
உங்கள் கட்சித் தலைமையின் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ‘‘சொன்னதை செய்யும் கழக அரசு முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்தும்’’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முகநூலில் பதிவு செய்திருக்கிறீர்கள். அதைப் படித்ததும் தி.மு.க.வின் முரண்பட்ட நிலைகள் தொடர்பாக என் மனதில் எழுந்த 10 வினாக்களை இக்கடிதத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன். இவை  மக்கள் மனதிலும் எழுந்துள்ள வினாக்கள் என்பதால் இவற்றுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன். 

1.  தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?

2. 1971 ஆம் ஆண்டில் மூதறிஞர் இராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?

3. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று பேரறிஞர் அண்ணா கூறினார். மது கூடவே கூடாது  என்று தந்தை பெரியார் கூறினார். ஆனால், தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை... வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?

4. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள், வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?

5. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கலைஞருக்கு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்  என்று 22.12.2008 அன்று மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாக்குறுதி அளித்த கலைஞர், அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கலைஞர் இப்போது மட்டும்  நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?

6. 1996 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு  மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கலைஞர் அதன் பின்னர் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த  உங்கள் அரசு அதை செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?

7. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி கடந்த 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை சீரழித்தது யார்?

8. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்க வைத்தது யார்?

9. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும், அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாற்றும் நீங்கள், உங்கள் ஆட்சியில் அந்த கடைகளை மூடாதது ஏன்?

10. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல, மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென  அக்கறை காட்டுகிறீர்கள். 2006 ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011 ஆம் ஆண்டில் 150% அதிகரித்து ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே.... இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?

இந்த 10 கேள்விகளுக்கும் நீங்கள் விடை தருவீர்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்குக் காரணம் உங்கள் கட்சியும், அதிமுகவும் தான். பெண்கள் மற்றும் குழந்தைகளும் மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கிய உங்களையும், அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த நீங்கள் இப்போது மது விலக்கு பற்றி பேசத் தொடங்கியிருப்பதற்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட மது எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு பணிகள் தான் என்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக பலமுறை வாக்குறுதி அளித்த திமுக  அத்தனை முறையும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருக்கிறது. இப்போது தேர்தலை மனதில் கொண்டு மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள். பலமுறை மீண்டும், மீண்டும் மதுவை திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அ.தி.மு.க.வும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Monday, July 20, 2015

என் படங்களில் இனி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது : அன்புமணிக்கு நடிகர் தனுஷ் உறுதி

 


மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடிகர் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன.  இதற்கு பலத்த எதிர்ப்புகள் இருந்து வந்தன.  இந்நிலையில் பாமக அன்புமணி நேற்று ஒரு கடிதம் எழுதினார்.  இதையடுத்து  சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இனி என் படத்தில் இடம்பெறாது என்று அறிவித்துள்ளார் தனுஷ்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., நடிகர் தனுஷுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  ‘’மாரி திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் புகைபிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சிய ளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களுடைய ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த தவறன செயல் உங்கள் ரசிகர்களை புகையிலைக்கு அடிமையாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

 புகையிலைக்கு அடிமையாவோரில் 50% பேர், புகையிலையால் ஏற்படும் கொடிய நோய்க்கு பலியாகி உரிய வயதாகும் முன்பே வலிமிகுந்த மரணத்தை தழுவுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் புகைபழக்கத்துக்கு அடிமையாகும் உங்களது ரசிகர்களும் இடம்பெறக் கூடும்.

 தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூரியா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து அதனை உறுதியாக பின்பற்றியும் வருகின்றனர். அதை விட முக்கியமாக, உங்களது மாமனாரும், தமிழ்திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், தனது ரசிகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகப் பண்பாட்டில் மாமனார் என்பவர் தந்தைக்கு சமமானவராகக் கருதப்படுகிறார். தந்தையின் புகழைக் காப்பாற்றும் கடமை மகனுக்கு இருப்பது போல - மாமனாரின் புகழைக் காப்பாற்ற வேண்டிய கடமை மருமகனுக்கும் உண்டு. திரைப்படங்களில் புகைபிடிக்கும் உங்களது செயல் உங்களது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் புகழுக்கு இழுக்கு செய்வதாக அமைகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டின் பல லட்சம் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும். மேலும், இனி திரைப்படங்களில் புகைபிடிப்பிடிக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் நலனுக்காக மட்டுமின்றி, உங்களது உடல்நலத்துக்காகவும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களது சகோதரனாக, ஒரு மருத்துவனாக கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள தனுஷ், ‘’உண்மையில் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது.  மாரி படத்தில் தாதா கேரக்டருக்காக இயக்குநர் வலியுறுத்தியதால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்தேன்.   இனிமேல் என் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  அன்புக்குரிய அன்புமணி ராமதாசுக்கும் இந்த அறிக்கை மூலம் உறுதி கூறுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Friday, July 17, 2015

நாடு முழுவதும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி இராமதாசு கடிதம்

நாடு முழுவதும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி இராமதாசு கடிதம்


மதுவால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க இந்தியா முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; தூய்மைக்காக ‘தூய்மை இந்தியா’ இயக்கம் நடத்தப்படுவதைப் போல மதுவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தனி இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு. பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:

மதிப்பிற்குரிய அய்யா...

வணக்கம்!

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருக்கும் மதுவின் தீமைகள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் மதுவின் தீமைகள் குறித்து விளக்குவதே இந்தக் கடிதத்தின் நோக்கம் ஆகும்.

மது அரக்கனின் தீமைகள் குறித்த உண்மைகளை நீங்கள் அறிந்து, அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இப்பிரச்சினையின் தீவிரம் குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்க விரும்புகிறேன்.

மது குடிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேரும், மற்ற நோய்களால் ஆண்டுக்கு 5 முதல் 7 லட்சம் பேரும் உயிரிழக்கிறார்கள். புகை மற்றும் நோயைவிட,  மது குடிப்பதனால்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழக்கிறார்கள். எனவே, மதுப்பழக்கம் என்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாகும். உலகிலேயே அதிக அளவில் சாலை விபத்துக்களும், தற்கொலைகளும் நடக்கும் நாடு என்ற அவப்பெயரையும்  இந்தியா பெற்றிருக்கிறது. சாலை விபத்துக்களுக்குக் காரணம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான். மது தான் அனைத்துக் குற்றங்களுக்கும் தாயாக விளங்குகிறது. பாலியல் வன்கொடுமைகள் உட்பட பெண்களுக்கு எதிரான 90% குற்றங்களுக்கு மது தான் காரணம் என்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மது மற்றும் உடல் நலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கையில் 15 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் ஆல்கஹால் கொள்கை வகுக்கப்படாததால் தான் மது அருந்தும் வழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் கலாச்சாரம் இப்படி சீரழிந்து வருகிறதே என்று வேதனைப்படும் அளவுக்கு  தமிழகத்தில் கடந்த சில நாட்களில் நிகழ்ந்த 3 சம்பவங்களை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்தால் நீங்கள் பெரும் அதிர்ச்சி அடைவீர்கள்.

1) திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழன் குப்பம் பகுதியில் 4 வயது குழந்தைக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவைக் கொடுத்து கட்டாயமாக குடிக்க வைத்தனர். அத்துடன் அதை அவர்கள் படம் பிடித்து சமூக ஊடகங்களிலும் வெளியிட, அதை ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சி கலந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

2) தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் சுமார் 5 வயதுடைய சிறுவனுக்கு அடையாளம் தெரியாத சிலர் மது கொடுத்து குடிக்க வைத்தனர். அதை படம் பிடித்து சமூக ஊடகங்களிலும் வெளியிட்டனர். இவை ஏதோ ஒருமுறை நடந்த நிகழ்வு அல்ல...தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகளாகவே தோன்றுகிறது.

3) கோவையில் 16 வயதுடைய +2 மாணவி ஒருவர் தோழிகளுடன் மது அருந்தி விட்டு போதையில் தகராறு செய்திருக்கிறார். அவரை மீட்கச் சென்ற காவல்துறையினரையும் போதையில் திட்டியிருக்கிறார்.

இவை அனைத்துமே தமிழகத்தில் மதுவால் ஏற்படும் சீரழிவுகளுக்கான சில உதாரணங்கள் தான். குடிபோதையில் பெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்தது, நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் சாலை விபத்துக்கள் என இன்னும் ஏராளமான உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். மக்களின் உயிரை எடுப்பது மட்டுமின்றி, நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. இதேபோக்குத் தொடர்ந்தால், அது நமது எதிர்காலத் தலைமுறையினரின் அழிவுக்கு காரணமாகி விடும்.

மது மாநிலப்பட்டியலில் உள்ள பொருள் என்பதால், இந்த சமூகத் தீமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கடிதங்கள், போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழக அரசை நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், மாநில அரசு எங்களின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறது. உண்மையில், தமிழக அரசு மதுவை தடை செய்வதற்கு பதிலாக மது விற்பனையை ஊக்குவித்து வருகிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் மதுவை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யும் தமிழக அரசின் போக்கு தான் தமிழக மக்களின் சமூக வாழ்க்கை பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வருகிறது; இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் அவலமான விஷயம் என்னவெனில் தமிழக அரசு மது விற்பனைக்காக இலக்கு நிர்ணயிப்பது தான். மது அரக்கனின் பிடியில் இளைஞர்களும், சிறுவர்களும் சிக்குவதைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மது விற்பனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் மருத்துவர் ச. இராமதாசு அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக நான் இருந்த போது தேசிய ஆல்கஹால் கொள்கையை உருவாக்கினேன். ஆனால், எனக்குப் பிறகு அந்த பதவிக்கு வந்தவர் அதன் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2&ஆம் தேதியை ‘உலக ஆல்கஹால் இல்லா நாளாக’ கடைபிடிப்பதற்கான தீர்மானத்தை உலக சுகாதார இயக்கத்தின் மாநாட்டில் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மது விற்பனைக்கு எதிராக, பெண்களைக் கொண்டு, எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதுமட்டுமின்றி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மது ஒழிப்புப் போராட்டங்களை நான் நடத்தி வருகிறேன். இப்போராட்டங்களில் இதுவரை இல்லாத வகையில் பெருமளவில் பெண்கள் பங்கேற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்று பெண்கள் விரும்புவதையே இது காட்டுகிறது.

எங்களது கட்சியின் சமூக அமைப்பான வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதற்காக சட்டப்போராட்டம் நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளை அகற்றுவதற்கான உத்தரவை பெற்று செயல்படுத்தியுள்ளோம். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகளை மூடுவதற்கான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் விதிகளில் இடம் பெற்றுள்ள 47 ஆவது பிரிவில்,  ‘‘ஓர் அரசின் கடமை என்பது மக்களின் ஊட்டச் சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவது ஆகும். மக்களின் ஊட்டச் சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவதை அரசு முதன்மைக் கடமையாக கருத வேண்டும். குறிப்பாக மதுவையும் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் போதைப் பொருட்களையும் மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியலமைப்புச் சட்ட விதியைப் பயன்படுத்தி   இந்தியா முழுவதும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் நீங்கள் முதலமைச்சராக இருந்த போது முழு மதுவிலக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதை எண்ணி பிரமிப்படைகிறேன். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மது இல்லாத மாநிலமாக திகழ்வதால் அம்மாநிலத்திற்கு எண்ணற்ற பயன்கள் கிடைத்துள்ளன. அம்மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்த இந்தியாவும் பார்த்தது. 

அதன்பயனாக இப்போது இந்தியாவின் மாதிரி மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது. இந்த வெற்றிச் சாதனையை  ஒட்டுமொத்த இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் நிகழ்த்தும்படிக் கேட்டுக் கொள்கிறேன். மதுவின்  தீமைகள் காரணமாக, ஒரு காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்த மாநிலம் என்ற நிலை மாறி உலக வரைபடத்திலும், பிராந்திய வளர்ச்சியிலும் எங்களின் பெருமையை நாங்கள் இழந்து விட்டோம். மதுவிலக்கை ஏற்படுத்துவதற்காக நீங்கள் நடவடிக்கை மேற்கொண்டால் அது இழந்த பெருமையை மீட்கவும், முன்னேற்றப்பாதையில் செல்லவும் பெரிய அளவில் உதவும்.

நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தூய்மை பாரதம் இயக்கத்தைப் போல மதுவுக்கு எதிராக ஓர் இயக்கத்தை நீங்கள் தொடங்கினால் அதை நான் பாராட்டுவேன். இந்த ஒற்றை நடவடிக்கை மூலம் இந்திய வரலாற்றில் நீங்கள் இறவாப்புகழ் பெறுவீர்கள்.

இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு ஆகும். ஆனால், இளைஞர்களின் பெரும்பான்மையான சக்தி மது என்ற அரக்கனால் உறிஞ்சப்படுகிறது. மதுவுக்கு எதிராகவும், மதுவால் வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நான் போராடி வருகிறேன். மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு  நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு அந்தக் கடிதத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாசு கூறியிருக்கிறார்.

உயர்நீதிமன்றத்தை ஏமாற்ற முயல்வதா? தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்



 

மது விற்பனை தொடர்பாக தவறான தகவல் தந்து உயர்நீதிமன்றத்தை ஏமாற்ற முயல்வதா? என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அரசு மது நுகர்வை கட்டுப்படுத்தும் கொள்கையைத் தான் கடைபிடித்து வருவதாக கூறியிருக்கிறது. மேலும், இந்தக் கொள்கைப்படி கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. புள்ளிவிவரங்களையும், காரணங்களையும் திரித்துக் கூறி மக்களை மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தையும் ஏமாற்ற முயல்கிறது.

தமிழ்நாட்டில் தனியாரால் நடத்தப்பட்டு வந்த மதுக்கடைகள் கடந்த 29.11.2003 அன்று பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக்கின் கீழ் கொண்டு வரப்பட்டன. அப்போது டாஸ்மாக் கட்டுப்பாட்டில் 7621 மதுக்கடைகள் இருந்தன. இவற்றில் ஊரகப்பகுதிகளில் இருந்த மதுக்கடைகள் லாபம் ஈட்டவில்லை என்பதால் உடனடியாக மூடப்பட்டன. இதனால் அடுத்த ஓராண்டில் தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 6870 ஆக குறைந்து விட்டது. 2005 ஆம்  ஆண்டில் இது 6699ஆக குறைந்தது. இவ்வாறு 922 கடைகள் மூடப்பட்டதற்கு காரணம் லாபம் இல்லை என்பது தானே தவிர, மக்களைக் காக்க வேண்டுமென்ற நல்ல எண்ணம் அல்ல. இதே காலகட்டத்தில் பள்ளிகளுக்கும் கோவில்களுக்கும் அருகிலுள்ள மதுக்கடைகளை மூடும்படி மக்கள் போராட்டம் நடத்தினாலும் அதனால் பயன் இல்லை.

2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை பா.ம.க. நடத்தியது. இதன்பயனாக 3 ஆண்டுகளில் 133 மதுக்கடைகளை திமுக அரசு மூடியது. அதுமட்டுமின்றி, காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 வரை என்று இருந்த மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை காலை 10 முதல் இரவு 11 மணி வரை 13 மணி நேரமாக குறைத்தது. அதன்பின், 22.12.2008 அன்று பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் முதலமைச்சர் கலைஞரை சந்தித்து 2009 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தினேன். எனது கோரிக்கைகளில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்ட கலைஞர், மதுக்கடைகளின் விற்பனை நேரம் மேலும் ஒரு மணி நேரம் குறைக்கப்படும்; தமிழகத்தில் இனி புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் அறிவித்தார். அதன்பின் மேலும் 46 கடைகள் மூடப்பட்டதால் திமுக ஆட்சியின் முடிவில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 6520 ஆக குறைந்தது.

2011 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மீண்டும் பதவியேற்ற பிறகு புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் இனி புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு கொள்கை அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அதைமீறி 2012 ஆம் ஆண்டில் 278 புதிய மதுக்கடைகளையும், 2013 ஆம் ஆண்டில் 37 மதுக்கடைகளையும் அதிமுக அரசு திறந்தது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் அதிக விலையுள்ள மது வகைகளை விற்பனை செய்யும் எலைட் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன்விளைவாக 2013 ஆண்டின் இறுதியில் தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை எண்ணிக்கை 6835 ஆக அதிகரித்தது. அதன்பின் தமிழகத்திலுள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 315 புதிய மதுக்கடைகளை திறந்த அதிமுக அரசு, மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டதாக கூறுவது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

மது நுகர்வை குறைப்பது தான் அரசின் கொள்கை என தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது நகைப்பைத் தான் வரவழைக்கிறது. இன்றைய நிலையில், தமிழ்நாடு முழுவதும் 1500 மதுக்கடைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற ஆணைப்படி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் திறக்கப் பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நாகரீக குடிப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மது விற்பனை 6% குறைந்து விட்டதால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழக அரசு மது விற்பனையை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. மது விற்பனை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.30,000 கோடி வருவாய் ஈட்டும் தமிழக அரசு மதுவின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக  ரூ. 1 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. இந்த தொகையும் பயனுள்ள வகையில் செலவிடப்படுகிறதா? என்பதும் தெரியவில்லை. இதுதான் மது நுகர்வைக் கட்டுப்படுத்தும் லட்சணமா? மது நுகர்வு குறைக்கப் பட்டிருந்தால் பச்சிளம் குழந்தைகளும், பள்ளி மாணவியும் மது அருந்தும் அவலம் ஏற்பட்டிருக்குமா?

தமிழ்நாட்டில் மது வருவாயும், மதுவின் தீமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்  பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் நடைபெறும் மது ஒழிப்பு போராட்டங்களுக்கு பெண்கள் திரண்டு வருவதே இதற்கு சாட்சியாகும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களின் இந்த கோபம் எதிரொலிக்கும்; பொய்யான தகவல்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்த இந்த அரசை தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

Wednesday, July 15, 2015

முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் மல்லுக்கட்டத் தயார்..தோள் தட்டும் அன்புமணி ராமதாஸ்..

சென்னை: திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டாலும் அவரை எதிர்கொள்ள தயாராக இரு்பபதாக பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTபா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், www.anbumani4cm.com என்ற இணையதளத்தை பா.ம.க. வினர் தொடங்கியுள்ளனர்.

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த விழாவில், அந்த புதிய இணையதளத்தை அன்புமணி தொடங்கி வைத்தார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது...திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியில் சாராயமும், ஊழலும்தான் அதிகரித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும். எங்கள் மீது சில குறைகள் சொல்லப்படுகின்றன. அவற்றை திருத்திக் கொள்வோம்.தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி வேண்டும், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. எல்லோரும் காமராஜர் ஆட்சியைத்தான் கேட்கின்றனர். அப்படிப்பட்ட ஆட்சியை எங்களால் கொடுக்க முடியும்.

எங்கள் கட்சியில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதேபோல தி.மு.க.வில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளேன். புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்டினேன். அதனால் தமிழக முதல்வராக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.இலவசங்கள் கொடுக்க மாட்டோம். விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவோம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடுவோம்இவ்வாறு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

 

Sunday, July 12, 2015

மின் உற்பத்தி: பிறர் திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடுவது அவமானம்: அதிமுக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

 


தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு இதுவரை ஒரு மெகாவாட் மின்திட்டம் கூட உருவாக்கி செயல்படுத்தப்படவில்லை என்பதை பலமுறை ஆதாரங்களுடன் கூறியிருக்கிறேன். ஆந்திராவிலும், வட இந்தியாவிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு சொந்தம் கொண்டாடுவது மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல் ஆகும். இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அடிப்படையாக வைத்து தமிழக எதிர்க்கட்சிகள் சில குற்றச்சாற்றுகளை  முன்வைத்திருந்தன. அக்குற்றச்சாற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மின்துறை அமைச்சர் நத்தம்  விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 4 ஆண்டுகளில் 5346 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்க வகை செய்யப்பட்டிருப்பதாகவும், இது வரலாற்று சாதனை என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு இதுவரை ஒரு மெகாவாட் மின்திட்டம் கூட உருவாக்கி செயல்படுத்தப்படவில்லை என்பதை பலமுறை ஆதாரங்களுடன் கூறியிருக்கிறேன். ஆனாலும், தமிழகத்தில் தங்களின் திட்டங்களால் தான் மின்னுற்பத்தி அதிகரித்ததாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பொய்ப்பரப்புரை செய்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மின்திட்டங்கள் குறித்த பட்டியலை வெளியிடும்படி பலமுறை வலியுறுத்தியும் அதை அரசு தவிர்த்து வந்தது. இப்போது அப்பட்டியலை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. ஆனால், இதில் ஒரு மெகாவாட் மின் திட்டத்தைக்கூட அதிமுக அரசு தயாரித்து செயல்படுத்தவில்லை என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாற்றுகிறேன். தமிழ்நாட்டுக்கு கூடுதலாக கிடைக்கும் மின்சாரத்தை 3 வகைகளாக பிரிக்கலாம்.  இவற்றில், முதலாவது தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் நேரடியாக செயல்படுத்தப்பட்ட மின்திட்டங்கள், இரண்டாவது மின் வாரியமும் மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் கூட்டாக செயல்படுத்திய திட்டங்கள், மூன்றாவது மத்திய அரசு திட்டங்கள் மற்றும் தனியார் ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படும் மின்சாரமாகும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம்  1,800 மெகாவாட் அனல் மின்சாரமும், 97.5 மெகாவாட் நீர் மின்சாரமும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின்சாரத்தைப் பொறுத்தவரை மேட்டூர் மற்றும் இரு அலகு வட சென்னை மின்திட்டங்கள் மூலம்  தலா 600 மெகாவாட் வீதம் இம்மின்சாரம் பெறப்படுகிறது. இம்மின்திட்டங்கள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டவை. மேட்டூர் மின்திட்டத்திற்கு 2.05.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 25.06.2008 அன்று பணிகள் தொடங்கப்பட்டன. அதேபோல், வடசென்னை இரு மின்திட்டங்களுக்கும் 26.06.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு முறையே 18.02.08., 16.08.08 ஆகிய தேதிகளில் பணிகள் தொடங்கின. 30 மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும் என அப்போதைய மின்துறை அமைச்சர் அறிவித்தித்திருந்ததால் கடந்த ஆட்சியில் இவை உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், பணிகள் முடியாத நிலையில், மீதமுள்ள பணிகளை அதிமுக அரசு முடித்து கடந்த 2013&14 ஆண்டுகளில் இந்த மின்திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கின. 97.5 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்திட்டங்களும் முந்தைய ஆட்சி  மற்றும் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டவை தான்; அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டவையல்ல.

அதேபோல் கூட்டு முயற்சித் திட்டங்களின் மூலம் வல்லூரிலுள்ள 3 அலகுகளில் இருந்து 1050 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. கடந்த மாதம் செயல்படத் தொடங்கிய தூத்துக்குடி மின்திட்டத்தில் 220 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்ததிட்டங்களை தேசிய அனல் மின்கழகமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் தான் செயல்படுத்தின என்பதால் இதில் தமிழக அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதுமட்டுமின்றி, இத்திட்டங்களும் முந்தைய ஆட்சியில் தான் தொடங்கப்பட்டன. மூன்றாவதாக, 898 மெகாவாட் மின்சாரம் கூடங்குளம், என்.எல்.சி, ஆந்திராவிலுள்ள சிம்மாத்ரி ஆகிய மத்திய மின் திட்டங்களிலிருந்து பெறப்படுகிகிறது.1282 மெகாவாட் மின்சாரம் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படுகிறது.  இம்மின்சார உற்பத்தியில் தமிழக அரசுக்கு எந்தவித பங்கும் கிடையாது.

தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கும் 5346 மெகாவாட் மின்சாரத்தில் 1897 மெகாவாட் மின்சாரம் தவிர மற்ற மின்சாரத்தின் உற்பத்தியில் தமிழக அரசுக்கு தொடர்பு கிடையாது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நேரடியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் கூட முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டவை. கடந்த ஆட்சியில் முடிக்கப்பட்டது போக மீதமுள்ள பணிகளைத் தான் அ.தி.மு.க. அரசு செய்தது. இதற்காக இந்தத் திட்டங்களில் சொந்தம் கொண்டாட முடியாது. அவ்வாறு இருக்கும்போது அனைத்துத் திட்டங்களையும் தாங்கள் தான் செயல்படுத்தியதாக  அ.தி.மு.க. அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது. ஆந்திராவிலும், வட இந்தியாவிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு சொந்தம் கொண்டாடுவது மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல் ஆகும். இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

திட்டமிட்டு செயல்பட்டால் 3 ஆண்டுகளில் ஒரு மின்திட்டத்தை நிறைவேற்ற முடியும். தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்களின் திறன் 8050 மெகாவாட் ஆகும். இத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருந்தால் அது அதிமுக அரசின் சாதனை என்று கூறிக்கொள்வதில் அர்த்தம் உண்டு. ஆனால், மின் திட்டங்களை செயல்படுத்தாதது மட்டுமின்றி உடன்குடி மின்திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த புள்ளியையே ரத்து செய்தது தான் இந்த அதிமுக அரசு. எனவே, அதிமுக அரசு அதன் செயலுக்காக வருந்த வேண்டுமே தவிர, பீற்றிக்கொள்ளக்கூடாது.

தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றம் வர மருத்துவனுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்... அன்புமணி

கோவை: திமுக, அதிமுக என மாறி மாறி தமிழ்நாட்டை 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்து விட்டனர். யார் யாரோ தமிழ்நாட்டை ஆண்டுவிட்டார்கள். அறிஞர், கலைஞர், நடிகர், நடிகை ஆண்டுவிட்டனர். மருத்துவனுக்கு ஐந்தாண்டு காலம் தமிழ்நாட்டை ஆளுவதற்கு வாய்ப்பு கொடுங்கள், என்று கோவை கொங்கு மண்டல மாநாட்டில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ADVERTISEMENT2016 சட்டமன்ற தேர்தலை சந்திக்க முழுமூச்சோடு தயாராகி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு, சேலம், கங்கை கொண்ட சோழபுரத்திலும் மாநாடு நடத்தியது பாமக.வடக்கில் மட்டுமல்ல தொற்கிலும், மேற்கிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பங்காளிகள் இருக்கிறார்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவே கோவையில் கொங்கு மண்டல மாநாடு நடத்தியது பாமக. மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாய் வாருங்கள் என்று டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்ததைக் கேட்ட பாட்டாளி சொந்தங்கள் ஆண்களும், பெண்களுமாய் அணிதிரண்டது என்னவோ உண்மைதான்.பாமக தலைவர் ஜி.கே. மணி பேசிய உடன் மைக் பிடித்தார் டாக்டர் அன்புமணி, ஆரம்பமே அமர்களம்தான். கோவையில் பாட்டாளி கடல் என்று கூறி கிளாப்ஸ் அள்ளிய அன்புமணி, அதே வேகத்தோடு தொடர்ந்தார்.புறக்கணியுங்கள்தமிழ்நாட்டின் 50 ஆண்டுகாலம், திமுக, அதிமுக என்று மாறி மாறி ஆண்டு விட்டார்கள். கலைஞர் மீது கோபம் என்றார் அம்மையாருக்கு வாக்களிக்கிறீர்கள். அம்மையார் மீது கோபம் என்றால் கலைஞருக்கு வாக்களிக்கிறீர்கள். மக்கள் திமுக, அதிமுகவை புறக்கணிக்கும் காலம் வந்துவிட்டது.எனக்கும் ஒரு வாய்ப்புஎங்களுக்கு ஒரு 5 ஆண்டுகாலம் வாய்ப்பு கொடுங்கள். யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்தீர்கள். காமராஜருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், அறிஞருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், கலைஞருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், நடிகனுக்கும், நடிகைக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள், மருத்துவனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.முதல்வர் கடவுளா?காமராஜர் ஆட்சிதான் வேண்டும் என்று கேட்கின்றனர். காமராஜர் அவர்கள் 12000 பள்ளிக்கூடங்கள் திறந்தார். ஆனால் திமுகவும், அதிமுகவும் இணைந்து 7000 டாஸ்மாக் கடைகளை திறந்திருக்கின்றனர்.நல்லதொரு மாற்றம்தமிழ்நாட்டில் மாற்றம் என்ற புரட்சி நடக்க இருக்கிறது. முதல்வர் பதவியை கடவுளுக்குக் சமமாக பார்க்கின்றனர். பொதுமக்களின் வேலைக்காரன்தான் முதல்வர். ஆனால் இங்கே பொதுமக்கள்தான் வேலைக்காரர்கள் போல இருக்கிறார்கள்.அகற்றும் நேரம் வந்து விட்டதுதமிழ்நாட்டில் முதல்வரை கடவுளாகப் பார்க்கின்றனர். மன்னர் ஆட்சியிலே குடியையும், கூத்தையும் கொடுப்பார்கள். மக்கள் மறந்து விடுவார்கள். இன்றைக்கும் அதே நிலைதான் உள்ளது. போதையிலே அடிமைகளாக ஆக்குகின்றன அதை அகற்றுகின்ற நேரம் வந்து விட்டது.படிக்கவா? குடிக்கவா?தமிழ்நாட்டில் பெண்களும், சிறுவர்களும் மது அருந்துவதாக கூறி வேதனைப்பட்ட அன்புமணி, இங்கு 4024 நூலகங்கள் இருக்கிறது. 6800 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. மக்கள் படிக்கவா? குடிக்கவா என்று கேட்டார்.மது விற்பனைக்கு இலக்குபெட்ரோல் விற்க தீர்மானம் போட்டால் அது அரபு நாடு, வாகனங்கள் விற்க தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு. ஆண்டுக்கு இவ்வளவு மது விற்பனை செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது தமிழ்நாடு.யாருக்கு லாபம்குடிச்சா அரசுக்கு லாபம் குடித்து வாகனம் ஓட்டினால் போலீசுக்கு லாபம், குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் மருத்துவமனைக்கு லாபம். தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் முழக்கம். இதன் மூலம் பெண்களின் தலையெழுத்து மாறிவிடும்.முதல் கையெழுத்துமதுவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது திமுக, அதனை டாஸ்மாக் கடைகளாக்கியது அதிமுக. மதுக்கடைகளை பாமகதான் மூட முடியும். 2016ல் நாம் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. இது பாமகவினால் மட்டுமே முடியும்முதலிரவுக்கு ஜமக்காளம்இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்து வைத்திருக்கிறார்கள். எல்லாம் கொடுத்தாகிவிட்டது. தாலிக்கு தங்கம், ஓடாத மிக்சி, காற்று வராத ஃபேன் என்று கொடுத்தவர்கள் இனி முதலிரவுக்கு ஜமுக்களாத்தை கொடுப்போம், அதுவும் பவானி ஜமுக்காளத்தை கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.இலவசங்கள் ரத்து4 ஆடுகள் கொடுத்தவர்கள் இனி 6 ஆடுகள் கொடுத்து கூடவே குச்சியையும் கொடுப்போம் ஆடு மேய்ப்பதற்கு என்று சொல்வார்கள். நாங்கள் இலவசங்களை கொடுக்கமாட்டோம் ஆனால் இலவச கல்வி கொடுப்போம், சுகாதாரமான தமிழகமாக மாற்றுவோம்.பாமகவின் பார்முலாஆளும் கட்சி, ஆண்டகட்சி, தேசிய கட்சிகளை எதிர்த்து தர்மபுரியில் 80000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் இதுதான் உண்மையான வெற்றி. ரூ.1000 கொடுத்தால் அது திருமங்கலம் ஃபார்முலா. ஓட்டுக்கு. 5000 ரூபாய் கொடுத்தால் அது ஸ்ரீரங்கம் ஃபார்முலா... அதே நேரத்தில் ஓட்டுக்கு ரூ.10000 கொடுத்தால் அது ஆர்.கே.நகர் ஃபார்முலா. நம்முடைய பார்முலா, நல்ல நேர்மையான, மது இல்லாத ஊழல் இல்லாத ஒரு ஆட்சி என்பதுதான்.தலை நிமிரவேண்டும்ஓட்டுக்காக அரசியல் நடத்தவில்லை. உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற ஆட்சிக்கு வருவோம். அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்போம். கல்வியை கொடுத்து வேலை வாய்ப்பை உருவாக்குவோம். தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறானா? போதையில் தலை குனிந்து வாழ்கிறான். இலவசங்களுக்காக பிச்சை எடுக்கிறான். நம்முடைய ஆட்சியில் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வைப்போம்கல்விமுறையில் மாற்றம்கல்விமுறையை மாற்றுவோம். சுமையற்ற கல்வியை கொடுப்போம். தென் கொரியாவில் தமிழ்நாட்டை விட அதிக பள்ளிகள் இருக்கின்றன. தமிழக அரசு சாராயத்தில் முதலீடு செய்கிறது. இந்த நிலை மாறவேண்டும் எனில் ஆட்சியில் மாற்றம் வரவேண்டும். அரசியல் மாற்றம் வரவேண்டும்.அமைச்சரவைக்கூட்டம்நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சரவைக்கூட்டம் நடத்துவோம். அமைச்சர்கள் அந்த மாவட்டத்தில் 2 நாட்கள் தங்குவார்கள். தமிழ்நாட்டில் நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். அது புரட்சியாக வரும். இந்த மாற்றம் இளைஞர்களால், பெண்கள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், மாணவர்களால் வர இருக்கிறது.அன்புமணிக்கு வாய்ப்பு தாருங்கள்தருமபுரி மக்கள் அன்புமணிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் அதேபோல தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க அன்புமணிக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒரு இளைஞனாக படித்தவனாக பாருங்கள். ஜாதி மத பேதமில்லாம ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் என்று கூறி அமர்ந்தார் அன்புமணி
 

தமிழக ஒப்புதல் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு அனுமதி இல்லை- அன்புமணிக்கு உமா பாரதி கடிதம்

சென்னை: தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமனி ராமதாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ADVERTISEMENTபாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி ஆற்றின் குறிக்கே கர்நாடக அரசு அணை கட்டத் துடிப்பது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்; காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் இப்பிரச்சினை பற்றி நேரிலும், கடிதம் மூலமும் விளக்கியுள்ளேன். இந்த நிலையில் எனக்கு மத்திய அமைச்சர் செல்வி உமாபாரதி அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 03.03.2015 அன்று நாடாளுமன்ற மக்களவையில் நீங்கள் எழுப்பிய பிரச்சினை, மற்றும் மார்ச் 18, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.இந்த விவகாரங்கள் குறித்து எனது அமைச்சக அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். அதனடிப்படையில், கர்நாடகத்தில் காவிரி ஆற்றில் அணை கட்டாமல் ஓடும் நீரில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக மின்கழகம் அனுப்பியுள்ளது.மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்; அப்போது தான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதைத் தவிர வேறு எந்த திட்டத்திற்குமான விரிவான திட்ட அறிக்கையும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு வரவில்லை.மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டால் அதுகுறித்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் எட்டாவது பிரிவுக்கு உட்பட்டு ஆய்வு செய்யப்படும். மேற்கண்ட இரு திட்டங்களையுமே, நிலுவையிலுள்ள 10/2008 எண் கொண்ட வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்காமல் செயல்படுத்த மாட்டோம் என்று கர்நாடக அரசு தெளிவு படுத்தியிருக்கிறது.காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஆற்றுநீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைப்பதில் கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றன. எனவே, இது தொடர்பான வழக்கில் 10.05.2013 அன்று உச்சநீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின் அடிப்படையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில், தமிழக, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இடைக்காலக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு மத்திய அமைச்சர் உமாபாரதி அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்."காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்பதால், மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தாலும் அது ஏற்கப்படாது. மேகதாது திட்டம் குறித்து தமிழகம் மற்றும் புதுவை அரசிடம் பேச்சு நடத்தி அவற்றின் விவரங்களையும் இணைத்து அனுப்பும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்

Tuesday, July 7, 2015

சிந்தனையை, மானத்தை மழுங்கடிக்க மது, இலவசங்கள்.... திமுக, அதிமுக மீது அன்புமணி 'பொளேர்' பாய்ச்சல்!!

சென்னை: சிந்தனையை, மானத்தை மழுங்கடிக்க மது மற்றும் இலவசங்களை திமுக, அதிமுக அரசுகள் வாரி இறைக்கின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:ADVERTISEMENTஇந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சமூக, பொருளாதார சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும், வரைவுப் பட்டியலில் இருந்து தமிழகத்தின் நிலையை அறிய முடிகிறது.தமிழகத்தின் நிலை மிக மோசமாகவும், வேதனையளிப்பதாகவும் உள்ளது. தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் மாற்றி மாற்றி ஆட்சி செய்து வருகின்றன. இதில் அ.தி.மு.க. 25 ஆண்டுகளும், தி.மு.க. 22 ஆண்டுகளும் தமிழகத்தை நிர்வாகம் செய்துள்ளன.

எப்போதும் நலிவான நிலையில்.. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவது தான் எங்களது குறிக்கோள் என்று இரு கட்சிகளும் முழங்குவது வாடிக்கையாகிவிட்டது. தமிழகத்தின் இத்தனை அவலங்களுக்கும் காரணம் தமிழ்நாட்டு மக்களை எப்போதுமே நலிவடைந்த நிலையிலேயே வைத்திருந்தால் தான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்ற திராவிடக் கட்சிகளின் மனநிலை தான்.

மனிதனின் சிந்தனையை மழுங்கடிக்க மது, மானத்தை மழுங்கடிக்க இலவசங்கள், கேள்வி கேட்கும் மனநிலையை மழுங்கடிக்க திரைப்படங்கள் ஆகியவை தான் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் முப்பெரும் உத்திகளாக உள்ளன. அதனால் தான் ஒருபுறம் இலவசங்களைக் கொடுத்துவிட்டு, மறுபுறம் ஏழைகள் உழைத்து வாங்கி வரும் ஊதியம் முழுவதையும் மதுவைக் கொடுத்து பறித்துக் கொள்ளும் அவலம் நடைபெறுகிறது.

மக்களுக்கு கல்வி வழங்கினால் அவர்கள் சிந்திக்கும் திறன் பெற்று ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள்; மதுவைக் கொடுத்தால் மயங்கிய நிலையிலேயே கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டு செல்வர் என்ற மனநிலையில் இருந்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறாததால் தான் தமிழகம் முன்னேறவில்லை.

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சீரழிந்து வருவதற்கு காரணம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறேன். மாநிலத்தைச் சீரழித்த இந்த இரு கட்சிகளுக்கும் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
 

Monday, July 6, 2015

உழவர்கள் தற்கொலைகளை தடுக்க பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்த மதியழகன் என்ற உழவர் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இவர் குடவாசல் தெற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளம் உழவரான மதியழகன் 5 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். அதற்காக பெருமளவில் கடன் முதலீடு செய்திருந்த மதியழகன் பருத்தி சாகுபடியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், எதிராபாராத மழையால் பருத்திப் பயிர்கள் உதிர்ந்து விட்டதால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடன்சுமையால் திணறிக் கொண்டிருந்த மதியழகன் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் மதியழகனின் நிலையில் தான் உள்ளனர்.

ஒரு பக்கம் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் வறட்சி, மறுபுறம் பருவம் தவறி பெய்யும் மழையால்  பயிர்கள் சேதமடைவது என விவசாயிகள் தொடர்ந்து கடன் வலையில் தள்ளப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இதற்காக உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், உழவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ. 15,000 வீதமும் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

வியாபம் ஊழல் மர்மச் சாவுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவை: பா.ம.க. வலியுறுத்தல்

மத்தியப்பிரதேச தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வாரியமான வியாபம் ஊழல் வழக்கு மட்டுமின்றி இந்த மர்மச்சாவுகள் குறித்த வழக்குகளையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்தியப் பிரதேச தொழில் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வாரியத்தில் நடந்த ஊழல்கள் குறித்த விசாரணையில் உதவி செய்து வந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அருண்ஷர்மா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 46 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது திகில் படங்களில் வரும் மர்மக் காட்சிகளை விஞ்சும் வகையில் அமைந்திருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தில் மருத்துவம், பொறியியல், ஆசிரியர் பயிற்சி, கணினி பயிற்சி உள்ளிட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக மத்தியப்பிரதேச தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வாரியமான வியாபம் (VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL) கடந்த 1970 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. காலப்போக்கில் பணியாளர்கள் நியமணத்திற்கான தேர்வுகளையும் இந்த அமைப்பே நடத்தியது. நுழைவுத்தேர்வு மற்றும் பணியாளர்கள் நியமனத் தேர்வில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு மாணவர்களுக்கு பதிலாக அந்தத் துறையில் வல்லமை பெற்றவர்களை தேர்வு எழுத அனுமதித்து முறைகேடு செய்தனர்; இதன்மூலம் பணக்கார வீட்டு மாணவர்கள் தொழில்படிப்புகளுக்கும், அரசு வேலைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குற்றச்சாற்று ஆகும். இதுபற்றி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ஈடுபட்டவர்கள், குற்றஞ்சாற்றப்பட்டவர்கள் என மொத்தம் 46 பேர் கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழந்தது  நம்ப முடியாத வகையில் அமைந்துள்ளது.

உயிரிழந்த 46 பேரில் 6 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 3 பேர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்ததாக கூறப்படுகிறது. 4 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் உடல் நலக் குறைவாக இறந்ததாகவும், மீதமுள்ள அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், இவற்றில் எந்த உயிரிழப்புமே இயற்கையாக நடந்ததைப் போல தோன்றவில்லை என்பது தான் அம்மாநில அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாற்று ஆகும். இக்குற்றச்சாற்றுக்களில் உண்மையில்லை என்று எளிதில் நிராகரிக்க முடியாது.

உயிரிழந்தவர்களில் பலர் ஒரே மாதிரியாக இறந்திருக்கிறார்கள். இந்த மரணங்களுக்கிடையே எளிதில் உணரக்கூடிய வகையில் ஒற்றுமைகள் உள்ளன. உதாரணமாக இந்த வழக்கில் பயனடைந்த மாணவர்கள் யார், யார்? என்ற பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அருண்ஷர்மா தில்லியில் உள்ள விடுதி அறையில் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்திருக்கிறார். இவருக்கு முன் இந்த பணியை கவனித்து வந்த  அதே கல்லூரியின் முதல்வர் சகாலே கடந்த ஆண்டு இதே நாளில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவ்வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த மாணவி  நம்ரதா தமோரின்  பெற்றோரை பேட்டி எடுத்த தொலைக்காட்சி செய்தியாளர் அக்ஷய்குமார் அடுத்த சில மணி நேரத்தில் மர்மமாக இறக்கிறார். இந்த ஊழலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உத்தரப்பிரதேச  முன்னாள் ஆளுனர் ராம்நரேஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சில நாட்களில் அவரது மகன் சைலேஷ் யாதவ் மர்மமாக  இறந்தார். இவையெல்லாம் எதேச்சையாக நடந்த நிகழ்வுகளாகத் தெரியவில்லை. ஒருவேளை இவை திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளாக இருந்தால், இவற்றின் பின்னணியில் அளவுக்கு அதிகமான செல்வாக்கு படைத்த, மனிதநேயமற்ற கொடூரர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி எதுவும் இருக்கக் கூடாது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மத்தியப் பிரதேச முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சௌகான் பதவியேற்ற பின்னர் பல துறைகளில் அம்மாநிலம் முன்னேறியிருக்கிறது. சௌகான் மீது பெரிய அளவில் எந்தக் குற்றச்சாற்றும் இல்லை. எனினும், வியாபம் ஊழல் வழக்குப் படுகொலைகள் அவரது நிர்வாகத்திற்கு பெரும் அவப்பெயரைத் தேடித் தந்துள்ளன. இப்புகார்களை மறுக்காமல் இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வந்து அதன் மீது நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும். எனவே, வியாபம் ஊழல் வழக்கு மட்டுமின்றி இந்த மர்மச்சாவுகள் குறித்த வழக்குகளையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, July 2, 2015

இன்னும் சாதிக்கவே இல்லை - அதற்குள் சர்ச்சை தேவையா? : அன்புமணி இராமதாஸ்



பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை நீண்ட தாமதத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் இத்திட்டத்திற்கு யார் காரணம் என்பது பற்றி அதிமுக- திமுக இடையே நடைபெறும் மோதல் மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதை மிகப்பெரிய சாதனையாக காட்டி, அதற்குத் தாங்கள் தான் காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் முட்டி மோதிக்கொள்வது நாகரீகமான அரசியலாகத் தோன்றவில்லை. உண்மையில் சென்னைமெட்ரோ ரயில் சேவை என்பது ஒரு சாதனையே இல்லை... அது தாமதத்தின் அடையாளம். இச்சேவை இங்கிலாந்தின் லண்டன் நகரிலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் 152 ஆண்டுகளுக்கு முன் 1863 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. லண்டனில் 270 நிலையங்களுடன் 402 கி.மீட்டர் தொலைவுக்கும், நியூயார்க்கில் 468 நிலையங்களுடன் 1355 கி.மீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 80 ஆண்டுகளுக்கு முன்பு 1935 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை 196 நிலையங்களுடன் 327 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப் படுகிறது. இத்தகையச் சூழலில் தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்யும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 30 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்து சென்னை மாநகரம் முழுவதும் சேவையை விரிவு படுத்தியிருந்தால் இரு கட்சிகளையும் பாராட்டியிருக்கலாம். ஆனால், அதற்கான தொலைநோக்குப் பார்வை இருகட்சிகளுக்கும் இல்லை.

இந்தியாவில் எடுத்துக் கொண்டாலும், நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் தான் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 31 ஆண்டுகள் கழித்து தான் சென்னையில் ஒரு சிறிய பகுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இது சாதனையா... பெருமைக்குரிய விஷயமா? கொல்கத்தாவுக்குப் பிறகு தில்லியில் 2002 ஆம் ஆண்டிலும், பெங்களூரில் 2011 ஆம் ஆண்டிலும், குர்கான், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் முறையே 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் தொடங்கி வைக்கப்பட்டு அவற்றுக்குப் பிறகு 7&ஆவது நகரமாக சென்னையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது வெட்கப்பட வேண்டிய விஷயமே தவிர பெருமைக்குரிய ஒன்றல்ல. அதுவும் கூட திட்டமிடப்பட்டதைவிட தாமதமாக, 6 ஆண்டுகள் கழித்து தான் 10.15 மீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தில்லியில் 4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் தொடங்கப்பட்டதுடன், இப்போது 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மொத்தம் 194 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக தில்லியில் போக்குவரத்து நெரிசல் 24 விழுக்காடு குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தில்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே, இரண்டாம் கட்டப் பணிகள் திட்டமிடப்பட்டு, உரிய அனுமதிகள் பெறப்பட்டு தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், சென்னையில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான சிந்தனை கூட இன்னும் எழவில்லை. அவ்வளவு ஏன்..? முதல்கட்டத்தின் நீட்சியாக இத்திட்டத்தை சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரை நீட்டிக்க அனுமதி தரப்பட்டு விட்டதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்து 10 மாதங்களாகியும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த இப்போது முடிவு எடுக்கப்பட்டாலும் அது செயல்வடிவம் பெற குறைந்தது இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம். இதனால் சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறைவதற்குப் பதில் அதிகரிக்கவே செய்யும். தமிழக ஆட்சியாளர்களின் தொலைநோக்கு சிந்தனை  இந்த அளவில் தான் உள்ளது. தமிழக அரசு நினைத்திருந்தால் 10 மாதங்களுக்கு முன்பே இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்க முடியும். ஆனால், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்ட ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பிறகு தான் இத்திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்பதில் தமிழக ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்ததால் மெட்ரோ ரயில் சேவை மிகவும் தாமதமாகவே தொடங்கியுள்ளது.

சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒத்துவராது; ‘உலகெங்கும் தோல்வியடைந்த’ மோனோ ரயில் தான் சிறப்பாக இருக்கும் என 2003&ஆம் ஆண்டிலிருந்து கூறிவரும் ஜெயலலிதா இப்போது மெட்ரோ ரயில் எங்களின் திட்டம் என்று பெருமை பேசுவதும், 2006 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2009&ஆம் ஆண்டின் இறுதியில் அடிக்கல் நாட்டி தாமதப்படுத்திய முந்தைய ஆட்சியாளர்கள் இது நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று விளம்பரப்படுத்துவதும் நகைக்கத்தக்கதாக உள்ளதே தவிர ரசிக்கத்தக்கதாக இல்லை.

சென்னை பெருநகரின் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டி விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்கக்கூடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னையை நெரிசல் இல்லாத நகரமாக மாற்றும் நோக்குடன் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு (Chennai Integrated Public Transport System) உருவாக்கப்பட வேண்டும். அதன்படி மெட்ரோ ரயில் சேவையை வடக்கில் பொன்னேரி, தெற்கில் மாமல்லபுரம், மேற்கில் திருப்பெரும்புதூர், தென்மேற்கில் செங்கல்பட்டு வரை நீட்டிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர சென்னையில் அதிவேக பேரூந்து போக்குவரத்து அமைப்பும் (Chennai Bus Rapid Transit System - BRTS), சென்னை கலங்கரை விளக்கம் தொடங்கி மாமல்லபுரம் வரை நீர்வழிப் போக்குவரத்து சேவையும் (Water Transport) தொடங்கப்பட வேண்டும். சென்னை மாநகரப் பேரூந்துகளின் எண்ணிக்கையை 3000&லிருந்து 6000 ஆக உயர்த்த வேண்டும். பறக்கும் ரயில் திட்டத்தை (Chennai Mass Rapid Transit System- MRTS)) முழுமையாக செயல்படுத்த வேண்டும். புறநகர் ரயில் சேவையையும் மேம்படுத்தி இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஒரே பயனச்சீட்டில் இவை அனைத்திலும் பயணிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவற்றின் மூலம் தான் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் சேவைக் கட்டணம் தில்லிக்கு இணையாக குறைக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசிடமிருந்தும், சர்வதேச சமுதாயத்திடம் இருந்தும் பெற வேண்டிய உதவிகளைப் பெறுவதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதை விடுத்து இன்னும் முழுமை பெறாத மெட்ரோ ரயில் திட்டத்திற்கு யார் காரணம் என அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சண்டையிட்டுக் கொள்வது பெற்றெடுக்காத பிள்ளைக்கு பெயர் சூட்டுவதற்கு

Wednesday, July 1, 2015

தமிழக ஒப்புதல் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு அனுமதி இல்லை- அன்புமணிக்கு உமா பாரதி கடிதம்

சென்னை: தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமனி ராமதாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி ஆற்றின் குறிக்கே கர்நாடக அரசு அணை கட்டத் துடிப்பது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்; காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் இப்பிரச்சினை பற்றி நேரிலும், கடிதம் மூலமும் விளக்கியுள்ளேன். இந்த நிலையில் எனக்கு மத்திய அமைச்சர் செல்வி உமாபாரதி அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 03.03.2015 அன்று நாடாளுமன்ற மக்களவையில் நீங்கள் எழுப்பிய பிரச்சினை, மற்றும் மார்ச் 18, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.இந்த விவகாரங்கள் குறித்து எனது அமைச்சக அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். அதனடிப்படையில், கர்நாடகத்தில் காவிரி ஆற்றில் அணை கட்டாமல் ஓடும் நீரில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக மின்கழகம் அனுப்பியுள்ளது.மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்; அப்போது தான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதைத் தவிர வேறு எந்த திட்டத்திற்குமான விரிவான திட்ட அறிக்கையும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு வரவில்லை.மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டால் அதுகுறித்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் எட்டாவது பிரிவுக்கு உட்பட்டு ஆய்வு செய்யப்படும். மேற்கண்ட இரு திட்டங்களையுமே, நிலுவையிலுள்ள 10/2008 எண் கொண்ட வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்காமல் செயல்படுத்த மாட்டோம் என்று கர்நாடக அரசு தெளிவு படுத்தியிருக்கிறது.காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஆற்றுநீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைப்பதில் கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றன. எனவே, இது தொடர்பான வழக்கில் 10.05.2013 அன்று உச்சநீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின் அடிப்படையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில், தமிழக, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இடைக்காலக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு மத்திய அமைச்சர் உமாபாரதி அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்."காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்பதால், மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தாலும் அது ஏற்கப்படாது. மேகதாது திட்டம் குறித்து தமிழகம் மற்றும் புதுவை அரசிடம் பேச்சு நடத்தி அவற்றின் விவரங்களையும் இணைத்து அனுப்பும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: